.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 4 January 2014

‘தல’யின் அடுத்த படம் யாருக்கு..?

கௌதம் மேனன் இயக்கத்திற்கு பிறகு ‘தல’ அஜித் யாருடைய படத்தில் நடிக்கப்போகிறார் என்ற பேச்சு அலை கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வீரம் படம் பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்க தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15 முதல் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் பெயரிப்படாத படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். ஆனால் இந்தப்படத்திற்கு பிறகு தலயின் அடுத்த படம் யாருக்கு என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், காற்று வழியாக இரண்டு தகவல்கள் கசிந்துள்ளன. சூப்பர் ஸ்டாருக்காக தயாரிக்கப்பட்ட கதையை எடுத்துக்கொண்டு அஜித்தை அனுகியுள்ளாராம் கேவி.ஆனந்த். மற்றொருபுறம் இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார்...

100வது நாளில் ‘ராஜா ராணி’...!

100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது அட்லியின் ராஜா ராணி.அறிமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ் முதலானோர் நடிப்பில் வெளியான படம் ராஜா ராணி.பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருந்தார்.தமிழ் சினிமாவில் மாறுபட்ட விளம்பர யுக்திகளோடும், கதை சொல்லுதலோடும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இன்றுடன் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘ராஜா ராணி’.இன்றுள்ள சூழ்நிலையில் ஒரு படம் 100 நாட்களை கடந்து ஓடுவது என்பது அரிதான விடயமே.‘ராஜா ராணி’ அந்த சாதனையை புரிந்துள்ளத...

வீரம் படம் முரட்டுக்காளை ரீமேக்..?

‘வீரம்’ படம் முரட்டுக்காளை ரீமேக் என்ற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் உலாவ ஆரம்பித்துள்ளன. அஜீத், தமன்னா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம். விஜயா நிறுவனம் நடித்துள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள், ட்ரைலர் பார்த்த பிறகு, இது ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற பேச்சு கிளம்பியது. இந்நிலையில் நேற்று நடந்த வீரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து இயக்குனர் சிவாவிடம் கேட்டபோது, இந்தப் படம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டது. ஆனால் முரட்டுக்காளையின் ரீமேக் அல்ல. அண்ணன், தம்பிகளின் கதை என்பதால் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த...

சூப்பர் ஸ்டாரை பாராட்டிய விஜய்...!

விக்ரமைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம்’ படத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டாராம் விஜய்.கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்தவாரம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.கன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளர்.படம் வெளியான மூன்றே நாட்களில் இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது.இந்நிலையில் ஜில்லா யூனிட்டோடு இணைந்து இந்த படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்துள்ளார் விஜய்.இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையிலும், மோகன்லாலின் நடிப்பிலும் அப்படியே சொக்கி போன விஜய், மோகன்லாலை வெகுவாக பாராட்டியுள்ளாராம்.மேலும்...

டீஸரில் சாதனை படைத்த 'ஜில்லா'...!

   ரசிகர்களை அள்ளிக்குவித்து சாதனை படைத்துள்ளது ஜில்லா டீஸர். நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ஜில்லா. இப்படம் வருகிற 10ம் திகதி உலகம் முழுவதும் ரிலீசாகவிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி இணையத்தை கலக்கிகொண்டிருக்கின்றன. அந்த வகையில் ரசிகர்களிடத்தில் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸரை க்ளிக் பண்ணியவர்களின் எண்ணிக்கையே சாட்சி என்று சொல்லலாம். டீஸர் வெளியான...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top