.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 15 December 2013

முகப்பருவைப் போக்க சில எளிய வழிகள்!!





ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்-கப் கொண்டு மறைக்க முயற்சிப்போம். இருப்பினும், அந்த முகப்பருக்களானது மேக்-கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் உடைந்து, முகம் முழுவதும் பரவி பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் இந்த பருக்கள் முகங்களில் மட்டுமின்றி, உடலில் மார்பகம், முதுகு மற்றும் உட்காரும் இடங்களிலும் வரும்.

முகப்பருக்கள் எதனால் வருகிறது? தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும்.

இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கிவிடும். அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.  

ஆவிப்பிடித்தல்

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.

கிராம்பு

கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

முகத்தை கழுவவும்

அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.

சந்தனப் பொடி

சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

தேன்

தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், பருக்கள் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.

தக்காளி

தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

தண்ணீர் குடிக்கவும்

சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.

களவும் கற்று மற - அறிந்த விளக்கமும் அறியாத விளக்கமும்!



களவும் கற்று மற.


அறிந்த விளக்கம் :


திருடுவதையும் தெரிந்து கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது.

தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை சங்க காலப் பாடல்களில் களவு காதல் என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகம் வருகிறது.

 தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.

எனவே இதையும் குறிக்கலாம் என்பது சிலர் கருத்து.



அறியாத விளக்கம்
:

மேற் கண்ட பழமொழி ' களவும் கத்தும் மற ' என்று வந்திருக்க வேண்டும்.

இதில் கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள் கொள்ளப்படுகிறது.

 அதாவது ஆத்திச்சூடி பாணியில் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதாய் சொல்லப்பட்ட இப்பழமொழி நாளடைவில் மறுகி களவும் கற்று மற என்றாகி விட்டது.

நில அளவைகள்



1 ஹெக்டர் : 2ஏக்கர் 47 சென்ட்

1 ஹெக்டர் : 10,000 சதுர மீட்டர்

1ஏக்கர் : 4046.82 சதுர மீட்டர்

1ஏக்கர் : 43,560 சதுர அடிகள்

1ஏக்கர் : 100 சென்ட்

1சென்ட் : 435.6 சதுர அடிகள்

1சென்ட் : 40.5 சதுர மீட்டர்

1கிரவுண்ட் : 222.96 சதுர மீட்டர் ( 5.5 சென்ட்)

1கிரவுண்ட் : 2400 சதுர அடிகள்

1மீட்டர் : 3.28 அடிகள்

1அடி : 12 இஞ்ச் ( 30.48 செ.மீட்டர் )

1மைல் : 1.6 கிலோ மீட்டர்

1மைல் : 5,248 அடிகள்

1கிலோ மீட்டர் : 0.6214 மைல்

1இஞ்ச் : 2.54 செ.மீ.

640 ஏக்கர் : 1 சதுர மைல்

பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை...



குழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. அதற்காக எங்கு சென்றாலும் காரில் செல்ல வேண்டும் என்பது பற்றி பேசவரவில்லை. அவ்வாறு வெளியே நீண்ட தூரம் பயணம் செய்வது நல்லதா கெட்டதா என்பது பற்றியது தான். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தாயும், சேயும் 40 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் தான் பிரசவத்தின் போது ஏற்படும் உள்காயங்கள் அனைத்தும் குணமாகும். மேலும் இந்த நாட்களில் குழந்தைகளை எளிதில் நோய்கள் தாக்கும்.


* பயணத்தின்போது முடிந்தவரை தாயிடமே குழந்தையை விடுங்கள். அதிக இரைச்சல் குழந்தைக்கு இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தி, தொடர்ச்சியாக அழவைக்கும். தாயின் அரவணைப்பு குழந்தைக்கு புத்துணர்வு தரும்.

* வெளியில் வாங்கும் உணவுகளை குழந்தைக்குக் கொடுக்கும் விசப் பருட்சையைக் கைவிடுங்கள் (அவசர நிலைமை தவிர). சுகாதாரமற்ற இந்த காலச் சூழலுக்குப் பொருந்தாது.


*கொசுக்கடி, விஷக் கடி, எறும்பு முதலியவை கடித்தால் முதலில் உடைகளைக் கழற்றி, காற்றோட்டம் உள்ள இடத்திற்கு குழந்தையை கொண்டு செல்லுங்கள். உடைகளை கட்டாயம் மாற்றுங்கள்.


*முடிந்தவரை குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெரியவர்கள் உடனிருப்பதே நல்லது.


*காலநிலைக்கு ஏற்ற உடைகளை குழந்தைக்கு தேர்ந்தெடுங்கள். மற்றவர் பார்வைக்காகவும், உங்கள் வசதி வாய்ப்பையும் உடையில் காட்டுவது நல்ல தாய்க்கு அழகல்ல.


*ஆபரணங்களை அறவே தவிர்த்து விடுங்கள். ஆபரணங்கள் உங்கள் குழந்தைக்கு எமனாகும்.

* எந்த சூழ்நிலையிலும் தைரியம் அவசியம். அதற்காக முரட்டுத்தனம் கூடாது.


* கனமற்ற, மிகத் தேவையான உடைமைகளை மட்டும் கொண்டு செல்லுங்கள். உணவு, உடை என பிரித்து தனித் தனியாக வைத்திக்கொள்ளுங்கள். அவசரநேரங்களில் தேடுவதையும், மொத்த சுமையை தலைகீழாக புரட்டிப்போடுவதையும் தவிர்க்கலாம்.

* கார் அல்லது பஸ் பயணம் செய்வதாக இருந்தால், குழந்தைகளுக்கான பேபி கார் ஷீட் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மடியில் வைத்துக் கொண்டு சென்றால், திடீரென்று ப்ரேக் போடும் போது குழந்தை வழுக்கி விழக் கூட வாய்ப்புள்ளது.

* குழந்தையின் மேல் சூரியனின் கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ள வேண்டாம். அது குழந்தையின் சருமம் மற்றும் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சூரியக் கதிர்கள் பட்டால், அது குழந்தையின் உடலில் வறட்சியை உண்டாக்கிவிடும். அதற்காக குழந்தையை ஏசி இருக்கும் இடத்திற்கு நேராகவும் வைக்க கூடாது. அது குழந்தைக்கு இருமல் அல்லது சளி போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

* குழந்தை பிறந்தவுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு, விமான நிறுவனங்களில் ஒருசில குறிப்பீடுகள் உள்ளன. அவை குழந்தை பிறந்து குறைந்தது 2 வாரங்களாவது இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விமானத்தின் குறிப்பீடுகளும் வேறுபடும். எனவே அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

* குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தாலோ அல்லது பிறவியிலேயே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பே, விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

* பிறந்த குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது, செய்ய வேண்டியவற்றில் முக்கியமானவை காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விமானத்தில் பயணம் செய்யும் போது குழந்தையின் காதுகளில் அழுத்தமானது அதிகரித்து, காதுகளில் வலியை உண்டாக்கிவிடும். எனவே இவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

* ரயிலில் பயணம் செய்வதென்றால், அப்போது எந்த ஒரு குறிப்பீடுகளும் இல்லை.

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!



உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.


வெள்ளைப் பூண்டு:


பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.


இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


வெங்காயம்:


வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


காரட்:


நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


ஆரஞ்சு :


வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


பருப்பு வகைகள் :


பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்தஅணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


கோதுமை ரொட்டி :


நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இறால், மீன் மற்றும் நண்டு :


அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.


தேநீர் :


தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


பாலாடைக்கட்டி :


சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


முட்டைக்கோஸ் :

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top