.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் தடை செய்வது எப்படி ?



அன்பு சகோதரர்களே சகோதரிகளே !... அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.



 ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

 ...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்

 பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..



ஆடம்பரத்திற்காக
 பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம்
 பேசுவதில்லை, நம்
 உடல்நலத்தை கெடுக்கும்
 குளிர்பானம், பீட்சா, பர்கர்,
வெளிநாட்டு கோழிக் கறிகள்
இவற்றை வாங்கும்
 பொழுது பேரம் பேசுவதில்லை,

நம் அந்தஸ்த்தை காட்ட அணியும்
 அணிகலன்கள் வாங்கையில் பேரம்
 பேசுவதில்லை,

ஆனால் நமக்காக
 நம் உடல்நலத்தை மனதில்
 கொண்டு நல்ல
 காய்கறிகளை உற்பத்தி செய்யும்
 ஏழ்மை பட்ட விவசாயிகளிடமும்,
காய்கறிகளை நம்மிடம்
 கொண்டுவந்து சேர்க்கும்
 காய்காரர்கள், கீரை விற்கும்
 பெண்மணியிடமும் பேரம்
 பேசுகிறோம்.

அந்நிய நாட்டில் தயாரிக்கப்
 பட்டது என்றால்
 அது என்னவென்றே தெரியாவிட்டாலும்
 அதிக விலை கொடுத்து வாங்க
 முன்வரும் இந்த சமூகம்
 நம்நாட்டில் தயாரிக்கப் படும்
 தின்பண்ட்களை வாங்க
 மறுக்கிறது.

அந்நிய
 நாட்டு பொருட்களை வாங்கி உன்னை அழித்துக்கொண்டு
 அந்நியர்களை வாழவைப்பதை விட
 நம்
 நாட்டு பொருட்களை வாங்கி உண்டு நீயும்
 வாழலாம் மற்றவர்களையும்
 வாழவைக்கலாம்.

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?




பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.

மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்…!

நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்!



 ஒட்டும் தன்மையற்ற (நான் ஸ்டிக்), சமையல் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவை உண்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது,

´நான் ஸ்டிக்´ சமையல் பாத்திரங்களில், ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்க, சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதிப்பூச்சுகள், விஷத்தன்மை கொண்டவை. இவ்வகை பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் போது, வேதிப்பூச்சுகள் உணவில் கலந்துவிடுகின்றன.

இதனால், இவ்வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம், மனித உடலில் கேடுகளை விளைவிக்கின்றன. இதனால், ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உண்பவர்களுக்கு, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும், ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அனைவரின் இரத்தத்திலும், வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதின் மூலம், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பூச்சுகளே, இவ்வகை பாதிப்புகளுக்கு காரணமாய் இருப்பதால், அவற்றில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என் பெயர் என்ன ???.







என் பெயர் என்ன ???.


நீ அழுத போது
 உன்னை தரதரவென்று
 இழுத்துப் போய்
 பள்ளிக் கூடத்தில்
சேர்த்தேன்
 படித்து பெரிய ஆளாக
 வர வேண்டும் என்ற எண்ணத்தில்

 இன்று நான் அழுகிறேன்
 என்னை இழுத்துப் போய்
 முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே
 அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று

 பத்துமாதம் உன்னை வயிற்றில்
 சுமந்தபோது பாரமாக
 நான் நினைக்கவில்லை
 உன் பத்தினி வந்ததும்
 உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக
 இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே

 நீ ஓடி ஓடி விளையாடிய போது
 நீ செல்லும் இடமெல்லாம்
 உன் பின்னாலே வந்து
 உனக்கு சோறு ஊட்டி
 உன் வயிறு நிறைந்ததில்
 என் வயிறும் மனமும் நிறைந்தது
 எனக்கு வயிறாற உணவு வேண்டாம்
 ஒரு வேளையானலும் உன் வீட்டு சோறு போதும்

 உன் வருங்காலத்திற்காக
 உன்னை பெற்று வளர்த்து
 படிக்க வைத்து,கல்யாணம் முடித்து
 நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்
 என் எதிர்காலத்திற்காக
 நான் சாவதற்கு என்னை நீ
 பார்த்துக் கொள்ளக் கூட மறுக்கிறாய்

 பிள்ளையேப் பெறாமல்
 இருந்திருந்தால் மலடியாகிருப்பேன்
 யாருமே இல்லாதிருந்தால்
 அனாதையாகிருப்பேன்
 பிள்ளைகளைப் பெற்றும்
 இன்று நான் முதியோர் இல்லத்தில்

 நான் மலடியா
 நான் அனாதையா
 என் பெயர் என்ன..?


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top