.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 31 December 2013

கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடைய..




கணவரோ மனைவியோ கவலையோடு இருந்தால் அவர்களின் சந்தர்ப்பத்தை புரிந்துகொண்டு தகுந்த முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலமாக கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடையும்.

ஆதரவான வாழ்க்கை துணையே ஆரோக்கியமான திருமண வாழ்வின் சாரம். உங்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு கடினமான சந்தர்ப்பங்களில் உங்களை ஆதரித்து உங்களை உயர்த்தும் வாழ்க்கை துணை அமைந்துவிட்டால் உங்கள் திருமணம் அர்த்தமுள்ளதாக மாறிவிடும். இது ஒரு நல்ல குடும்பத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சில காரணங்களுக்காக நாம் சோகமோ வருத்தமோ அடைவதுண்டு. இந்த சுறுசுறுப்பான வாழ்க்கையில் நாம் நமது குடும்பத்தோடு செலவிட நேரம் இல்லை. இதனால், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறையை தொடங்கி விட்டது.

வேலை சம்பந்தமான மன அழுத்தம் என்பது வேலைக்கு செல்லும் நபர்களிடையே அதிகமாக பார்க்கக்கூடிய பிரச்சனையாகும். உங்கள் கணவர் வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு வரும் போது ஒரு கப் காபி கொடுக்கலாம். எனினும், அவர் வருத்தமாகவோ கவலையாகவோ இருந்தால் கவனமாக கையாள வேண்டும்.

அந்த சமயத்தில் நீங்கள் அவருக்கு தேவையான உணர்வுபூர்வமான ஆதரவை அளிக்க வேண்டும். கடினமான சந்தர்ப்பங்களில் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதை தான் அவரும் எதிர்பார்ப்பார். சில நேரங்களில் இந்த உணர்ச்சிமிக்க உறவுகள் பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

அவரது மனநிலையையும் தன்மானத்தையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் ஆதரவை தர வேண்டும். உங்கள் கணவர் வருத்தத்துடன் இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை செய்தால், பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் கணவர் வருத்தத்துடன் காணப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் அவரோடு பேசுவதுதான்.

அவரது பிரச்சனைகளை கேட்டறிந்து அவருக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை கேட்க வேண்டும்.உங்கள் கணவருக்கு சில சொந்த எதிர்ப்பார்ப்புகள் இருக்கக் கூடும். சில குறிப்பிட்ட வழியில் அவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். நீங்கள் அவருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை கேட்டறியவேண்டும்.

சில நேரங்களில் நீங்கள் அவருக்கு உதவ நினைப்பார்கள். எனினும், அவருக்கு உங்களிடம் உதவி கேட்க தயக்கம் இருக்கும். அதனால் நீங்களாகவே அவரிடம் கேட்டறியலாம். உணர்ச்சிபூர்வமான கணவர்களை உங்கள் அன்பின் மூலம் கட்டுப்படுத்தலாம். பேசிதான் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

அவரை கட்டிகொண்டோ அல்லது வேறுவிதமாகவோ வெளிப்படுத்தி அவரை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம். இது அவருக்கு தேவைப்பட்டால் இந்த வழியில் ஆதரவு அளிக்கலாம். கட்டுதல் மூலமாக நீங்கள் எப்பொழுதுமே அவரோ இருப்பதை தெரிவிக்கும்.அதனால் இதனை முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக உணர்ச்சிபூர்வமான கணவர்களை சிறந்த முறையில் கையாளலாம்.

Monday, 30 December 2013

தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முதலிடம் : சாதனை பாடலாசிரியர் நா.முத்துக்குமார்..!




தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முதலிடம் :
சாதனை பாடலாசிரியர் நா.முத்துக்குமார்!

பத்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.  பத்தாவது ஆண்டாக ‘2013’ம் ஆண்டிலும் அதிக படங்கள், அதிக பாடல்கள் எழுதியிருக்கிறார். 2013 ம் ஆண்டு 34 படங்களில் 106 பாடல்கள் எழுதியுள்ளார். இவற்றில் 10 படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார்.

 2014 ம் ஆண்டிலும் அவர்தான் முதலிடத்தில் இருப்பார் போலிருக்கிறது.  97  படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.

