.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 24 December 2013

விஞ்ஞானக் கருவிகள்!




1.மாச் மீட்டர் (Mach Meter) -- ஒலியின் வேகத்தில் செல்லும் விமானங்களின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவி.

2.மோனோ மீட்டர் (Mono Meter) -- வாயுவின் அழுமைர்த்தத்தை அளக்க உதவும் கருவி.

3.மைக்ரோ மீட்டர் (Micro Meter, நுண்ணளவி) --- சிறு தொலைவு, கோணங்கள் ஆகியவற்றை மிக துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி.

4.பிளாண்டி மீட்டர் (Planti meter) -- சமாதானப் பரப்பளவினைத் தொகுத்தளிக்கப் பயன்படுத்தும் சாதனம்.

5.பைரோ மீட்டர் (Pyro Meter) --- உயர் வெப்ப நிலைகளை அளக்க உதவும் கருவியின் பெயர்.

6.பைர் ஹெலியோ மீட்டர் (Pyrhelio meter) -- சூரியக் கதிர்வீச்சுக்களை அளக்கப் பயன்படும் கருவி.

7.ரெயின்கேஜ் ( Raingauge,மழைமானி) -- மழை நீரை அளக்கப் பயன்படும் கருவி.

8.ரேடியோ மைக்கிரோ மீட்டர் (Radio Micro Meter) -- வெப்பக் கதிர் வீச்சுக்களை அளக்கப் பயன்படும் கதிரலைக் கருவி.

9.ஸ்பிக் மோமானோ மீட்டர் (Spygmomano meter) -- இரத்த அழுத்தத்தினை அளக்கப் பயன்படும் கருவி.

10.வில்தராசு (spring Balance) --- உடனுக்குடன் பொருட்களை நிறுக்கப் பயன்படும் கருவி.

11. ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope) -- நிறமாலையைப் பிரித்து பரிசோதிக்கப் பயன்படும் கருவி.

12.ஸ்டெதஸ்கோப் (Stethoscope) -- இதயத்தின் நாடித்துடிப்பை அறிய டாக்டர்கள் பயன்படுத்தும் கருவி.

13.சைஸ்மோகிராப் (seisomograph) --- பூகம்ப அதிர்வுகளை அளக்கப் பயன்படும் கருவி.

14.டெலி மீட்டர் (Tele Meter) -- வான் பயனத் தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் கருவி.

15.வோல்ட் மீட்டர் (Volt Meter) -- மின்னழுத்த அளவி.

16..அனிமா மீட்டர் (Anema Meter) -- காற்றை அளக்கும் கருவி.


17.அம்மீட்டர் (Ammeter) -- மின்சார சக்தியை அளக்கும் கருவி.

18.ஆடியோ மீட்டர் (Audio Meter) -- நம்மால் எவ்வளவு தூரம் ஒலி அலைகளைக் கேட்க முடிகிறது, என்பதை அளந்து தரும் கருவி.

19.அல்ரி மீட்டர் (Alti Meter) --- விமானங்கள் பறக்கும் போது, பூமியில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம்,என்பதை அளக்கும் கருவி.

20.பைனாக்குலர் (Binocular) --- தொலைதூரப் பொருட்களை பெரியனவாக்கி இருகண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் கருவி.

21.கம்யுடேட்டர் (Commutator) --- மின் ஓட்டத்தின் திசையை மாற்ற்ப் பயன்படும் கருவி.

22.கலோரிமீட்டர் (Calori Meter) -- வெப்பதினை அளக்கப் பயன்படும் கருவி.

23.கால்வனோ மீட்டர் (Galvano Meter) --- மின்னோட்டத்தினை அளக்கப் பயன்படும் கருவி.

24.கிளினிக்கல் தெர்மோ மீட்டர் (Clinical Thermo Meter) --- மனித உடலின் வெப்பநிலையை அளந்து, அதன் மூலம் நோயை அறியப்பயன்படும் கருவி.

25.டைனமோ (Dainamo) --- இயந்திர ஆற்றலை, மின்னாற்றலாக மாற்றும் கருவி.

26.பாரோ மீட்டர் (Baro Meter) --- வாயு மண்டலத்தின் அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி.

