.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 8 December 2013

துளசி மல்லி கஷாயம்




துளசி மல்லி கஷாயம்

 துளசி - 2 கைப்பிடி,

சுக்கு - 1 துண்டு,

வெள்ளை மிளகு - 20,

ஏலக்காய் - 5,

தனியா - 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த திராட்சை - 20, பனங்கல்கண்டு

 அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.


சுக்கு, வெள்ளை மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.

பொதுவாக தூதுவளைதான் கபம் போக்கும். வெயில் காலத்தில் தூதுவளையின் சூட்டைத் தவிர்க்கவே இங்கே துளசி சேர்த்திருக்கிறோம். உணவின் மூலம் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் கஷாயம் இது. மாலை 6 முதல் 9 மணிக்குள் குடிக்கலாம். சளி பிடிக்காமல் தடுக்கும்.

குற்றவாளிகளும் கோடீஸ்வரர்களும் நிறைந்த மாநிலங்களவை!



மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது என்றும் இதில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்கள். 6 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சியுள்ள 227 எம்பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 227 எம்பிக்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 20 கோடி. காங்கிரஸ் எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 16.74 கோடி. இதற்கு அடுத்தபடியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்களின் சராசரி மதிப்பு ரூ. 13.82 கோடி.


பாஜ எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ. 8.51 கோடி. ராஜ்யசபா எம்பிக்களில் மிகப்பெரும் செல்வந்தராக இருப்பவர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த மகேந்திர பிரசாத். இவருக்கு ரூ. 683 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவை சேர்ந்த சுயேட்சை எம்பி விஜய் மல்லய்யாவுக்கு ரூ. 615 கோடி சொத்து உள்ளது. சமாஜ்வாடி உறுப்பினரும் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு ரூ. 493 கோடி சொத்து இருக்கிறது. 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது.

பொருளாதாரம் ஈட்டும் பெண்களா? பொழுதை போக்கும் பெண்களா?



பெண்கள் எப்போதும் வினோதமானவர்கள், இயற்கையாய் கடவுள் பெண்களை சற்றே குறைவான உடல் சக்தியுடன் படைத்த காலத்தில் இருந்து சாட்டிலைட்டை இயக்கும் தற்கால பெண்மணிகள் வரை நீங்கள் பார்த்தால் எவ்வளவு பரிணாம மாற்றங்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்க்கு என அடக்கி வாசித்த ஆண் வர்க்கம் இதை செய்தது மூன்று காரணங்களுக்காக. பெண்கள் சமைந்த உடன் வெளியே அனுப்பினால் என்னவாகும் என்ற பதபதைப்பு. இரண்டாவது பெண் ஒரு படி பார்க்கும் மாப்பிளையை விட படித்திருந்தால் கல்யாண்ம் அமையாது. மூன்றாவது பெண் படித்து இந்த பெண் என்ன சாதிக்க போகிறாள். அடுப்படி தானே இவளுக்கு நிரந்தரம் என்ற நினைத்தமையால் ஒரு மூன்று நான்கு ஜெனரேஷனில் படிப்பு என்பது ஆரம்ப கல்வியோடு முடிந்து போனது.
 

இதை உடைத்தெறிந்த பல தலைவர்கள் பெண்களுக்கு கல்வி முக்கியம் என ஒரு வழியாக போராடி பெற்று கொடுத்த படிப்பு இன்று பெரும்பாலும் பொருள் ஈட்ட, பொழுது போக்க, புரளி பேச மட்டுமே பயன்படுகிறது என்று நினைக்கையில் வருத்தம் தான் சற்றே ஓங்கியிருக்கிறது.


பெண்களுக்கு கட்டாய‌ கல்வி என்று நினைத்த சில கர்ம வீரர்களின் எண்ணம் வேறு. பெண்கள் படிப்பது வேலைக்கு செல்வதற்க்கு மட்டுமல்ல என்று அவர்களின் உயர்ந்த எண்ணம் அனேக பெண்களுக்கு தெரிவதில்லை. அடிமை சாசனமாய் இருந்த பெண்களுக்கு படிப்பு என்பது ஒரு மூன்றாம் கண் போல.


