.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 January 2014

பாட்ஷா 2ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா..?




பாட்ஷா 2ம் பாகத்தில் ரஜினியை நடிக்க கேட்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அதற்காக பரபரப்பான ஸ்கிரிப்ட் ரெடியாகிறது. ரஜினி நடித்து சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படம் அந்த காலகட்டத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

 ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற சூழலையும் ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த பேச்சு அடங்கிப்போனது. ஆனாலும் பாட்ஷா படம் ரசிகர்கள் மனதில் இன்னும் பரபரப்பாக பேசப்படும் படமாகவே இடம்பிடித்திருக்கிறது. இந்நிலையில் பாட்ஷாவின் 2ம் பாகத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

சமீபத்தில் ரஜினியை சந்தித்த சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா 2ம் பாகம் படத்தை உருவாக்குவதுபற்றி ஆலோசித்தார். ஆனால் அதற்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாட்ஷா 2, உருவானால் அது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிடும். அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் அமையாமல்போனால் பாட்ஷா முதல் பாகத்திற்குள்ள பாப்புலாரிட்டியும் குறைந்துவிடும். இதுபற்றி யோசித்துவிட்டு சொல்வதாக ரஜினி கூறியதாக தெரிகிறது. ரஜினியின் பதில் எதுவாக இருந்தாலும் இப்போதைக்கு ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

ஏற்கனவே சந்திரமுகி படத்தின் 2ம் பாகத்தை உருவாக்குவதற்கான ஸ்கிரிப்ட்டை இயக்குனர் பி.வாசு ரெடியாக வைத்திருக்கிறார். ஆனால் அதில் நடிப்பது பற்றியும் ரஜினி இதுவரை முடிவு எடுக்கவில்லை. ரஜினி நடித்தால் தான் சந்திரமுகி 2ம் பாகம் இயக்குவேன் என்று வாசுவும் உறுதியாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுதல் சொல்வது எப்படி ?




உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும் போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று நீங்கள் குழம்பிப் போகலாம். நல்ல விதமாக ஒருவரை எப்படித் தேற்றுவது என்று பார்ப்போமா?.

• "அட, என்ன எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா இருக்கே, கவலையை விட்டுத் தள்ளுப்பா, இதெல்லாம் சகஜம் தான்" என்று கவலையை விடச்சொல்லி உபதேசம் செய்யாதீர்கள். கவலை அல்லது மனச் சோர்வை யாரும் வேண்டுமென்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு, அவர்கள் அனுபவப்படுவது.

காய்ச்சல் தலைவலி போன்ற ஒர் உடல் நலக் குறைவு. அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவரைப் போய் என்ன கை காலெல்லாம் வீங்கியிருக்கே எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு என்று கூறுவது எவ்வளவு அபத்தம். மனச் சோர்வு என்பது உண்மையிலேயே நோய் தாக்குவதைப் போன்ற ஒரு பாதிப்பு. மனம் உடைந்து போனவர் தன்னைத் தானே உடனே அதிலிருந்து மீண்டு சந்தோசமாக ஆகிவிட முடியாது. காலம் தான் ஆற்ற முடியும். மருத்துவமும் தேவைப்படும்.

• மனம் உடைந்து போயிருப்பவருக்கு தன் துன்பங்களை யாரிடமாவது சொல்லி அழத்தோன்றும். அதைக் கேட்க காதுகள் தான் தேவை. எனவே கேளுங்கள் நன்றாக செவி சாய்த்து கேளுங்கள். அவரது கவலை சிலவேளை உங்களுக்கு அற்பமாக தெரியலாம். அவருக்கு அதன் பாதிப்பு ஆழமாக இருக்கலாம். எனவே எவ்வித அலட்சியமும் காட்டாமல் உண்மையாகவே பரிவோடு அவர் சொல்வதை கேளுங்கள்.

