.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 15 December 2013

கஷ்டத்தை தூக்கி போடு - குட்டிக்கதைகள்!



ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன்.


அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது,அது தன் முன் காலால் தூக்கி வைத்து பார்த்தது பின்பு பின் காலால் நீட்டி எக்கி பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை.


இறகை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது.பிறகு அந்த இறகை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி இடைவெளி மீது பாலம் மாதிரி வைத்து விட்டு இந்த வழியாக ஏறி அந்த வழியாக இறங்கி விட்டது.மீண்டும் அந்த இறகை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது.


நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன்.ஒரு சிறிய எறும்பு எவ்வளவு லாவகமாக இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றது, ஆனால் ஆறறிவு படைத்த நாம் சிறிய இடர்வந்தாலும் துவண்டு போகிறோம்.


அந்த எறும்பு கடைசியாக அதன் வீட்டை அடைந்தது.அந்த எறும்பின் வீட்டு நுழைவுவாயில் ஒரு சிறிய ஓட்டை மட்டுமே இருந்தது.அது அந்த இறகை உள்ளே எடுத்து செல்ல எவ்வளவோ முயற்ச்சி செய்து பார்த்தது ஆனால் எறும்பால் முடியவில்லை.ஒரு கட்டத்தில் அது அந்த இறகை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டது.


எறும்பு அந்த இறகை அங்கு இருந்து எடுத்து வரும்போது அது சுமையாக தெரியவில்லை எப்போது அது தனக்கு பயன்படாது என்று தெரிந்ததோ அப்போதே அதை தூக்கி போட்டுவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டது.


நம்ம வாழ்க்கையும் இப்படித்தான்.பணம் சம்பாதிக்க கஷ்டப்படுறோம்,வேலை செய்ய கஷ்டப்படுறோம்,குடும்ப பாரத்தை சுமக்க கஷ்டப்படுறோம்.அந்த இறகு மாதிரி தான் நம்ம கஷ்டமும்.கஷ்டத்தை தூக்கி போட்டுட்டு நாம பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துகிட்டே போகணும்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவது எப்படி?



பணக்காரனாக ஆக வேண்டும் என்றால், அது எப்படி சாத்தியாகும் என்பதை ஒரு பணக்காரரிடமிருந்தோ அல்லது பல பணக்காரர்களைப் பற்றிய நூல்களிலிருந்தோ அல்லது அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளை அறிந்தோ நாமும் பணக்காரனாக ஆகிவிடலாம்.


 இதனை ஒரு பணக்காரரிடமிருந்து நேரடியாக கேட்டும் தெரிந்து கொண்டால் தவறில்லை. ஐந்தாயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை குவித்துள்ள ஜே. பால் கெட்டி என்கிற கோடீஸ்வரரின் ஆலோசனைகளை நாம் இங்கு அறிவோம்.


ஒரு பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. “தங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?”. கோடிக்கணக்கான பணம் சம்பாதித்ததை மூன்று வார்த்தையில் ரகசியமாக அவர் குறிப்பிட்டார்.


“இன்னும் கடினமாக முயற்சி செய்”.  அது தான் அவர் சொன்னது. “இன்னும் கடினமாக முயற்சி செய்” மிக எளிமையானதாக தோன்றுகிறது. ஆனால் அதைப்பற்றி தீர்க்கமாக சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும்.


முதலில் கடினமாக முயற்சி செய்யுங்கள்… பிறகு அதைவிட கடினமாக முயற்சி செய்யுங்கள்… பிறகு அதைவிட இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள். இவ்வாறு மேலும் மேலும் முயற்சிக்கின்ற போது, “முயற்சி கூடுவதைப் போலவே, முயற்சியின் பலனும் கூடிக்கொண்டே போகும்”.


