.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 28 December 2013

உலகில் உள்ள சிறப்பு நாட்கள் ...!


  • உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26

• உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30

• உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2

 • அனைத்துலக தாய்மொழி நாள் -  யுனெஸ்கோ-பெப்ரவரி 21

• ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8

• உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13

• உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15

• உலக வன நாள்-மார்ச் 21

• உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21

• உலக நீர் நாள்-மார்ச் 22

• அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-

• ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:

• உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:

• நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4

• உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7

• நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18

• பூமி நாள் – ஏப்ரல் 22

• உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23

• அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26

• மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் - மே 1

• உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3

• அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4

• சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5

• உலக செஞ்சிலுவை நாள்- மே 8

• உலக செவிலியர் நாள்- மே 12

• உலகக் குடும்ப நாள்- மே 15

• உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17

• அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18

• பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19

•World Biodiversity Day – மே 22

•World Turtle Day – மே 23

• புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31

Friday, 27 December 2013

லைப் ஸ்டைலால் ஏற்படும் விளைவுகள்!





வயிற்று பிடிப்பு - ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. வயிற்றில் உள்ள தசைப்பிடிப்பு, வயிற்று வலி, மலச்சிக்கல், வாந்தி, பேதி, வயிறு உப்பி காணப்படுவது போன்ற குறைபாடுகள் எல்லாம் சாதாரணமாக வருபவை என்று நினைக்கக்கூடாது.

இந்த பாதிப்பின் ஒட்டுமொத்த பெயர், இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம் (ஐ.பி.எஸ்.,) நேரத்திற்கு சாப்பிடாமல், வேலை பளு என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி, கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும். அதுபோல, அதிக காரம், கொழுப்பு சார்ந்த உணவுகளை சாப்பிடுவதால், ஏற்படும் வாழ்க்கை முறை மாறுவதால் இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு காரணம், அவர்களிடம் தொற்றியுள்ள மேற்கத்தியபாணி உணவுமுறை மட்டுமல்ல; வேலை பளு, தனி நபர் குணங்களை பொறுத்து ஏற்படும் மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணம். சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடாததுடன், மன அழுத்தமும் இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்கு ஐ.பி.எஸ்., கோளாறு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் இப்போது உறுதி செய்துள்ளனர்.

மூன்று வகை:

வயிற்று வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றால் அடிவயிற்றில் 'சுரீர்' என்று பெரும் வலி ஏற்படும். தொடர்ந்து வலிக்கும் போது எரிச்சலும் வரும்; சாப்பிட்ட உணவு ஜீரணிக்கவும் செய்யாது. இதையடுத்து வயிற்று, குடல் பகுதியில் பிரச்சினை தொடரும். ஐ.பி.எஸ்., கோளாறை மூன்றாக மருத்துவ நிபுணர்கள் பிரிக்கின்றனர்.

* அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும் அடிவயிற்றில் வலி நீடிக்கும்.
* சிலருக்கு பேதி மட்டும் அடிக்கடி ஏற்படும். இதுவும் ஐ.பி.எஸ்., தான்.
* சிலருக்கு மலச்சிக்கல், பேதி இரண்டும் சேர்ந்தே இருக்கும். இது மூன்றாவது வகை.

அறிகுறிகள்:

அடிவயிற்றில் லேசாக 'சுரீர்' என்று வலி ஏற்படும். வயிறு உப்பியது போல தோன்றும். அடிக்கடி காஸ் பாதிப்பு இருக்கும். காரணமில்லாமல் திடீரென பேதி ஏற்படும்; மலச்சிக்கலும் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர் போகும் மலத்தில் சளி கலந்திருக்கும். உடல் எடை சிலருக்கு குறையும். வாந்தியும் ஏற்படும். ஏதாவது சாப்பிட்டபடியே இருக்கத் தோன்றும். காரணம் என்ன?

