.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 15 December 2013

மனிதர்கள் வாழ்வில் அற்புதம் நடப்பதுண்டு: ரஜினிகாந்த் பேச்சு!




தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 தேதியில் பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இவருடைய பெற்றோர் ராமோசிராவ் கெய்க்வாட்-ராமாபாய் ஆவர். ஐந்து வயதான நிலையில் தனது தாயை இழந்த சிவாஜிராவ் பெங்களூரில் கல்வி பயின்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.

இந்த காலக்கட்டத்தில் பல மேடை நாடகங்களில் நடித்த சிவாஜிராவ் மனதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இதையடுத்து, நடிகராகும் ஆசையுடன் சென்னைக்கு வந்தார். நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த மூன்று முடிச்சு என்ற படம் அவரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.

அதன்பிறகு ’16 வயதினிலே’, ‘காயத்ரி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு, நிறைய படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை போன்ற படங்கள் இவரை அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதையும் நிரூபித்து காட்டியவர். ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் தீவிர பக்தரான இவர் தனது 100-வது படமாக ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை பற்றிய காவிய படமான ‘ஸ்ரீராகவேந்திரா’ படத்தில் நடித்தார்.

1980-களில் இவர் நடித்த பல படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1999-ஆம் ஆண்டு படையப்பா படத்திற்கு பிறகு சுமார் 3 ஆண்டுகள் படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதோடு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்று நினைத்திருந்த வேளையில், பாபா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் சரிவர வெற்றியடையவில்லை. இதையடுத்து, ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்கலாம் என்றிருந்தவர் அடுத்ததாக நடித்த ‘சந்திரமுகி’ என்ற படம் அவரை மேலும் புகழின் உச்சிக்கு இழுத்துச் சென்றது. இதைத்தொடர்ந்து ‘சிவாஜி’, ‘குசேலன்’, ‘எந்திரன்’ ஆகிய படங்களில் நடித்து தனது ரசிகர் பலத்தை தக்கவைத்துக் கொண்டார்.

ரஜினி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 154 திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் அதிக லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. தமிழகத்தில் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இதுதவிர ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படம் முடிவடைந்து திரைக்குவர தயாராக உள்ளது. இந்த படம் வெளியானால் ஹாலிவுட் தரத்துக்கு ரஜினி பேசப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 2013ல் உலகளாவிய அளவில் பெருமைக்குரிய 25 இந்தியர்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுத்தது. இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இடம் பெற்றுள்ளார்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பல்துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

ரஜினிகாந்த் உள்பட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

நிறைய பேருக்கு அற்புதங்களில் நம்பிக்கை இல்லை. ஆனால், அற்புதங்கள் நடப்பதுண்டு.

சாதாரண பஸ் கண்டக்டரான நான் இவ்வளவு உயர்ந்த மனிதர்களுடன் இந்த மேடையை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் அற்புதங்கள் நடப்பதுண்டு என்பதை கண்கூடாக அறிந்துகொண்டுள்ளேன்.

இந்த விருதினை எனது தந்தையும் தாயுமாக இருந்து என்னை வழிநடத்தும் எனது அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாட், எனது குருநாதர் இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் தமிழக மக்கள் ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறேன்.

தமிழக மக்களின் ஆதரவு, அன்பு மற்றும் அரவணைப்பு ஆகியவை இல்லாவிட்டால் நான் இந்த மேடையில் நின்றுக்கொண்டிருக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாதுகாப்பாக மின்சாரத்தை கையாள்வது எப்படி?




    மின் ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும்.

    ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின் சாதனங்களை மட்டுமே, பயன் படுத்த வேண்டும்.

    மின் பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னும், எடுப்பதற்கு முன்னும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்

    ப்ரிட்ஜ் , கிரைண்டர் போன்றவற்றிற்கு நிலைஇணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ளமின், ’ப்ளக்’குகளை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

    ஈ.எல்.சி.பி.,யை வீடுகளில், மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தினால், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.

    உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்கக் கூடாது.

    ‘டிவி’ ஆண்டனாக்களை மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகே கட்டக் கூடாது. ‘டிவி’ ஆண்டனாவின் ஸ்டே ஒயரை மின் கம்பத்தில் கட்டக் கூடாது.

    ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான, ‘எர்த் பைப்’ போடுவதுடன், அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து, பராமரிக்க வேண்டும்.

    சுவிட்சுகள், ’பிளக்’குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

    ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வெண்டும்.

