.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 4 January 2014

டீஸரில் சாதனை படைத்த 'ஜில்லா'...!



 

 ரசிகர்களை அள்ளிக்குவித்து சாதனை படைத்துள்ளது ஜில்லா டீஸர்.


நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ஜில்லா.


இப்படம் வருகிற 10ம் திகதி உலகம் முழுவதும் ரிலீசாகவிருக்கிறது.


படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


மேலும் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி இணையத்தை கலக்கிகொண்டிருக்கின்றன.


அந்த வகையில் ரசிகர்களிடத்தில் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸரை க்ளிக் பண்ணியவர்களின் எண்ணிக்கையே சாட்சி என்று சொல்லலாம்.


டீஸர் வெளியான இரண்டு நாட்களில் மட்டும் 10,71,657 பேர் பார்த்திருக்கிறார்கள்.



Friday, 3 January 2014

மாதுளம்பூவின் பயன்கள்...?

 

 மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.


மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.


மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

நீதிபதியின் பேனா தானாகவே உடைந்தது.....!?





திருமணம் முடிந்த ஆறே மாதத்தில்
 ஒத்துவராது என
 முடிவுக்கு வந்த ராஜாவும் ராதாவும்

 ஏனோதானோவென
 வாழ்ந்து இப்போது ஆறு வருடம்
கழித்து விவாகரத்து
 தீர்ப்பிற்காய் மகள்

 தீபாவோடு கோர்ட்டில்
 காத்திருந்தனர்.

குழந்தையை யார்
 பங்கு போட்டுக்கொள்வது என்ற
 பிரச்னையில் இருவரும்
 உரிமை கொண்டாட

 குழம்பிப்போன
 நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை
 கேட்டார்.

அங்கிள் ரெண்டு பேருமே ஏன்
 பிரியறாங்க..? என்ற
 எதிர்பாராத தீபாவின் கேள்வியில்

 ஆடிப்போனார் நீதிபதி.
அது… வந்து…
அம்மா பேசறது அப்பாவிற்கும் அப்பா
 பேசறது அம்மாவுக்கும்
 புரியலையாம்.அதான் பாப்பா..
அவங்க பிரியறாங்க… என
 சமாளித்தார்.

அங்கிள்
 ரெண்டு பேருமே பெரியவங்க.
அவங்க பேசறதே
 அவங்களுக்கு புரியலைன்னா,நான்

 இன்னும் சின்னப்
 பொண்ணு. நான் பேசறதை அவங்களால
 எப்படி புரிஞ்சுக்க முடியும்?

அதனால என் பேச்சை கேட்டு,
புரிஞ்சு எனக்கு
 எல்லாம் செய்யற வேலைக்காரப்
 பாட்டி வீட்டிற்கே

 போயிடறேன் என்ற தீபாவின் பேச்சைக்
 கேட்ட
 நீதிபதியின்
 பேனா தானாகவே உடைந்தது!

குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...





குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...



காதுகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு எளிய விஷயம் தான். ஆனால் அதுவே குழந்தைகளின் காதுகள் என்று வரும் போது சற்று சிரமமாக மாறி விடுகிறது. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்துவதால் அவர்களின் காதுகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் காதுகளின் மடிப்புகளில் தேங்க வாய்ப்புள்ள செத்த அணுக்களையும் நீக்கும். குழந்தைகளின் காதுகளில் உண்டாகும் வேக்ஸ் எந்த ஒரு தொற்றையும் ஏற்படுத்தாது.


மேலும் அது காது கேட்கும் திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. அதனால் பொதுவாக காதுகளில் உருவாகும் வேக்ஸ் ஆபத்தில்லாத ஒரு சாதாரண பொருளாகவே திகழ்கிறது. இது கிருமிகள் மற்றும் அயல் பொருட்களை காதுக்குள் நுழைய விடாமலும் தடுக்கும். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமாக வேக்ஸ் உருவாகும் போது மருத்துவரை அணுகுவது நல்லது. அனுபவமுள்ள மருத்துவர் குழந்தையின் காதுகளில் இருக்கும் வேக்ஸ் மற்றும் அழுக்குகளை பாதுகாப்பாக எடுத்து விடுவார். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த காட்டன் பட்ஸை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. காதுகளை சுத்தப்படுத்தும் முறைகளில் அதிக இடர்பாடு நிறைந்த தேர்வாக அது கருதப்படுகிறது.