வயிற்றில் குடல்பகுதியில் செல்லும் உணவை ஜீரணிக்கச் செய்யும் போது, அவற்றை மலக்குடலில், தள்ளுவதற்கு தசைகள் உதவுகின்றன. சாப்பிடும் உணவு ஜீரணிப்பதற்கேற்ப, வயிற்று சுவரில் உள்ள தசைகள் விரிந்து சுருங்கியபடி செயல்படும் வயிற்று பிடிப்பு உள்ளவர்களுக்கு இந்த தசைகள் விரிந்து, சுருங்கும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும்.

சில சமயம் மிக பொதுவாக இருக்கும். சில சமயம் வேகமாக இயங்கும். இதனால் தான் மலச்சிக்கல், வாந்தி, பேதி ஏற்படுகிறது.

முன்னெச்சரிக்கை:

நேரத்திற்கு சாப்பிடுவதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏதோ காரணம், சொல்லி தாமதப்படுத்துவது, சில சமயம் அதிகம் சாப்பிடுவது கூடவே கூடாது.

நார்ச்சத்து உட்பட எல்லா சத்துக்களும் உள்ள வகையில் தினமும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். கொழுப்பு, எண்ணெய் சமாச்சாரங்களை அறவே தள்ளி விட வேண்டும்.

சில உணவுகள் செரிமானம் ஆக நேரம் பிடிக்கும்; காய்கறி, நார்ச்சத்து உள்ள உணவுகள் சீக்கிரம் ஜீரணம் ஆகும்.

வந்த பின்....

* அடிக்கடி பேதி ஏற்பட்டால், நார்ச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* மலச்சிக்கல், பேதி ஏற்பட்டால், டாக்டர் சொன்னபடி உணவு உட்கொள்ள வேண்டும்.
* எந்த வித வயிற்றுக்கோளாறும் வராமல் தடுக்க, சரியான நேரத்தில் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து வந்தால் போதும்.

மன அழுத்தம்:

நாம் சாப்பிடும் உணவுகளால், ஏற்படும் பாதிப்பு தான் ஐ.பி.எஸ்., என்று தான் இதுவரை டாக்டர்கள் கூறிவருகின்றனர். ஆனால் மன அழுத்தமும் முக்கிய காரணம் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம்தான் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு முக்கிய காரணம் என்று ஏற்கனவே நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், வயிற்று பிடிப்புக்கும் அதுதான் காரணம் என்பது தெரியவந்துள்ளதால், ஐ.பி.எஸ்.,க்கான அறிகுறி ஏற்பட்டால், உடனே டாக்டரிடம் காட்டி விடுவது நல்லது.

உணவு நிர்வாகம்:

வயிற்றுக் கோளாறு எதுவாக இருந்தாலும், அதற்கு அடிப்படை ஐ.பி.எஸ்., ஆகத்தான் இருக்கும். உணவு நிர்வாகம் சரியில்லாவிட்டால், இதில் ஆரம்பித்து, பெரிய கோளாறில் கொண்டு விடும் ஆபத்து உள்ளது. பால் போன்ற சில பொருட்கள், சில காய்கறிகள், பழங்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அப்படி அலர்ஜி ஏற்பட்டாலும், ஐ.பி.எஸ்., ஏற்படும். அதனால், அந்த உணவுகளை தவிர்ப்பது தான் சரியானது.

லைப் ஸ்டைல்:

இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை, உணவு முறை அடியோடு மாறியுள்ளதால், பெண்களில் பத்தில் ஆறு பேர், ஆண்களில் நான்கு பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது என்று சமீபத்தில் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

வங்கிக் கணக்கு துவக்குவது எப்படி?




வங்கிக் கணக்கைத் துவக்குவது எப்படி? 

ஆன்லைன் வசதிகளை எப்படிப் பெறுவது?


வங்கிக் கணக்குப் புத்தகம் என்பது வருமானத்தை சேமித்து, வைக்க மட்டுமல்ல. இதன் மூலம் எல்.ஐ.சி. பிரீமியம் போன்றவற்றைச் செலுத்தலாம், வாகனக் கடன் பெறலாம். அதுமட்டுமின்றி முகவரிச் சான்றாகவும் பயன்படுத்தலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வங்கிக் கணக்கைத் துவக்குவது எப்படி? ஆன்லைன் வசதிகளை எப்படிப் பெறுவது போன்ற விவரங்கள் இங்கே...



