.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 12 December 2013

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து!



 எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.


தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம்.


 இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.


வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.


 இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.


வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

’மாத்தி யோசி’


கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.


அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.


ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.


சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.மாலை ஆனதும் அந்த போர்ட் எழுதி வைத்தவர் வந்து பார்த்தார்.அந்த சிறுவன் கேட்டான் ஐயா அந்த போர்டில் என்ன எழுதி வைத்தீர்கள் என்று கேட்டான் .அவர் சொன்னார் நீ என்ன எழுதி வைத்தாயோ அதையே தான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார்.


”இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது ஆனால் என்னால் தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை” என்று அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது.


இந்த வாசகத்தை படித்த அனைவரும் உனக்கு கண் தெரியாது என்பதைவிட நல்ல வேளை நமக்கு கண் இருக்கிறது நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்கமுடிகின்றது என்று உனக்கு தருமம் செய்து விட்டு செல்கிறார்கள் என்று சொன்னார்.


அற்புதமானது எதுவென்றால் ஒருத்தன் மனசு விட்டு சிரிப்பது,அவன் சிரிப்புக்கு காரணம் நீ தான் என்றால் அது அதைவிட அற்புதமானது...

தழும்புகளை தலைமறைய செய்ய சூப்பர் டிப்ஸ்!




பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.


இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.


எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.


எலுமிச்சை சாறு


எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.


பாதாம் எண்ணெய்


தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை



கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்


தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.


ஆலிவ் ஆயில்


ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.


தக்காளி சாறு



தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.

நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த இருவர் !


நான் சிறுவயது முதலே என் மனதில் ஏற்றிப்  போற்றும் நட்பிற்கு உதாரணமாக கூறப்படும்  இச்சங்ககால உண்மைக் கதையினை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். இவ்வுலகில் உண்மையான நட்பு இல்லை என்று நினைக்கும் சிலருக்காக இந்த கதையை இங்கே பிரசுரிக்கிறேன். இக்கதையில் வரும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில்லை. ஆனாலும் தன் நண்பனின் நம்பிக்கை வீண்போகாமல் அவர்களின் நட்பின் பொருட்டு அவனோடு உயிர்துறந்த இந்நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மயிர் கூச்செறிகிறது. அக்கதை இதோ...


கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்  நட்பு


     பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.  ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.  ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.  சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.


     இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.


     கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.


     இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.  


(குறிப்பு: இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.  தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.)


     இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.


வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.


         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின்,
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும்
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."  


என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.
 

     சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காகத்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.


     இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.


      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும்
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."


பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?

மணம் வீசும் மலர்களுக்குள் இத்தனை மருத்துவ குணமா?




இலுப்பைப் பூ:

இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

ஆவாரம்பூ:


ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

அகத்திப்பூ:

அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

நெல்லிப்பூ:


நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

மகிழம்பூ:


மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.

தாழம்பூ:


இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூ:

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

ரோஜாப்பூ:

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

வேப்பம்பூ:

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

முருங்கைப்பூ:

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.

மல்லிகைப்பூ:


கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருஞ்செம்பைபூ:

இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

குங்குமப்பூ:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top