    மின் கம்பத்திற்காக போடப்பட்ட ஸ்டே ஒயரின் மீது அல்லது மின் கம்பத்தில் கயிறு கட்டி துணி காயவைக்கக் கூடாது.

    குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக் கூடாது. சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி., பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிக்கக் கூடாது.

    மின் இணைப்பிற்கு எக்ஸ்டென்ஷன் கார்டுகள் உபயோகிக்கும் போது, அவைகளில் பழுதுகள் இருக்கக் கூடாது.

    மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக் கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன் படுத்தக் கூடாது. அவற்றின் மீது விளம்பரபலகைகளை கட்டக் கூடாது.

    மழைக் காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்லக் கூடாது. அறுந்து விழுந்த மேல்நிலை மின் கம்பி அருகே செல்லக் கூடாது. எங்கேனும் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால், உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகே போதுமான இடைவெளி விட்டு கட்டடங்களை கட்ட வேண்டும்.

    டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது.

    உயர் மின் அழுத்த கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை வெட்ட, மின் வாரிய அலுவர்களை அணுக வேண்டும்.

    அவசர நேரங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் வகையில், மின் கருவிகளின் சுவிட்சுகள் இருக்க வேண்டும். உபயோகிக்காத நேரங்களில் சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும்.

    மின் தீ விபத்துகளுக்கு உரிய தீயணைப்பான்களை மட்டுமே அதற்கு பயன் படுத்த வேண்டும். தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை,உலர்ந்த ரசாயனப் பொடி, கார்பன் டை ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம்.

    மின்சாரத்தால் தீவிபத்து நேர்ந்திருந்தால், உடனே மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

    எந்த மின் சர்க்யூட்டிலும் பளு ஏற்றக் கூடாது. ஸ்விட்ச் மற்றும் பியூஸ் போன்றவைகளை மாற்றும் போது, சரியான அதே அளவு திறன் கொண்டவைகளையே பொருத்த வேண்டும்.

    இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடங்கள், வீடுகள், பஸ்கள், கார், வேன் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும்.

    மேலும், குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். அருகில் உரிய இடம் இல்லை எனில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இடி, மின்னலின் போது, ‘டிவி’, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசியை பயன் படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.

கூந்தல் முடியை அடர்த்தியாக‌ கருமையாக வளர்ப்பது எப்படி?




பெண்களை அழகிய‌ பதுமையாக்க‌, அவர்களின் கூந்தலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. சிலர் கூந்தலினை அதிக‌ கவனத்துடன் பராமரித்தாலும் அவர்களுக்கு அதற்கான‌ பலன் கிடைப்ப்பதில்லை. கூந்தல் முடி உதிர்தல், மாறான‌ நிறம் மற்றும் நீளமின்மை ஆகியப் பிரச்சனைகள் இயல்பானதாகும். பெண்களின் கூந்தல் முடி உதிர்வதற்கு பல‌ காரணங்களைக் கூறலாம். அக்காரணங்களை ஆராய்ந்து அறிந்து அக்குறை நிறைவுகளை நிவர்த்தி செய்தால் முடி உதிர்வதை எளிதாகத் தவிர்த்து விடலாம். முடி அடர்த்தியானதாக‌ மற்றும் கருமை நிறமாக‌ மாற்றுவதற்கு கீழ்காணும் சில‌ எளிய‌ இயற்கை முறை குறிப்புகளைப் பார்க்கலாம்.

வைட்டமின், 'பி' குறைபாடு

வைட்டமின், 'பி' குறைவினால், சில‌ருக்கு தலைமுடி விரைவில் நரைக்க ஆரம்பித்துவிடும். ஊட்டசத்து மிக்க உணவினை உட்கொள்ளுவதனால் இக்குறைபாட்டை நீக்கலாம். நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, சிறிது நேரம் ஊற வைத்த‌ பின் குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலும் குறைந்துவிடும்..
மசாஜ் செய்தல்

*உங்கள் வீட்டில் உபயோகிக்கப்படும் தேங்காயில் ஏதேனும் ஒன்று அழுகிப்போனால் அதைத் தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், முடி வேர்கள் வலுப்பெறும்.

* பொடுகு தொல்லையைப் போக்க‌ இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைத்து, முடி வேர்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசவும்.

* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். தேங்காய்ப் பாலினை இரும்பு கடாயில் காய்ச்சி அதில் கிடைக்கும் எண்ணெயை, தலையில் தடவவும். சிறிது நேரம் ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* நல்ல மரச் சீப்பினால் தலைமுடியை அழுந்த வாரினால், முடி வேர்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்தலும் தூண்டப்படுகிறது.

* கஞ்சி தண்ணீரில் (சாதம் வடித்த கஞ்சியில்) வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் குளிக்கலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியூட்டும் விளக்கெண்ணெயை இரண்டு டேபிள் ஸ்பூன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, இலேசாக சுடவைத்து, முடி வேர்களில் நன்றாகப் படும்படி தடவவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்த சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க இவ்வழியினை பின்பற்றுதல் சிறப்பாகும்.

* ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி அளவு எடுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருட்கள் இல்லாத இந்தப் பொடி, எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது. இதனை ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

* பித்தம் உடலில் அதிகமானாலும் தலைமுடியில் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.

* தேங்காய் எண்ணெயை வீட்டில் தயார் செய்வோர் அல்லது அங்காடியில் வாங்குவோர் அந்த தேங்காய் எண்ணெயை சூடாக்கியபின் அதில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தயார் செய்யப்பட்ட‌ எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.

* பெரும்பொழுதினை வெயிலில் கழிப்போர், வெயிலில் அலைந்து, வேலை செய்வோர், தினமும் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். இப்படி செய்வதனால் முடியும் உதிராது.

இன்டர்நெட் பேச்சு வழக்கு அகராதி




இன்டர்நெட்டில், ஆங்கிலம்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிற மொழி. சாட்டிங் போதிலும் சரி, நண்பர்களுக்குள் இமெயில் அனுப்பும் போதும் சரி, ஆங்கிலம் கொச்சை வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி வட்டார வழக்கில் சில வார்த்தைகள் நமக்கு புரிவதில்லையோ அதே போல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குக கூட இந்த பேச்சுவழக்கு புரிவதில்லை.



இதை புரிந்து கொள்வதற்காக ஓர் அகராதியையே இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


குழந்தைகள் என்னென்ன வார்த்தைகளை இன்டர்நெட்டில் பேசிக்கொள்கிறார்கள் என்று பெற்றோர்களுக்கு புரிய வேண்டும் என்று நினைத்தால் இந்த வெப்சைட்டுக்கு அவசியம் செல்ல வேண்டும்.


www.noslang.com/index.php


இங்குள்ள சர்ச் பாக்சில் உங்களுக்கு புரியாத அந்த சங்கேத மொழியை கொடுத்தால் அதற்குரிய அர்த்தம் விளக்கப்படுகிறது. குறிப்பாக, lol என்ற வார்த்தைக்கு, laughing out loud என்பது அர்த்தம் என்று தெரிய வரும். இதே போல், 10 - thank you, 10x - thanks, 2b - to be, b4n - bye for now, cb - come back, coz - because


 சில உதாரணங்கள்..

absnt  -  absent

 abt  -  about

 abwt  -  about

 acc  -  account

 acct  -  account

 acgaf -  Absolutely couldn't give a Fuck

  aiadw  -  ALL IN A DAYS WORK

 aiamu  -  and I'm a monkey's uncle

 aicmfp -  and I claim my five pounds

 aight  -  Alright

 aightz  -  alright

 aiic  -  as if I care

 aiid  -  and if I did

 aiight  -  all right

 aim  -  AOL instant messanger

 ain't  -  am not

aite  -  Alright

aitr  -  Adult in the room

aiui  -  as I understand it

aiws  -  as i was saying

ajax  -  Asynchronous Javascript and XML

aka  -  also known as

akp  -  Alexander King Project





உள்ளிட்ட வார்த்தைகள் இன்டர்நெட்டில் அடிக்கடி பயன்படுத்தும் சுருக்க மொழி. இது போன்ற ஏராளமான வார்த்தைகளை இந்த வெப்சைட் தொகுத்துள்ளது.


உங்களுக்கு இதே போன்ற வார்த்தைகள் தெரிந்தால் கூட நீங்களும் இந்த வெப்சைட்டுக்கு வழங்க தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.


அடிக்கடி நாம் தவறாக பயன்படுத்தும் வார்த்தைகள் எவை என்பதை தனிப்பக்கத்தில் காணலாம். இன்டர்நெட்டுக்கு என தனி வட்டார மொழி உருவாகி விட்டது என்பதை இந்த வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



Yahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை..!






