.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 9 December 2013

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்!



      ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

    *

      அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

    *

      புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.

    *

      ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.

    *

      சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.

    *

      மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.

    *

      ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

    *

      ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?

    *

      ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

கண்டங்களின் பெயர்ச்சி....

எல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை.


எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், அல்பிரட் வெக்கனர் என்னும் பெயரிய நிலநூல் அறிஞர் ஒருவர், இன்று காணப்படும் கண்டங்கள் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின்றார். அக்கண்டங்கள் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் அவ்வரலாற்றைக் காட்டுகின்றன.


1.முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்ப்பீர்கள் என்றால் அது ஏறக்குறைய இவ்வாறுதான் காட்சி அளித்திருக்கும். இக்கண்டங்கள் அனைத்தும் ஒரே மாபெரும் கண்டமாக ஒன்றொடன்று முற்றிலும் இணைந்திருந்தன. அதனைப் பெங்கியா என்றழைக்கின்றனர்.






2.பதினெட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே கண்டமாக இருந்த பெங்கியா என்னும் இம்மாபெரும் கண்டமானது, வடக்குத் தெற்காக இரு பிரிவாகப் பிரிந்தது. வடக்குப் பிரிவு லோரேசியா என்று அழைக்கப்படுகிறது. தெற்குப் பிரிவு கோண்டுவானா என்றழைக்கப்பெறுகிறது.







3.பதிமூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய வட அமெரிக்கா ஐரோப்பாவினின்றும் ஆசியாவினின்றும் பெயரத்தொடங்கியது.






4.ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய கண்டங்கள் மேலும் தொலைவாகப் பெயர்ந்தன. அவற்றின் தனித் தோற்றங்களை உங்களால் அடையாளம் காண முடிகின்றதா? இக்காலகட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னமும் தெந்துருவத்துடன்( அண்டார்ட்டிக்கா ) இணைந்திருப்பதைக் கவனியுங்கள்






5.இந்த வரைப்படம் கண்டங்களின் இன்றைய இடங்களைக் காட்டுகின்றது. ஆனால் அவை இன்னமும் தொடர்ந்து பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன எனபதை நினைவில் கொள்ளுங்கள்






வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓர் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் இடைவெளியில் ஒன்றைவிட்டு ஒன்று பெயர்ந்து கொண்டுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கண்டங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்து ஓர் உலக வரைப்படத்தை வரைந்து பாருங்களேன். இன்னும் 5 கோடி ஆண்டுகாலத்தில் அவை ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியைக் கொண்டிருக்கும்.

காதலைப் பற்றிய கருத்துக்கள்..


 இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும்     காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

 
      காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது.

- பாரசீகப் பழமொழி


    *

      சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.

- காத்தரின் ஹெப்பர்ன்

    *

      காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.

- பிரயன் வாங்

    *

      காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள்

-ரஷ்யப் பழமொழி

    *

      ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டு விட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

- டி.ஹெச். லாரன்ஸ்

    *

      பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது.

-போலந்து பழமொழி

    *

      காதல் என்பது ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.

- ஆம்புரோஸ் பியர்ஸ்

    *

      காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.

- ஜூல் ரெனா

    *

      காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.

- ஆல்ஃப்ரெட் டென்னிசன்

    *

      காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.

- டக்ளஸ் யேட்ஸ்

    *

      காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.

- யாரோ

    *

      காதல் நோய்க்கு மருத்துவன் இல்லை.

-ஆப்பிரிக்கப் பழமொழி

    *

      கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.

- யாரோ

    *

      விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்: அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.

-வில்லியம் தாக்கரே.

    *

      இன்பத்தின் இனியதும் துன்பத்தின் கொடியதும் காதலே.

-பெய்லி

    *

      காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல்.

-டென்னிசன்

    *

      சூரியன் மறையலாம்; ஆனால், நிலையான காதல் மறைவதில்லை.

-ஊட்

    *

      உண்மை காதல் அனைத்துக்கும் பரஸ்பர மதிப்பே அடிப்படை.

-ஜார்ஜ்

    *

      காதலே, காதலின் வெகுமதி.

-ஜான் டிரைடன்.

    *

      காதல் - தன்னைத் தானே அளிப்பது; விலை கொடுத்து அதை வாங்குவதில்லை.

-லாங்பெல்லோ.

    *

      காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான்.

-ஸ்லிப்ட்

    *

      உண்மையான காதல், எண்ணத்திலே மலர்ந்து உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும்.

-கர்னிலியஸ் நீல்.

    *

      காதலால் வீரனானோர் சிலர். மூடரானோர் பலர்

-சுவீடன் பழமொழி


    *

      உலகை வலம் வரவும், சுற்றி வரவும் செய்வது காதல்.

