.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 10 December 2013

கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?



கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.


அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.


சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 - 20 - 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.



வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.


‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.


பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும். பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும்.

பெண்களின் காதல் அழகு தான்!


ஆண் பேசிக்கொண்டிருக்க அமைதியாய் ரசிப்பது
 தனக்கு பிடிக்காததை பேசினாலும்...


ஆடவன் தோள் சாய அக்கம் பக்கம் பார்த்தபடியே
 திரு திரு என முழிப்பது...


தனக்கு பிடித்தவைகளை பற்றி காதலன் தானாய்
 அறிந்து வாங்கி கொடுக்க வேண்டுமென எண்ணுவது ...


வீட்டில் கைபேசியில் தோழியோடு பேசுவது போல்
 காதலனோடு பேசுவது அக்கம் பக்கம் பார்த்தபடியே ...


இரவுகளில் அவன் உடையை உடுத்தி ரசிப்பது ...


ஆடவன் தலை கோதிபடியே செல்லமாய் பேசுவது ...


அவனோடு வேறொரு பெண் பேசினால் அதை நினைத்து தனிமையில் தானாய் பேசிக்கொள்வது


 பேசாமல் இருந்தவள்...பேசியே கொல்வது ...


அவனை தூங்காமல் செய்துவிட்டு...தான் நிம்மதியாய்
 தூங்குவது ....


தன்னை மடி சாய்த்து நெற்றியில் ஒரு முத்தம் வேண்டுவது ....


போதும்..போதும்...


எல்லாமே அழகு தான்...


ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?




நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.


Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்டும்


 சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்


1.முதலில் இங்கு சென்று Virtual Router http://virtualrouter.codeplex.com/  என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.


2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்


 அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்


3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

தோல்வியே வெற்றி!


கலகமில்லா உலகமில்லை
 ரத்தமில்லா யுத்தமில்லை
 தோல்வியில்லா வெற்றியில்லை


நண்பனே!


உனக்குத் தோல்வியே வந்தாலும்
 தொடர்ந்து நீ போராடு
 நீயும் ஒரு நாள்
 வெற்றி பெறுவாய்


உனது வெற்றியின் வாசல் கதவுகள்
 உனக்கென கண்டிப்பாக திறக்கும்.
தொடர்ந்து நீ போராடு
 உனது வெற்றி தொடர போராடு

வெற்றி பெற்றவர்களின் தனித் தன்மைகள்!

   
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்


இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சிலத் தனித் தன்மைகள் வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு.


அமெரிக்காவிலுள்ள ” காலிப் ” என்ற நிறுவனம் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களில் 1500 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற் கொண்டது.


இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அந்தச் சாதனையாளர்களிடம் உள்ள சிறப்பான குணங்களை துல்லியமாக முறைப்படுத்திக் காட்டியுள்ளது. அவை :


1.) நடைமுறை அறிவு


சாதனையாளர்களில் 79 விழுக்காடு இந்த நடைமுறை அறிவு உள்ளவர்களாக இருந்தார்கள். நடைமுறை அறிவு தேவை என்பதையும் அறிந்து இருந்தார்கள். அதில் 61 விழுக்காட்டினார் நடைமுறை அறிவுதான் தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதைனையும் அறிந்து இருந்தார்கள்.


2.) தான் மேற்கொண்ட துறையில் சிறப்பான அறிவினைப் பெறுதல்:


நடைமுறை அறிவுக்கு அடுத்த இடத்தை பெறுவது ஒருவர் தான் எடுத்துக் கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுவதாகும். சாதனையாளர்களில் 75 விழுக்காட்டினர் இதனை முக்கியப் பண்பாகக் கருதுகின்றனர்.


3.) தன்னம்பிக்கை :



மிகச் சிறந்த சாதனையாளர்கள் தங்களிடமுள்ள வளங்களிலும் திறமைகளிலும் நம்பிக்கை வைத்தே செயல்படுகிறார்கள். 77 விழுக்காட்டினர் தன்னம்பிக்கைதான் தங்கள் வெற்றிக்கு அடிப்படைக் காரணம் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.


4.) புத்திசாலித்தனம் :


வெற்றி பெறுவதற்கு புத்திசாலித்தனம் முக்கியம் என 43 விழுக்காட்டினர் கூறினர். 52 விழுக்காட்டினர் புத்திசாலித்தனம் தான் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டனர்.


5.) எடுத்த செயலை முடிக்கும் திறன் :


நான்கில் மூன்று பங்கினர் தாங்கள் சாதனை புரிந்ததற்கு எடுத்த செயலை முடிக்கும் தங்களின் தனித் திறனே காரணம் என்று குறிப்பிட்டனர்.


வாரத்திற்கு 100 மணி நேரம் என்ற வகையில் உண்மையாகவும் கடினமாகவும் தொடர்ந்தும் விடாப்பிடடியாகவும் உழைத்த உழைப்பே சாதனை நிகழ்த்தக் காரணமாக இருந்தது என்கிறார் ஒரு பேராசியர்.


நடைமுறை அறிவு, தொழில் துறை அறிவு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், செயல்திறன் ஆகிய மேலே குறிப்பிட்ட ஐந்து பண்புகள் மட்டுமின்றி, தலைமைத் தன்மை, ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறன், மற்ற மனிதர்களோடு நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கமான உறவு, சில வேளைகளில் சிறிது அதிஷ்டமும் தேவையானவையாகும்.


இருப்பினும் மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து பண்புகளுக்கு சாதனை நிகழ்த்துவதில் முதன்மை பெறுகின்றன. இந்தப் பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால் சாதனையாளர் பட்டியலில் இடம்பெறுவது உறுதி.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top