.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 8 December 2013

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது !!



இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....!


தெரியாதோர்க்கு....


தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.


விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!


முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.


சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.


ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

பேஸ்புக்கில் உங்கள் Profile ஐ யார் யார் பார்த்தார்கள் என அறிய வேண்டுமா..??



என்ன நண்பர்களே...!! தலைப்பைப் பார்த்துவிட்டு வியக்காதீர்கள்.. இப்படி ஒரு வசதி இருக்கிறது எனப் பலர் நம்பி தமது பேஸ்புக் கணக்கையே இழந்திருக்கிரார்கலாம்.


ஏனெனில் இப்படிப் பட்ட apps கள் இருக்கிறதென ஒரு இணையத்தளம் போட்டுவிட்டால்... உடனே வேறு என்ன... வேறு வேறு இணையதளங்களும் copy செய்து... வாசிக்க வரும் மக்களை உசுப்பேத்துவது.


உடனே.. அவர்களும் நம்பி அந்த app ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் ஒன்றும் வராது பதிலாக அவர்களது account hack செய்யப்படும்.


ஆம்,நண்பர்களே...!! இது போன்ற apps அனைத்துமே hacker களால் உருவாக்கப்படுபவை.


DoorBellஎன்ற app இருக்கிறது ஆனால் அதுவும் உண்மையானதானாதாக இல்லையாம். அதை வேண்டுமானால் நீங்கள் பாவிக்கலாம்... ஆனால்..


Unfaced.comஎன்ற app இருக்கிறது அது John Arrow என்பவரால் உருவாக்கப்பட்டது. அதை பேஸ்புக் தடைசெய்துவிட்டதாம். ஏன் என்றால் அது பேஸ்புக்கின் rules க்கு தகுந்ததாக இருக்கவில்லை. அதை உங்கள் profile ல் பாவனை செய்தாலும் பாவிக்கப்படாது. இருந்தபோதிலும் அதைப் பாவித்தால் உங்கள் கணக்கு முடிவுக்கு வந்து விடும். அதாவது hack செய்யப்பட்டு விடும்.


பேஸ்புக் ஒரு நாளுமே தனது condition களுக்கு எதிராக இருக்கும் app ஐ உள்ளேடுக்காது. அப்படி இருந்து யாராவது அதனை பாவித்தாலும் அவர்களது கணக்கு முற்றாக நீக்கப்படும்.


அதிகமான Track செய்யும் app கள் போலியானவை. எனவே, இப்படியான Track செய்யும் app களிலிருந்து தள்ளியிருப்பது உங்கள் கணக்குக்குப் பாதுகாப்பு என்பதை கூறி இவளவு நேரமும் வாசித்த உங்களுக்கு நன்றி...!!


நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்...

உடல் உறுப்புகள் சண்டையிட்டால்?-ஒரு கற்பனை!



ஒரு நாள் உடல் உறுப்புகளுக்குள் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவைகளுக்குள் நடந்த உரையாடல்.


ஆள் காட்டி விரல்: நான் இல்லன்னா ஒரு மனிதனால் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ சுட்டிக் காட்ட முடியுமா?


மோதிர விரல்: இது என்ன பெரிய விஷயம்! மனிதன் என்மேல்தான் மோதிரம் போடுகிறான். அதனால் நான் அவனுக்கு அழகைக் கூட்டுகிறேன். மனிதனுக்கே தெரிகிறது, யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று. அதனால் எனக்கு தங்க மோதிரம் மாட்டி அழகு பார்க்கிறான். ஏன் உங்களில் ஒருவருக்கு மோதிர விரல் என்று பெயர் இல்லை?


சுண்டு விரல்: டேய்! மோதிரம் போடுவதெல்லாம் ஒரு பெரிய விஷயமாடா? மனிதனை படைத்தவர் கடவுள். அவரை கை கூப்பி வணங்கும்போது நான்தான் முதலில் இருக்கிறேன். எனவே நான்தான் பெரியவன்.


நடு விரல்: டேய் பொடிப் பசங்களா! விரல்களில் நான்தான் மிக உயரமானவன். அதனால் மனிதன் எந்த செயல் செய்தாலும் நான்தான் உயர தெரிவேன். எனவே உங்களில் உயர்ந்த மனிதன் நான்தான்.


