
உடற்பயிற்சிக்கு மிகவும் சிறந்ததாக சைக்கிளிங் (சைக்கிள் ஓட்டுதல்) மற்றும் ரன்னிங் (காலில் ஓடுதல்) ஆகிய இரண்டும் உள்ளன. இவை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானவை என்றாலும், இரண்டு உடற்பயிற்சிகளுமே உடலுக்கும், நல்வாழ்விற்கும் தனித்தனியான பலன்களை தருகின்றன. ஓடுவதன் மூலம் சைக்கிள் ஓட்டுவதை விட அதிகப்படியான கலோரிகளை எரித்திட முடியும். ஆனால், ஓடுவதன் மூலமாக உங்கள் உடல் எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச அழுத்தம் காரணமாக ஏகப்பட்ட வலியும், தசைபிடிப்பும் வர வாய்ப்புகளும் உண்டு. நீங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது உடலில் நிறைய காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. அடிப்படையில் திறன்களை மதிப்பிடும் போது, சைக்கிள் ஓட்டுவதற்கே அதன் ஆரோக்கிய...