.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 2 December 2013

தக்காளி தோசை - 2 - சமையல்!


தேவையானவை:

 பச்சரிசி - ஒன்றே கால் கப்,

 உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,

தக்காளி - 4,

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 10,

பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு,

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

 பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்).

 தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு,

பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.

அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து,

அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.

ஷூ அளவை அறிய ஒரு செயலி!

 

ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.

 நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா?


 இதற்கெல்லாம் ஒரு செயலியா ?

 என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.

 உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது.

அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும்.


 ஒவ்வொரு நாட்டிலும் ஷூக்களுக்கு ஒரு அளவை பின்பற்றலாம் தானே.

 எனில் இணையம் மூலம் வெளிநாட்டு ஷூவை வாங்கும் போது உங்கள் ஷூவின் அளவு அந்நாட்டு கணக்கில் எந்த அளவு வருகிறது என தெரிந்து கொள்வது அவசியம் தானே.

அதை தான் இந்த செயலி செய்கிறது.

 இதில் உங்கள் ஷூ அளவையும் , உங்கள் நாட்டையும் தெரிவித்தால் , அதற்கேற்ப நீங்கள் ஷூ வாங்க உள்ள நாட்டில் அதன் அளவு என்ன என்று கணக்கிட்டு சொல்கிறது.

நீங்கள் வெளிநாட்டு ஷூவை வாங்கா விட்டாலும் கூட , அயல்நாட்டில் இருக்கும் நண்பரோ உறவினரோ உங்களுக்கு ஷூ வாங்கி பரிசளிக்க விரும்பினால் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?

 இப்போதைக்கு ஐபோனுக்கான வடிவம் மட்டுமே இருக்கிறது.
பாருங்கள் , எப்படி எல்லாம் செயலிகளை உருவாக்குகின்றனர் !

செயலியை டவுண்லோடு செய்ய: 

 http://www.mercurydesign.in/convert-my-shoe-size/

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…உண்மை விளக்கம்!


ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பது

 ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..!




கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன்,


அரசனே ஆனாலும் கூட



 அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்

 என்பதுதான் உண்மையான அர்த்தம்…



1) ஆடம்பரமாய் வாழும் தாய்,



2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,



3) ஒழுக்கமற்ற மனைவி,



4) ஏமாற்றுவதும் துரோகமும்


 செய்யக்கூடிய உடன்


 பிறந்தோர் மற்றும்



5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்


 என்பதாகும்..

‘கிச்சன் கெபினட்’ பிறந்த விதம்!

அரசாங்கத் தலைவர்களின் அதிகார பூர்வமற்ற ஆலோசகர்கள்
 

வட்டம் ‘கிச்சன் கெபினட்’ என்று அழைக்கப்படுகிறது.




இந்த வார்த்தை 1832 இல் உருவானது. அப்போது அமெரிக்க
 

 ஜனாதிபதியாக ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் இருந்தார்.




அவர் தனது நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருடன் அடிக்கடி
 

அதிகாரப்பூர்வமில்லாத தனிப்பட்ட கூட்டங்களை நடத்துவார்.



அந்த நண்பர்கள் வெள்ளை மாளிகையின் பின் கதவு வழியாக
 

 நுழைந்து சமையலறை வழியாக மாளிகைக்குள் வருவார்கள்.




அதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய நட்பு
 

வட்டத்தை ‘கிச்சன் கெபினட்’ என்று பத்திரிகையாளர்கள்
 

குறிப்பிடத் தொடங்கினார்கள்.



பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற
 

அரசியல் ஆலோசகர்களைக் குறிக்கும் வார்த்தையாக இது மாறியது.

“உலகின் அழகற்ற நாய்” உயிரிழந்தது!

 

அமெரிக்காவின் நியூஜெர்ஸி யைச் சேர்ந்த கரேன் குவிக்லிக்கு சொந்தமான நாய் எல்வுட் (8). சைனீஸ் கிரெஸ்டட், சிகுவாகுவா ஆகிய நாய் இனங்களின் கலப்பி னமான எட்வுட், 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற உலகின் மிகவும் அழகற்ற நாய் என்ற போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றது.அதன் பின் அதன் புகழ், அமெரிக்கா மட்டுமின்றி பிரேஸில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அந்த நாய்க்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறி னர்.இந்த உலக பேம்ஸான் எல்வுட் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை

எப்போதும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எல்வுட், சற்று மூடிய கண்களுடனும், தலையில் விசித்திரமான வெள்ளை முடிக் கற்றைகளுடன் வலம் வந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்த அதன் முகமே பலரையும் ஈர்க்கத் தொடங்கியது.இந்நிலையில் தனது நாய் எல்வுட்டை மிகவும் நேசித்த அதன் உரிமையாளர் குவிக்லி, ‘எவ்ரி ஒன் லவ்ஸ் எல்வுட்’ என்ற தலைப்பில் குழந்தை களுக்கான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இப்படி தான் வாழ்ந்த குறுகிய காலத்திலேயே பலரின் அபிமானத்தைப் பெற்றுஎல்வுட்டை நேரில் பார்க்காதவர்கள் கூட, அதன் மீது அன்பு செலுத்திய நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை (நவம்பர் 28) தேங்ஸ் கிவ்விங் டே (அறுவடைத் திருநாள்) அன்று திடீரென நோய்வாய்ப்பட்டு எல்வுட் உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top