.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 6 January 2014

மன்சூர் அலிகானின் அடுத்த ‘அதிரடி’ ஆரம்பம்



சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. பூனையை குறுக்கே விடுவது. ராகுகாலத்தில் படபூஜை போடுவது என்பது இவரது முந்தைய செயல்படுகள்.

அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல் கிண்டல் படம் எடுத்தார். இவர் எடுத்த படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து படம் எடுப்பது அவரது தன்னம்பிக்கை.

இன்று காலை ஆர்கேவி ஸ்டூடியோவில் 50 முட்டைகளை விழுங்கி, வயிற்றில் பாறாங்கல்லை உடைத்து, தனது குழந்தைகளுடன் பாட்டுபாடி என பல அதிரடி வேலைகளை செய்து படத்தை துவக்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிரண்டு ஓடாத குறையாக இருந்தது அவரது அதிரடிகள்.

விஜய்க்கு கிடைத்த இணையதள பெருமை..?



ஜில்லா’ வெளியாகப் போகும் உற்சாகத்தில் இருக்கும் விஜய்க்கு, இந்த புத்தாண்டில், அவரின் உற்சாகத்தை, மேலும் அதிகரிக்கும் வகையிலான செய்தி கிடைத்துள்ளது.

 கடந்தாண்டில், இந்தியாவில், இணையதளங்கள் மூலம், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில், விஜயின் பெயரும் இடம் பிடித்துள்ளது. ஆனாலும், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எதிலும், விஜய் பங்கேற்கவில்லையாம்.

புத்தாண்டை, முழுக்க முழுக்க, தன் குடும்பத்தினருடன் மட்டுமே செலவிட்டாராம். ‘ஜில்லா’ படம் வெளியாகும் வரை, வேறு எந்த படப் பிடிப்பிலும் பங்கேற்காமல், ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம், விஜய். படம் வெளியான பின், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகப் போகும் படத்தில், நடிக்கவுள்ளார்.

பிறந்த ஐந்து நிமிடத்திலேயே ???

எதிர்கால பள்ளிப்படிப்புகளில் சாதனை படைக்கும் நபர்களை அவர்கள் பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


குழந்தை பிறந்த 5 நிமிடத்தில் அதன் அறிவுத்திறனை கணித்து அதன் சாதனை விவரங்களை அளிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


8 லட்சத்து 77 ஆயிரம் ஸ்வீடன் மாணவர்களின் பள்ளி தேர்வு முடிவுகளை ஒப்பிட்டு இந்த ஆய்வு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


குழந்தை பிறந்த 1 முதல் 5 நிமிடத்தில் ஆப்கர் என்ற சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனையில் பிறந்த சிசுவின் இதயத்துடிப்பு, சுவாசம், தோல் நிறம், இருமல் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.


இந்தச் சோதனையில் மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் பிறந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்றும், அதனால் நல்ல கல்விச் சாதனை படைக்கும் என்றும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.


இந்த சேதனையை 1952 ஆம் ஆண்டு டொக்டர் விர்ஜினியா ஆப்கர் மற்றும் குழுவினர் உருவாக்கி செயல்படுத்தினர்.


ஸ்வீடன் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரியா ஸ்டுவர்ட் இந்த ஆய்வு முடிவு குறித்து விளக்கி உள்ளார்.


இந்த ஆய்வு கட்டுரை அடுத்த மாதம் வெளியாகும் குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் இதழில் வெளியாகிறது.

அறிமுகமாகியது LG நிறுவனத்தின் Lifeband


ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் கைப்பட்டிகளை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

இவற்றின் வரிசையில் LG நிறுவனமும் “டச்” தொழில்நுட்பத்தினைக் கொண்ட Lifeband எனும் கைப்பட்டியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இதன் மூலம் உடலின் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களையும், உடலிலுள்ள உணவுக் கலோரிகள் தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்..



ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.

* கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

* நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து,கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன

* குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது. குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற்றத்தை நீக்கவும் சோப்புகளை பயன்படுத்துவோம். அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்? அவ்வாறு மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது, நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.

* நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top