.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 28 December 2013

வெளிநாட்டுக் கல்வி - கொஞ்சம் திட்டமிட்டால் போதும்...


வெளிநாட்டுக் கல்வியானது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைத்தது அந்தக் காலம். கொஞ்சம் திட்டமிட்டால் போதும்; படிப்பு தகுதிகொண்ட நடுத்தர குடும்பத்து மாணவன்கூட வெளிநாடு சென்று படிக்க முடியும் என்பது இந்தக் காலம். என்றாலும், இந்த உண்மை பலரையும் சென்று சேராததற்கு காரணம், அதுகுறித்த விழிப்பு உணர்வு பரந்த அளவில் மக்களிடம் சென்று சேராததே.


வெளிநாட்டில் கல்வி வாய்ப்புகள் எப்படி உள்ளது? என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?


''இந்தியாவில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், உலகளவில் டாப் 100 கல்வி நிறுவனங்களில் நம் நாட்டைச் சேர்ந்தவை எதுவும் இல்லை. வேலையுடன் கூடிய கல்வி, உடனடி வேலை வாய்ப்பைத் தரும் கல்வி என்பது இந்தியாவில் குறைவுதான்.


ஆனால், அயர்லாந்து போன்ற மிகச் சிறிய மேற்கத்திய நாடுகளில்கூட கல்வி, வேலை வாய்ப்போடு பிரிக்க முடியாதவாறு உள்ளது. இந்தியாவில் கல்லூரியில் படித்து முடித்தவர்கள் அடுத்ததாக மேற்படிப்போ, ஆராய்ச்சியோ செய்யவேண்டுமெனில், வேறு கல்வி நிறுவனங்களைத்தான் நாடவேண்டும். ஆனால், வெளிநாடுகளில், கல்லூரியில் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு அவர்களாகவே முன்வந்து மேற்படிப்பு வாய்ப்புகளை வழங்கு கின்றனர்.


உயர்கல்வி படிப்பிற்காக இங்கு செலவிடத்  தயாராக இருக்கும் தொகைக்குள் வெளிநாட்டுப் படிப்பும் சாத்தியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஜப்பான் போன்ற நாடுகளில், சிறந்த மாணவர்களுக்கு 60-100 சதவிகிதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. நான்கு வருட படிப்பில் முதல் இரண்டு வருடம் வகுப்பறை கல்வி எனில், அடுத்த இரண்டு வருடம் வேலை வாய்ப்புடன் கல்வி என்கிற வகையில், சில பாடத் திட்டங்களை எடுத்தால் கல்விக்கான செலவுகளை நாம் எளிதாக ஈடுகட்டிவிட முடியும்.


திட்டமிடல்!


ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தபிறகு மதிப்பெண் அடிப்படையில் வெளிநாட்டுக் கல்விக்கு திட்டமிடுவதைவிட, ப்ளஸ் டூ முடிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிடுவது நல்லது. எவ்வளவு மதிப்பெண் வரும் என்கிற எதிர்பார்ப்பு, எந்த கல்வி, எந்த நாடு என்கிற தெளிவு கிடைத்துவிட்டால், விசா நடைமுறைகள் மற்றும் முன்தயாரிப்பு வேலைகளுக்கு எளிதாக இருக்கும். சில கல்வி நிறுவனங்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்கூட மாணவர் களைத் தேர்வு செய்கின்றன.


மேலும், ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இருக்கும். நம்மூரில் மே - ஜூன் மாதங்கள் என்றால், வெளிநாடுகளில் மார்ச் - ஜூலை, ஜனவரி - செப்டம்பர் என கல்விப் பருவத்துக்கேற்ப மாணவர் சேர்க்கை நடக்கும். எனவே, கொஞ்சம் முன்கூட்டியே திட்டமிட்டால், செலவினங்கள், ஸ்காலர்ஷிப், கல்வி நிறுவனங்கள் தேர்வு போன்றவற்றை எளிதாக செய்ய முடியும்.


கல்வி நிறுவனங்கள் தேர்வு!