2013ம் ஆண்டில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களும் - அப்பாடல்கள் இடம்பெற்ற படங்களும்:

படங்கள் :

1. தலைவா (அனைத்து பாடல்கள்)
2. தங்க மீன்கள் (அனைத்து பாடல்கள்)
3. ராஜா ராணி
4. வணக்கம் சென்னை
5. கேடி ரங்கா கில்லாடி பில்லா
6. உதயம் என்.எச் 4
7. ஆதலால் காதல் செய்வீர்
8. சமர் (அனைத்து பாடல்கள்)
9. பட்டத்து யானை
10. ஐந்து ஐந்து ஐந்து (அனைத்து பாடல்கள்)
11. இவன் வேற மாதிரி
12. ஆல் இன் ஆல் அழகுராஜா (அனைத்து பாடல்கள்)
13. சேட்டை
14. ஒன்பதுல குரு.
15. குட்டிப்புலி
16. தில்லு முல்லு – 2
17. வத்திக்குச்சி
18. சொன்னாப் புரியாது
19. புத்தகம்
20. யாருடா மகேஷ் (அனைத்து பாடல்கள்)
21. மூன்று பேர் மூன்று காதல் (அனைத்து பாடல்கள்)
22. மத்தாப்ப10
23. சுண்டாட்டம்
24. சும்மா நச்சுன்னு இருக்கு
25. நிர்ணயம் (அனைத்து பாடல்கள்)
26. துள்ளி விளையாடு
27. நேரம்
28. அழகன் அழகி
29. கல்லாப் பெட்டி
30. நாகராஜ சோழன் ஆ.யு ஆ.டு.யு(அனைத்து பாடல்கள்)
31. சோக்காலி
32. மாசாணி
33. வெள்ளச்சி (அனைத்து பாடல்கள்)
34. சென்னையில் ஒரு நாள்

 ஹிட்டான பாடல்களில் சில…
1. வாங்கண்ணா வணக்கங்கன்னா (தலைவா)
2. யார் இந்த சாலை ஓரம் (தலைவா)
3. தலைவா தலைவா (தலைவா)
4. தழிழ்ப்பசங்க (தலைவா)
5. ஆனந்த யாழை மீட்டுகிறாய் (தங்க மீன்கள்)
6. ஃபர்ஸ்ட்டு லாஸ்ட்டு (தங்க மீன்கள்)
7. நதி வெள்ளம் மேலே (தங்க மீன்கள்)
8. ஹே பேபி (ராஜா ராணி)
9. சில்லென ஒரு மழைத்துளி (ராஜா ராணி)
10. ஏ பெண்ணே பெண்ணே (வணக்கம் சென்னை)
11. காற்றில் ஏதோ (வணக்கம் சென்னை)
12. ஒரு பொறம்போக்கு (கேடி கில்லா கில்லாடி ரங்கா)
13. யாரோ இவன் யாரோ இவன் (உதயம் என்.எச்.4)
14. அழகோ அழகு (சமர்)
15. விழகளிலே (ஐந்து ஐந்து ஐந்து)
16. முதல் மழைக்காலம் (ஐந்து ஐந்து ஐந்து)
17. என்ன ஒரு என்ன ஒரு அழகியடா (பட்டத்து யானை)
18. என்ன மறந்தேன் (இவன் வேற மாதிரி)
19. யாருக்கும் சொல்லாம (ஆல் இன் ஆல் அழகுராஜா)
20. உன்னை பார்த்த நேரம் (ஆல் இன் ஆல் அழகுராஜா)
21. சித்ரா தேவிப்பிரியா (ஆல் இன் ஆல் அழகுராஜா)
22. வா மச்சி வா மச்சி (ஒன்பதுல குரு)
23. குறு குறு கண்ணாலே (வத்திக்குச்சி)
24. ஆஹா காதல் (மூன்று பேர் மூன்று காதல்)
25. ஸ்டாப் த பாட்டு (மூன்று பேர் மூன்று காதல்)

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் படங்கள்:

1. தரமணி (அனைத்து பாடல்கள்)
2. ஈட்டி
3. நான் சிகப்பு மனிதன் (அனைத்து பாடல்கள்)
4. பிரம்மன்
5. சைவம் (அனைத்து பாடல்கள்)
6. சிப்பாய்
7. ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை
8. அரிமா நம்பி
9. தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்
10. காவியத்தலைவன்
11. ராமானுஜம்
12. வாலு
13. அஞ்சல
14. மாலினி பாளையங்கோட்டை-22 (அனைத்து பாடல்கள்)
15. தொட்டால் தொடரும்
16. அதிதி
17. அழகுக்குட்டி செல்லம் (அனைத்து பாடல்கள்)
18. ஆள்
19. டமால் டுமீல்
20. ஓம் சாந்தி ஓம் (அனைத்து பாடல்கள்)
21. பென்சில் (அனைத்து பாடல்கள்)
22. அடித்தளம் (அனைத்து பாடல்கள்)
23. அது வேற இது வேற (அனைத்து பாடல்கள்)
24. சுவாசமே (அனைத்து பாடல்கள்)
25. படம் பேசும்
26. இருவர் உள்ளம் (அனைத்து பாடல்கள்)
27. ஆவிகுமார் (அனைத்து பாடல்கள்)
28. மேகா
29. நாடிதுடிக்குதடி
30. வேல்முருகன் போர்வெல்ஸ்
31. துணை முதல்வர்
32. நான்தான் பாலா
33. பனிவிழும் நிலவு
34. ஞானக்கிறுக்கன்
35. புன்னகை பயணக்குழு
36. 54321 (அனைத்து பாடல்கள்)
37. என்னதான் பேசுவதோ (அனைத்து பாடல்கள்)
38. ஜமாய்
39. சோம்ப்பப்டி
40. எங்க காட்டுல மழை
41. புளியமரம் (அனைத்து பாடல்கள்)
42. மனதில் மாயம் செய்தாய் (அனைத்து பாடல்கள்)
43. கணிதன்
44. வாலிப ராஜா
45. கலக்குற மாப்ளே
46. போர்க்களத்தில் ஒரு ப10
47. வெண்ணிற இரவுகள் (அனைத்து பாடல்கள்)
48. திறப்பு விழா
49. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்
50. மைதானம்
51. ரெண்டாம் படம்
52. நீங்காத எண்ணம் (அனைத்து பாடல்கள்)
53. ஏன் என்னை மயக்கினாய்
54. வதம்
55. என் காதல் புதிது
56. வீரவாஞ்சி
57. ஓம்காரம் (அனைத்து பாடல்கள்)
58. திருப்பங்கள் (அனைத்து பாடல்கள்)
59. படித்துறை
60. காட்டுமல்லி (அனைத்து பாடல்கள்)
61. வெயிலோடு உறவாடி
62. கதைகேளு கதைகேளு
63. உயிர்மொழி (அனைத்து பாடல்கள்)
64. அர்ஜீன்
65. விரட்டு
66. சாரல்
67. பள்ளிக்கூடம் போகாமலே
68. பரிமளா திரையரங்கம்
69. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (அனைத்து பாடல்கள்)
70. பாடும் வானம் பாடி
71. கருவாச்சி
72. நகர்ப்புறம்
73. தாண்டவக்கோனே
74. கருப்பர் நகரம்
75. ராஜகோபுரம்
76. அழகானவர் (அனைத்து பாடல்கள்)
77. பரமர்
78. நீ எல்லாம் நல்லா வருவடா
79. விஞ்ஞானி
80. ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஜீவா நடிக்கும் படம் (அனைத்து பாடல்கள்)
81. நாலு பேரும் ரொம் நல்லவங்க
82. இயக்குனர் மனோபாலா தயாரிக்கும் படம் (அனைத்து பாடல்கள்)
83. யாவரும் கேளீர் (அனைத்து பாடல்கள்)
84. உனக்குள் பாதி
85. சரவணப் பொய்கை
86. ஆதியும் அந்தமும்
87. கொடைக்கானலில் ஊட்டி
88. மாப்பிள்ளை விநாயகர் (அனைத்து பாடல்கள்)
89. கோவலனின் காதலி
90. பணக்காரன்
91. மன்னவா
92. அழகிய பாண்டிபுரம்
93. குறுநில மன்னன் (அனைத்து பாடல்கள்)
94. சாரல்
95. அவலாஞ்சி (அனைத்து பாடல்கள்)
96. கபடம்
97. கனா காணுங்கள் (அனைத்து பாடல்கள்)

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?




வெறுமையான கூடுகள் போல் காணப்படுகின்றன, சில வீடுகள்! அங்கு பிள்ளைகளும் இல்லை. பேரக்குழந்தைகளும் இல்லை. விளையாட்டும் இல்லை. சிரிப்பும் இல்லை. ஜாலியும், சந்தோஷமும் நிரம்பி வழிந்த அப்படிப்பட்ட பல வீடுகளில் இப்போது ஒரு சில முதியோர்கள் மட்டும் வசிக்கிறார்கள்.

