.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 23 December 2013

எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும்முறை?




 ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில் கிழக்குமேற்காக 10 அடி விட்டு கோடு வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்குநோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்யவேண்டும். 15 நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கபட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.


பயன்கள் பல...


இளமையாக இருக்கலாம் ...


சர்க்கரை நோய் குறையும்.


தலைவலி, மலச்சிக்கல் தீரும்


சளியிலிருந்து விடுதலை


கண்பார்வை அதிகரிக்கும்


செவிகள் நன்றாக கேட்கும்


இரத்த அழுத்தம் குறையும்...இன்னும் நிறைய இருக்கிறது.

- மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

   

பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்....


* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் 'ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.

* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

* பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

தண்ணீருக்கு நிறமில்லை ! அருவி நீர் வெள்ளையாகத் தெரிவது எப்படி ?



தண்ணீருக்கு நிறமில்லை. பார்ப்பதற்கு அது ஒளி ஊடுருவும் கண்ணாடி போலத்தான் இருக்கிறது. அருவியில் தண்ணீர் கீழே விழும்போது கையில் ஏந்திப் பார்த்தால் கண்ணாடி போலவே இருக்கிறது. ஆனால், அருவியில் தண்ணீர் விழும்போது பார்த்தால், அது கண்ணாடி போலில்லையே. வெண்மை நிறத்தில் இருக்கிறதே. அப்படியானால் மேலிருந்து கீழே வரும் இடைப்பட்ட நேரத்தில், தண்ணீருக்கு வெண்மை நிறத்தைத் தந்தது யார்?

ஒரு பொருளின் மேற்பரப்பு அனைத்து நிறங்களையும் பிரதிபலித்தால் அது வெண்மை நிறமாகத் தோன்றும். அருவிகளில் என்ன நடக்கிறது என்றால், தண்ணீர் காற்றைக் கடந்து கீழே விழுகிறது. அப்பொழுது அது தண்ணீரும் காற்றும் கலந்த, சீரில்லாத ஒரு கலவையாகவே விழுகிறது. வழக்கமாக, தண்ணீருக்கு வெளியே உள்ள அடர்த்தி குறைந்த காற்று ஊடகத்திலிருந்து, அடர்த்தியான நீர் ஊடகத்திற்குள் ஒளி புகும்போது, அதன் மேற்பரப்பு சிறிது ஒளியை எதிரொளிக்கிறது.

எஞ்சிய ஒளி விலகிச் செல்கிறது. இதுவே ஒளிவிலகல் ஆகும். அருவில் என்ன நடக்கிறது? ஒளி அதிக அளவில் எதிரொளிக்கப்படுகிறது. அதேநேரம், ஒளிவிலகலும் மிக அதிகமாக நடைபெறுகிறது.

ஒளிவிலகல் அலகில் ஏற்படும் மாறுபாடே இதற்குக் காரணம் (ஒளிவிலகல் விகிதத்தில் ஏற்படும் மாறுபாடே ஒளிவிலகல் அலகு எனப்படுகிறது). இதன்காரணமாக, அதிக ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இது எப்படி நடக்கிறது? உச்சத்தில் உள்ள நீர்அடுக்கில் ஏற்படும் ஒளிவிலகல், அதற்கு அடுத்த அடுக்கில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை எதிரொளிக்க உதவுகிறது. இதன்காரணமாக, அருவியில் பெரும்பாலான ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இதனால், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கிறது.

மூடுபனி, காகிதம், நீராவி, மேகம், பனி, சர்க்கரை, வெள்ளை பெயின்ட் போன்றவை வெண்மை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இதில் வெள்ளை பெயின்ட் விசேஷமானது.

மற்ற பெயின்ட்டுகளில் உள்ளதுபோல, வெள்ளை பெயின்ட்டில் வெள்ளை நிறமிகள் கிடையாது. எதிரொளிப்பால்தான் வெள்ளை பெயின்ட் அந்த நிறத்தைப் பெறுகிறது.

மேலும், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்க, ஒளி ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து மட்டும் வரக்கூடாது. அப்படி வந்தால், நீர்த்துளிகளால் அந்த ஒளி எதிரொளிக்கப்பட்டு வானவில் ஏற்படும் (மழை பெய்யும்போது இதன் காரணமாகவே வானவில்லைப் பார்க்க முடிகிறது).

