
இந்த புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதாவது முப்பது நாட்களுக்கு முன் டிக்கட்டுகளை பதிவு செய்த வாடிக்கையாளர் களுக்கு 65 சதவிகிதம் சலுகையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்குகிறது. அதிலும் இதே சலுகையில் இந்நிறுவனம் ஒரு மில்லியன் டிக்கட்டுகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.ஆனால் ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பயணிக்க விரும்புகின்றவர்கள் ஜனவரி 5-க்குள் டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஜனவரி மாதத்தின் முற் பகுதியில் பயணக்காலம் முடிவடையும் என்பதால், விமான சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மட்டுமலாமல் பிற்காலத்திலும் இந்த...