பெண்களுக்கு அனைத்து தெரிந்திருக்க வேண்டும். சட்டம் தெரிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் பண்போடு பழகவும், குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுக்கவும், குடும்ப வர்த்தகம் என்று ஒன்று இருந்தால் அதிலும் ஞானம் பெறவே இந்த படிப்பறிவுக்கு பாடுபட்டனர்.


என்னை கேட்டால் பெரும்பாலும் பெண்கள் படிக்கும் நோக்கமே தான் சொந்தக்காலில் நிற்க முடியும் என்பதற்க்கே. பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மனம் சொல்கிறது இந்த குருப் படித்தால் இந்த வேலைக்கு செல்லாம் இந்த மென்பொருள் படித்தால் இந்த நாட்டுக்கு செல்லாம் என்று அதை நோக்கியே பயணித்து 34 வருஷம் சர்வீஸ் போட்ட அப்பாவை விட தற்காலிக பொருளாதாரத்திர்க்கு ஏற்ப அப்பாவை விட முதல் மாததிலே சம்பளம் அதிகம் வாங்கி காட்டின உடன் பெற்றோர்கள் புளங்கிதம் அடைகின்றனர்.


இது கஷ்டப்படும் குடும்பம் என்றல்ல அனைத்து பெற்றோர்களும் கல்வி இருந்தா என் பெண் எப்படியாவது புழைச்சிக்கிடுவான்னு ஒரு நம்பிக்கை. ஆனால் இந்த படிப்பு அவர்களுக்கு ஞானத்தை பெற்று தந்தாலும், கூடவே தனித்துவத்தை தந்து விடுகிறது இது தனியே இருக்கும் வரை ஒரு நல்ல செயல்தான். ஆனால் கல்யாண்ம் என்ற ஒரு புது உறவில் இதுவே பெரும் பிரச்சினையாக வந்து விடுகிறது. பெண் பார்க்கையிலே பெண்ணோடு அப்பா கன்டிஷன் போடுவார் பெண் வேலைக்கு போவா கல்யானத்திர்க்கு பிறகும் என்று ஆரம்பிக்கும் இந்த கண்டிஷன் தான் பலர் வாழ்க்கையில் சத்துரு.


பொருளாதார சூழ் நிலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது பொருந்தாது. பெருமைக்காக, பெண் என்ன ஆண்களுக்கு அடிமைபட்ட இனமா? மாமியார் தொல்லை, வீட்டு வேலை அலர்ஜி என்று பல காரணங்களுக்காக வேலைக்கு செல்லும் பெண்கள் இழப்பது ஒன்றல்ல இரண்டல்லா பெரும்பாலும் நிம்மதியற்ற வாழ்க்கை. அநநியோன்யம் மறந்து போகிறது. பிள்ளைகளின் மழலையை ரசிக்க முடியாமல் போகிறது. தான் படித்த படிப்பு தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் தன்னை விட குறைவாய் படித்த ஒரு ஆளிடம் டியூஷன் விடுவது, தன் குடும்பத்துக்கு ஏனோ தானோ என்று சமைக்கும் ஒரு அரை குறை ஆளை வைப்பது என எல்லாவற்றிற்க்கு அவுட் சோர்ஸ் செய்து தான் நிம்மதியாக வெளியே சென்று திரும்ப வரும் ஒரு விஷயத்தை தவிர வேறு எதுவும் இவர்கள் பெற்று விடவில்லை.


ஏன் ரவி உலகத்தில் பெண்கள் வேலைக்கே செல்வதில்லையா, பெண்கள் ப்டித்தால் அதை வீட்டில் தான் செலவிட வேண்டுமா என்று நீங்கள் என்னை பிரான்டும் நேரத்திற்க்குல் சொல்வேன் நீங்கள் வாழ்வது இந்திய சமூகம். இது குடும்பம் குழந்தை என பழகி போன உங்கள் மாமியாரும், மாமனாரும், என்னதான் படித்திருந்தாலும் தன் மனைவி வேலைக்கு செல்வதில் நாட்டமில்லை என்று நினைக்கும் பெரும்பாலான கணவர்களுக்கு நடுவில் இது சக்ஸ்ஸான சாத்தியம் என்று சொல்லுவதற்க்கில்லை.


