.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்!



 ஒட்டும் தன்மையற்ற (நான் ஸ்டிக்), சமையல் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவை உண்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது,

´நான் ஸ்டிக்´ சமையல் பாத்திரங்களில், ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்க, சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதிப்பூச்சுகள், விஷத்தன்மை கொண்டவை. இவ்வகை பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் போது, வேதிப்பூச்சுகள் உணவில் கலந்துவிடுகின்றன.

இதனால், இவ்வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம், மனித உடலில் கேடுகளை விளைவிக்கின்றன. இதனால், ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உண்பவர்களுக்கு, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும், ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அனைவரின் இரத்தத்திலும், வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதின் மூலம், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பூச்சுகளே, இவ்வகை பாதிப்புகளுக்கு காரணமாய் இருப்பதால், அவற்றில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என் பெயர் என்ன ???.







என் பெயர் என்ன ???.


நீ அழுத போது
 உன்னை தரதரவென்று
 இழுத்துப் போய்
 பள்ளிக் கூடத்தில்
சேர்த்தேன்
 படித்து பெரிய ஆளாக
 வர வேண்டும் என்ற எண்ணத்தில்

 இன்று நான் அழுகிறேன்
 என்னை இழுத்துப் போய்
 முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே
 அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று

 பத்துமாதம் உன்னை வயிற்றில்
 சுமந்தபோது பாரமாக
 நான் நினைக்கவில்லை
 உன் பத்தினி வந்ததும்
 உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக
 இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே

 நீ ஓடி ஓடி விளையாடிய போது
 நீ செல்லும் இடமெல்லாம்
 உன் பின்னாலே வந்து
 உனக்கு சோறு ஊட்டி
 உன் வயிறு நிறைந்ததில்
 என் வயிறும் மனமும் நிறைந்தது
 எனக்கு வயிறாற உணவு வேண்டாம்
 ஒரு வேளையானலும் உன் வீட்டு சோறு போதும்

 உன் வருங்காலத்திற்காக
 உன்னை பெற்று வளர்த்து
 படிக்க வைத்து,கல்யாணம் முடித்து
 நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்
 என் எதிர்காலத்திற்காக
 நான் சாவதற்கு என்னை நீ
 பார்த்துக் கொள்ளக் கூட மறுக்கிறாய்

 பிள்ளையேப் பெறாமல்
 இருந்திருந்தால் மலடியாகிருப்பேன்
 யாருமே இல்லாதிருந்தால்
 அனாதையாகிருப்பேன்
 பிள்ளைகளைப் பெற்றும்
 இன்று நான் முதியோர் இல்லத்தில்

 நான் மலடியா
 நான் அனாதையா
 என் பெயர் என்ன..?


பேஸ்புக்கே கதி என்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்கு.....!



பேஸ்புக்கே கதி என்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்கு.....!

சில பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் என்று இதை பிரசுரிக்கின்றேன்

 குறித்த கணணியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடைசெய்வதற்கு

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் அதன்பயனாளர்களுக்கு சிலவழிகளில் நன்மை தருகின்ற போதிலும், வேறுவிதத்தில் தீமை விளைவிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம்.

இவ்வாறு பேஸ்புக்தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது.

இம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவியபின் ஒரேஒரு கிளிக்மூலம் பேஸ்புக்தளத்தை முடக்க முடியும்.

இது தவிர கடவுச் சொற்களைக்கொடுத்து முடக்கும் வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Block Facebook by using following features:

 DOWNLOAD:- http://www.facebooklimiter.com

மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!





நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:


காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம்.

ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.

ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.

கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.

பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.

ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.

சதகுப்பை இலைப் பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.

ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.

50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.

திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.

வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

வெளிப் பிரயோகம்:


சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.

லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.

கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.
சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம்.

சேர்க்க வேண்டியவை:

தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி.

தவிர்க்க வேண்டியவை:

குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம்

கனா காண்கிறேன் - கவிதை!





பல்லாங்குழி ஆடிய திண்ணை
 பாண்டி ஆடிய தெரு வீதி

 பட்டம் விட்ட மொட்டைமாடி
 பாடித் திரிந்த வயல் வெளி

துரத்திப் பிடித்த தும்பி
 பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சி

 கையில் ஏந்திய ஆட்டுக் குட்டி
 காத்துக் கிடந்த கனமழை

 விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டி
 விரட்டிச் சென்ற டயர் வண்டி

 திருடித் தின்ன மாங்காய் தோப்பு
 திட்டித் தீர்த்த காவல்காரன்

 அசைந்தாடிய ஆலமர ஊஞ்சல்
 ஆற்றைக் கடந்த பரிசல்

 அல்லி பூத்தக் குளம்
 அரசமரத் தடி பிள்ளையார்

 என அத்தனை நினைவுகளையும் சுமந்து சென்ற
 நெஞ்சம் தேடுது, எங்கே தொலைந்தது? நான் பார்த்த ஊர் என..

கனா காண்கிறேன்.....

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top