.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

உலகை வியக்கவைக்கும் ‘எக்ஸ்-ரே கண்ணழகி’!




உடலிலுள்ள கோளாறுகளை அறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட எவ்வளவோ புதுமையான மருத்துவ பகுப்பாய்வு முறைகள் தோன்றி விட்டன.ஆனால், 1987ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் தனது வெறும் கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஊடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவளாய் திகழ்ந்தாள்.


தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை ஊடுசக்தி மூலம் வெறும் கண்ணால் பார்க்க தொடங்கிய இவரது புகழ் காலப்போக்கில் உலகம் முழுவதும் படர்ந்து பரவியது.


இதையடுத்து, இவரிடம் உள்ள அற்புத சக்தியை அறிந்த உள்ளூர் மக்கள், இவரது பார்வை பட்டாலே நோய் குணமாகிவிடும் என நம்பத்தொடங்கி டெம்கினாவை வீடுதேடி படையெடுக்க தொடங்கினர்.


டாக்டரின் வயிற்றின் எந்த பகுதியில் ‘அல்சர்’ கட்டி உள்ளது என்றும், மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக் கட்டி அல்ல என்றும் தீர்க்கமாக கூறி இவர் மருத்துவ நிபுணர்களையே திகைக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியததை உறுதிப் படுத்தும் கீரை வகைகள்!




நம் முன்னோர்கள் பயன்படுத்திய, நூற்றுக்கணக்கான கீரை வகைகளின் பெயர்கள் தெரியாததால் அவை களைச் செடிகளாக மாறி விட்டன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் மாறுபாடு, பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால், பயன்பாட்டில் இருக்கும் கீரை வகைகளும், அழிய தொடங்கி விட்டதாம்.இதற்கிடையில் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் கீரையின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் மகத்துவ பலன்களை இங்கே பார்ப்போம்.

 * புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும். வாய் சுவையற்று இருந்தால் மாறி விடும். வாந்தி போன்ற குமட்டல் நிற்கும். நல்ல பசியும் உண்டாகும். ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாகும். வயிற்று பிரச்சினைகளும் தீரும்.

* அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும்.

* முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆனால் புளி சேர்க்கக் கூடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

* கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறு கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும். குறிப்பாக கண் புகைச்சல் நீங்கி, பார்வை பிரகாசமாகும்.

* கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும்.

* பசலைக் கீரையை, பசறைக் கீரை என்றும் சிலர் அழைப்பார்கள். இது அதிக சுவையை உடையது. அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, இந்த கீரையை கொடுத்தால் நாவறட்சியை தீர்க்கும்.

* பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். நாக்கில் ருசி இல்லாமல் இருந்தால் மாறி சுவையுணர்வு ஏற்படும். வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்றவற்றை நீக்கும். வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.

* வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.

* புளிச்ச கீரை என்றழைக்கப்படும் புளிப்புக் கீரையை அடிக்கடி சாப்பிடுவோருக்கு வாத நோய்கள் நீங்கும். ரத்தத்தில் உள்ள உஷ்ணம் மற்றும் சிக்கல்கள் தீர்ந்து, சுத்தமாகும். கரப்பான் என்று அழைக்கப்படும் நோய் அகன்று விடும். பித்தம் தொடர்பான நோய்களும் தீரும். நாக்கில் சுவையுணர்வை அதிகரிக்க வைக்கும். வயிற்றில் உள்ள கோளாறுகளை நீக்கும்.

சூப்பர் பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை இல்லாமல்..!.




இதய நோயான மாரடைப்பு ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதய ஓட்டத்தை நிறுத்தா வண்ணம் பேஸ்மேக்கர் என்னும் ஒரு சாதனம் பொருத்த படுவது சகஜமான ஒன்றூ. இதன் மூலம் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இதயம் சற்று நின்று போனாலும் ஒரு உசுப்பு உசுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு அற்புத சாதனம். இநிலையில் இப்போது ஆஸ்த்ரியா நாட்டின் மெடிட்ரானிக் என்னும் நிறுவனம் உலகத்திலே அதி சிறிய பேஸ் மேக்கரை உருவாக்கி உள்ளார்கள்.