இதற்கு மாறாக, எல்லா திசைகளில் இருந்தும் அருவியின் மீது ஒளி பாய்வதால்தான், ஒளி பல்வேறு திசைகளில் இருந்து எதிரொளிக்கப்பட்டு அது வெண்மை நிறத்தில் நமக்குத் தோற்றமளிக்கிறது.

ஆண்கள் பெண்களை ஏமாற்றும் 7 தகவல்கள்..?


பொதுவாக பெண்களை காதலிப்பதாக கூறும் காதலர்கள் தனது காதலிக்கு தெரியாமல் மூன்றாம் நபரையும் காதலிக்க வாய்ப்புண்டு  அப்படிபட்ட நபர்களை கண்டறிய சில டிப்ஸ்


01. காதலன் கடைசி நிமிடத்தில் இருவரும் போக இருந்த பயணத்தை அல்லது வெளியே செல்லுவதை மாற்றுதல் அல்லது கேன்சல் செய்தல்.



காதலாகள் இருவரும் எங்காவது போக திட்டமிட்டு இருந்து, வருகிறேன் என்று இருந்த காதலன் கடைசி நிமிடத்தில் ”எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நீ வேண்டுமானால் உன் தங்கையோடு அல்லது தோழியோடு போய்ட்டு வா” என கூறினால் கொஞ்சம் கவனம். ஏனென்றால் மற்றைய காதலியோடு வெளியே போக வேண்டி இருக்கலாம்


02. வெளியே செல்லும் போது சில இடங்களை வேண்டாம் என கூறுதல்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு போகலாம் என கூறியவுடன் வேண்டாம் அங்கு சரியில்லை. வேறு இடத்துக்கு போவோம் என கூறினால் சில நேரம் அவரது காதலி அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்.


03. அவரது சொந்தங்களுடன் பழகுவதை விரும்பாமல் இருத்தல்


அவரது சொந்தங்களான அவரின் தாய், சகோதரி போன்றோரோடு நீஙகள் பழகுவதை அவர் விரும்பாவிடினும் கொஞ்சம் கவனம். தனது மகன் அல்லது சகோதரன் ”வேறு பெண்ணை அல்லவா காதலிக்கிறான்” என உங்களிடம் சொல்லிவிட கூடிய அபாயம் இருக்கிறது. நண்பர்களிடம் ”மச்சான் நான் ரெண்டு பிகர லவ் பண்ணுறேன்” சொல்லும் நம்ம பிரதர்ஸ் தனது தாய், சகோதரிகளிடம் அப்படி சொல்ல மாட்டாங்க.


04. கண்கள் அலைபாய்தல்

உங்கள் காதலன் உங்களோடு நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கையில் கவனம் வேறு பக்கம் திரும்பினாலும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்க. ஏனென்றால் இரண்டு பேரை காதலித்தால் கட்டாயம் அவர் இதை விட நல்லதா யாராவது கிடைக்க மாட்டாங்களா என தேடி கொண்டிருக்கலாம். அல்லது மற்றைய காதலி வந்திடுவாளோ என்கிற பயமும் காரணமா இருக்கலாம்.


05. அவரது தொலைபேசி, மடிக்கணனி, பர்ஸ் போன்றவற்றை உங்களிடமிருந்து மறைத்தல்

அவர் தொலைபேசி கணனி போன்றவற்ளை உங்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தால், மேலும் பாஸ்வேர்ட் போட்டு எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தால், அவரது பேஸ்புக் போன்ற சமூக வலைபின்னல்களை உங்களிடமிருந்து மறைத்தால். நீங்கள் இருக்கும் போது அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் ”அப்புறம் பேசுறேன்” என்று சொல்லிட்டு கட் பண்ணினால் ரொம்பவே கவனம்.


06. உங்களை செல்லப் பெயர் கொண்டு அழைத்தல்

அவர் உங்களை செல்லப் பெயர் அல்லது பொதுப் பெயர் கொண்டு அழைத்தால் கொஞ்சம் கவனம். இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று பொதுவான பெயர் கொண்டு அழைத்தால் தவறுதலாக மற்றைய காதலியின் பெயர் சொல்லிவிட தேவையில்லை. இரண்டாவது நீஙகள் தொலைபேசியில் அழைத்தால் மற்றைய காதலி முன்னாலே உங்கள் பொது பெயரை கூறி அது வேறு யாராவது என கூறி மழுப்பலாம்.


07. அவள் எனது முன்னால் காதலி இப்போ நாங்க ரொம்ப நல்ல பிரண்ட்ஸ் என கூறல்

ஏற்கனவே காதலித்து பிரிந்துவிட்டோம் என கூறி அவரோடு தொடர்பில்லை சும்மா கதைப்போம் என கூறினாலும் கவனித்துக் கொள்ளவும்.