அப்படி ஒரு [புதுமை பெண்ணாய் நீங்கள் ஜொலிக்க விரும்பினால் இந்த கல்யாண்ம் என்ற அடைப்புக்குறியில் நீங்கள் அடங்கவே முடியாது. இதுவும் வேனும் அதுவும் வேணும் என்று அடம் பிடிக்கும் சிறு குழந்தைத்தனமான எண்ணம் தான் உங்களுக்கு நீங்கள் வைக்கும் வேட்டு.


இதையும் மிஞ்சி வேலைக்கு செல்லும் பெண்கள் கண்டிப்பாய் அவர்கள் சுய நலம் ஒன்றின் காரணமே தவிர வேறு ஒன்றுக்கு இல்லை என்பதே. திருமணம் ஆகி பின்பு பொருளாதார சூழ் நிலையால் சுய தொழில், வேலைக்கு செல்வது என சில முடிவுகள் வரேவேற்க்க தக்கது, வீட்ல ஒரே போருப்பா என ஒரே காரணத்திர்க்காக வெளியே வேலைக்கு செல்வது கண்டிப்பாய அவர்கள் வாழ்வுக்கு அவர்களே வைக்கும் ஆப்பு தான்.


மெத்த படித்த பல பெண்கள் கவுரவத்தோடு இன்று வீட்டில் இருந்து சாதிக்கின்றனர், தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்த நற் பண்புகளோடு நல்ல சிட்டிசன்களாய் உருவாக்கும் இவர்கள் தான் உண்மையிலே சக்ஸஸ் பெண்மனிகள். வீட்டுக்கு வெளியே கிளம்பும் போது எடுக்கும் மொபைல் ஃபோன் வீட்டுக்குள் நுழைவதற்க்குள் சில எஸ் எம் எஸ்களையும், சில கால் லிஸ்டில் உள்ள கால்களையும் அழித்து விட்டு வரும் பெண்களும் ஆண்களும் இன்று இந்த குடும்பம் சார்ந்த வாழ்க்கை வாழாதது தான்.


குடும்பம் வேணும் நல்ல குழந்தைகள் வேணும் ஆனாலும் வேலைக்கு சென்று இதை சாதிப்பேன் என்று பெண்களுக்கு – நீங்கள் யாரை ஏமாற்றுகிறேர்கள் என்றே கேட்பேன். இவை அனைத்தையும் தாண்டி நிறைவான குடும்பம் உங்கள் இன் லாஸ் மற்றூம் பொறுப்பு மிகுந்த கணவன் மற்றும் பிள்ளைகளின் மூலம் நீங்கள் அடைந்தால் நீங்கள் வரம் வாங்கியவர்கள் தான் வாழ்த்துக்கள்.

பெண்களுக்கான சொத்துரிமை குறித்து சில விவரங்கள்!



பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப் பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.


1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசுச் சட்டம் 1956′ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:


முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.


ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.


ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.


கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.


அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.


பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.


பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.


2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.


ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.


இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.


இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.


இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.


இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டுமே இது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது.

பறவையா? பூவா? அதிசயம்!



தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு வகை பூ, கிளியின் உருவத்தை ஒத்தது. தூர இருந்து பார்த்தால் கிளியென்று ஏமாந்து விடுவர்.


இந்த வகை பூக்கள் தாய்லாந்தில் மட்டுமே காணப்படுகின்றன.



இந்த கிளிப் பூ மரத்தை தாய்லாந்துக்கு வெளியில் எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.



இதனால் இந்த அரிதான பூ இனத்தை தாய்லாந்து நாட்டுக்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியும்.





 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top