27.எலக்ரோச்கோப் (Electroscope) -- மின்னோட்டப் பாய்ச்சலைக் கண்டறியப் பயன்படும் கருவி.

28.டைனமோ மீட்டர் (Dynamo Meter) --- மின்சார ஆற்றலை அளக்கப் பயன்படும் கருவி.

29.எலக்ட்ரோ கார்டியோகிராப் (Electro Cardiograph) -- இதயத் தசையின் சுருங்கி விரியும் தண்மையை அளக்கப் பயன்படும் கருவி.

30.எலக்ட்ரோ என்செபலோக்கிராப் (Electro Encephalograph) -- மூளையின் ஊடெ செலுத்தப்படும், சீரான் மின்னோட்டத்தின் அளவை பதிவு செய்யப் பயன்படும் சாதனம்.

31.ஹைட்ரோ மீட்டர் (hydro Meter) --- திரவங்களின் அடர்த்தியை அளக்கப் பயன்படும் கருவி.

32.ஹைஸ்போ மீட்டர் (Hyspo Meter) -- ஒரு திரவத்தின் கொதிநிலையைத் தீர்மானிக்கப் பயன்படும் கருவி.

33.ஹைட்ரோ போன் (Hydro Phone) --- நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்கப் பயன்படும் கருவி.

34.ஹைக்ரோ மீட்டர் (Hygro meter) -- வாயு மண்டலத்தின் ஈரத்தன்மையை அளக்கப் பயன்படும் கருவி.

35.லாக்ட்டோ மீட்டர் (Lacto Meter) -- பாலின் திடத்தன்மையை அளக்கப் பயன்படும் கருவி.

வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!




காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.


சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது.


நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.


ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்


நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

பிரஸ்ஸல்ஸ்

முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

சோளம்

சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

ப்ரோக்கோலி

முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

பீன்ஸ்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

பீட்ரூட்

சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள்...?




1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.

3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், காதல், கதை தவிர்த்து.

5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.

6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு – பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.

மீண்டும் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை! ரூ.2 க்கு 1 யூனிட் மின்சாரம் தரமுடியும் என்கிறார்.!



மீண்டும் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை! ரூ.2 க்கு 1 யூனிட் மின்சாரம் தரமுடியும் என்கிறார். 


 தமிழக அரசு அனுமதி அளித்தால் தமிழகத்தின் மின்சாரப்பற்றாக்குறையை 6 மாதத்தில் நீக்குவேன் என்று மூலிகைப் பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை கூறியுள்ளார். என் மீது கருணை கொண்டு அனுமதி வழங்கினால் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் மற்றும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று உறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராமர்பிள்ளை கூறியதாவது:


என்னால் கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை பெட்ரோல் புதுமையானது, சுற்றுப்புற சூழலை பாதுகாக்கக் கூடிய எரிபொருள் என்றும் உலக காப்புரிமை மையம், அமெரிக்கா, சிங்கப்பூர், டென்மார்க், மலேசியா போன்ற நாடுகளில் சான்றிதழ் பெற்றுள்ளேன்.


மேலும் 1996ம் ஆண்டில் சென்னை ஐஐடி மற்றும் டேராடூனில் உள்ள ஐஐபி போன்ற பரிசோதனை சாலையில் நடைபெற்ற சோதனையில் நான் தவறு ஏதும் செய்யவில்லை என்று நான் சேகரித்து வைத்துள்ள சான்றிதழ்கள் கூறுகிறது. தற்போது நான் ரூபாய் 20 லட்சம் செலவில் மூலகை பெட்ரோல் தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவி உள்ளேன்.


இதன் மூலம் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை எரிபொருள் உற்பத்தி செய்ய இயலும். தமிழக அரசு என் மீது கருணைகொண்டு அனுமதி வழங்கும்பட்சத்தில் இதனை பயன்படுத்தி சுமார் 6 மாத காலத்திற்குள் மின்சாரம் தயார் செய்து குறைந்த விலையில் (1 யூனிட் ரூபாய் 2க்கு) தமிழக மக்களுக்கு வழங்கி மின்சார பற்றாக்குறையை போக்க முடியும் என உறுதி கூறுகிறேன் என்றார்.