அதாவது இது பழைய பேஸ்மேக்கரை விட பத்து மடங்கு சிறிது நீளம் வெறும் 24 மில்லி மீட்ட்ர் – அகலம் 0.75 கியூபிக் சென்டி மீட்டர் மட்டுமே கொண்டது


இதில் இன்னொரு மகிழ்ச்சி விஷயம் இதை இம்ப்ளான்ட் செய்ய அறுவை சிகிச்சையெல்லாம் தேவையில்லை. தொடைப்பகுதியில் உள்ள ஒரு ரத்த குழாய் மூலம் இதயத்துக்கு நேராக செலுத்த முடியும் என்பது தான் ஹைலைட்.கடைசியாக இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் இதன் பேட்டரி லைஃப் சுமார் 10 பத்து வருடங்கள் இதனால் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் பத்து வருஷத்துக்கு கிடையவே கிடையாது மக்களே……………………டோன்ட் ஒர்ரி.. பீ ஹேப்பி!!!

ஸ்மார்ட்போனின் அப்டேட்டை விரலில் அலர்ட் அனுப்பும் ‘ஸ்மார்டி ரிங்’




இப்போதைய அவசரயுகத்தில் மொபைல் ரிங்டோனை எல்லாம் கவனிக்க நேரமில்லாமல் அவ்வப்போது நம்முடைய முக்கியமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை(text) மிஸ் பண்ணி விடுகிறோம். இதைக் கவனத்தில் கொண்டு ஒரு புதிய ப்ளூடூத் செயல்படுத்தப்பட்ட வியரபுள்(wearable) மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள்(users) தங்கள் விரலில் இருந்து ஸ்மார்ட்போனின் இன்கம்மிங் அழைப்புகளை அலர்ட் செய்யவும் மற்றும் அதனை மேனேஜ் செய்யவும் அனுமதிக்கிறது.


பயனர்கள் மொபைல் அப்ளிக்கேஷனில் இருந்து இந்த ஸ்மார்டி ரிங் என்று அழைக்கப்படும் கேஜெட்டின் செட்டிங்களை(settings) மேனேஜ் செய்ய முடியும் மற்றும் வாட்ச், டைமர், அல்லது ஃபோன் தேடல் என்று சாதனத்தை பயன்படுத்தவும் முடியும். பயனர்கள் அவரது ஃபோன் இருக்கும் இடத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட அடி கடந்து செல்லும் போது, அவருக்கு பின்னால் ஏதோ விட்டு போய் விட்டார் என்று மோதிரம் அவரை எச்சரிக்கை பீப் செய்து நினைவுப்படுத்தும் .


இதையெல்லாம் விட முக்கியமாக இந்த கேஜெட் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளை அலர்ட் செய்யவும் மற்றும் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளின் அறிவிப்புகளையும் பயனர்களுக்கு அப்டேட் செய்து கொண்டே தக்க வைத்திருக்கும். மேலும் இது பேஸ்புக், ட்விட்டர், ஹேங்கவுட் – ஸ்கைபில் இருந்து ரியல் டைமின் அப்டேட்களையும் கொடுக்கிறது. இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 24 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 4.0 திறன்களையும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனம் ஆகிய இரண்டுக்கும் இணக்கத்தன்மை கொண்டதாக உள்ளது.


ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்!




தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் “12–ந் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சென்னையில் பல இடங்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர். அதில், ஒரு போஸ்டரில் உள்ள படத்தில், ரஜினிகாந்த் அவரது மனைவி, மகளுடன் வாக்குச்சாவடியில் ஓட்டுபோடுவது போலவும், ஓட்டு போடுவதற்கு நிற்கும் ரசிகர் வரிசையில் விநாயகர், விஷ்ணு கடவுள்களும் காத்து நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.


இந்து மத தெய்வங்களை அரசியலுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளனர். இந்து மதத்தை பின்பற்றுகிறவர்களின் மனதை, தமிழகம் முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் புண்படச் செய்துள்ளது. இந்த போஸ்டரை அச்சடித்தவர், ஒட்டியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அதில் ஐந்து பேரின் பெயர்கள் உள்ளன.


ரஜினி ரசிகர் போர்வையில் மாற்று மதத்தினர் இதன் பின்னணியில் உள்ளதுபோல் தெரிகிறது. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் மாநாட்டில் கூறியுள்ளதுபோல், மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top