.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?




கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?


தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.

ஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்!



ஜிமெயில் தளத்தில் நாம் பத்திரமாகப் பாதுகாக்க விரும்பும் பல டேட்டா பைல் களைப் பதிந்து வைக்கிறோம். திடீரென நமக்கு மரணம் சம்பவித்தால், இவற்றை எப்படி மற்றவர்கள் பெறுவார்கள். இதனைக் கணக்கிட்டு, கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. உங்களுக்கு மரணம் நேரிட்டால் என்று நேரடியாகக் கூறாமல், உங்கள் மெயில் அக்கவுண்ட் குறிப்பிட்ட மாதங்களுக்கு, எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் இருந்தால் எந்தவித நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என கூகுள் மெயில் தளத்தில் செட் செய்திட, வசதி தரப்பட்டுள்ளது.


இந்த புதிய வசதி ‘Inactive Account Manager’ என்று அழைக்கப்படுகிறது.

நம் கூகுள் அக்கவுண்ட் தளத்தில், நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் வசதியாகும். கூகுள் தளத்துடனான நம் செயல்பாடு தொடர்ந்து குறிப்பிட்ட மாதங்களுக்கு இல்லா மல் போனால் மட்டுமே இது செயல் படுத்தப்படும். மூன்று, ஆறு, ஒன்பது அல்லது பன்னிரண்டு மாதங்கள் செயல் இல்லாமல் போனால், இந்த வசதியைச் செயல்படுத்துமாறு கூகுள் தளத்திற்கு நாம் செட் செய்து அறிவிக்கலாம். மரணம் மட்டுமல்ல, ஒன்றுமே செயல்பட முடியாமல் நாம் மோசமான உடல் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், அல்லது பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றுச் சென்றாலும், இந்த வசதி செயல்படுத்தப்படும். இன்டர்நெட் இணைப்பே இல்லாத சூழ்நிலை உள்ள நாட்டிற்குச் சென்று, அங்கிருந்து கூகுள் தளம் தரும் வசதி எதனையும் பயன்படுத்தாமல் இருந்தாலும் இந்த வசதி செயல்படத் தொடங்கும்.

இதற்கான செட்டிங்ஸ் பக்கத்தில், நீங்கள் விரும்பினால், பத்து பேரின் பெயர்களையும், அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம். செயல்பட இயலாத காலம் கடந்தவுடன், இவ்வாறு பதிந்து வைப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு செய்தி ஒன்று உங்கள் அக்கவுண்ட் குறித்து அனுப்பப்படும். எந்த யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் மூலம், உங்கள் அக்கவுண்ட்டினை அணுகலாம் என்று காட்டப்படும்.

இவ்வாறு நம் வாரிசாக நியமிக்கும் நபர் களுக்கான மின்னஞ்சல் முகவரி மட்டுமின்றி, தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும். கூகுள் இந்த எண் உள்ள தொலைபேசிக்கு சோதனை செய்திடும் குறியீட்டு எண்ணை அனுப்பும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் சேர்த்துள்ள டேட்டாவினை ஒரு கோப்பாக, இவ்வாறு நியமிப்பவர்களுக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பும் வசதியினையும் கூகுள் தருகிறது. பாதுகாப்பிற்காகவும், உங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும், உங்கள் போனுக்கும் ஒரு செய்தி அனுப்பப்படும். ஜிமெயில் அல்லாத மற்ற மின் அஞ்சல் முகவரிக்கும் செய்தி அனுப்பப்படும். இந்த செய்தி, நீங்கள் வரையறை செய்திடும் காலம் முடிய, ஒரு மாதம் இருக்கையில் அனுப்பப் படும். இதன் மூலம் நாம்,பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தால், நம் ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடர்ந்து உயிருடன் வைத் திருக்கும் வகையில் லாக் இன் செய்திடுவோம். இல்லையேல், ஒரு மாதம் கழித்து, நாம் நியமனம் செய்தவர்களுக்கு, கூகுள் தகவல் அனுப்பும்.

இந்த வசதி, கூகுள் தரும் பத்துவித சேவைகளில்(கூகுள் வாய்ஸ், மெயில், யு ட்யூப் போன்றவை) தரப்படுகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட முறையில் இந்த சேவையினை, வெவ்வேறு கால வரையறையுடன் செட் செய்திடலாம்.

மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்!



உலகின் மிகப் பெரிய மம்மி கண்காட்சி லாஸ் ஏஞ்சலில் உள்ள கலிபோர்னியா அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் மம்மிக்கள் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக்கண்காட்சியில் மொத்தம் 140 மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன,இம்மம்மிக்கள் 7 நாடுகளிலுள்ள 20 அரும்பொருள்காட்சியகங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும்.

விஞ்ஞானிகள் முதல் முறையாக மம்மியில் டி.என்.ஏ ஆய்வு மற்றும் ஸ்கேனிங் செய்து அவை எவ்வகை திரவங்களால் உடல் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது எனும் கடும்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வின் மூலம் அந்த குறிப்பிட்ட மம்மியின் வயது மற்றும் இறப்பிற்கான காரணம் பற்றி அறியலாம்.

மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்

* ஒரு இறந்த உடல் பாடம் (மம்மி) செய்யப்பட்டால் அதன் பிறகு அந்த உடல் அழுகுவது தடுக்கப்படுகிறது. பொதுவாக மம்மி என்பது ஒரு இறந்த உடல் சில வகை இரசாயனப் பொருட்களால் அல்லது சுற்றுப்புற சூழ்நிலையால் (குளிர், வரண்ட காற்று) கெடாமல் பாதுகாப்பதாகும்.

* பண்டைய புகழ்மிக்க எகிப்து மம்மி துணிகளால் கட்டப்பட்டு இருக்கும்.

* எகிப்து மக்கள் ஒரு ஊக்கைக் கொண்டு இறந்த உடலின் மூளையை அந்த உடலின் மூக்கின் வழியாக எடுப்பர். எடுக்கப்பட்ட மூ

காளானின் மருத்துவ குணம் ('மஷ்ரூம்')..!




 மஷ்ரூம்' என்று அழைக்கப்படும் உணவு காளான்களின் மகத்துவம் என்ன என்பதை இப்போதுதான் இந்தியர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக, நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன. சிலர், காளான் வளர்ப்பை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகிறார்கள்.காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

இந்த உணவு காளானுக்கு, பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. காளானைப் போன்று கிரீன் டீ என்று அழைக்கப்படும் பச்சைத் தேயிலைக்கும் இந்த ஆற்றல் இருக்கிறதாம்.
காளான், கிரீன் டீ அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோனை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் காளான்களுக்கு இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் காளானை கையில் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் குதித்து இருக்கிறார்கள்.

காளான் வகைகள்:

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

குறிப்பு :

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?




சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?


இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது.


புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.


மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது.


அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.


ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top