முதியோர்கள் குடும்பத்திற்கு பாரமாக, ஆரோக்கியமும், மன நிம்மதியும் இன்றி, ‘கண்ணும் தெரியவில்லை. காதுகளும் கேட்கவில்லை. யாரும் தன்னை மதிப்பதில்லை’ என்ற விரக்தியோடுதான் மீதி காலத்தை கழிக்கவேண்டுமா? – இல்லை. அவர்கள் முதுமையிலும் இனிமையாக வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

எப்படி? இதோ சொல்கிறேன்.. 1960-ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள் 42 வயது. தற்போது பெண்களுக்கு 67-ம், ஆண்களுக்கு 64-ம் சராசரி வயதாக இருக்கிறது. அதனால் நாமெல்லாம் எதிர்காலத்தில் 80, 90-வது பிறந்த நாளைக்கூட கொண்டாடலாம்!

அப்படி கொண்டாட வேண்டும் என்றால் முதுமையை வரவேற்று அதனோடு வாழ பழகிக்கொள்ளவேண்டும். நம்மை படைக்கும்போதே கடவுள் நமது உடலில் எந்த பிரச்சினை எதிர்காலத்தில் வந்தாலும் தாக்குப்பிடித்து வாழ வசதியாக முக்கியமான ஒவ்வொரு உறுப்பிலும் இலவச இணைப்புபோல் அதிகப்படியான அளவை, அதிகப்படியான சக்தியை கொடுத்திருக்கிறார்.

கிட்னியில் இன்னொன்று, ஈரலில் 80 சதவீதம் தேவைக்கு அதிகமாக, கல்லீரலில் 60 சதவீதம் கூடுதலாக..! இப்படி ஒவ்வொன்றிலும் கடவுளின் கருணை தெரிகிறது. அதனால்தான் இளமையில் ஆடாத ஆட்டம் ஆடினாலும் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் தப்பித்துவிடுகிறோம். ஆனால் முதுமை அப்படி அல்ல.

‘மார்ஜின் ஆப் எர்ரர்’ என்று குறிப்பிடும் அந்த சக்தி இயல்பாகவே முதுமையில் குறைந்துவிடுகிறது. உடலின் எல்லா பகுதிக்கும் முதுமையில் ரத்த ஓட்டம் குறையும்.  மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும்போது ‘மைனர் ஸ்ட்ரோக்’ எனப்படும், வெளிக்கு தெரியாத பக்கவாத பாதிப்புகள் தோன்றும்.

அதனால்தான் சிலர் ஐந்தாறு தடவை அழைத்த பின்பு தான் சுதாரித்துக்கொண்டு ‘என்னையா அழைத்தீர்கள்?’ என்று கேட்பார்கள். ஆஸ்டியோபோராசிஸ் என்ற எலும்பு அடர்த்திக்குறைபாட்டு நோய் முதுமையில் தென்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்று ‘மனோபாஸ்’ ஆகும் காலகட்டத்திலே இந்த தொந்தரவு தோன்றி விடும்.

இதில் குறிப்பிடத்தக்க பிரச்சினை என்னவென்றால், கீழே இனிமையாக வாழ்வது எப்படி? வெறுமையான கூடுகள் போல் காணப்படுகின் அவர்கள் விழுந்தால் எளிதாக எலும்பு முறியும். சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் விரைவாக பலன் கிடைக்காது.

மூட்டுத் தேய்மானமும் முதுமையில் உருவாகி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிலருக்கு தேவைப்படும். அறுபது வயதுக்கு பிறகு முதியவர்கள் உடலில் ஒவ்வொரு நோயாக வந்து ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். சர்க்கரை நோய் தாக்கி இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது? என்பதைவிட, அவரது உடலில் சர்க்கரை நோய் எவ்வளவு காலமாக இருக்கிறது என்பது கவனிக்கத் தகுந்தது.

ஏன்என்றால் நீண்ட காலமாக அந்த நோய் தாக்கி இருந்தால் கண், கிட்னி, இதயம் போன்றவை பாதிக்கப்படக்கூடும். ஈரல், கிட்னி ஆகிய இரண்டு உறுப்புகளும் நாம் இளைஞராக இருக்கும்போது, சாப்பிடும் மாத்திரையில் இருக்கும் தேவையற்ற வைகளை அப்படியே பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்கவிடாமல் வெளியேற்றிவிடும்.