கட்டை விரல்: டேய்! சும்மா வாய மூடுங்கடா! என்னமோ நீங்கதான் பெரியவங்கன்னு அலட்டிக்கிறீங்க? நான் இல்லாம நீங்க நாலுபேரும் வீண். எந்த ஒரு மனிதானாலும் நான் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்யமுடியாது. ஒரு பொருளை பிடித்து எடுக்கக் கூட முடியாது. மேலும் மனிதர்கள் ஒரு போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் என்னை நிமிர்த்தி மற்ற விரல்களை மடக்கி வெற்றிபெற்றதை குறிக்கிறார்கள். தோல்விபெற்றால் இதேபோன்று தலைகீழாக காட்டுகிறார்கள். மனித வாழ்கையில் வெற்றி தோல்வியைக் குறிக்கப் பயன்படும் நானே பெரியவன்.


கைகள்: உங்களில் யாரும் பெரியவர்கள் அல்ல. நாங்கள் இருவர்தான் பெரியவர்கள். ஐந்து விரல்களையும் எப்படி உபயோகிக்க வேண்டுமோ அப்படி உபயோகித்து மனிதனுக்கு பயன்படுகிறோம். நாங்கள் இல்லாமல் நீங்கள் எப்படி இயங்க முடியும். மனிதன் சாப்பிட மற்றும் பொருட்களை தூக்க உதவுவது நாங்கள்தான்.


கால்கள்: நாங்கள் இல்லையென்றால் மனிதன் ஒரு அசைவற்றை பொருள்போன்றுதான். எங்கும் எழுந்து செல்ல இயலாது. மனிதன் வேலை செய்து சம்பாரிக்க உதவுவதே நாங்கள்தான். எனவே நாங்களே பெரியவர்கள்.


முதுகு: நான்தான் மனிதனுக்கு பிடிப்பைத் தருகிறேன். நான் இல்லையென்றால் மனிதனை எப்படி நடக்க வைப்பாய்? முதுகெலும்புகள் ஒரு மனிதனுக்கு உயிர் நாடி போன்றவை.


கண்கள்: நாங்கள் இல்லையென்றால் மனிதன் எந்த பொருளையும் பார்க்கமுடியாது. வேலை செய்வதும் கடினம். இயற்கை அழகையும் ரசிக்க முடியாது. எனவே நாங்கள்தான் பெரியவர்கள்.


காதுகள்: நாங்கள் மனிதர்களுக்கு கேட்கும் திறனை கொடுக்கவில்லையென்றால் மற்றவர்கள் பேசுவதை கேட்கவே முடியாது.


வாய்: மனிதன் பேசினால்தானே கேட்கமுடியும். நான்தான் பேச உதவுகிறேன். மேலும் மனிதன் உயிர் வாழ தேவை உணவு. அந்த உணவை சாப்பிட உதவுவது நான்தான். எனவே பெரியவனும் நான்தான்.


பற்கள்: நீ என்ன உணவு சாப்பிட ஒரு நுழைவு வாயில் போன்றுதான். அந்த உணவை அரைத்து அவனுக்கு ஆயுளைக் கொடுப்பது நான்தான். ஏனெனில் “நொறுங்கத்தின்றால் நூறு வயது” என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்களே.


நாக்கு: நீ உணவை அரைக்கிறாய், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்த உணவை சரிவர உனக்கு தள்ளிவிடுவது நான்தான். மேலும் “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த உப்பு போன்ற சுவைகளை மனிதனுக்கு புரிய வைப்பது நான்தான். எனவே நான்தான் பெரியவன் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.


வயிறு: நீங்கள் அனைவரும் உணவு சாப்பிட மட்டுமே பயன்படுகிறீர்கள். ஆனால் அந்த உணவை செரிக்க வைத்து மனிதனுக்குத் தேவையான சக்தியை கொடுப்பது நான்தான். அதனால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான். எனவே நான்தான் பெரியவன்.


மூக்கு: மனிதன் சாப்பிடவில்லையென்றால் கூட சில நாட்கள் உயிர் வாழ்வான். ஆனால், மூச்சி விடாமல் உயிர் வாழ்வது கடினம். மேலும் நல்ல உணவு அல்லது கெட்டுப்போன உணவு என்பதை என்னை வைத்து முகர்ந்து கண்டுபிடிக்கின்றனர். எனவே நான்தான் பெரியவன்.


தலை: என்னங்கடா அறிவு இல்லாம பேசுகிறீர்கள்? நான் இல்லையென்றால் நீங்கள் வெறும் முண்டம். அதை புரிந்துகொண்டு பேசுங்கள்.