எட்டுக்கு இணை ஏதுமில்லை....?


மனிதனை ஆட்டி வைப்பவை ஒன்பது கிரகங்கள் என்பது சோதிடம். உலகத்தையே ஆட்டிப்படைப்பதும் இந்த ஒன்பது எண்கள்தான் என்பது அறிவியல். ஜனநாயகமே இந்த எண்ணிக்கையில்தானே அடங்கியிருக்கிறது. வான்இயற்பியல் (Astro Physics) விஞ்ஞானியைக் கேட்டால் உலகம் காலம் என்பதில் தோன்றி அதிலேயே ஒடுங்குவதாகக் கூறுவார்கள். அந்தக் கால தத்துவத்திற்கும் இந்த ஒன்பது எண்கள்தான் அடிப்படை. கம்ப்யூட்டருக்கு எந்த மொழியும் தெரியாது. அதற்கு 0 என்பது மட்டும்தான் தெரியும். அந்தப் பூஜ்யத்தில் அது சாம்ராஜ்யத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறது.


எனவே ஒன்பது எண்களுமே சிறப்பானவை தான் இருந்தாலும் நம்மவர்களுக்கு எட்டு என்ற எண்ணைக் கேட்டாலே ஒரு பயம். அந்த எண்ணில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு அமைந்து விட்டாலோ எப்போது இது வெட்டுமோ? என்ற எண்ணம் வந்து வந்து பயமுறுத்தும். நாட்களிலே அஷ்டமி என்றால் ஐயோ! வேண்டாம் என்பார்கள். இன்னும் சிலருக்கு 8 என்ற எண்ணைப் பார்த்தாலே அச்சம். அதன் கோணலே அவர்களுக்குப் பிடிக்காது. சோதிடர்கள் ஒருவரிடம் உனக்கு அஷ்டமத்துச்சனி என்று சொல்லிவிட்டால் போதும், சனி அவரைப் பாடாய்ப் படுத்துகிறதோ இல்லையோ; அந்த அஷ்டமம் அவர்கள் மனத்தைப் பாடாய்ப் படுத்திவிடும். எட்டைப் பற்றிய உண்மையான செய்திகளைத் தெரிந்து கொண்டால் நம் வீணான அச்சம் தொலையும். எட்டின்மேல் நமக்குப் பாசம் வருகிறதோ இல்லையோ! ஆனால் ஒரு பக்தி தோன்றும். எண்ணிப்பார்த்தால் எல்லாமே எட்டுக்குள்தான் என்ற ஞானம் தோன்றும்.


மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது. அப்போது கருப்பையில் இடம் போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்திற்கேற்பத் தன் கைகால்களை மடக்கிக் கொள்கிறது. தன் உடல் உறுப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முதல் அறிவை அப்போதுதான் அது பெறுகிறது. அப்போது அதன் கருப்பை வடிவம் 8 என்ற எண் வடிவம். சைவர்களின் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் எட்டாம் திருமுறை திருவாசகம். வார்த்தைகளுக்கு எட்டாத தெய்வ அனுபவத்தை முதன்முதலாக வார்த்தைகளில் வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல். கடல் போன்ற தமிழ் நூல்களில் ஆறு மிகச்சிறந்த நூல்களில் ஒன்று. அதனை இயற்றிய மாணிக்கவாசகர் கருப்பையில் நம் முதல் வடிவத்தை எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் என்று கூறுகிறார். அந்த நெருக்கத்தில் சிக்கித் துன்புற்று இறந்து போகாமல் பிழைத்துப் பிறந்திருக்கிறோமே! இதற்கு நாம் எட்டிற்கு நன்றி சொல்ல வேண்டாமா!


எட்டாம் மாதத்தில் தாயின் கருப்பையில் உடலைக்குறுக்கிக் கொண்டு துன்பப்படும் ஓர் உயிருக்கு, நாம் செய்த தீவினையால் தானே மீண்டும் ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் நிச்சயம் நாம் தவறு ஏதும் செய்யக்கூடாது என்ற ஞானம் அதற்குத் தோன்றுவதாகக் கீதை ஓரிடத்தில் கூறுகிறது. ஆனால் பிறந்த பின் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் (இருந்தால்) நிச்சயம் தோன்றும். அதனால் எட்டை ஒரு ஞான எண்ணாகக் கூறுவார்கள். எட்டாம் எண் கூட்டுத்தொகை உடையவர்கள் ஒன்று தீவிர பக்தர்களாகவோ, தத்துவவாதிகளாகவோ, சமுதாயத் தொண்டர்களாகவோ இருப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குருவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ இருந்தால் அவர்கள் இப்பிறவியில் ஞானம் பெற்று முத்தியடைவார்கள் என்று சோதிடம் கூறுகிறது.