வங்கிக் கணக்குத் துவக்கத் தேவையான தகுதிகள்:

பொதுவாக வங்கிக் கணக்குத் துவக்க 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.


18 வயதிற்குக்கீழ் உள்ளவர்களும் வங்கிக் கணக்கு துவக்க முடியும். ஆனால் சேமிப்புக் கணக்கில் வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே வைத்திருக்க இயலும்.


விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?


எந்த வங்கியில் கணக்கு துவக்க விரும்புகிறீர்களோ அந்த வங்கிக் கிளையில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்கவும். அதிலேயே ஏடிஎம் கார்டு, செக் புக், ஆன்லைன் வசதி போன்றவற்றை டிக் செய்து கொடுக்கலாம். சில வங்கிகளில் மேற்கூறிய கூடுதல் வசதிகளைப் பெற தனியாக ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பிக்கச் சொல்வார்கள்.


கட்டணம் எவ்வளவு?


அரசு வங்கிகளில் வங்கிக் கணக்குத் துவக்க 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக சேமிப்புக் கணக்கில் இருக்கும். செக் புத்தகம் வேண்டுவோர் கூடுதலாக 500 ரூபாய் இருப்புத் தொகை செலுத்த வேண்டும். தனியார் வங்கிகளில் வங்கிகளைப் பொறுத்து குறைந்தபட்ச இருப்புத் தொகை மாறுபடும்.


வங்கிக் கணக்குத் துவக்கத் தேவையான ஆவணங்கள்:



•பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இரண்டு புகைப்படங்கள் இணைக்க வேண்டும்.

•அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுக்கான நகல் இணைக்க வேண்டும். இரண்டுக்கும் தனித் தனி ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

•Ž பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றில் ஒன்றை அடையாளச் சான்றாகவும், குடும்ப அட்டை, காஸ் பில், மின் கட்டண ரசீது, தொலைபேசி ரசீது இவற்றில் ஒன்றை இருப்பிடச் சான்றாகவும் கொடுக்கலாம்.

•அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள உங்களுக்குத் தெரிந்த நபர் ஒருவர் உங்களை அறிமுகப்படுத்திக் கையெழுத்திட வேண்டும். அறிமுகக் கையெழுத்திடும் நபர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், வங்கிக் கணக்குத் துவக்கி குறைந்தபட்சம் 6 மாதங்களாகியும் இருக்கவேண்டும். மேலும் தொடந்து வரவு - செலவு வைத்திருப்பவராக இருப்பது அவசியம்.



வங்கிக் கணக்கு ஆரம்பித்ததும் கிடைக்கும் ஆவணங்கள்:

•அரசு வங்கிகளில் வங்கிக் கணக்குப் புத்தகம் தருவார்கள். சில தனியார் வங்கிகளில் கணக்குப் புத்தகம் தருவதில்லை. மாதம் ஒருமுறை வரவு - செலவுகளைப் பட்டியலிட்டு மின்னஞ்சல் அனுப்பி விடுகிறார்கள்.

•காசோலைப் புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டு (இவை இரண்டும் கணக்கு ஆரம்பித்து இரண்டு வாரங்களில் கிடைக்கும்). ஏடிஎம் கார்டும், அதற்கான பாஸ்வேர்டும் உங்கள் கைக்குக் கிடைத்து ஒருவாரத்திற்குள் குறைந்தபட்சம் நூறு ரூபாயாவது எடுத்து கார்டை ஆக்டிவேட் செய்துவிட வேண்டும். இல்லையெனில் 15 நாட்களில் உங்களுக்குக் கொடுக்கப்படும் பாஸ்வேர்டு செயலிழந்துவிடக் கூடும். 

கூடுதலான வசதிகள்:


 ஆன்லைன் வசதி தேவையெனில் அதற்கும் விண்ணப்பித்துப் பெறலாம். இதற்கு இரண்டு பாஸ்வேர்டுகள் உங்கள் வீட்டிற்கு பதிவுத் தபாலிலோ, கொரியரிலோ வரும். அதில் ஒன்று ஆன்லைன் அக்கவுண்ட்டிற்கும், மற்றொன்று பரிவர்த்தனைக்கும் (Transaction) பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.



