.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

சூப்பர் பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை இல்லாமல்..!.




இதய நோயான மாரடைப்பு ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதய ஓட்டத்தை நிறுத்தா வண்ணம் பேஸ்மேக்கர் என்னும் ஒரு சாதனம் பொருத்த படுவது சகஜமான ஒன்றூ. இதன் மூலம் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இதயம் சற்று நின்று போனாலும் ஒரு உசுப்பு உசுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு அற்புத சாதனம். இநிலையில் இப்போது ஆஸ்த்ரியா நாட்டின் மெடிட்ரானிக் என்னும் நிறுவனம் உலகத்திலே அதி சிறிய பேஸ் மேக்கரை உருவாக்கி உள்ளார்கள்.


அதாவது இது பழைய பேஸ்மேக்கரை விட பத்து மடங்கு சிறிது நீளம் வெறும் 24 மில்லி மீட்ட்ர் – அகலம் 0.75 கியூபிக் சென்டி மீட்டர் மட்டுமே கொண்டது


இதில் இன்னொரு மகிழ்ச்சி விஷயம் இதை இம்ப்ளான்ட் செய்ய அறுவை சிகிச்சையெல்லாம் தேவையில்லை. தொடைப்பகுதியில் உள்ள ஒரு ரத்த குழாய் மூலம் இதயத்துக்கு நேராக செலுத்த முடியும் என்பது தான் ஹைலைட்.கடைசியாக இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் இதன் பேட்டரி லைஃப் சுமார் 10 பத்து வருடங்கள் இதனால் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் பத்து வருஷத்துக்கு கிடையவே கிடையாது மக்களே……………………டோன்ட் ஒர்ரி.. பீ ஹேப்பி!!!

ஸ்மார்ட்போனின் அப்டேட்டை விரலில் அலர்ட் அனுப்பும் ‘ஸ்மார்டி ரிங்’




இப்போதைய அவசரயுகத்தில் மொபைல் ரிங்டோனை எல்லாம் கவனிக்க நேரமில்லாமல் அவ்வப்போது நம்முடைய முக்கியமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை(text) மிஸ் பண்ணி விடுகிறோம். இதைக் கவனத்தில் கொண்டு ஒரு புதிய ப்ளூடூத் செயல்படுத்தப்பட்ட வியரபுள்(wearable) மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள்(users) தங்கள் விரலில் இருந்து ஸ்மார்ட்போனின் இன்கம்மிங் அழைப்புகளை அலர்ட் செய்யவும் மற்றும் அதனை மேனேஜ் செய்யவும் அனுமதிக்கிறது.


பயனர்கள் மொபைல் அப்ளிக்கேஷனில் இருந்து இந்த ஸ்மார்டி ரிங் என்று அழைக்கப்படும் கேஜெட்டின் செட்டிங்களை(settings) மேனேஜ் செய்ய முடியும் மற்றும் வாட்ச், டைமர், அல்லது ஃபோன் தேடல் என்று சாதனத்தை பயன்படுத்தவும் முடியும். பயனர்கள் அவரது ஃபோன் இருக்கும் இடத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட அடி கடந்து செல்லும் போது, அவருக்கு பின்னால் ஏதோ விட்டு போய் விட்டார் என்று மோதிரம் அவரை எச்சரிக்கை பீப் செய்து நினைவுப்படுத்தும் .


இதையெல்லாம் விட முக்கியமாக இந்த கேஜெட் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளை அலர்ட் செய்யவும் மற்றும் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளின் அறிவிப்புகளையும் பயனர்களுக்கு அப்டேட் செய்து கொண்டே தக்க வைத்திருக்கும். மேலும் இது பேஸ்புக், ட்விட்டர், ஹேங்கவுட் – ஸ்கைபில் இருந்து ரியல் டைமின் அப்டேட்களையும் கொடுக்கிறது. இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 24 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 4.0 திறன்களையும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனம் ஆகிய இரண்டுக்கும் இணக்கத்தன்மை கொண்டதாக உள்ளது.


ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்!




தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் “12–ந் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சென்னையில் பல இடங்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர். அதில், ஒரு போஸ்டரில் உள்ள படத்தில், ரஜினிகாந்த் அவரது மனைவி, மகளுடன் வாக்குச்சாவடியில் ஓட்டுபோடுவது போலவும், ஓட்டு போடுவதற்கு நிற்கும் ரசிகர் வரிசையில் விநாயகர், விஷ்ணு கடவுள்களும் காத்து நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.


இந்து மத தெய்வங்களை அரசியலுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளனர். இந்து மதத்தை பின்பற்றுகிறவர்களின் மனதை, தமிழகம் முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் புண்படச் செய்துள்ளது. இந்த போஸ்டரை அச்சடித்தவர், ஒட்டியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அதில் ஐந்து பேரின் பெயர்கள் உள்ளன.


ரஜினி ரசிகர் போர்வையில் மாற்று மதத்தினர் இதன் பின்னணியில் உள்ளதுபோல் தெரிகிறது. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் மாநாட்டில் கூறியுள்ளதுபோல், மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குளிர் கால எச்சரிக்கைகள்!




கோடை காலத்தை விட மழை மற்றும் குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும். அதனால் நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராக இருப்பது நல்லது.ஆங்கிலத்தில், ‘சாட்’ எனப்படும் “சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு இந்த குளிர் காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் இது வைட்டமின் டி’ சத்து குறைவை ஏற்படுத்தி உடல்வலி காய்ச்சல் உட்பட எல்லாவித பாதிப்பையும் ஏற்படுத்தும். அந்த கால கட்டத்தில் வைட்டமின் டி’ சத்து உள்ள உணவு வகைகளை குளிர்காலத்தில், எடுத்துக் கொள்வது முக்கியம்.அது மட்டுமின்றி மழைக் காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக் கிருமிகள் தான். ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலோருக்கு வரும். அதனால் மழைக்காலத்தில் வெந்நீர் பருகுவது நல்லது. எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை தருவது குடிநீர். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதுடன் உடல் பளபளப்பும் ஏற்படும்.


மழை மற்றும் குளிர் காலங்களில் வயதானவர்கள் அதிகாலையில் எழுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல வெயில் வந்தபின், உடற்பயிற்சி செய்யலாம்.


இதற்கிடையில் இதே குளிர் காலத்தில்தான் மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை மருத்துவமனை ரிகார்டுகள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில்தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல் நிலை, அதற்கேற்ப மாறிக்கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது.


மாற்றங்களுக்கான காரணங்கள்:


குளிர், ரத்தக்குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அள வுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது. குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதே சங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,தட்டை அணுக்கள், பைபர் நோஜன் அதிகரிக்கிறது .கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால்,அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது.


இதனால்தான் நடுவயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. அதிலும் ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை இது போன்ற காலங்களில் மிகவும் கஷ்டம். எனவே இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க தலைக்கு குல்லா, கை, கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்.


முக்கியமாக மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும் போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும்.
பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்திவிட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும்.


சமவெளிகளில்கூட மார்கழி, தை மாதங்களில், இதயநோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபட ப் பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப்பையில், ‘சார்பிட்ரேட்’ மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.


அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், ‘ஏசி’ அறைகளில், 20 டிகிரி செல்சி யசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு. அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், ஏசியை அணைத்து வைக்க வேண்டும்.

ஆர்யா, விஜய் சேதுபதிக்கு ஜோடியான கார்த்திகா!




எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் 'புறம்போக்கு' படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.


இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை யு.டி.வியுடன், எஸ்.பி.ஜனநாதனின் 'பைனரி பிக்சர்ஸ்'ம் இணைந்து தயாரிக்கவுள்ளது.


இதன் முதற் கட்டப் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் குலுமணாலியில் துவங்குகிறது.


இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக ராதா மகள்  கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார்.


இரண்டு ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும் , ஒரு ஹீரோயின் தானாம். இதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார், கார்த்திகா.


ஆர்யா, விஜய் சேதுபதி இருவருடனும் ஒரு டூயட் பாடலாவது இருக்கும் என்பதால்,  அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கைப்பற்றிவிடலாம் என்று நம்வுகிறாராம் கார்த்திகா.


தற்போது அருண்விஜய்யுடன் 'டீல்' படத்தில் கார்த்திகா நடித்துக் கொண்டிருக்கிறார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top