தமிழக அரசு இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துத் தான் பார்க்கலாமே !

ஆறு தவறுகள்!



1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழித்தோ தான் சொந்த நலனைப் பெற முடியும் என்ற தவறான கருத்தைக் கொண்டிருப்பது:

இது குறுகிய காலத்திற்குப் பலன் தருவது போலத் தோன்றினாலும் நீண்ட காலத்திற்கு சிறிதும் உதவாத ஒரு வழியாகும். இயல்பாக நியாயமான வழிகளில் நாம் முன்னேறும் போது மற்றவர்களை முந்திக் கொண்டு செல்வது நேர்வழி மட்டுமல்ல நம் வளர்ச்சியும் இந்த வழியில் நிச்சயமானதாக இருக்கிறது. அதற்குப் பதிலாக மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளியும், அழித்தும் முந்தி நிற்க முயன்றால் அதற்கே நம்முடைய காலமும், சக்தியும் முழுவதும் செலவாகும். நாம் நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டி வரும். மேலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளுவதோ, முன்னேற விடாது தடுப்பதோ நீண்ட காலத்திற்கு முடிகிற விஷயம் அல்ல. எந்தத் துறையிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெற விரும்புவோர் இந்தத் தவறான கருத்தை விட்டு விடுவது புத்திசாலித்தனம்.

2) மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்களுக்காகக் கவலைப்படுவது:

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்கள் கண்டிப்பாக இருக்கவே செய்கின்றன. அதற்கெல்லாம் கவலைப்படுவதும், கண்ணீர் விடுவதும் எந்த விதத்திலும் நமக்கு உதவப்போவதில்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு எதுவும் மாறி விடப் போவதில்லை. மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் அளவு மனம் இல்லா விட்டாலும் அவற்றை சகித்துக் கொள்ளும் அளவாவது பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வாழ்க்கை முடிவில்லாத கவலையாகவே இருந்து விடும்.

3) நம்மால் செய்ய முடியாத செயல்களை யாராலும் செய்ய முடியாது என்று நினைப்பது:

நம் அறிவுக்கும் சக்திக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளமாகவே இருக்கின்றன. இன்று இருக்கும் எத்தனையோ அறிவியல் அற்புதங்கள் ஒரு காலத்தில் மனிதனால் கற்பனையாலும் கூட நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்திருக்கின்றன. சிசரோவின் காலத்தில் ரேடியோ, தொலைபேசி, விமானம், மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை மனிதர்களுக்கு விந்தையிலும் விந்தையாக இருந்திருக்கும். அது போல இக்காலத்தில் நினைத்துப் பார்க்கவும் முடியாத எத்தனையோ அற்புதங்கள் எதிர்காலத்தில் சாதாரண சமாச்சாரங்கள் ஆகி விட முடியும். அப்படி இருக்கையில் தனி மனிதர்களான நாம் நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது என்று நினைப்பது கற்பனையான கர்வமாகவும், அறிவின் குறைபாடாகவே தான் இருந்து விட முடியும்.

4) உப்பு சப்பில்லாத சொந்த விருப்பு வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும் தள்ளி வைக்க முடியாதது:


உலகையே உலுக்கும் சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. சமீபத்திய ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம், சுனாமி போன்றவற்றினால் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, சில நொடிகளில் தங்கள் வாழ்வின் பல கால உழைப்பின் செல்வத்தை இழந்து நின்று அவல நிலைக்கு வந்ததைப் பார்த்தோம். மனித வாழ்க்கையின் நிலைமை அந்த அளவு நிச்சயமற்றதாக இருக்கையில் நான் சொன்னது போல் அவன் நடக்கவில்லை, இவன் என்னை மதிக்கவில்லை, என்னிடம் விலை உயர்ந்த கார் இல்லை, என்னை அனாவசியமாக சிலர் விமரிசிக்கிறார்கள், சொன்ன நேரத்தில் வேலை நடக்கவில்லை என்ற சில்லறை விஷயங்களில் மனம் கொதிக்கிற அல்லது வெம்புகிற மனோபாவம் நகைக்கப்பட வேண்டியதே அல்லவா? நான் பெரியவன், அதை எல்லாரும் அங்கீகரிக்க வேண்டும், என்னைக் கவனிக்க வேண்டும், என் விருப்பப்படி அனைத்தும் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணங்களை ஒதுக்கி வைக்க முடியாதது குறுகிய மனங்களின் சாபக்கேடு. எந்தப் பெரிய பிரச்னைகள் இல்லா விட்டாலும் இந்த மனோபாவம் இருந்து விட்டால் அது போகும் சுகவாழ்வையும் நரகமாக மாற்றுவதற்கு.