முதுமையில் அந்த இரண்டு உறுப்புகளின் செயல்பாடும் மந்தமடைவதால் நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் தேவையற்றவைகளும் பிரித்தெடுக்கப்படாமல் அப்படியே ரத்தத்தில் கலந்துவிடும். அதனால்தான் முதுமையில் நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகளால் அதிக பக்கவிளைவுகள் சிலருக்கு தோன்றுகின்றன.

நோயாளிக்கு டாக்டர்கள் மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது, ‘மிகக் குறைந்த அளவு’, ‘அதிகபட்ச அளவு’ என்ற இரு எல்லைகளை கையாண்டு அதற்கு தக்கபடி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அளவை நிர்ணயிப்பார்கள். இதை ‘தெரபூயிட்டிக் வின்டோ’ என்போம்.

அந்த இடைவெளியை முதுமையில் மிக கவனமாக கண்காணித்து மாத்திரைகள் வழங்கவேண்டும். தேவைக்கு அதிகமான ‘டோஸ்’ கொடுத்துவிட்டால், பக்க விளைவுகள் அதிகரித்துவிடும். எல்லா வியாதிகளுக்கும் அறிகுறிகள் உண்டு.

இளமையில் உடலில் அதிக சக்தி இருக்கும்போது அறிகுறிகளை எளிதாக கண்டு சிகிச்சையை உடனே தொடங்கிவிடலாம். முதியவர்களுக்கு உடலில் சக்தி குறைவதால் உள்ளே நோயின் பாதிப்பு அதிகம் இருந்தாலும், அறிகுறிகளை அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. சிறுநீர் பாதை அருகில் ‘ப்ரோஸ்டேட் சுரப்பி‘ உள்ளது.

முதுமையில் அந்த சுரப்பி வீங்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். முழுமையாக வெளியேறவும் செய்யாது. திடீரென்று சிறுநீர் வெளியேறாமல் தொந்தரவு செய்வதும் உண்டு. உடல் இயக்கம் குறைவதால் தூக்கமின்மையும் முதியோர்களை அதிகம் தொந்தரவு செய்கிறது.

பற்கள் விழுந்துவிடுவதால் மென்று அவர்களால் சாப்பிட முடியாது. அதனால் உணவு உண்பதில் பிரச்சினையும், ஜீரணக்கோளாறும் தோன்றுகிறது. புற்றுநோயும் முதியோர்களை அதிக அளவில் தாக்கி நிலைகுலையச் செய்கிறது.

கட்டி, ஆறாத புண்கள் தோன்றினாலோ இருமலில், வாந்தியில், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளிப்பட்டாலோ டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் அதிக ரத்தப் போக்கு உடனடியாக கவனிக்கத் தகுந்தது. இதுபோன்ற ஏராளமான உடல்பிரச்சினைகள் மட்டுமின்றி, மனப் பிரச்சினைகளாலும் முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வணக்கம் வைப்பது தீண்டாமையா...?







இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு.  ஆனால் இப்படி வணக்கம் செலுத்துவதில் ஒரு வகையான தீண்டாமை இருக்கிறது என்றும், அதனால் ஐரோப்பிய முறைப்படி கைகுலுக்கி, கொள்வதே சிறந்த மரபு என்றும் சில தமிழ் அறிஞர்கள் பேசுவதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.


   ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறா என்ற ஒளி வட்டம் தனித்தனியாக உள்ளது.  இதனை நவீன கேமராக்கள், படம் எடுத்தும் உள்ளன.  விஞ்ஞானமும் அதை ஒத்து கொள்கிறது.


 இந்த ஆறா என்பது வேறொரு மனிதனை தொடும் போது மற்றவர்களின் ஆறாவால் சற்று சலனம் படுகிறது.

  இது சம்பந்தப்பட்ட இருவருக்குமே நல்லது என்று சொல்ல முடியாது.  இதை முற்றிலுமாக உணர்ந்த நமது முன்னோர்கள் வணக்கம் செலுத்தும் முறையை கொண்டு வந்தார்கள்.

  இதில் தீண்டாமை இருப்பதாக அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

  காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு என கண்ணதாசன் சொல்வது போல் குதர்க்கமான பார்வையாளர்களுக்கு எல்லாமே குதர்க்கமாகப் படுகிறது.