பாரதத்தின் ஒப்பற்ற தவஞானி ஆதி சங்கரருக்கு எட்டாம் இடத்தில் குரு; மரணமில்லாமல் பெருவாழ்வை சாதித்துக் காட்டிய வள்ளலார் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதனும், சனியும். சைவ சித்தாந்தத்தின் வேத நூலாக சிவஞானபோதத்தின் எட்டாம் நூற்பா ஞானம் உணர்த்தும் முறையைக் கூறுகிறது. இந்த ஒரு நூற்பாவை மட்டும் ஏதேனும் ஒரு திருமடத்திலோ அல்லது ஒரு துறவியிடமோ தான் பாடங்கேட்க வேண்டும் என்ற மரபு இன்றும் உண்டு. வைணவர்களின் வேதநூல் நாலாயிரத் திவ்விய பிரபந்தம். இதில் உள்ள பாடல்கள் காலப்போக்கில் மறைந்து போயின. வீரநாராயண புரத்தில் வைணவர்கள் சிலர் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் எட்டாம் திருவாய்மொழியின் ஐந்தாம் பத்தைப் பாடியதைக் கேட்ட நாதமுனிகள் பின்னர் நாலாயிரம் பாடல்களையும் மீட்டுக்கொடுத்தார். ஆதலால் எட்டாம் எண் ஞானத்திற்குரிய எண். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உள்ளத்தளவில் அவர்கள் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.


எட்டாம் எண் யோகத்திற்கும் உரியது. தவமுனிவர்கள் மேற்கொள்ளும் யோகம் எட்டுவகைப்படும். அவை இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். இந்த எட்டுவகை யோகங்களும் இடகலை, பின்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளை அடிப்படையாகக் கொண்டவை. அடி வயிற்றுக்குக் கீழே இடப்புறமிருந்து இடகலைநாடியும் வலப்புறமிருந்து பின்கலை நாடியும் தொடங்கிச் சுழிமுனை என்ற நாடியுடன் சேர்ந்து மீண்டும் பிரிந்து புருவமத்தியில் ஒன்று சேர்கின்றன. இதன் வடிவம் எட்டு.


இந்த யோகமுறையால் நம்மால் பின்வரும் எட்டுவிதமான சித்திகளை அடையமுடியும். நம் உடலை அனுவாகச் சுருக்கலாம். எவ்வளவு பெரிய உருவாகவும் பெருக்கலாம். எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லலாம், உடலை மிகமிக இலேசானதாக மாற்றலாம், தேவைப்படுவதை அடையலாம். எல்லாவற்றிலும் நிறைவானவனாக விளங்கலாம், யார் மீதும் எந்தப் பொருள்மீதும் தன் ஆட்சியைச் செலுத்தலாம்.
எதனையும் தன்வசமாக்கலாம். இதனை யோக முறையில் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று கூறுவார்கள். யோகத்திற்குரிய எட்டு உடையவர்கள் யோகம் பயிலத் தொடங்கினால் அதில் எளிதில் முன்னேறிச் செல்வார்கள். அவர்கள் அதைப் பயிலாவிட்டாலும் அவர்களுக்கு நிர்வாகத் திறமை, ஆளுமைப்பண்பு, எவரையும் கவரும் ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கும்.
மனிதப் பிறப்பில் பல நபர்கள் 8 ஆம் தேதியில் பிறந்து சாதித்துள்ளனர்.


இதில் மன்மோகன் சிங், எம்.ஜி.ஆர், அத்வானி, ஜோதிபாசு, முரசொலி மாறன் உள்பட பல தலைவர்கள் 8ஆம் எண்ணில் பிறந்துள்ளனர்.
எட்டு என்ற எண் தெய்வங்களோடு தொடர் புடைய எண்ணாகும். மனிதர்களைப் போலவே இறைவனுக்கும் குணங்கள் உண்டு. அந்தக் குணங்கள் எல்லாம் அவனுக்கு இருப்பதாக அருளாளர்கள் கூறுவார்கள். உண்மையில் பரம்பொருள் குணங்களும் வடிவங்களும் இல்லாதது. இறைவன் குணாதீதன், அதாவது குணங்களைக் கடந்தவன். இருப்பினும் அவனுக்கு குணங்களைக் கற்பிக்கும்போது எட்டு என்ற எண்தான் எல்லையாக அமைந்தது. இறைவனுக்குத் தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.