வங்கிக் கிளை மாற என்ன செய்ய வேண்டும்?

•ஒரு வங்கிக் கிளையிலிருந்து வேறொரு வங்கிக் கிளைக்கு மாற விரும்பினால் (ஒரே ஊரிலோ அல்லது வேறு ஊரிலோ) எந்த வங்கியில் தற்போது கணக்கு இருக்கிறதோ அந்த வங்கிக்குச் சென்று மாறவிரும்பும் கிளையைக் கூறினால் அவர்கள் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் அதனைக் குறிப்பிட்டு தேதியிட்டுக் கொடுப்பார்கள்.

•Žபின்னர் குறிப்பிட்ட கிளையில் தற்போதைய முகவரி மாறியதற்கான சான்றை சமர்ப்பித்து புதிய கணக்குப் புத்தகத்தைப் பெறலாம்.

•Žசெல்போன் நம்பரை மாற்றாமல் வேறு நிறுவனத்தை தேர்வு செய்யும் (எம்.என்.பி.) வசதியை தொலைத் தொடர்பு துறை கொண்டு வந்தது போல்  கணக்கு எண் மாறாமல் வங்கிக் கிளையை மாற்றிக் கொள்ளும் வசதியை ரிசர்வ் வங்கிக் கொண்டுவந்துள்ளது.

• குறிப்பு: மேற்சொன்ன நடைமுறைகள் அனைத்தும் வங்கிக்கு வங்கி மாறலாம். எனவே உங்கள் பகுதிக்குட்பட்ட வங்கியில் நேரடியாகச் சென்று மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளவும்.



இந்தியாவில் வங்கிக் கணக்குத் துவக்கும் வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்திற்கு:

•வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குறுகியகாலப் பயணத்தில் இந்தியாவிற்கு வரும் போது குடியிருப்போர் அல்லாத (சாதாரண) ரூபாய் (‡NROˆ) கணக்கை (நடப்பு சேமிப்பு) அந்நியச் செலாவணியைக் கையாளும் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் தொடங்கலாம். இத்தகைய கணக்குகளை அதிகபட்சமாக 6 மாத காலம் வரை வைத்திருக்க முடியும்.

•இதற்கு பாஸ்போர்ட் மற்றும் இதர மதிப்புள்ள அடையாளச் சான்றுகள் அவசியம். அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் புதிய கணக்குகளைத் தொடங்கும்போது, ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்’ (KYC) விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

•சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வந்த இடத்தில் ‡NRO  கணக்கு மூலமாக செலவுகளுக்கான பணத்தை அளிக்கலாம். இந்திய ரூபாயில் 50,000-க்கும் மேற்படும் அனைத்து பணம் செலுத்துதல்களையும் காசோலைகள்/ கொடுப்பாணைகள்/கேட்பு வரைவோலைகள் மூலமாக அளிக்கவேண்டும்.

•அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் கணக்கு வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவை விட்டு கிளம்புவதற்குமுன் மீதமுள்ள பணத்தை அவர்கள் நாட்டுப் பணமாக மாற்றிச்செல்ல உதவுகின்றன.  ஆனால் அந்தக் கணக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.  மேலும் சுற்றுலாவிற்காக வந்த இடத்திலிருந்து வட்டி தவிர எந்த நிதியும் அந்தக் கணக்கில் சேர்ந்திருக்கக்கூடாது.

•6 மாதங்களுக்குமேல் பராமரிக்கப்படும் கணக்கிலிருந்து மீதமுள்ள தொகையை வெளிநாட்டிற்கு அனுப்பலாம். இம்மாதிரி சமயங்களில் கணக்கைப் பராமரித்து வரும் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கி, அந்தப் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தின் அந்நியச் செலாவணித் துறைக்கு ஒரு வெற்றுத்தாளில் மீதமுள்ள பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக விண்ணப்பம் செய்யவேண்டும்.

“புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்க




“புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்கவே புடிக்காது” என பல பெண்கள் அங்காலய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒன்று தான் புத்திசாலி என அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அல்லது உண்மையிலேயே ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்கள் கொஞ்சம் அலர்ஜியாய் இருக்கலாம்.

பெரும்பாலான புத்திசாலி ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். ஒருவேளை ஒரு பையன் புத்திசாலிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறானென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.

“சும்மா கடல் பக்கத்துல உக்காந்து கடலை போடக் கூப்பிட்டா அங்கே வந்து கூட மால்கம் கிளேட்வெல் எழுதின பிளிங்க் புக் படிச்சியாடா ? வாவ் சூப்பர். த பவர் ஆஃப் திங்கிங், வித்தவுட் திங்கிங் தான் அதோட கான்சப்ட்” என கடுப்படிக்கிறா என ஒரு காதலர் சலித்துக் கொண்டார். ரொம்ப அறிவான பொண்ணுன்னா இந்த மாதிரி உலக விஷயங்களையெல்லாம் பேசுவாங்க. நம்ம ஹீரோவுக்கு அந்த ஏரியா வீக்குன்னா “இந்த புத்தி சாலிப் பொண்ணுகளே இப்படித் தான்” என்று புலம்ப வாய்ப்பு உண்டு.

இன்னும் சிலருக்கு பொண்ணுன்னா நாம வரைஞ்ச கோட்டைத் தாண்டக் கூடாதுங்கற ஒரு ஆணாதிக்க சிந்தனை இருக்கும். புத்தியில்லாத பொண்ணுன்னா நாம சொல்றதைக் கேப்பா. நாம போய் “கிளையண்ட் கான்ஃபரன்ஸ் ல புராஜக்ட் பிளான் டெமோன்ஸ்ட்ரேட் பண்ணினேன்” ன்னு பீட்டர் உட்டா நம்பபிடுவா ன்னு நினைக்கிறாங்க. எப்பவுமே நம்மை விட ஒரு ஸ்டெப் கீழே பொண்ணு இருக்கணுன்னு நினைக்கறவங்களோட மனநிலை இது.

இன்னும் சிலர் என்னன்னா புத்திசாலிப் பொண்ணுன்னாலே “சுயமான பொண்ணு” ன்னு நினைக்கிறாங்க. அதாவது தனியா வாழறதுக்கு அவளுக்கு பயம் கிடையாதுங்கற நினைப்பு இருக்கும். அதாவது தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய நிலை அவளுக்கு இல்லை எனும் சிந்தனை. ஒருவேளை நாம பண்ற டகால்டி வேலையெல்லாம் தெரிஞ்சுபோச்சுன்னா டைவர்ஸ் வாங்கிட்டு போனாலும் போயிடுவாளோங்கற பயம் இருக்கும். அந்த பயத்துல “எதுக்கு புத்திசாலிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு” என பின் வாங்க வாய்ப்பு உண்டு.

பசங்கதான் இப்படின்னா, பசங்களோட அம்மா, அப்பாக்கள் இன்னும் ஒரு படி மேலே. கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கும்போ  “பொண்ணு பையனை விட அதிகம் படிச்சிருக்கா. பையனுக்கு அடங்கி இருக்க மாட்டா” என பில்டப் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். “தான் கம்மியா படிச்சதனால தான் கணவனுக்கு அடங்கி இருக்கிறோம்” என நினைக்கிறார்களோ என்னவோ ? அது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.

இந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு இணையா படிச்சிருக்கிற பெண்களை விரும்புகிறார்கள். அதாவது கம்ப்யூட்டர் படிச்ச பையன் அதே லைன்ல படிச்ச பொண்ணை விரும்புகிறான். இதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாம்பின் கால் பாம்பறியும் மாதிரி, இந்த வேலையில உள்ள கஷ்டம் இதே வேலையில இருக்கிற இன்னொருத்தருக்குத் தான் தெரியும்ங்கற மனநிலை. இன்னொன்னு தெரிஞ்ச ஏரியாங்கறதனால வேலை வாங்கிக் கொடுக்கலாம்ங்கற எண்ணம்.

பசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்குன்னு வெச்சுக்கோங்க, புத்திசாலிப் பொண்ணை முடிஞ்ச மட்டும் அவாய்ட் பண்ணுவாங்க. கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவங்க வாழ்க்கைல சிக்கல் வர வாய்ப்பு அதிகம். “ஏங்க, இப்படி பண்ணியிருக்கலாமே” ன்னு ஒரு சின்ன கருத்து சொன்னா கூட “ரொம்ப படிச்ச திமிரு. அதனால நான் செய்றதெல்லாம் தப்பா தெரியுது”. என எகிற ஆரம்பித்து விடுவார்கள். உண்மையிலேயே மனைவி சொல்வது சரியா தப்பா என்றெல்லாம் ஆராய அவர்கள் முயல்வதில்லை.


“ஆண்கள் தங்களை விடப் புத்திசாலித் தனமான பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயங்குவார்கள்” என்கின்றனர் சில உளவியலார்கள். ஆனால் அதற்கெல்லாம் குறிப்பாக எந்த ஆராய்ச்சி முடிவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. பல வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்னால் அறிவார்ந்த பெண்கள் உண்டு என்பதும் நாம் அறிந்ததே. பல ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். உரையாடல்களில் நல்ல அர்த்தத்துடன் பேச அவர்களால் முடியும் என்பது அவர்கள் சொல்லும் ஒரு காரணம்.

முக்கியமான ஒரு விஷயம், தினமும் நியூஸ் பேப்பர் படிச்சுட்டு புள்ளி விவரங்கள் பேசறதெல்லாம் புத்திசாலித் தனத்துல வராது. ஒரு பிரச்சினை வருதுன்னா அதுல இருந்து எப்படி எத்தரப்புக்கும் இழப்பின்றி மீளலாம்ன்னு யோசிப்பதில் தெரியலாம் புத்திசாலித்தனம். குடும்பத்தை ஆனந்தமாகவும், வளமாகவும் கொண்டு போக திட்டமிடுவதில் மிளிரலாம் புத்திசாலித்தனம். குழந்தை வளர்ப்பைக் கையாள்வதில் வெளிப்படலாம் புத்திசாலித்தனம். பெண் புத்திசாலியாய் இருப்பது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஆனால் என்ன, “தான் புத்திசாலி” எனும் தற்பெருமையை உச்சந்தலையில் ஒட்டி வைக்காமல் இருக்க வேண்டும்.

பெண் வீட்டை ஆளணும், ஆண் நாட்டை ஆளணுங்கற கதையெல்லாம் கற்காலமாயிடுச்சு. இந்த கால மாற்றத்தில் தம்பதியர் தங்களோட ஈகோவை மூட்டை கட்டி வெச்சுட்டு, அன்பா பழக ஆரம்பிச்சா இப்படிப்பட்ட  பிரச்சினைகளே வராது என்பது தான் நிஜம். நீயா நானா போட்டி போட குடும்பம் ஒண்ணும் பிளே கிரவுண்ட் இல்லையே ! என்ன சொல்றீங்க ?

தமிழ்ப் புத்தாண்டு சித்திரைக்கு மாறியது



(தை மாதம் முதல் நாளைத் தான் தமிழர்களுக்கான புத்தாண்டு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ஏன் கூறுகிறோம் – என்பதற்கான காரணங்களை எடுத்துரைக்கிறது, இக்கட்டுரை)

“முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதிலும் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியை பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்வார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாக பொங்கல் கொண்டாடுகிறார்கள்.”

… தை முதல் நாள் தான் தமிழர்களுக்கு புத்தாண்டாக இருந்தது என்பதை நடைமுறை உதாரணங்களோடு இப்படி விளக்கிக் காட்டியுள்ளவர் டாக்டர் மு. வரதராசனார்.