காதுகளை சுத்தப்படுத்தும் போது தவறு ஏற்பட்டால் அதன் விளைவு பெரிய ஆபத்துக்களில் போய் முடியும். இதனால் தொற்றுக்களும் உண்டாகும். காதுகளை சுத்தப்படுத்த சரியான முறையை கையாளாவிட்டால் செவிச்சவ்வு உடையும் அபாயமும் உண்டு. இதனால் காது கேட்கும் திறனை இழக்கவும் வாய்ப்பு உள்ளது. அதனால் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது கூடுதல் கவனமும் பொறுமையும் கண்டிப்பாக தேவை. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்களை பரிந்துரைத்துள்ளோம். அவைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் உங்கள் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்துங்கள். குளிக்கும் போது சுத்தப்படுத்தவும் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த அதனை குளிப்பாட்டும் வேளையே உகந்ததாக விளங்கும்.


ஈரத்துடன் இருக்கும் போது குழந்தைகளின் காதுகளை எளிதில் சுத்தப்படுத்தி விடலாம். நீரில் நனைத்த துணியை கொண்டு காதின் வெளிப்புறங்களை துடைத்து கொள்ளவும். அதன் பின் காதுகளின் உட்புற மடிப்புகளை துடைக்கவும். பின் எஞ்சியிருக்கும் வேக்ஸ்களை அகற்றவும். வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைக்கவும் உங்கள் குழந்தையை குளிப்பாட்டும் போது அதன் காதுகளை வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைத்திடுங்கள். உங்கள் குழந்தையின் காதுகள் சுத்தமாக இருக்க இதனை சீரான முறையில் செய்தாலே போதுமானது. காதுகளில் சேர்ந்துள்ள செத்த அணுக்கள் மற்றும் வேக்ஸ் ஆகியவற்றை இது நீக்கிடும். காட்டன் பட்ஸ் குழந்தைகளின் காதுகளுக்குள் காட்டன் பட்ஸை நுழைக்கவே கூடாது. பொதுவாகவே குழந்தைகளின் காதுகளுக்குள் ஆழமாக எந்த பொருளையுமே நுழைக்க கூடாது.


இது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸாகும். இது செவிச்சவ்வை பாதித்து பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும். காதுகளுக்கான சொட்டு மருந்து குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமான வேக்ஸ் உருவாகியிருந்தால் அதனை நீக்க மேற்கூறிய டிப்ஸ் எடுபடாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் காதுகளுக்கான சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டும். இவ்வகையான சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். சுயமான வழிமுறைகளை தவிர்க்கவும் மருத்துவ ரீதியான வழிமுறையை பின்பற்றாமல் சில பேர் வீட்டு சிகிச்சை முறையை பின்பற்ற கூடும். அப்படி எதையும் முயற்சி செய்யாதீர்கள். அது குழந்தையின் காதுகளை பாதித்து விடலாம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.


வறண்டு காணப்படும் நேரத்தில் சுத்தப்படுத்தாதீர்கள் 


 ஈரப்பதம் இல்லாமல்வறண்டு காணப்படும் நேரத்தில் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்தாதீர்கள். அது சருமத்தில் எரிச்சலையும் சிராய்ப்புகளையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த எப்போதுமே நீரில் நனைத்த துணியையே பயன்படுத்துங்கள். முடிந்த வரை குழந்தையை குளிப்பாட்டி விடும் நேரத்திலேயே காதுகளையும் துடைத்து விடுங்கள்.


கவனமாக இருங்கள்


பொதுவாக காதுகளை சுத்தப்படுத்தும் போது குழந்தைகள் உங்களோடு முழுமையாக ஒத்துழைப்பதில்லை. துடைத்து கொண்டிருக்கும் போது திடீரென அவர்கள் தலையை ஆட்டி விடும் அபாயம் இருப்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இருப்பதால் விபத்துகளை தவிர்க்கலாம்.

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!



தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.


நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன.


நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, ADVERTISEMENT கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம். இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம்.


 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.


நம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும். இதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection. நீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இல்லை. உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது.


ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும். இவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது. இதனை "heuristic" checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது. இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது.


இயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம். அல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும்.


எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும். இது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top