
டி ஜே எம் அசோசியேட்ஸ் சார்பாக எம் ஐ வசந்தகுமார் தயாரிப்பில் ஒருதலைராகம் புகழ் சங்கர் இயக்கம் முதல் தமிழ் படம், முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் போன்ற சிறப்புகள் வாய்ந்தது ‘மணல் நகரம்’.இருநூற்று இருபத்தைந்து படங்களுக்கு மேல் மலையாளம் மற்றும் தமிழில் நடித்தவரும்,’ வைரஸ்’,’ கேரளோற்சவம் -2009′ ஆகிய இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவருமான ஒருதலைராகம் ஷங்கர். இவர் தமிழில் முதல்முறையாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ‘மணல் நகரம்’ .சன் மியூசிக் புகழ் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். துபாயைச் சேர்ந்த வருணா ஷெட்டி புதுமுக நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ஜெய்ஸ், வினோத்குமார்...