பழந்தமிழர்கள் தங்களது அறிவுக்கு உகந்தவாறு காலங்களைக் கணித்தார்கள். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை இவை மாறி மாறிப் பருவ காலங்களில் இயற்கை மனிதனை ஆண்டு வந்ததால் தமிழர்கள் ஒரு வருடத்தை ‘ஆண்டு’ என்று குறிப்பிட்டனர். அவ்வாறே தன்னை ஆள்பவனையும், வணங்கும் கடவுளையும் ஆண்டவன் என்று குறிப்பிட்டனர். ஒரு ஆண்டை தமிழன் ஆறு பருவ காலமாகப் பிரித்தான். இளவேனில் (தை மாசி), முதுவேனில் (பங்குனி, சித்திரை), கார் (வைகாசி, ஆனி), கூதிர் (ஆடி, ஆவணி), முன்பனி (புரட்டாசி, அய்ப்பசி), பின் பனி (கார்த்திகை மார்கழி). தமிழன் தன் வாழ்வை இளவேனிற் காலத்தில் தொடங்கினான். இதையே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். எனவே தை மாத முதல் நாளே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். இவை தை முதல் நாளே தமிழர்களுக்கான புத்தாண்டு என்பதற்கான வாழ்வியல் காரணங்கள்.

தமிழர்களின் காலக் கணக்கீட்டைக் கொண்டும், இந்தக் கருத்தை நியாயப்படுத்த முடியும். காலக் கணக்கீட்டிற்கு அடிப்படையாக இருப்பது சூரியன்தான். பகல், இரவு, நாள், கிழமை, பருவம், ஆண்டு எல்லாமே சூரியன் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகின்றன. சூரியனைச் சுற்றி பூமியும், மற்ற கோள்களும் சுற்றினாலும், பூமியில் உள்ளவர்கள் பார்வையில் சூரியன் காலையில் எழுகிறது. மாலையில் மறைகிறது. சந்திரன் தேய்கிறது, வளர்கிறது. நட்சத்திரங்களின் இருப்பிடங்கள், கோள்களின் நிலைகள்… மனிதர்களின் பார்வையில் மாறுகின்றன. இந்தப் பார்வையில் தெற்கே சென்ற சூரியன், வடக்கு நோக்கித் திரும்புகிற நாள் தை முதல் நாளாக, புத்தாண்டின் துவக்கமாகத் தமிழர்களால் ஏந்தப்பட்டது. சூரியன் வடக்கு நோக்கித் திரும்புவது தான் தமிழர்கள் வாழும் பகுதியில் நிகழ்வதால் தமிழர்கள், தங்களின் வானியல் கணிதப்படி அதுவும் தை மாதத்தில் நிகழ்வதால் தமிழ் மக்கள் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

தமிழர்கள் வகுத்துக் கொண்ட வானியல் கணிப்பின்படி, தை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக இருந்திருக்கிறது. ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் சூரியன் உதயமாவதும் இல்லை, மறைவதும் இல்லை. அது என்றும் ஒளிர்கிறது. பூமி, தற்சுழற்சியாக சூரியனை சுற்றி வரும்போது 24 மணி நேரத்தில் சூரிய ஒளிபடுகிற இடமெல்லாம் பகலாகவும், மறுபகுதி இரவாகவும் அமைகிறது.

தமிழர் கொண்டாடியதை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் – சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனையாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரமசகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம்’ 60 ஆண்டுகளை வரையறுத்தது. ‘பிரபவ’ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை – வேதனை.

இந்த 60 ஆண்டுகளையும் கடவுளோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் உருவாக்கி விட்டார்கள். நாரதரும், கிருஷ்ணனும் உறவு கொண்டு (இருவரும் ஆண்கள்) பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்கு புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61வது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்’ நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாத குழப்பங்களும், மூடநம்பிக்கைகளும் இதில் அடங்கிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் தான் – தமிழ் அறிஞர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். மூன்று முக்கிய முடிவுகளை அவர்கள் அப்போது எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவெடுத்தார்கள். இப்படி முடிவெடுத்தவர்கள் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவ நாதம் ஆகியோர் ஆவர்.

அதன் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலையடிகளார், பி.டி.இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது.

1971-ல் அன்றைய கலைஞர் ஆட்சி, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையையோ 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது. 1969-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். இடையில் வந்து புகுந்த சித்திரை – தமிழர் மீது புகுத்தப்பட்ட பண்பாட்டுத் திணிப்பாகும்.

சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டாய் மாறிய விநோதம்

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top