எட்டுக் குணங்களைக் கொண்ட சிவபெருமான் எட்டு இடங்களில் எட்டு வீரச் செயல்களை நிகழ்த்திய தாகவும் கூறுவர். அந்த இடங்கள் அட்ட வீரட்டத் தலங்கள் எனப்படும். இறைவன் வரம்பற்ற ஆற்றல் உடையவனாக இருந்தாலும் அவன் நிகழ்த்திய வீரச் செயல்கள் எட்டுதான். திருவள்ளுவர் இறைவனைப் பற்றிக்கூறும்போது அவனை எண்குணத்தான் என்று எட்டுக்குச் சிறப்பு கொடுத்தே கூறுகிறார். சிவபெருமானுக்குத் தோள்களும் எட்டுதான். இறைவன் வடிவங்கள் கூறுவதும் எட்டுதான். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய எட்டும் அவன் திருவடிவங்கள்.


எட்டு எண்ணில் பிறந்தவர்களுக்கு எல்லாம் இருக்கும்; ஆனால் இருக்காது. இறைவன் எல்லாம் உடையவன். இந்த உலகமும், வானமும் அண்டங் களும் அவற்றில் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை. எனவே, இறைவனை உடையவர் என்றே வழங்குவார்கள். கல்வெட்டுகளில் அந்தக் கோயில்கள் எழுந்தருளியுள்ள இறைவனை அந்த ஊரின் பெயரைச் சேர்த்து உடையவர் என்றே கூறுகின்றன.


ஆனால், அவனுக்கென்று எதுவுமே இல்லை. அவனுக்குத் தாயும் தந்தையும்கூட இல்லை. அவன் ஓர் அனாதை. இதை மாணிக்கவாசகர் தாயும் இலி; தந்தையிலி; தான் தனியன் கானேடி!.


மாணிக்க வாசகரின் திருவாசகம் உள்ளத்தை உருக்கும்; உடம்பில் கலந்து உயிரில் கலக்கும். மாணிக்க வாசகர் சொல்லச் சொல்லத் தில்லை நடராசப் பெருமானே ஓர் ஏடெழுதும் பிள்ளையாக வந்து தம் திருக்கரத்தால் எழுதிய ஞானநூல். வெளிநாட்டினரின் உள்ளங்களைக் கவர்ந்த ஒப்பற்ற நூல். முத்தியில் பெறும் இன்பம் எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை முதன் முதலாக வார்த்தைகளில் வடித்துக்கொடுத்த தெய்வத்திருநூல். இது சைவர்களின் பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாவதாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.


எட்டுக்கும், மேலுலகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தெய்வங்கள் எல்லாம் இந்த உலகத்திற்குத் தேவையான செல்வங்களை மட்டும் கொடுக்கக்கூடியவை. பிறவாமையைக் கொடுக்க அவற்றால் முடியாது. அவனது நடனம் ஆனந்த நடனம். அதைக் கண்டுவிட்டால் போதும் என்றும் ஆனந்தந்தான்.


ரஷியாவில் அணுஉலை ஒன்றில் கொதித்துக் கொண்டிருந்த அணுக்கலவையிலிருந்து ஒரு சிறிய துளி வெளியில் விழுந்து விட்டது. அதைத் தொலைவிலிருந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணிப்பொறிகள் மூலமாக விஞ்ஞானிகள் பார்த்தார்கள். அந்த ஒரு சிறு துளி வெளியில் வந்து விழுந்தவுடன் ஆடிய ஆட்டம் இதுவரையில் உலகில் கண்டறியாத அற்புத நடனமென்றும், அந்த நடனத்தின் அழகை வார்த்தைகளால் விளக்க முடியாது என்றும் கூறினார்கள். அந்த அணுவிலும் தாண்டவமாடும் தில்லை ஆடலரசன் காலைத் தூக்கி நின்றாடும் கோலத்தைச் சுற்றி நேர்க்கோடுகள் வரைந்தால் அது எண் கோணமாகும். அந்த ஆனந்தக் கூத்தன் அந்த எட்டில் நின்று ஆடித்தான் இந்த உலகத்தைப் படைக்கிறான்; நிலை நிறுத்துகிறான். அழிக்கின்றான். ஆம்;

ஆவதும் எட்டாலே; அழிவதும் எட்டாலே; போவதும் எட்டாலே; வருவதும் எட்டாலே.


