.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 10 December 2013

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை!

உறுதியான நம்பிக்கை,  நம்பிக்கை,  எதிர்பார்ப்புடன் நம்பிக்கை இந்த மூன்று வார்த்தைகளையும் அவதானித்தால் மூன்றிலையுமே கூறப்படுவது ஒன்றை தான் அது நம்பிக்கை. ஆங்கிலத்தில் இந்த மூன்றையும் வெவ்வேறு வார்த்தைகளினால் விவரிக்கபடுகிறது. Confidence,  Trust  and Hope. ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் வறட்சியால் வாடினார்கள் அவர்கள் மழைக்காக பிரார்த்திப்பதாக முடிவு செய்தார்கள். அப்போது அங்கு ஒரு சிறு பையன் குடையோடு வந்தான். இது அவனது உறுதியான நம்பிக்கை (Confidence). சிலர் சிறு குழந்தையை கொஞ்சும் போது தூக்கி போட்டு பிடித்து விளையாடுவார்கள். அப்போதும் அந்த குழந்தை சிரித்து கொண்டே இருக்கும். நீங்கள் கீழே விட மாட்டிர்கள் என்ற நம்பிக்கை. இது அந்த சிறு குழந்தை உங்கள் மேல் கொண்ட நம்பிக்கை (Trust). ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு செல்லும் பொது காலையில் மீண்டும் கண் விழிப்போமா...

நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.   அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டாள். ஒருநாள்... அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்....

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....? 1 ஏங்க எங்க போறீங்க?2 யார்கூடப் போறீங்க?3 ஏன் போறீங்க?4 எப்படி போறீங்க?5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?8 நானும் உங்ககூட வரட்டுமா?9 எப்ப திரும்ப வருவீங்க?10 எங்க சாப்பிடுவீஙக?11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?14 பதில் சொல்லுங்க ஏன்?15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?17 நான் அனி திரும்ப வரமாடடேன்18 ஏன் பேசாம இருக்கீங்க ?19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?22 இப்ப பதில் சொல்றீங்களா...

ஆசிரியரும் நானும்!

  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியாமலில்லை.   தன் ஆசிரியரை போலவே தானும் ஆசிரியன் ஆகவேண்டும் என்று  ஈர்க்கப்பட்டு தாங்களும் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்து செம்மையாக பணியாற்றிவரும் மாணவர்கள் இப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.     ஆனாலும்  நான் என்றுமே ஒரு ஆசிரியனாக ஆகவேண்டும் என்று நினைத்ததே இல்லை. என் அண்ணன் என்னை ஆசிரியருக்கான படிப்பு படி, நீ விரைவில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்  என்று என்னை எவ்வளவோ கட்டாயப்படுத்தியும்  நான் ஆசிரியராகிவிடக் கூடாது  என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்துவிட்டேன்.  இவ்வளவிற்கும்,   மற்றவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதிலும் அவர்களின் வினாவிற்கு விடை அளிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம்.  இப்படி கற்பித்தலில் ஆர்வம் இருந்தும் ஆசிரியர் பணி...

தனிமனிதனும் சமுதாயமும்!

இந்த உலகில் பிறக்கின்ற அந்த நொடியில் மட்டுமே உரிமைப் பறவையாக இருக்கிறான். பிறந்த மறுநொடி முதல் சமுதாயச் சிறையில் அடைபட்டு கூண்டுப் பறவையாகின்றான் என்கிறார் ரூசோ. எவ்வளவு எதார்த்தமான உண்மை இது!சிறைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைக் கூட உணராமல் மனிதன் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறான். எதை நோக்கி ? பணம் , புகழ், அதிகாரம், அந்தஸ்து இப்படி பட்டியல் நீள்கிறதே அதை நோக்கி.எவரும் தம்முடைய வாழ்க்கையை தாம் தீர்மானிப்பதாக தெரியவில்லை. அதிலும் இந்தியா கலாச்சாரம் மிக்க நாடு என்ற பெருமை கொண்டுள்ளது. சமுதாயம் கலாச்சாரம, பண்பாடு என்று பழம் பெருமை பேசியே தனிமனித சுதந்திரத்தை காலங்காலமாய் விழுங்கி வருகிறது.புதியதாய் மணம் முடித்துக் கொண்ட இளம் தம்பதியினர் சந்தோஷமாய் இருக்கின்றனர். சுற்றி இருப்பவரோ ‘ என்னது ‘ இரண்டு வருடங்களாகியும் ஒரு புழு பூச்சி இல்லாமல் போயிற்றே ? என ஆரம்பித்து அவர்களை கேள்வி கேட்டே அழ வைத்துவிடுவர்.கல்வித்...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top