5) மனதைப் பண்படுத்தவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும் தவறுவது மற்றும் நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது:

வாழ்க்கையில் சௌகரியங்களையும் செல்வத்தையும் அதிகரித்துக் கொள்ள மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறான். ஏனென்றால் அதை அளக்க முடிகிறது. மற்றவர்கள் அதை வைத்துத் தான் மதிக்கிறார்கள் என்ற சிந்தனையையும் பொதுவாக எல்லோரிடமும் பார்க்க முடிகிறது. ஆனால் மனம் அந்த அளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதால் அதைப் பண்படுத்திக் கொள்ளவோ பக்குவப்படுத்திக் கொள்ளவோ பெரும்பாலான மனிதர்கள் பெரிதாக முயற்சி மேற்கொள்வதில்லை. ஆனால் உண்மையில் தனி மனித நிம்மதியும், மகிழ்ச்சியும் அவன் மனதின் பக்குவத்தை மட்டுமே பொருத்தது. சேர்த்த செல்வமும், அடைந்த புகழும் அடுத்தவர்கள் கண்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தலாமே ஒழிய மனதை அவை எல்லாம் நிரப்பி விடுவதில்லை. கல்வியும் பெரும்பாலான மக்களுக்குக் கல்லூரிகளோடு முடிந்து விடுகிறது. நல்ல தரமான நூல்களை அதற்குப் பிறகும் படித்து அறிவையும், பண்பாட்டையும் வளர்த்துக் கொள்ளும் பழக்கம் குறைவான மக்களிடத்திலேயே இன்றும் உள்ளது.


6) நம்மைப் போலவே நினைக்கவும் வாழவும் அடுத்தவர்களைக் கட்டாயப்படுத்துவது:

’நான் நினைப்பது தான் சரி, என்னுடைய வழிமுறைகள் தான் சிறந்தவை’ என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. அப்படி நினைப்பதோடு நின்று விடாமல் அடுத்தவர்களையும் அப்படியே நினைக்கவும், நடந்து கொள்ளவும் எதிர்பார்ப்பதும் கட்டாயப்படுத்துவதும் மிகப்பெரிய குற்றம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நிறைய மனிதர்களிடம் இந்தக் குற்றமுள்ள போக்கை நாம் காணமுடிகிறது. நம் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும் சுதந்திரம் நமக்கு உள்ளது. ஆனால் அடுத்தவர்கள் எண்ணங்களும், கொள்கைகளும், வாழ்க்கை முறைகளும் நம்முடையதைப் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது கிட்டத் தட்ட அவர்களை அடிமைப்படுத்த நினைக்கும் முனைப்பே. நம் வழி உண்மையாகவே சிறந்ததாகவே உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அதை அடுத்தவரிடம் பலவந்தமாகத் திணிக்க முடியாது. அப்படித் திணிப்பது வெற்றியையும் தராது. நம்முடைய நகலாக உலகம் இருக்க முடியாது, இருக்கவும் தேவையில்லை என்று உணர்வது மிக முக்கியம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் தாக்குப்பிடித்து வந்துள்ள இந்தத் தவறுகள் நம்மிடம் இருக்கிறதா என்று நேர்மையுடன் சோதித்துப் பார்ப்பது நல்லது. இருந்தால் அவற்றை நம்மிடம் இருந்து நீக்கிப் பயனடைந்து மற்றவர்களும் அப்படி நீக்கிக் கொள்ள விரும்பும்படி நல்ல முன் உதாரணமாக வாழ்ந்தால் அது வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top