.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 24 December 2013

ஐ-டியூன்ஸ் 2013 : சிறந்த தமிழ் ஆல்பமாக 'மரியான்' தேர்வு!




ஆப்பிள் ஐ-டியூன்ஸில் 2013ன் சிறந்த ஆல்பமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 'மரியான்' தேர்வாகி இருக்கிறது.


தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடித்த படம் 'மரியான்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பரத்பாலா இயக்கியிருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்தது.


இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், படத்தின் இசை பெரும் வரவேற்பை பெற்றது.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'நெஞ்சே எழு', 'நேற்று அவள் இருந்தால்', 'எங்க போனா ராசா' என அனைத்து பாடல்களுமே இப்போதும் அனைவராலும் கேட்கப்படுகிறது.


ஆப்பிள் ஐ-டியூன்ஸ் நிறுவனம் 2013ம் ஆண்டின் சிறந்த தமிழ் ஆல்பமாக 'மரியான்' படத்தின் இசையை தேர்வு செய்திருக்கிறார்கள்.


இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் தளத்தில்" 'மரியான்' படத்தின் இசையை கேட்ட அனைவருக்கும் நன்றி. ஐ-டியூன்ஸ் தளத்தில் 2013ல் சிறந்த தமிழ் ஆல்பமாக தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?




பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும்.

 ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்

 சாம்பிராணி மருத்துவ பயன்கள்

 ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது
 தமிழ்ப் பற்றாளர்கள்

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது...? குட்டிக்கதைகள்!




ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

 ''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

 ''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

C.F.L .பல்புகள் உடைந்தால்...? என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது...!





C.F.L .பல்புகள் உடைந்தால்...?


என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது...!



சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இ...ந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .

50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்!





பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது.

Free...dom Ship என்ற பெயருடைய இந்தக் கப்பல் மிதக்கும் உலகம் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் ஆடம்பர வர்க்கத்தினருக்காக இவ்வாறானதொரு கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வரவுள்ளதாக Freedom Ship இன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 25 அடுக்கு மாடிகள் உண்டு. இங்கு குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு மேலதிகமாக 30 ஆயிரம் விருந்தினர்கள் பயணிக்கக் கூடிய வாய்ப்பையும் கப்பல் வழங்குகிறது.

கப்பல் உருவாக்கப்பட்டுள்ள விதம் குறித்தான வரைபடத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு கப்பலில் உலகத்தைச் சுற்றிவர பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top