கூட்டுவட்டி எவ்வாறு அதிவேகமாகப் பெருகிக் கொண்டே போகிறதோ, அதைப் போலவே தொடர்ந்து செய்யப்படும் முயற்சியின் பலன்களும் அதிவிரைவில் அதிகரித்துக் கொண்டே போகும். உங்கள் முயற்சி கோபுரம் போல் உயரும் போது லாபமும் கோபுரம் போல உயரத் தொடங்குகிறது. இலாபத்தின் வேகம் அதிகரிக்கும் போது நமது பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே செல்லும்.


 “இன்னும் கடினமாக முயற்சி செய்”

காலத்தின் அருமை!



1 வருடம் – தோல்வியடைந்த‌ மாணவனுக்குத் தெரியும்.




1 மாதம் – குறை பிறசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.




1 வாரம் – வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.



1 நாள் – ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு


பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.


1 மணி – பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.



1 நிமிடம் – இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.



1 வினாடி – ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியும்.

தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள்!



1. இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா??

2. ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.

3. நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..

4. சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.

5. இன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.

6. மிஸ்டர்____________! யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்!!

7. அடடே… யார் வந்திருக்காங்க பாரு..!!

8. நீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.

9. தூக்குடா அவன..

10.நான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான்
   முக்கியம்.

11.உன்னப் பெத்து… வளத்து… ஆளாக்கி..

12.என் அன்னையின் மேல் ஆணை..

13.யாரும் அசையாதீங்க..அசைஞ்சா சுட்டுருவேன்.

14.அவன அடிச்சு இழுத்துட்டு வாங்கடா…

15.தாயில்லாத புள்ளையாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தேனே…

16.எல்லாமே மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.

17.நான் கண்ண மூடறதுக்குள்ள இவள யார் கையிலயாவது புடிச்சுக்
   குடுத்தாதான் எனக்கு நிம்மதி.

18.என்னங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க!!!.. எங்களையெல்லாம் ஏமாத்திட்டுப்
   போயிட்டீங்களே..

19.உங்க உப்பைத் தின்னு வளந்தவன் எஜமான். சொல்லுங்க என்ன
   செய்யணும்?

20.ஏய்ய்ய்ய்ய்ய்ய்!

21.என் வயித்துல நெருப்பு அள்ளிக் கொட்டிட்டியேடிஈஈஈஈ பாவி!!

22.என்னமோ தெரியல.. உன்னப் பாத்தா செத்துப் போன என் பையனை
   பாக்கிறமாதிரியே இருக்கு.

23.ச்சே.. நீங்கல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறக்கலே??

24.ஏ.. யாருடி அவன்..?

25.சார்.. போஸ்ட்..!!

26.கனம் கோர்ட்டார் அவர்களே.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு
   நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.

27.ஒரு பொண்ணு நினைச்சா…

28.இத்துடன் கோர்ட் கலைகிறது.

29.நான் இப்ப எங்கிருக்கேன் ?

30.எங்கப்பாவ கொன்னவன நான் பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்.

31.ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்..

32.நான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதீங்க.. அவருக்கு
   வந்திருக்கறது…

அன்பு என்றால் என்ன ?



அன்பு நம்மில் பலர் இறைவனை நம்புகிறோம் சிலர் நம்புவதில்லை. இருப்பினும் நம் அனைவருக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவிப்பதாக நம்புகின்றோம். அந்த சக்தியை நாம் ஏன் அன்பென்று எண்ண கூடாது ?


பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். மனிதர்களான நாம் மட்டுமின்றி விலங்கினங்களும் அன்பை தான் எதிர்பார்க்கின்றது. துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.


அன்பு என்றால்  என்ன ?


பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் சொல்ல முடியாது. மேலும், அந்த அளவிற்கு ஆழமான வார்த்தை அன்பு. அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை.


நம் தாய் தந்தையை நேசிக்கிறோம், சகோதர சகோதரிகளுடம் பாசம் கொள்கிறோம், ஒருவன்/ ஒருத்தியை காதலிக்கிறோம், நட்பு கொள்கிறோம். அன்பு, காதல், பாசம், நேசம்,  நட்பு என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.


மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.


அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?


உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்?


மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.


எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக்க கூடிய சக்தி உண்டு.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top