-மார்லோ

    *

      ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.

-பைரன்

    *

      காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.

-ஜெரோம்.

    *

      உண்மையான காதல் ஒரு தணியாத வேட்கை, இனிமையான தொடர்கதை, அணையா தீ.

- ஆபின்டன்

    *

      காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது.

-லோவில்

    *

      யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல்.

-கதே


    *

      அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல்.

-சார்லஸ் டிப்டின்.

    *

      தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல்.

-கேபிள்

    *

      போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்.

-ஹெர்பர்ட்.


    *

      காதலிக்கும் போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

- யாரோ

வருங்காலத்தில் பெரிய மனிதனாக...



ஏற்ற குறிக்கோள் எது?

ஒவ்வொருவனும் தான் பெரிய கல்விமானாகவும், பெரும் புகழ் பெற்ற சீமானாகவும் விளங்க வேண்டுமென்று விரும்புவது இயற்கை. ஆனால், அவ்விதம் விரும்புகிறானே தவிர, அதற்கு வேண்டிய வழிகளைத் தேடப் பாடுபடுவதே கிடையாது. அவ்வாறு விரும்புகின்றவன் வாழ்க்கையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்க, எவரும் அறியத்தக்கனவும், மேற்கொள்ளத்தக்கனவுமாகிய கொள்கைகள் சில உள்ளன என்பதையும் உணர வேண்டும். தன் அறிவு, ஆற்றல்களுக்கும் ஏற்ற ஒரு குறிக்கோளை ஒவ்வொருவனும் ஆராய்ந்து எடுத்தல் வேண்டும்.

-ராக்பெல்லர்.


செயலாகும் எண்ணங்கள்

ஒரு செயலை உன்னால் செய்ய முடியுமென்று நீ திட்டமாய் எண்ணுவாயானால் அது எவ்வளவு துன்பம் நிரம்பியதாயிருப்பினும் அதை நீ செய்தே முடிப்பாய். ஆனால் அதற்கு மாறாக இவ்வுலகத்தில் மிக எளியதாயிருக்கக் கூடிய செயலையும் உன்னால் செய்ய முடியாது என்று எண்ணுவாயின் அதை உன்னால் ஒருக்காலும் செய்ய முடியாது. சிறு குப்பை மேடுகள் கூட உனக்குக் கடக்க முடியாத பெரும் மலைகளாகத் தோற்றாமளிக்கும்.

-எமலிகோ.


இல்லாத சக்தி

கடற்கரையில் உடைந்து கிடக்கும் மரக்கலங்கள் போன்று காலமென்னும் அலைகளால் சிதறடிக்கப்பட்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் சிறந்த திறமைசாலிகளாகத்தாம் இருந்தார்கள். ஆயினும் துணிவும், தன்னம்பிக்கையும் ஒரு முடிவுக்கு வரும் சக்தியும் இல்லாததனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

-பாஸ்டர்.


திடமான நம்பிக்கை

வருங்காலத்தில் பெரிய மனிதனாகக் கூடிய இன்றையச் சிறியவன், தன் மனதில் இப்பொழுதிலிருந்தே ஆயிரக்கணக்கான் இன்னல்கள் ஏற்படினும் அவ்ற்றை எதிர்த்து நிற்பதோடு மட்டுமில்லாது ஆயிரக்கணக்கான தோல்விகள் ஏற்படினும் வென்றே தீருவது என்ற திடமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.

-தியோடர் ரூஸ்வெல்ட்.


தைரியத்தைக் கைவிடாதே

ஒரு போதும் எடுத்த காரியத்தைக் கைவிடாதே! எத்தனையோ சந்தர்ப்பங்களும் மாறுதல்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவை தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். பெரிய நெருக்கடிகளுக்கிடையேதான் இறைவன் வெற்றி பெறுவதற்கான வழியையும் வகுக்கின்றான். ஆனால் நீங்கள் மட்டும் மனம் தளராதீர்கள்! ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதீர்கள்! ஏனெனில் துன்பமும் இன்பமும் சேர்ந்து வருவதே உலக இயல்பு என்பதை உணர்ந்து எவன், தைரியத்தை இழக்காதிருக்கிறானோ அவனே பெரும் அறிவாளியாவான். எல்லா முதுமொழிகளிலும் மிகவும் முக்கியமானது எதுவென்றால் ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதே எனும் எச்சரிக்கைதான்.

-கவிஞர் ஹோம்ஸ்.

எங்கே இருக்கிறது மகிழ்ச்சி?