குறிப்பிட்ட கல்வி நிறுவனம் எவ்வளவு வருடங்கள் பாரம்பரியம் கொண்டது, சர்வதேச அளவில் அந்தக் கல்வி நிறுவனத்தின் ரேங்க், அந்நிறுவனம் வழங்கும் படிப்புகளுக்கு உள்ள சர்வதேச மதிப்பு, அங்கீகாரம், வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நிறுவனம் அளிக்கும் விகிதாசாரம், எவ்வளவு பேர் படிக்கின்றனர் என்பதுபோன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


இந்த விவரங்கள் அந்தக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் என்றாலும், நமது நாட்டிலிருந்து சென்றிருக்கும் மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டறிவது, அதே படிப்பு பிற கல்வி நிறுவனங்கள் / நாடுகளில் எப்படி உள்ளது என்று ஒப்பீடு செய்து பார்ப்பது போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யலாம். சில வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நேரடியாகவே செய்கின்றன. அதுபோன்ற சேர்க்கை முகாம்களிலும் விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

தயாராவது!

வெளிநாட்டுக் கல்வி, குறிப்பாக இந்த நாடுதான் என்று முடிவாகிவிட்டால், அதற்குரிய தகுதித் தேர்வு மற்றும் அந்த நாட்டின் மொழியை அறிந்து கொள்வது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்லவேண்டும் எனில் ஆங்கிலம் அவசியம்.


ஜெர்மனியில் படிக்க ஜெர்மன் தெரிந்திருப்பது கட்டாயம். மலேசியா, சிங்கப்பூரில் அந்நாட்டு மொழி தெரிந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஐ.இ.எல்.டி.எஸ். (International English Language Testing System);டி.ஓ.இ.ஐ.எல் (Test Of English as a Foreign Language) போன்ற தகுதித் தேர்வுகளை முடித்தால்தான் வெளிநாட்டில் படிப்பு சாத்தியம்.


எம்.பி.ஏ. படிப்பிற்கு ஜி-மேட் (Graduate Management Admission Test)தேர்வும், எம்.சி.ஏ. போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஜி.ஆர்.இ. (Graduate Record Examinations)-போன்ற தகுதித் தேர்வுகளும் சில நாடுகளுக்கு அவசியம். எனவே, இதுபோன்ற தகுதித் தேர்வுகளுக்கு தயாராகிக்கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பு!


வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்ததும் உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்றாலும், படிக்கும் காலத்திலேயே அதற்கான சாத்தியங்களும் உள்ளன. சில நாடுகளில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் படித்துகொண்டே வேலைக்குப் போகும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, துபாய் போன்ற நாடுகளில் மாலை நேரம்தான் வகுப்பு என்றால், காலை நேரத்தில் ஃப்ரீ ஜோன் ஏரியாக்களில் மாணவர்கள் பணியாற்ற முடியும். அமெரிக்காவில் வாரத்திற்கு 20 மணிநேரம் பகுதிநேர வேலை பார்க்கலாம்.


இதுதவிர, படிப்போடு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக, ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்பறை பாடமும், மூன்று நாட்கள் பணியிடப் பயிற்சியும் தரப்படும். நான்கு வருட கல்வி என்றால் கடைசி இரண்டு வருடங்கள் நேரடி பயிற்சி வகுப்புகளாகத்தான் இருக்கும். சில நாடுகளில், படித்தபிறகு வேலை தேடிக்கொள்வதற்கு ஏற்ப விசா சலுகைகளும் உள்ளன. இச்சலுகை காலத்திற்குள் வேலை தேடிக்கொண்டால் விசாவை புதுப்பித்துக்கொள்ளும் வசதிகளையும் வழங்குகின்றன.
உதவித் தொகைகள்!


