.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 29 December 2013

உதவி கேட்ட ஆவி..!




ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர்.சிறிது தூரத்தில் ஒரு பெண் இரத்தக் காயங்களுடன் தங்கள் காரை நோக்கி ஓடி வருவதை பார்த்தனர்.உடனே மனைவி காரை நிறுத்தாமல் செல்லுங்கள் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும...் என்று எச்சரித்தாள்.

ஆனால் அவள் கணவரோ வண்டியின் வேகத்தை குறைத்து அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.நாங்கள் வந்த கார் விபத்து ஏற்பட்டு அங்கே நிற்கிறது, என் கணவர் விபத்தில் இறந்துவிட்டார் என் குழந்தை உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறது .தயவு செய்து என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்று கதறினாள்.

அவரும் இறங்கி சென்று விபத்துக்குள்ளான காரை பார்த்தார்.முன் சீட்டில் ஒரு பெண்ணும் அவள் கணவரும் இறந்து கிடந்தனர் பின் சீட்டை பார்த்தார் அங்கு ஒரு குழந்தை அடிப்பட்டு மயக்கத்தில் கிடந்தது.

உடனடியாக அந்த குழந்தையை எடுத்து கொண்டு தன் காரை நோக்கி ஓடினார் ,குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து விட்டு தன்னிடம் உதவி கேட்ட பெண் எங்கே என்று தேடினார்.

எங்கும் காணாததால் விபத்துகுள்ளான காரை நோக்கி சென்றார்.காரில் இறந்து கிடந்த ஒருவரையும் அவருக்கு அடுத்த சீட்டில் சீட் பெல்ட் மாட்டியபடி இறந்து கிடந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தன்னிடம் சற்று முன் தன் குழந்தையை காப்பாற்றும்படி உதவிகேட்ட அதே பெண் தான் அவள்.

அன்னை என்பவள் தான் இருந்தாலும் இறந்தாலும் குழந்தையின் வாழ்வுக்காகவே வாழ்பவள்.அன்னையைவிட சிறந்த தெய்வத்தை வேறு எங்கும் காண முடியாது.

Saturday, 28 December 2013

அந்த மூன்றாம் நாள்





ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக்கொண்டிருக்கும் போது தன் மனைவியின் மேல்உள்ள கோபத்தில் அவளைக் கொன்று யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான்

 மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப் பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான்..

ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.

இரண்டாம் நாளாவது கேட்பான் என நினைத்தான்.ஆனாலும் கேட்கவில்லை.வழக்கம் போல மகன் சந்தோசமாக இருந்தான்.

மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம் பேச்சு கொடுத்தான்.

 "உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம் தெரியுதா? எங்கிட்ட ஏதாவது கேக்கணும் போல இருந்தா கேளு"

மகன் மெல்லக்கேட்டான்:

 "மூணுநாளா அம்மா ஏன் உங்க பின்னாடியே நிக்கிறாங்கப்பா?"

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை





சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை


 காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.


எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,


முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,


எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.


எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.


எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

மோகன்லால் பர்ஸ்ட், விஜய் நெக்ஸ்ட்!




'ஜில்லா' பட டைட்டிலில் மோகன்லால் பெயரை போடுமாறு விட்டுக்கொடுத்துள்ளாராம் விஜய்.   

விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படப்பிடிப்பை நடத்தி, படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் ஆர்.டி.நேசன்.

இப்போது டைட்டில் போடும் நேரத்தில் அவர் முன்னரே எதிர்பார்த்த அந்த தர்மசங்கடமான சூழ்நிலை வந்துவிட்டது.

விஜய் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். மோகன்லாலோ 35 வருட காலமாக மலையாள சினிமாவின் எவர்கிரீன் ஹீரோ.

முழுப்படத்தையும் இயக்கி முடித்துவிட்ட இயக்குனர் ஆர்.டி.நேசனுக்கு டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் குழப்பம்.

ஆனால் இயக்குனரின் மனப்போராட்டத்தை புரிந்துகொண்டு, விஜய்யின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும் என இயக்குனரிடம் முன்பே சொல்லிவிட்டார் மோகன்லால்.

ஆனால் விஜய்யோ, மோகன்லாலின் சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, டைட்டிலில் மோகன்லால் பெயர்தான் முதலில் வரவேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் இயக்குனர் நேசன்.

சொல்லாதீர்கள்... கவிதை?



எங்களை இல்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
 வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!


எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
 தனித்து அழமுடியும் எங்களால்..!


எங்களை வீரமற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
 தைரியம் இருக்கிறது எங்களிடம்..!


எங்களை திக்கற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
 எங்கள் வறுமை ஜாதிதான்..!


எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
 குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top