 மகிழ்ச்சியை வளருங்கள்

        நன்கு மனம் விட்டுப் பலமாகச் சிரியுங்கள். உலகம் உங்களுடைய சிரிப்பில் பங்கு எடுத்துக் கொள்ளும். நீங்கள் அழுது பாருங்கள், உங்களுடைய அழுகையில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருவர்தான் அழுது கொண்டிருப்பீர்கள். உங்களுடைய அறிவின்மையும், வருத்தமும் இந்த உலகத்திற்குத் தேவையில்லாதவைகள். உங்களுடைய வருத்தத்தின் பளுவைச் சுமக்காமலேயே மற்றவர்கள் தாங்க முடியாத வருத்தத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். ஆகையால் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசி அதை மற்றவர்களிடம் பரப்ப முயற்சி செய்யுங்கள். உலக மக்களின் சந்தோசத்தை வளர்ச்சியில் ஈடுபடுங்கள்.

-வில்காய்


மகிழ்ச்சியைக் கொடுங்கள்

       மகிழ்ச்சியை பற்றி நினையுங்கள். மகிழ்ச்சியாக இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியை நம்புங்கள். பழக்கத்தின் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்துங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுங்கள்.

-நார்மன் வின்சென்ட் பீல்



மகிழ்ச்சியை அடைய

      மகிழ்ச்சியை நாடிச் செல்வதில் பாதி மக்கள் தவறான பாதையில் செல்கின்றனர். எதையும் தன் சொந்தமாக்கிக் கொள்வது, பிறர் உழைப்பை அடைவது இவைதான் மகிழ்ச்சி என்று கருதுகின்றனர். மகிழ்ச்சி என்பது பிறருக்குத் தருவதில், பிறருக்காக உழைப்பதில்தான் இருக்கிறது. பெறுவதை விட தருவதுதான் மகிழ்ச்சி அடைவதற்குள்ள ஒரே வழி. அது ஒன்றேதான் அகலமான சீரான வெற்றிப்பாதை.

-ஹென்றி டிரம்மண்ட்


மகிழ்ச்சியை அனுபவிக்க

       பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு கிடையாது. வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழவேண்டும் என்று ஆசைப்படுவதிலும் சிறிது கூட தவறு கிடையாது. ஆனால் ஒருவன் சேர்க்கும் செல்வம், அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்ற யாருக்கும் சிறிது கூட துன்பம் தராமலிருக்கும்படி  பார்த்துக் கொள்ள வேண்டும்.

-ஆண்ட்ரூ கார்னீஜி

 
   வெற்றி என்பது நம்முடைய திறமை, வாய்ப்பு முதலியவற்றைப் பொறுத்து அமைவதல்ல...நாம் எதிர்பார்க்கிறபடி அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும் என்று தொண்ணூறு சதவிகிதம் ஆக்கப்பூர்வமான மனோபாவத்துடன் செயல்படுகிறவர்களுக்கே வெற்றி கிடைக்கும். நல்லதே நடக்கும் என்ற உறுதியான மனோபாவம்தான் உண்மையில் ஒவ்வொருவரும் வெற்றி பெற அடிப்படை ஆதாரமாக இருக்கிறது.

- ஜார்ஜ் வெயின் பர்க்

      சோம்பல் ஒரு வீட்டின் உள்ளே நுழையும்போதே மற்ற எல்லாக் கெட்ட குணங்களுக்கும், துன்பங்களுக்கும் கதவைத் திறந்து வைக்கின்றன.

-அலெக்ஸாண்டர் டூமாஸ்

 
      மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர்களாக இருங்கள். பிறர் நம்பும்படியாக உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

 -எஸ்.சர்மா


      தீமைகள் உங்களை அணுகாமலிருக்க, உங்கள் எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

-சாக்ரடீஸ்

      மற்றவர்களுக்கு கெடுதல் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.

 -வாலியா

 

      உங்கள் அம்மாவிடம் சொல்லிப் பெருமைப்பட முடியாத எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள்.

-எஸ். சர்மா

      நாம் நினைப்பதை விட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி நம்மிடம் அதிகமாகவே இருக்கிறது.

-ஸ்டேபிள்ஸ்


      திட்டவட்டமான இலட்சியமில்லாதவர்கள்தான், இலக்குகள் உள்ளவர்களுக்காக என்றென்றும் வேலை செய்பவர்களாக வாழ்கின்றனர்.

- பிரையன் டிரேசி


      நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால், அறிவைத் தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக இருக்க வேண்டும். ஆர்வமாக வாழ வெண்டும்.

 -ஹெச்.ஹில்


      நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்குத் தொடர்ந்து கெடுதல் செய்வதன் மூலம், மன்ப்பூர்வமான வாழ்க்கை அமையாது. சேவை செய்வதன் மூலம்தான் மனப்பூர்வமான வாழ்க்கை அமைய முடியும்.

-எஸ். சர்மா

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top