குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...காதுகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு எளிய விஷயம் தான். ஆனால் அதுவே குழந்தைகளின் காதுகள் என்று வரும் போது சற்று சிரமமாக மாறி விடுகிறது. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்துவதால் அவர்களின் காதுகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் காதுகளின் மடிப்புகளில் தேங்க வாய்ப்புள்ள செத்த அணுக்களையும் நீக்கும். குழந்தைகளின் காதுகளில் உண்டாகும் வேக்ஸ் எந்த ஒரு தொற்றையும் ஏற்படுத்தாது. மேலும் அது காது கேட்கும் திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. அதனால் பொதுவாக காதுகளில் உருவாகும் வேக்ஸ் ஆபத்தில்லாத ஒரு சாதாரண பொருளாகவே திகழ்கிறது. இது கிருமிகள் மற்றும் அயல் பொருட்களை காதுக்குள் நுழைய விடாமலும் தடுக்கும். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமாக வேக்ஸ் உருவாகும் போது மருத்துவரை அணுகுவது நல்லது. அனுபவமுள்ள மருத்துவர் குழந்தையின் காதுகளில் இருக்கும் வேக்ஸ் மற்றும் அழுக்குகளை பாதுகாப்பாக எடுத்து விடுவார். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த காட்டன் பட்ஸை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. காதுகளை சுத்தப்படுத்தும் முறைகளில் அதிக இடர்பாடு நிறைந்த தேர்வாக அது கருதப்படுகிறது. காதுகளை சுத்தப்படுத்தும் போது தவறு ஏற்பட்டால் அதன் விளைவு பெரிய ஆபத்துக்களில் போய் முடியும். இதனால் தொற்றுக்களும் உண்டாகும். காதுகளை சுத்தப்படுத்த சரியான முறையை கையாளாவிட்டால் செவிச்சவ்வு உடையும் அபாயமும் உண்டு. இதனால் காது கேட்கும் திறனை இழக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதனால் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது கூடுதல் கவனமும் பொறுமையும் கண்டிப்பாக தேவை. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்களை பரிந்துரைத்துள்ளோம். அவைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் உங்கள் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்துங்கள். குளிக்கும் போது சுத்தப்படுத்தவும் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த அதனை குளிப்பாட்டும் வேளையே உகந்ததாக விளங்கும். ஈரத்துடன் இருக்கும் போது குழந்தைகளின் காதுகளை எளிதில் சுத்தப்படுத்தி விடலாம். நீரில் நனைத்த துணியை கொண்டு காதின் வெளிப்புறங்களை துடைத்து கொள்ளவும். அதன் பின் காதுகளின் உட்புற மடிப்புகளை துடைக்கவும். பின் எஞ்சியிருக்கும் வேக்ஸ்களை அகற்றவும். வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைக்கவும் உங்கள் குழந்தையை குளிப்பாட்டும் போது அதன் காதுகளை வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைத்திடுங்கள்.
உங்கள் குழந்தையின் காதுகள் சுத்தமாக இருக்க இதனை சீரான முறையில் செய்தாலே போதுமானது. காதுகளில் சேர்ந்துள்ள செத்த அணுக்கள் மற்றும் வேக்ஸ் ஆகியவற்றை இது நீக்கிடும். காட்டன் பட்ஸ் குழந்தைகளின் காதுகளுக்குள் காட்டன் பட்ஸை நுழைக்கவே கூடாது. பொதுவாகவே குழந்தைகளின் காதுகளுக்குள் ஆழமாக எந்த பொருளையுமே நுழைக்க கூடாது. இது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸாகும். இது செவிச்சவ்வை பாதித்து பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.
காதுகளுக்கான சொட்டு மருந்து குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமான வேக்ஸ் உருவாகியிருந்தால் அதனை நீக்க மேற்கூறிய டிப்ஸ் எடுபடாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் காதுகளுக்கான சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டும். இவ்வகையான சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். சுயமான வழிமுறைகளை தவிர்க்கவும் மருத்துவ ரீதியான வழிமுறையை பின்பற்றாமல் சில பேர் வீட்டு சிகிச்சை முறையை பின்பற்ற கூடும். அப்படி எதையும் முயற்சி செய்யாதீர்கள். அது குழந்தையின் காதுகளை பாதித்து விடலாம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
வறண்டு காணப்படும் நேரத்தில் சுத்தப்படுத்தாதீர்கள்ஈரப்பதம் இல்லாமல்வறண்டு காணப்படும் நேரத்தில் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்தாதீர்கள். அது சருமத்தில் எரிச்சலையும் சிராய்ப்புகளையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த எப்போதுமே நீரில் நனைத்த துணியையே பயன்படுத்துங்கள். முடிந்த வரை குழந்தையை குளிப்பாட்டி விடும் நேரத்திலேயே காதுகளையும் துடைத்து விடுங்கள்.
கவனமாக இருங்கள்பொதுவாக காதுகளை சுத்தப்படுத்தும் போது குழந்தைகள் உங்களோடு முழுமையாக ஒத்துழைப்பதில்லை. துடைத்து கொண்டிருக்கும் போது திடீரென அவர்கள் தலையை ஆட்டி விடும் அபாயம் இருப்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இருப்பதால் விபத்துகளை தவிர்க்கலாம்.