எட்டு என்றதைக் கேட்டவுடன் பிடிக்காமல் போவதைப்போல இந்த நடராசனைக் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. தப்பித் தவறி வீட்டுக்கு வந்து விட்டாலும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் எங்காவது ஒரு கோயிலில் வைத்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள். எல்லோருமே இறப்புக்குப்பின் சொர்க்கத்துக்குப் போக நினைக்கிறார்கள். அந்தச் சொர்க்கத்திற்குப் போகும் நுழைவாயில் நம் வீட்டு வாசற்காலைப் போல இல்லை; அது எண் கோண வடிவில் இருக்கிறது. கோயில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு உள்ளே அதன் மேல் உள்ள விமானப் பகுதி எண் கோணவடிவில் அமைந்திருக்கும். அதை மூடியிருக்கும் கல்லும் எண்கோண வடிவில் அமைந்திருக்கும். உள்பகுதியில் உள்ள எண் கோணத்தை பிரம்மரந்திரம் என்பார்கள்.


இறைவன் சொர்க்கத்தின் நாயகன்; அவன் போவதும் வருவதும் அந்த எண்கோண வழியில்தான். தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மூலவர் மிகவும் பெரிய உருவம். அவருக்குப் பெயரே தஞ்சைப் பெருவுடையார். அதற்குத் தகுந்தாற்போல் உள்கூட்ட எண்கோணம் மிகவும் பெரியது. அதை மூடத்தான் எட்டு டன் எடையுள்ள ஒரே கல் தேவைப்பட்டது. எண் கோண வடிவிலான அதை எப்படித் தூக்கிக் கீழேயுள்ள எண் கோணத்தில் பொருந்துமாறு நிறுத்தியிருப்பார்கள் என்று புரியாமல் இன்றும் வெளிநாட்டுக் கட்டிடக்கலை நிபுனர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.


எகிப்திய பிரமிடுகளைப் பற்றி அறிந்திருக்கிறோம். அதன் உட்புறம் ஏக்கர் கணக்கில் பெரியது. அதன் நடுநாயகமாக இருக்கும் பகுதியில்தான் இறந்த எகிப்திய மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அடங்கிய நவரத்தினப் பேழைகள் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு நேரான மேல் பகுதிதான் வெளியில் தெரியும் கூம்பு வடிவம். பேழைகளுக்கு நேராக மேலே உள்ள பகுதி எண் கோண வடிவில் அமைந்திருக்கும். அதை மேல்புறத்தில் மூடுவதற்கு ஒவ்வொன்றும் எட்டு டன் எடையுள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மம்மிகளுக்கு மேலேயுள்ள இந்த எண்கோல் வழியாகத்தான் அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் மன்னர்கள் தங்கள் அரசியருடன் பகலில் சொர்க்கலோகத்திற்குச் சென்று அங்குப் பகலெல்லாம் இருந்துவிட்டு இரவில் அதே எண்கோண வழியாக மம்மிக்குத் திரும்பி விடுகிறார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.


குழந்தை பிறக்கும்போது அதன் தலையின் உச்சித் துர தோலால் மட்டுமே மூடப்பட்டிருக்கும். குழந்தை வளர வளரத்தான் மண்டையோடு வளர்ந்து கூடுகிறது. குழந்தை பிறக்கும்போதிருந்த உச்சித்துளை வட்டவடிவமானது அல்ல. அது எண்கோண வடிவிலானது. எனவே, அதையும் யோகித பிரம்மரந்திரம் என்றே கூறுவார்கள். உடலிலிருந்து உயிர் பிரியும்போது உச்சித் துளை வழியாகப் பிரிந்து சென்றால் அந்த உயிர் நேரே சொர்க்கத்திற்கும் மேற்பட்ட பல உயர்ந்த உலகங்களுக்குச் சென்று விடுகிறது. அது மீண்டும் பூமிக்கு வருவதில்லை. யோகிகள் நினைத்தால் தன் உடலில் பெரிய அக்கிணியை உருவாக்கிக் கொண்டு அதைத் தலை உச்சிக்குச் செலுத்திப் பிரம்மரந்திரத்தை வெடிக்கச் செய்து அதன் வழியாக மேலுக்கு மேலான உலகத்திற்கு செல்வார்கள். இதனைக் கபாலமோட்சம் என்பார்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top