• பொதுவாக உளம் சோர்ந்திருப்பவர்கள் தனிமையை விரும்புவார்கள். தனிமை நிலமையை இன்னும் மோசமாக்கி விடக்கூடும். எனவே அவர்களைக் கொஞ்சம் எதாவது செயல்களில் ஈடுபடத் தூண்டுங்கள். நீங்களும் அவர்களோடு சேர்ந்து செயல் படுங்கள். கவலை தரும் நினைவுகளை கொஞ்ச நேரம் மறந்திருக்க உதவுங்கள்.

• வெளியே எங்காவது காலாற நடந்து விட்டு வரலாம். எப்போதும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காமல், பீச், பார்க் என்று போகலாம். சேர்ந்து பஸ் பயணம் மேற்கொள்ளலாம். புதிய விஷயங்களில் மனம் ஈடுபடும் போது மனம் கவலைகளை சற்று மூலைக்குத் தள்ளி விடும்.

• சுத்தமான ஆடைகள் அணிவது, முடிவெட்டி கொள்வது, தினமும் ஷேவ் செய்து கொள்வது, பிறருடன் பழகுவது போன்றவற்றை தூண்டுங்கள்.

• அவர்களை ஊக்கப்படுத்துங்கள் ஆனால் எதையும் திணிக்காதீர்கள், வற்புறுத்தாதீர்கள், நிர்பந்தப் படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கிடையே நமக்கு இடைவெளி உண்டாக்கி விடும். நம்மை விட்டு விலகியிருக்கத் தூண்டும். உங்கள் அழைப்பை, ஆறுதலை, ஆலோசனைகளை அவர்கள் ஏற்க மறுத்தால் வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இன்னொரு நாள் மிகவும் தன்மையாய் எடுத்துக் கூறுங்கள்.

• நன்றாக சாப்பிட, நன்றாக தூங்க உதவுங்கள்.

• புகை, போதைப் பொருட்களை நாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• மனச்சோர்வு அகற்ற நிறைய மருந்துகள் உண்டு. மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளத் தூண்டுங்கள். சரியான உளவியல் மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று தக்க ஆலோசனையும் சிகிட்சையும் பெற உதவி செய்யுங்கள்.

• பிரச்சனைகள் ஏதுமற்ற அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். வீட்டில் மேலும் மன அழுத்தங்கள் உருவாக்கும் நிலைமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• அவர்களது தினசரி வாழ்க்கையில் ஒரு சிட்டையை, ஒழுங்கை அமைத்துக் கொள்ள உதவுங்கள்.

• கவலைக்குக் காரணத்தை ஞாபகப்படுத்தும் பொருட்கள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருப்பது கவலையை விரைவில் மறக்க உதவும். கவலையை மறக்க வருந்தி முயற்சிக்கக் கூடாது. நினைவுகளில் இருந்து தானாக கவலை அழிய வேண்டும்.

• மனச் சோர்வு வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும்.எனவே நம்பிக்கையூட்டுங்கள்.

• எது அவர்கள் மனதை கொஞ்சம் இலேசாக்குகிறதோ அதில் அதிகம் ஈடுபட தூண்டுங்கள். உள்ளத்தை அதிகம் சுறு சுறுப்பாக வைத்திருக்கும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுங்கள். கம்யூட்டர், இணையம், புதிய நட்பு, கவலை மறக்கச்செய்யும்.

• உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மனசோர்வு சிதைத்து விடும். காலமும் சரியான சிகிட்ச்சையும் நிச்சயம் அதை மீட்டுத்தரும்.

ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது. இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்று அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். உறவுகளை இழக்கும் போது உண்டாகும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், கடும் துயரத்திலிருந்து விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும்.

துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அதுவும் நல்ல செய்தி தான்.

சோர்வை நீக்கும் உணவு வகைகள்:


சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதற்கு சோளம், புரதம் அதிகம் உள்ள உருளைக்கிழங்கு, ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ், சப்பாத்தி, தயாமின் என்ற வைட்டமின் நிறைந்த கொண்டைக்கடலை, இரும்பு சத்து நிறைந்த பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலிய உணவுகள் அடிக்கடி உணவில் இடம் பெறச் செய்வது நல்லது.