மேல்நாட்டு முறையில் கை குலுக்கி கொள்வது தீண்டாமையை விரட்டுகிறது என்றால் ஐரோப்பியர்கள் போலவே கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அறிமுகம் படுத்தி கொள்வதற்கு இந்த அறிஞர்களுக்கு துணிச்சல் உள்ளதா என கேட்க விரும்புகிறேன்.

 இவையெல்லாம் இருக்கட்டும் இனி வணக்கம் செலுத்தும் முறைக்கு வருவோம்.  இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி உயர்த்தி வணங்குவது கடவுளை வணங்கும் முறை.

 நெற்றிக்கு நேராக கை கூப்புவது ஆசியரை வணங்கும் முறை.

  உதடுகளுக்கு நேராக கைகளை குவிப்பது தந்தையையும், அரசரையும் வணங்கும் முறை.


   மார்புக்கு நேராக வணங்குவது உள்ளத்தாலும் அறிவாலும் உயர்ந்த சான்றோரை வணங்கும் முறை.

   தொப்புள் கொடி உறவை தந்த தாயை வயிற்றுக்கு நேர் கை கூப்பி வணங்க வேண்டும்.


   இதயத்தில் கை வைத்து நம்மை விட சிறியவர்களை வணங்க வேண்டும்.  இது தான் இந்திய மரபு.

    இதில் தீண்டாமை என்பது இல்லவே இல்லை.

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை...??





நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது.


ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான்.


 எம்.எம்.எஸ், அறிவியலின் அற்புத தொழில்நுட்பம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால், சில விஷமிகள் தோழிகளாக பழகும் பெண்களை ஆபாச படம் பிடிக்கவும், பயமுறுத்தவும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால், பல பெண்களின் வாழ்க்கைச் சீரழிவது தொழில் நுட்பக் கொடுமை.
ஆண்களை விட இளம் பெண்கள் அதிகம் செல்லின் வசம் அடிமையாகிக் கிடக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.


ஓயாத செல் பேச்சு, எந்நேரமும் மெசேஜ் எனத் திரியும் பெண்கள் அதனாலே பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ‘ஹாய்‘ என்று ஒரு சின்னஞ்சிறு குறுஞ்செய்தியில் ஆரம்பிக்கும் ஆண் பெண் தொடர்பு தற்கொலை, கொலை போன்ற அசாதாரண சம்பவங்களில் முடிவதில் பெரும்பங்கு செல்லுக்குத் தான். செல்லில் இருக்கும் மிஸ்டு காலை பார்த்து பேச ஆரம்பித்து பிறகு அந்த அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து தொடர் குறுஞ்செய்திகள், போன்கால்கள் என வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள் பல பெண்கள். பெற்றோர்கள் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.


  செல்லில்பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் தினமும் தொடர்கதையாகவே உள்ளது. பம்பர் லாட்டரி, பரிசு,  என்று வரும் மெசேஜைப் பார்த்து ஏமாந்து பணத்தை பறிகொடுத்துவிட்டு, கமிஷனர் அலுவலகம் வரும் அப்பாவிகள் ஏராளம்.
அதீத செல்போன் பழக்கத்தினால் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். அளவுக்கதிகமான செல்போன் பயன்படுத்தும் பழக்கம் கேன்சரில் முடிவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


பெண்களை ஏமாற்ற இத்தகைய செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அது மட்டும் போதாது எந்நேரமும் அரசாங்கம் பெண்கள் பின்னே நிற்க முடியாது என்பதால் இதுகுறித்து பெண்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சி ஏற்படுவது தான் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கமுடியும்.


பெற்றோரின் கண்காணிப்பின்றி நகரங்களில் தங்கி படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் தான் செல்லால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது அவர்களை ஆபத்திற்குள்ளாக்கும் என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால், தேவையற்ற நபர்களின் எஸ்.எம்.எஸ்க்குப் பதில் அளிக்காதீர்கள். காதலன் தானே, பாய்பிரண்ட் தானே என்று அலட்சியப்பேச்சும் வேண்டாம். உங்களுக்குள் பிரிவு ஏற்படும் போது அது உங்களை படுகுழியில் தள்ளிவிடும். பெண்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் இத்தகைய பேச்சுகளை பெண்கள் தவிர்க்கவேண்டும்.


அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள்.


 விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top