எல்லா வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களும் உதவித் தொகை வழங்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், சிறந்த மாணவர் என்றால் ஸ்காலர்ஷிப் கண்டிப்பாக கிடைக்கும். சில நாடுகளில், வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் இதுபோன்ற உதவித் தொகைகள் கிடைக்கும். குறிப்பாக, ஜப்பானில் மாணவரின் தரத்திற்கு ஏற்ப 100 சதவிகிதம்கூட கல்வி உதவித் தொகை கிடைக்கும். குறிப்பிட்ட மாணவர் தொடர்ச்சியாக அக்கல்வி நிறுவனத்தில் படித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தால் அவருக்கு உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி என அனைத்து வாய்ப்புகளையும் வழங்குகின்றன. சில கல்வி நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் உதவித் தொகைகள் வழங்குகின்றன.


தரமான படிப்பு, படித்து முடித்தவுடன் வேலை என பலவிதங்களில் பயனுள்ளதாக அமையும் வெளிநாட்டுப் படிப்பை நீங்களோ, உங்கள் பிள்ளைகளோ ஏன் படிக்கக்கூடாது?

நச்சு எண்ணங்கள்?



ஒரு சில நச்சு எண்ணங்களை சுலபமாக அடையாளம் காண முடியாது.


அவை எங்கும் பரவிக் கிடக்கும்.


மிகச் சாவகாசமாக வேலை செய்யும்.அவற்றுக்கு இரையாகும் மனிதர்கள் அவற்றின் பாதிப்பை உணரும்போது ஏற்கனவே காலம் கடந்து போயிருக்கும்.  அவை......


குமுறல்: 


நாம் சிறுமைப்படுத்தப் பட்டு விட்டதாக எண்ணும் போதும்,நமது உறவு,உடமைகளை ஒருவர் அவமானப் படுத்தியதாக எண்ணும்போதும் நமக்குள் ஏற்படும் எரிச்சல்தான் குமுறல்.குமுறல் நமது உள் மனதில் அடியில் தங்கிப் புற்று நோய் போல வேலை செய்கிறது.


அது படிப்படியாக வளர்ந்து மேற்கொண்டு மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்,மென்மையான உள்ளங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும்,தன்னிரக்க வடிவெடுத்து நாளாவட்டத்தில் வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரேயடியாக ஒதுங்கிக் கொள்ளச் செய்யும்.அல்லது படு வேகமாகப் பரவும் குமுறல்,கோபமாகி ,கோபம் தாங்க முடியாத வெறுப்பாகி,வெறுப்பு வன்முறையாகி,சில சமயங்களில் கொலையில் கூட முடியும்.

 
நழுவல் மனோபாவம்: மனதுக்குப் பிடிக்காத யதார்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று உள் மனதுக்கு ஏற்படும் விருப்பத்தால், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற உள் மனதில் முக்கியமான பணி திசை திருப்பப்படுகிறது.அதன் விளைவாகத் தப்பியதே குறிக்கோள் என்று ஆகி விடுகிறது.

நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா...



நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...!


உங்களுக்கு சரக்கு அடிக்க ரொம்ப பிடிக்குமா? அப்படி சரக்கு அடித்த பின்னர் நீங்கள் செய்த அட்டகாசங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இல்லையா.. அப்படியெனில் இந்த கட்டுரையைப் படித்து பாருங்கள்.


பொதுவாக சரக்கு அடித்தவர்களுக்கு, சரக்கு அடித்தப் பின்பு செய்யும் லூட்டிகள் எதுவும் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் உங்களுக்கு சரக்கு அடித்த பின்னர் ஆண்கள் செய்யும் லூட்டிகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால், தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக சரக்கு அடித்தப் பின்னர், ஆண்கள் செய்யும் சில லூட்டிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்துப் பாருங்கள்.


நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...!


* சில ஆண்கள் சரக்கு அடித்தப் பின்னர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்தும் பாசத்திற்கு அளவே இருக்காது. அதுமட்டுமின்றி, அந்நேரத்தில் யாராவது ஒருவர் அவர்களிடம் சிக்கினால் போதும், அவ்வளவு தான். வேறு என்ன இதுவரை எங்கும் பார்த்திராத அளவில் பாச மழையில் நனைவார்கள்.


