.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 January 2014

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?





பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே!


அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே!


என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்


.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான்,


ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது.


அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.


பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும்.


ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை.


சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது.


காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது.


மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது.


ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது

தமிழ் எண்களில் ரூபாய் நோட்டு..!




உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.

 (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் .

 எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

Saturday, 4 January 2014

அஜித் வழியில் விஜயசேதுபதி..!



தமிழ்சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் விஜயசேதுபதி வளர்ந்துவிட்ட நடிகர்.  நான்கு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து திரையுலகில் தனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்குமென்றோ, ரசிகர்களின் பேராதரவு கிடைக்குமென்றோ விஜயசேதுபதி எதிர்பார்க்கவில்லை.

ரசிகர்களின் ஆதரவு பற்றி சூதுகவ்வும் திரைப்படம் ரிலீஸான போது விஜயசேதுபதி “ நான் யாருக்கும் தெரியாம லாஸ்ட் சீட்ல உட்கார்ந்து படம் பாத்துகிட்டிருந்தேன். ஸ்கிரீன்ல நான் வந்த அந்த மொக்க எண்ட்ரிக்கு எல்லாரும் கை தட்டுனத பாத்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என்று கூறியிருந்தார்.

இவ்வளவு பெரிய ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா! விஜய சேதுபதியின் ரசிகர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து ஆங்காங்கு விஜயசேதுபதிக்கு ரசிகர்மன்றங்களை திறந்துவிட்டனர்.

இதையறிந்த விஜயசேதுபதி “ரசிகர்மன்றம் வைத்து வீணாக்கும் நேரத்தை வேறு ஏதாவது உபயோகமான செயலில் செலவழிக்கலாம். இதுபோன்ற செயல்களை நான் ஒருபோதும் ஊக்குவிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டாராம். 

இருக்கிற பணத்தையெல்லாம் செலவு செய்து தனக்காக தானே ரசிகர் மன்றங்கள் வைத்துக்கொள்ளும் தற்போதைய சூழ்நிலையில், ரசிகர்களாக விருப்பப்பட்டு அமைக்கும் ரசிகர்மன்றங்களை வேண்டாம் என்று விஜயசேதுபதி புறக்கணித்தது அவரது மதிப்பை ரசிகர்களிடையே உயர்த்துகிறதே தவிர துளியும் குறைக்கவில்லை.

டைரக்டர்களை நேர்முகத்தேர்வு செய்யும் சிவகார்த்திகேயன்..!



தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் விஜயசேதுபதி தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள் படங்களில் பணியாற்றிய அனுபவமே இல்லாதவராக இருந்து, குறும் படம் இயக்கியவர் என்றால் நம்பி கால்சீட் கொடுத்து விடுவார். அப்படி அவர் நம்பி நடித்த எந்த படமும் அவரை ஏமாற்றவும இல்லை. அதனால்தான் இப்போது குறும்பட டைரக்டர்களுக்கு கோடம்பாக்கத்தில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது.

ஆனால், சிவகார்த்திகேயன் அப்படியெல்லாம் எந்த படத்தையும் எடுத்தோம் கவுத்தோம் என்று ஒத்துக்கொள்வதில்லை. ஒருவர் தன்னிடம் கதை சொல்ல முயற்சி எடுக்கிறார் என்றதுமே அவரைப்பற்றிய மொத்த தகவல்களையும் முன்கூட்டியே நேர்முகத்தேர்வு நடத்துகிறார். அப்போது அவர்கள் சொல்லும் பதில்கள் தனக்கு நம்பிக்கை கொடுத்தால் மட்டுமே அடுத்த சிட்டிங்கில் கதை கேட்கிறார்.

இல்லையேல், இன்னும் இரண்டு வருடத்துக்கு கால்சீட் டைரி புல்லாகி விட்டது. அதனால் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு கதை கேட்போம் என்று நாசுக்காக சொல்லி நழுவிக்கொள்கிறார். இருப்பினும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவரது அலுவலகத்துக்கு கதைகளுடன் படையெடுககும் இயக்குனர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விஜயசேதுபதி..?



2013 இல் சூதுகவ்வும், இதற்குத்தானேஆசைப்பட்டாய்பாலகுமாரா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் விஜயசேதுபதியின் சந்தைமதிப்பும் சம்பளமும் பெருமளவில் உயர்ந்துவிட்டது. சூதுகவ்வும் படத்துக்கு அவர் அவர் வாங்கிய சம்பளம் ஐம்பதுஇலட்சத்துக்கும் குறைவு என்கிறார்கள். இப்போது சூதுகவ்வும் படஇயக்குநர் நலன்குமாரசாமியையும் விஜயசேதுபதியையும் சேர்த்து ஒரு படத்தை எடுக்கவிரும்பினாராம் சூதுகவ்வும் படத்தின் தயாரிப்பாளர் குமார். இயக்குநர் எழுதியிருந்த ஒரு கதை, விஜயசேதுபதிக்கும் பிடித்துப்போய்விட்டது. சரி, வரிசையாக இருக்கும் படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று முடிவும் செய்துவிட்டார்கள்.

 இந்நிலையில் சம்பளம் பற்றிப் பேச்சு வந்திருக்கிறது. தயாரிப்பாளர் குமார் அந்தப்படத்துக்கு ஐம்பதுஇலட்சத்துக்கும் குறைவாகத்தான் சம்பளம் கொடுத்தோம் இந்தப்படத்துக்கு ஒருகோடி சம்பளம் என்று பெருமையாகச் சொல்லநினைத்தாராம். ஆனால் விஜயசேதுபதியின் இப்போதைய சம்பளம் சுமார் ஐந்துகோடி. இந்தவிசயம் தெரியாமல் அவர் வழக்கம்போல சம்பளம் பேசியிருக்கிறார். விஜயசேதுபதிக்கு அதிர்ச்சி, இவர் இப்போதைய நிலவரம் பற்றித் தெரிந்து பேசுகிறாரா தெரியாமல்பேசுகிறாரா என்று குழம்பிவிட்டாராம். அதன்பின் நண்பர்கள் மூலம் இப்போது என்னுடைய சம்பளம் ஐந்துகோடி இவருக்காக ஒரு கோடி குறைத்து நான்கு கோடி வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

 அதற்கு தயாரிப்பாளர் குமார் தயாராக இல்லையாம். நான் எடுக்கும் படங்களின் மொத்த பட்ஜெட்டே நான்குகோடி வராது, அப்படி இருக்கும்போது இவருக்கு மட்டும் எப்படி நான்கு கோடி கொடுப்பது? என்று கேட்டு மறுத்துவிட்டாராம். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை, என்னிடம் இந்த பட்ஜெட்டில் ஒரு படம் இருக்கிறது வேறு யாராவது தயாரிக்க முன்வந்தால் விட்டுக்கொடுக்கிறேன் என்று ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறாராம். இந்த விசயம் தெரிந்து கடுப்பானாலும் அவரிடம் நேரடியாகச் சண்டை போடமுடியாமல் தாமசங்கடத்தில் விஜயசேதுபதி இருப்பதாகச் சொல்கிறார்கள்.   -

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top