
சஹாரா:“சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள்.“ஆரஞ்ச்’ வந்த வழி:வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE.தாய் + தந்தை:தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் “தாய்’ என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது “தந்தை’ ஆனது.உதகமண்டலம்:தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு “மந்து’ என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு “உத மந்து’ என்று...