
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள், அந்த வகையில் நாம் உண்ணும் உணவிற்கு ருசி உண்டாக்குவதில் உப்பு பெரும் பங்கு வகிக்கிறது.இருப்பினும் உப்பை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, உணவில் சேர்த்தால் தான் அது உடல்நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். அளவிற்கு மீறி சேர்க்கும் போது அதன் விளைவாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இது பற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் வயிற்று புற்றுநோய், நெஞ்சுவலி, இருதய கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.உப்புசத்து குறைவான ரொட்டி(பிரட்), தானியங்களை காலை உணவில் சேர்க்கலாம். கடல்மீன், சிப்ஸ் ஆகியவற்றில்...