* சிலருக்கு போதை ஏறிவிட்டால் போதும், சூப்பர் மேன் போல் எதையும் செய்யும் தைரியம் வந்துவிடும். மேலும் அந்நேரத்தில் அவர்கள் இவ்வுலகில் தன்னை ஒரு பெரிய ஹீரோ போன்று பாவித்துக் கொண்டு, சிறு தவறு நடந்தாலே அதைத் தட்டி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.


* ஆண்களிடம் எப்போதும் இரகசியமே நிலைக்காது. ஏனெனில் அவர்கள் ஒரு கட்டிங் போட்டால் போதும், எப்பேற்பட்ட இரகசியத்தையும் ஒரு நொடியில் சொல்லிவிடுவார்கள்.


* சிலர் சரக்கு அடித்தால், காரணமே இல்லாமல் அழ ஆரம்பித்துவிடுவார்கள். அதிலும் சிலரோ பல வருடங்களுக்கு முன்பு இறந்து போன தாத்தா அல்லது பாட்டியை நினைத்து அழுவார்கள்.


* எப்படி அழும் பழக்கம் உள்ளதோ, அதுப்போல சிலருக்கு போதை ஏறிவிட்டால் சிரிக்க ஆரம்பிப்பார்கள்.


இதுப்போன்று பல லூட்டிகளை போதை ஏறிவிட்டால் ஆண்கள் செய்வார்கள். சரி, நீங்க என்ன லூட்டி செய்வீங்கன்னு எங்களோடு பகிர்ந்து கொள்ளலாமே!

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?



சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?


சின்ன வயசுல, தூக்கத்துல இருக்கும்போது நாம பண்ண சில சேட்டைகளப் (?) பத்தி, அடுத்த நாள் காலையில நம்ம குடும்பத்தாரோ/பள்ளி, கல்லூரியில கூட தங்கியிருந்த பசங்களோ சொல்லி கிண்டல் செய்யும்போது, “ஏய் நான் ஒன்னும் அப்படியெல்லாம் பண்ணல, சும்மா பொய் சொல்லாதீங்கப்பா”ன்னு சொல்றவங்ககிட்ட வாய்ச்சவடால் விட்டு சமாளிச்சிடுவோம் (?).


ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சி, தனியா நாமளே யோசிச்சுப் பார்த்துட்டு, “ஐய்யீய்ய…..நேத்து தூங்கும்போது, நாம இப்படியா செஞ்சிட்டோம்?!”னு நம்மள நாமே நொந்துக்கிட்ட அனுபவம், கிட்டத்தட்ட நம்ம எல்லாருக்குமே இருக்கும்னு நெனக்கிறேன்?! அது என்ன சேட்டைன்னு கேட்டா, பினாத்துறது, பாட்டு பாடுறது (ரெண்டு பாட்டுமேதான்?!), புறண்டு விழுந்து விடுவது, தூக்கத்துலேயே எழுந்து வெளியே நடந்து போறதுன்னு இப்படி நிறைய சொல்லலாம். (எதாவது விட்டுப் போயிருந்தா மறுமொழியில கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க?!)


மேலே சொன்ன தூங்கும்போது செய்யும் சேட்டைகள்ல, “தூக்கத்துல ஏன் சிலர் நடக்கிறாங்க”ன்னுதான் நாம இன்றைய பதிவுல பார்க்கப்போறோம். ஆனா, மேலே நான் சொல்லாத, ஒரு சுவாரசியமான சேட்டைய, நான் சின்னவயசுல தூங்கும்போது பண்ணியிருக்கேன். அது என்னன்னு பதிவுச்செய்தியோட முடிவுல சொல்றேன். இப்போ நாம பதிவுச் செய்திக்குப் போகலாமா…..


சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அடிப்படையில தூக்கத்தில் எத்தனை வகை இருக்கு, தூக்கத்தில் நடப்பதுன்னா என்னங்கிற ரெண்டு முக்கியமான விஷயங்கள நாம தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன்.


தூக்கத்தில் எத்தனை வகை இருக்கிறது?


தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் மூன்று நிலைகள் இருக்கிறது.


1. விழிப்பு நிலை (wakefulness)


2. அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {(non-REM (rapid eye movement)}


3. அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)- இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!