லாவா ஐரிஸ் 405 + ஸ்மார்ட்போன் ரூ.6.999 விலையில் அறிமுகம்..!



லாவா நிறுவனம் ஐரிஸ் 405 பின்தோன்றலாக ஐரிஸ் 405+ பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐரிஸ் 405+, 3ஜி செயல்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு 4.2 தளமாக கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6.999 ஆகும்.

இது ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் இரட்டை காத்திருப்பு ஆதரவுடன் இரட்டை சிம் ஸ்மார்ட்போன் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) உள்ளது. இது 233ppi பிக்சல் அடர்த்தி கொண்ட 4 இன்ச் WVGA (480x800 பிக்சல்கள்) டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ரேம் 512MB இணைந்து 1.3GHz டியூவல் கோர் பிராசஸர் (MTK6572) மூலம் இயக்கப்படுகிறது. 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

 LED ஃப்ளாஷ் இணைந்துள்ளது 5 மெகாபிக்சல் ஃபிக்ஸட் ஃபோகஸ் பின்புற கேமரா கொண்டுள்ளது. மேலும், ஐரிஸ் 405+ ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு உள்ளது. லாவா ஐரிஸ் 405 + 1400mAh பேட்டரி திறன் உள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் A2DP கொண்ட ப்ளூடூத்,  Wi-Fi, 802.11 பி/ஜி/என், ஜிபிஆர்எஸ், எட்ஜ், ஜிபிஎஸ்/ எஜிபிஎஸ் மற்றும் 3ஜி (எச்எஸ்பிஏ+) மற்றும் மைக்ரோ-USB இணைப்பு வழங்குகிறது.

லாவா ஐரிஸ் 405 + மெஷர்ஸ் 125x64x9mm மற்றும் 127 கிராம் எடையுடையது. இது ஜி சென்சார், மோஷன் சென்சார், மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற சென்சார்கள் வழங்குகின்றன. லாவா ஐரிஸ் 405 + Facebook, என்டிடிவி, சப்வே சர்ஃப்பர்ஸ், டெம்பிள் ரன் 2, Whatsapp, Bookmyshow, மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற சில அப்ளிக்கேஷன்கள் ஏற்றப்பட்டு வருகிறது.

லாவா ஐரிஸ் 405 + ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:


233ppi பிக்சல் அடர்த்தி கொண்ட 4 இன்ச் WVGA (480x800 பிக்சல்கள்) டிஸ்ப்ளே,

1.3GHz டியூவல் கோர் பிராசஸர் (MTK6572),

ரேம் 512MB,

0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,

LED ஃப்ளாஷ் இணைந்துள்ளது 5 மெகாபிக்சல் ஃபிக்ஸட் ஃபோகஸ் பின்புற

கேமரா,

மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு,

A2DP கொண்ட ப்ளூடூத், 

Wi-Fi,

802.11 பி/ஜி/என்,

ஜிபிஆர்எஸ்,

எட்ஜ்,

ஜிபிஎஸ்/ எஜிபிஎஸ்,

3ஜி,

மைக்ரோ-USB,

மெஷர்ஸ் 125x64x9mm,

127 கிராம் எடை,

ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்,

1400mAh பேட்டரி.

பெண்களின் கால்சியமும் வைட்டமின் 'டி' யும்



பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது கால்சியம். வெறுமனே பாலையும், தயிரையும் குடிப்பதால் மட்டுமே கால்சியம் அளவு  அதிகரிப்பதில்லை. அதற்கு வைட்டமின் டி சத்து அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் குறைபாட்டால் பெண்கள் சந்திக்கக் கூடிய  பிரச்சனைகளைப் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

கால்சியம் பற்றாக்குறை வந்தா வரக்கூடிய பிரச்சனைகள் பத்தி மக்களுக்கு ஓரளவுக்குத் தெரியுது. ஆனா அந்த கால்சியத்துக்கு தேவையான  வைட்டமின் டி பத்தின விழிப்புணர்வு பலருக்கும் இல்லை..