சிலர் எண்ணலாம் யாரச்சும் Yahoo இப்பொழுதும் பாவிக்கிறார்களா என? ஆனால் பெரும்பாலானவர்கள் அதாவது 2008 தொடக்கம் இணையத்தில் இருப்பவர்களின் Default Email இப்போதும் yahoo தான். அவர்கள் மாற விரும்பினாலும் அவர்களால் முடியவில்லை.

அப்படி yahoo Mail பாவிக்கும் ஒருவரா நீங்களும்? நிச்சயம் இப்பதிவு உதவும்.. இப்பதிவில் yahoo mail தொடர்பான சில சிக்கல்களையும் கட்டணம் செலுத்தாமல் Google போன்ற சேவைகளுக்கு மாறுவது பற்றியும் இரத்தின சுருக்கமாக காணுங்கள்.

அண்மையில் எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த சம்பவங்களே இப்பதிவை எழுத வைத்தது.

நடந்தது என்ன?

IELTS கற்று கொண்டிருக்கும் இவருக்கு அண்மையில் தான் பரீட்சை நடந்து முடிந்தது. இவரின் Default Email ****@yahoo.com . இவரின் பரீட்சை திகதிகள் பற்றி மின்னஞ்சல் அனுப்ப பட்ட போது இவரால் மெயில் box இனை திறக்க முடியவில்லை. பின்பு தான் புரிந்தது இலங்கைக்கான அவர்களின் servers செயல் இழந்து விட்டது. பின்பு ஒரு நாளின் பின்னர் தான் மீள இயங்க தொடங்கி இருக்கிறது.

இன்னொரு நண்பருக்கும் அப்படி தான்… அவரின் iPhone 5 இல் இன்று வரை yahoo mail box இனை configure செய்ய முடியவில்லை.

அதே போல எனக்கும் நடந்தது.. என் yahoo கணக்கு தானாகவே நிரந்தரமாக அழிக்கப்பட்டு விட்டது. இன்றுவரை அவர்களுடன் தொடர்பு கொண்டும் அவர்கள் பதில் அளிக்கவே இல்லை. நல்ல வேளையாக அதன் inbox backup ஒன்று இருந்ததால் அவற்றின் மூலம் பெரும்பாலான Email அனுப்புபவர்களை Gmail க்கு வரவைத்து விட்டேன்.

இவை எல்லாம் தொழில்நுட்ப பிழைகளே.. இவ்வாறு நடக்க என்ன காரணம்?? முன்பு கொடி கட்டி பறந்த Yahoo, Google இன் அபரிமிதமான வளர்ச்சியால் முடிங்கி விட்டது. என்றாலும் இயக்கிய படி தான் இருக்கிறது. இவர்களால் இவர்கள் மெயிலையே கட்டுபடுத்த முடியவில்லை. இது போதாது என்று ovi, nokia mail (இரண்டும் ஒன்று தான்) மெயில் சேவைகளையும் வாங்கி விட்டார்கள்..

Yahoo துரதிஷ்டவசமாக Email forwarding வசதியை இலவசமாக வழங்குவது இல்லை. இது கிடைத்தால் நீங்கள் Yahoo mail க்கு வரும் மின்னஞ்சல்களை இலகுவாக வேறு சேவைக்கு திருப்பி விடலாம்.

நாளை உங்களுக்கும் இப்படி மெயில் காணாமல் அல்லது திறக்க முடியாமல் போகலாம்.
இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

முடிந்தவரை விரைவாக yahoo இனை விட்டு வெளியேற வேண்டும்.

நண்பர்களுக்கு புதிய மின்னஞ்சல் முகவரியை தெரிய படுத்துங்கள்.

இணைய சேவைகளுக்கு இவர்களின் மின்னஞ்சலின் அடியில் இருக்கும் Update subscription link மூலம் சென்று புதிய முகவரியை பதியுங்கள்.

இதற்கும் மேலாக yahoo க்கு வரும் Mails களை திரட்ட gmx.com இல் சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் yahoo கணக்கு உயிருடன் இருக்கும் வரை அதற்கு வரும் மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக gmx.com இலும் சேமிக்க படும்.

இதை விட வேறு சில வழிகளும் இணையத்தில் உண்டு…

உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு இலகுவான வழி மூலம் உங்கள் மின்னஞ்சல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்..

பொதுவாக Gmail சிறந்த ஒன்று. Hotmail இல் சில விசேட சேவைகள் கிடைக்கிறது..

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top