தூக்கத்தில் நடப்பது என்றால் என்ன?


தூக்கத்தில் நடப்பது அப்படீங்கிறது, “மனிதர்களின் ஒருவகையான தூண்டப்பட்ட, குழப்பமான மனநிலை”ன்னு சொல்றாரு இதுபற்றிய ஆய்வு செய்த முனைவர் விசேஷ் கபூர். அதாவது, (அறிவியல்பூர்வமா சொல்லனும்னா) தூக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் அதிவேக விழி அசைகளில்லாத தூக்க நிலை அப்படீன்னு அர்த்தம்!


சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?


உண்மையச் சொல்லனும்னா, சிலர் மட்டும் ஏன் தூக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற இந்த கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான/தெளிவான பதில் தெரியலைங்கிறதுதான் நிதர்சன உண்மை! இருந்தாலும், மாங்கு மாங்கு ஆராய்ச்சி செஞ்சிட்டு, இப்படித் தெரியலைன்னு, கூச்சப்படாம உதட்டப் பிதுக்கினா இந்த உலகம் நம்மள கொஞ்சங்கூட மதிக்காதுங்கிறதுனால, (மக்களே….இதெல்லாம் மேலிருப்பானோட தற்குறிப்பேற்ற அணிதான் சரிஙகளா?!) செஞ்ச ஆய்வைப் பத்தின ஆய்வறிக்கையில திரு. விசேஷ் கபூர் என்ன சொல்லியிருக்காருன்னா…….


பொதுவா தூக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள்கூட இருக்கலாமாம்?! ஆனா, பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் தூக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க தூங்கும்போது, மெதுவான அலை தூக்கம் (low-wave sleep), அதாவது “ஆழமான அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை” அப்படீங்கிற நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் தூக்கத்துல நடக்கிற செயலே தொடங்குகிறது என்கிறது ஆய்வு?!

வீதி விபத்துக்கள் ஏற்படும் முக்கிய காரணங்கள் ?



1. மது அருந்துதல்


எத்தனையோ அப்பாவி உயிர்கள் பல கொடிய மது அருந்திகளால் தங்கள் இரத்தத்தைத் தானம் செய்கிறார்கள். குடி போதையில் கண்ணு முன்னு தெரியாமல் வண்டியை ஓட்டுகிறார்கள். இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் உங்களுக்கும் தெரியும்.


சரி இப்படியும் சொன்னால் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் "தல" சொன்ன மாதிரி


"Light ஐ போட்டு வண்டி ஒட்டு'

Light ஆக போட்டு வண்டி ஓட்டாதே..."


சரி இந்தப் பதிவை வாசிக்கும் நீங்கள் மது அருந்தியாகவிருந்தால் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அடுத்ததாக பெண்கள் வீதிகளில் குட்டைப் பாவாடை அணிந்து செல்வதை வாயைப் பிளந்து பார்க்கும் ஆண்கள் (ஒரு சில ஆண்கள்) . நான் ஆண்களையும் குறை சொல்ல மாட்டேன் , பெண்களையும் குறை சொல்ல மாட்டேன்...


வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கவனமாக பார்த்து வண்டி ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்பொது நான் கூறுவது எனது சொந்த அனுபவம் ...


நீங்கள்  motor cycle  ஓட்டும் போது எதிரில் வருபவர் முன் உங்கள்  headlight ஐ சற்று டிம் பண்ணுங்க... அப்பிடி டிம் பண்ணாம வந்த ஒருத்தரோட நான் மோதியிருக்கேன் நல்ல வேளை இப்போ உயிரோட இருக்கேன்... so நான் சொன்னது விளங்கியிருக்கும்......


அடுத்து வீதி ஒழுங்குகளை பேணி பாதையில் இருக்கும் சமிஞ்ஞை விளக்குகளைக் கருத்திட் கொண்டு உங்கள் வாகன சாகசங்களை தொடர்ந்து மேட்கொள்ளுமாறு கூறி பதிவை நிறைவு செய்கிறேன்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top