முட்டையோடு வெள்ளை கரு, உலர் பழங்கள்னு உணவுப்பொருட்கள் மூலமா கிடைக்கிற வைட்டமின் டி ரொம்ப அரிது. அந்தச் சத்துக்கான ஒரே  ஆதாரம் சூரிய வெளிச்சம். ஆனா வெயில்ல தலைகாட்டினா சருமம் கருத்துடும், அழகு போயிடும்னு பலரும் வெயிலைத் தவிர்க்கறோம்.. அதிகாலை  சூரிய வெளிச்சத்துலதான் வைட்டமின் டி அதிகம் என்ற கருத்து உண்மையில்லை.. காலை 10 மணிலேர்ந்து பிற்பகல் 3 மணி வரைக்குமான  வெயில்ல தான் போதுமான வைட்டமின் டி சத்தை பெற முடியும்.

ஆனா அந்த நேரத்துல வெயில் அழகுக்கு எதிரிங்கிறதால சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் போட்டுக்கறோம். சன் ஸ்கிரீன் போடறது மூலமா  வைட்டமின் டி சத்து சருமத்துக்குள்ள ஊடுருவறது தவிர்க்கப்படுகிறது. தசைகள் வலுவோட இருக்க, இதயம் சரியா இயங்க ரத்தத்துல  ஹீமோகுளோபின் அளவு சரியான அளவுல இருக்க இப்படிப் பல விஷயங்களுக்கு வைட்டமின் டியும் அவசியம்..

கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தா அவங்களுக்குப் பிறக்கிற பெண் குழந்தைக்கு இடுப்பெலும்பு சின்னதா  இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து திருமணமாகி குழந்தை பெறும் நேரத்துல அதுக்கு சிசேரியன் தேவைப்படலாம். ஒரு மாசத்துக்கு ஒருத்தருக்கு  60ஆயிரம் யூனிட் வைட்டமின் டி தேவை.. ரத்தப் பரிசோதனை மூலமா இந்த பற்றாக்குறையைக் கண்டுபிடிக்கலாம்.

மருத்துவரோட ஆலோசனையோட வைட்டமின் டி மருந்துகளை 3 மாதங்களுக்கு எடுத்துக்கிட்டு மறுபடி ஒரு பரிசோதனை செய்து பார்த்து, போதுமான  அளவு இருக்கிற பட்சத்துல மருந்துகளை நிறுத்திடலாம். 35வயதுக்கு மேலான பெண்களும், கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் கால்சியம் மற்றும்  வைட்டமின் டி அளவுகள்ல கவனமா இருக்கணும். இது போதிய அளவு இருக்கிறது மூலமா முதுகு வலி, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை கூட  தவிர்க்க முடியும்.

நீங்கள் நல்ல நுகர்வோரா?




ஒரு பிரபலமான பிஸ்கெட் நிறுவனம். அவர்கள் தயாரித்த 50 கிராம் இருக்க வேண்டிய பிஸ்கெட் பாக்கெட் ஒன்று 36 கிராம்தான் இருந்தது. உடனே நாங்கள் நோட்டீஸ் அனுப்பினோம். உடனே நிறுவனத்தில் இருந்து செட்டில்மென்ட் பேசி முடிக்க வந்தார்கள். நாங்கள் ஒத்துக் கொள்ளாமல் வழக்குத் தொடுத்திருக்கிறோம். ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் 14 கிராம் பிஸ்கெட் குறைந்தால் என்ன? பெரிய இழப்பா? என்று கேட்கலாம். ஆனால் அந்த ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைப் போல அந்தப் பேட்சில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிஸ்கெட் பாக்கெட்களும் அதே எடையில்தானே இருந்திருக்கும்? அப்படியானால் அந்த நிறுவனத்துக்கு எவ்வளவு லாபம்? நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு எவ்வளவு நஷ்டம்? வழக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.