மூளை: நான் உன்னுள் இல்லையென்றால் நீ வெறும் மண்ணுதான். அத தெறிஞ்சிக்கிட்டு பேசு. ஒரு மனிதன் வாழ்கையில் வெற்றி பெற அவன் திறமைசாலியாக இருக்கவேண்டும். அந்த திறமை என்னால்தான் கிடைக்கிறது. ஆறாவது அறிவு இருப்பதால்தான் அவன் மனிதன். நான் இல்லையென்றால் மனிதன் வெறும் மிருகம்தான். உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்குவதே நான்தான். எனவே நீங்கள் என் பக்கத்தில் கூட நிற்க முடியாது.


இப்படியாக உடலின் அனைத்து உறுப்புகளும் சண்டையிட்டுக்கொண்டு இருந்தன. இடையில் இதயம் குறுக்கிட்டது.


இதயம்: எல்லாம் ஆளு ஆளுக்கு ஏதேதோ சொன்னீங்க. ஆனா உங்களை உயிரோடு வத்திருப்பதே நான்தான். நான் உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை தூய்மைப்படுத்தி கொடுக்கவில்லையென்றால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். பிறகு மனிதனும் இருக்கமாட்டான். மேலும் மனிதர்களின் குணம் அவன் இதயம் சம்பந்தப்பட்டது. ஒரு நல்லவனாக இருந்தால் “அவனுக்கு நல்ல மனம் இருக்கிறது” என்று என்னைத்தான் கூறுவார்கள். ஆக மனித வாழ்க்கை என்பது இதயம் சார்ந்தது. நான் துடிப்பதை நிறுத்திவிட்டால் மனிதன் இறந்துவிடுவான்.


இதயம் கூறியது மெய்யான உண்மை என்பதால் “அண்ணே! நீங்கதான் மனித உடம்பில் பெரியவர். நாங்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்கிறோம்.” என்று அனைத்து உறுப்புகளும் கூறின.


இதயம்: அப்படியல்ல. நான் மட்டும் இருந்தால் மனிதன் உயிர் வாழ முடியாது. அனைவரும் முக்கியம்தான். தலையில் அடிபட்டு இறந்தவன் கூட இருக்கிறான், வயிற்றில் கத்தியால் குத்துபட்டு இறந்தவனும் இருக்கிறான் மற்றும் தண்டுவடத்தில் அடிபட்டு இறந்தவன் கூட இருக்கிறான். எனவே நம்மில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று இருக்கக்கூடாது.


இந்திய மனிதர்களைப் பாருங்கள். தங்களுக்குள் சாதி, மதம், இனம் மற்றும் மொழியால் பிரிந்து கிடக்கிறார்கள். ஆனாலும் எல்லாரும் ஒரே இனம் போன்று வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்கள். அப்படிபட்ட மனிதர்களுக்குள் இருக்கும் நாம் சண்டையிட்டுக்கொள்ளலாமா? நாமும் ஒற்றுமையாக இருந்தால்தான் மனிதன் நன்கு வாழ முடியும்?


அனைத்து உறுப்புகள்: ஆமாம் அண்ணே! நாங்கள் செய்தது தவறுதான். இனிமேல் நாங்கள் சண்டையிட்டுக்கொள்ளமாட்டோம்.


இப்போது அனைத்து உறுப்புகளும் ஒற்றுமையாக இருப்போம் என்று சபதம் எடுத்துக்கொண்டுவிட்டன. அவைகளின் சபதத்தை நாமும் ஏற்போம்.

அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?




தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.


போன், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?


சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.


இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது.


ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 இந்த சேவையின் பெயர் Seven. இதனை  http://www.seven.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.


இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.


இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

ஆன்மிகக் கதைகள்!

எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய். 


ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள்

ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார்.

" பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக்

கேட்டார். அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று

இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான். ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார்.

அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக இல்லை ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தான். அதன் பின் இப்படி இருப்பது அவனுக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.

பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான்.

ஆசிரியர் அவனிடம் "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்து விட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம் மாணவன் "இனிமேல் நான் குன்றுக்கு போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது"என்றான். இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவன் " எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றது " என்றான். இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது.

ஆக, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை. தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் மனதை  ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம் என்பது உண்மை. மாறாக தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அழிவு நிச்சயம். எனவே இன்றிலிருந்தே மனதை நல்ல எண்ணங்களின் மீதும் தெய்வத்தின் மீதும் செலுத்தி, நன்மைகளை அடைவோம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top