நாடு முழுக்க அதிக வலைப் பின்னல்களை வைத்திருக்கக் கூடிய தொலைபேசி நிறுவனம் ஒன்று ஒரு நுகர்வோருக்கு இண்டர்நெட் இணைப்பு கொடுக்கிறது. அதற்கு ஒரு மோடம் தேவை. அந்த மோடத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்க, அதை வாங்கி தொலை பேசி நிறுவனத்தின் ஷோ ரூமில் விற்கிறார்கள். இணைப்பு வாங்கிய நுகர்வோர் இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியவில்லை. காரணம் அந்த மோடம் வேலை செய்யவில்லை. அவர் தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் மோடம் தயாரித்த நிறுவனத்தில் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். மோடம் தயாரித்த நிறுவனத்தில் கேட்டால் தொலை பேசி நிறுவனத்தில் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்படியே அலைந்து திரிந்தாலும் இண்டர் நெட் மட்டும் வேலை செய்யவில்லை. ஆனால் வேலை செய்யாத இண்டர்நெட்டுக்கு 4 மாத பில்லை மட்டும் அனுப்பி வைத்துவிட்டது தொலைபேசி நிறுவனம். அந்த நுகர்வோர் எங்களிடம் வந்தார். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களிடம் நோட்டு புத்தகங்களுக்கு மொத்தமாகப் பணம் வாங்கிக் கொண்டு, நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்தார்கள்.


ஆனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் விலை (ஙதட) குறிப்பிடப்படவில்லை. நோட்டின் விலை கூடுதலாக இருக்கட்டும். அல்லது குறைவாக இருக்கட்டும். விலை என்ற ஒன்றைப் போட வேண்டாமா? ஒரு பொருளை வாங்குபவருக்கு அதன் விலை தெரிய வேண்டாமா? இதை எதிர்த்தும் வழக்குப் போட்டிருக்கிறோம்.


ஒருவர் மூட்டு வலி என்று மருத்துவமனைக்குப் போனார். அங்கே டாக்டர்கள் எழுதிக் கொடுத்த மாத்திரையை மருத்துவமனை நடத்தும் மருந்துக் கடையில் வாங்கினார். மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டதும் முற்றிலும் நடக்கவே முடியாமல் போய்விட்டது. காரணம் என்னவென்று பார்த்தால், காலாவதியான மாத்திரையைக் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவமனையில் போய்க்கேட்டால் அவரை மிரட்டியிருக்கிறார்கள். அதை எதிர்த்தும் வழக்கு போட்டிருக்கிறோம்.


நீங்கள் பேருந்தில் செல்கிறீர்கள். ஓட்டுநர் நீங்கள் இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்தாமல், அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துகிறார். நுகர்வோர் என்ற முறையில் நீங்கள் வழக்குப் போட முடியும். ஆனால் உங்களை அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டதற்கு ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இடத்தில் தான் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பார்கள். போக்குவரத்து நிறுவனத்துக்கு உடனே கம்ப்ளெயின்ட் பண்ண வேண்டும். அதை உங்கள் கைபேசியில் இருந்தே பண்ணலாம். அது ஓர் ஆதாரமாக இருக்கும். உங்களுடன் பயணம் செய்த சக பயணி ஒருவரின் துணையை நாடி, அவரைச் சாட்சி சொல்லச் சொல்லலாம். இது போன்ற புகார் தெரிவிக்க வேண்டிய எண்களை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


மருந்து வாங்கும்போது, பில் மறக்காமல் வாங்க வேண்டும். மருந்து காலாவதியானதா என்று பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமானது, பில்லில் மருந்தின் பெயரை எழுதுவதோடு, அந்த மருந்தின் பேட்ச் எண்ணையும் குறிப்பிடச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு பில்லை வாங்கிக் கொண்டால், ஏதேனும் பிரச்னை என்றால் உடனே வழக்குப் போட முடியும்.


எந்தப் பொருளை வாங்கினாலும் எப்போதும் பில் வாங்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள ஙதட விலைக்கே தருகிறார்களா? என்று பார்க்க வேண்டும். கேரண்டி, வாரண்டி கார்டுகளில் கையெழுத்து இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இவை எல்லாம் ஒரு நுகர்வோர் என்ற முறையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். அப்போதுதான் நீங்கள் ஒரு நல்ல நுகர்வோராக இருக்க முடியும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top