.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 1 December 2013

சைனா Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.!

 

நாமெல்லாம் அடிக்கடி சொல்வோமே?- ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதை நினைவூட்டும் வகையில் நெடு நாள் பிரச்சினையான கிழக்கு சைனா ஸீயில் உள்ள ஒரு தீவு. இதை சைனா “டையாயூ” எனவும் ஜப்பான் “செனாக்கூ என பெயரிட்டு அழைத்து வருகிறது.இதற்கிடையில் பல நாளாக இது யாருக்கு சொந்தம் என்ற வகையில் போட்டி இருந்தது.

நவம்பர் 23 ஆம் தேதி சைனா இந்த பிரதேசத்தையும் சேர்த்து தன்னுடைய வான் எல்லை சைனா ஏர் டிஃபன்ஸ் ஐடென்ட்டிஃபிக்கேஷன் ஜோன் என்று அறிவித்த போது தான் பிரச்சினை எழுந்தது ஜப்பானுக்கு. அது மட்டுமல்ல பெட்ரோலுக்கு சைனா போர் விமானங்களை பறக்க செய்ய நேற்று ஆள் இல்லாத அமெரிக்க பி 52 பாம்பர் விமானங்களும் 10 ஜப்பான் ஏர் ஃபோர்ஸ் விமானங்களும் அங்கு பறந்து அமெரிக்கா நான் ஜப்பான் நண்பனாக்கும் என பறைசாற்ற கொஞ்சம் நேரத்தில் சைனா அத்தனை விமானங்களையும் விமான தடங்களையும் ஸ்கிராம்பிள் செய்து விட்டது. இதையொட்டி மெல்ல பற்றி கொண்டது ஒரு பதட்டம்.

“Air Defense Identification Zone” – ADIZ என்றால் என்ன? – தன் நாட்டை விட்டு அதன் அருகாமையில் உள்ள ஒரு இடத்தை கிளேய்ம் செய்யும் நாடுகள் – அமெரிக்கா ஜப்பான் போன்றவை ஏடிஸ் வைத்துள்ளன். இந்த வான் பறப்பில் பறக்கும் விமானங்கள் தங்களை ஏர் ஜோனுக்கு செல்லும் முன் – பறக்கும் போதும் தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது ஏடிஸின் விதிமுறை.

இந்த வகையில் ஜப்பான் செனாக்கூ தீவை ஏடிஸ் என அடையாளம் காட்ட வெகு நாள் பிரச்சினையாக கொண்ட இந்த தீவை சைனாவும் தன் பங்குக்கு இது சைனீஸ் ஏடிஸ் என அறிவிக்க இரண்டு நாட்டினரும் கிழக்கு சைனா ஸீயில் தன் புஜத்தை உயர்த்தி காட்டிய சமயத்தில்தான் அமெரிக்கா தன் பங்கிற்கு ஜப்பானுக்கு ஆதரவாக 4 விமானங்களை அனுப்ப சைனா இதை ஸ்கிராம்பிள் செய்ததுதான பெரும் பரபரப்புக்குண்டான விஷயம்.

அதே சமயம் சைனா கொஞ்சம் நாளைக்கும் முன்புதான் Yellow Sea எனப்படும் மஞ்சள் கடலில் கொரியாவுடன் உரன்டையை இழுத்த விவகாரம் உங்களும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதாவது சவூத் கொரியாவில் இருந்து 149 கிலோமீட்டரில் மற்றூம் சைனாவில் இருந்து 287 கிலோமீட்டரில் உள்ள ஒரு ரீஃபின் பெயர் “லீடோ”. கொரியர்கள் ஏற்கனவே அங்கு கடலின ஆராய்ச்சி செய்து வருவது அனைவருக்கு தெரிந்த ஒன்று, அங்கும் சைனா திடீரென்று இதை ஏடிஸ் வட்டத்துக்குள் கொண்ட வந்த போதும் அப்ஸெட்டானது சௌத் கொரியா மட்டுமல்ல – அமெரிக்காவும் தான்.

இத்தனைக்கும் உலகின் முக்கியமாக ஏசியாவின் அதிக பண வளம் கொண்ட ஜப்பான் / சைனா / தாய்வான் / சவுத் கொரியா – மற்றூம் சைனாவின் தலை நகரமான பெய்ஜிங் இதன் அருகாமயில் இருப்பதால் சைனா கொஞ்சம் ஓவராய் உணர்ச்சிவசப்படுகிறது.

மேலும சைனா இதை 1440 முதல் தனக்கு சொந்தம் என சில டாக்குமென்ட்களை வைக்க ஜப்பானோ 1885 ஆம் ஆன்டு சர்வே செய்த போது இதில் இருந்தவர்கள் வெறும் ஜப்பானியரே. அதனால் ஜப்பான் 1895 ஆம் ஆண்டு இதை அங்கு வாழும் மக்களுகென இதை விற்று இதை ஜப்பானின் ஒரு பகுதியாக அறிவிக்கபட்டது. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்த போது இந்த தீவு அமெரிக்கா கைவசம் வந்தது. 1972 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜப்பானின் அத்தனை இடத்தையும் ஜப்பானிடமே ஒப்படைத்த போது இந்த தீவும் ஜப்பானுக்கே சொந்தமானது.

அப்போது சைனா இதில் எங்களுக்கு பங்குண்டு என கேட்க 1978 ஒரு ஒப்பந்தம் சைனாவும் ஜப்பானும் இதை அப்புறம் பார்த்து கொள்ளலாம் இதை வைத்து நாம் சண்டை செய்ய வேண்டாம் என கையெழுத்திட்ட பிறகு அமைதியாக இருந்த சைனா போன வருடம் ஜப்பான் அதன் அருகே இருக்கும் தீவுகளை வாங்கி அரசுடமைபடுத்திகிறது என்ற விஷயம் கசிய அதில் செனாக்கூவும் உண்டு என தகவல் பரவ சைனாவில் கலவரம் வெடித்து அரசு இந்த ஜோனை ஏடிஸ் ஆக்கியது தான் ஆதியும் அந்தமும்.

இதில் கச்சா எண்ணெய் / தாது பொருட்கள் மற்றும் மீன் பிடிப்புக்காக தான் இந்த சண்டை மற்றும் நேர் தாக்குதல் சைனாவின் பெய்ஜிங்கிற்க்கு உண்டு..என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

அது சரி!ஜெட் ஸ்க்ராம்பிளீங் என்றால் என்ன? – அதாவது ஒரு நாட்டின் வான் எல்லைக்குள் வரும் விமாங்கள் இரண்டு வகைப்படும். கமர்ஷியல் விமானங்கள் – இது மனிதர்கள் பயணிக்கின்ற விமானங்கள்…இவ்வகை விமானங்கள் அனுமதி பெற்ற வான் எல்லைக்குள் தான் பறக்கும். இதன்படி மலேஷிய விமானங்கள் , ஈரான் விமாங்கள் இஸ்ரேல் எல்லையில் பறக்காது அந்த மாதிரி நிறைய விமானகள் நிறைய நாடுகளை அவாய்ட் செய்யும்.

மற்றது விமானப்படையை சேர்ந்தது. இது கூட்டு பயிற்ச்சி படை மற்று அறிவிக்க்பட்ட எல்லை கடந்து போகும் விஷயத்தை முன் கூட்டியே அறிவித்தால் அந்த் அந்த நாடு அதற்கு அனுமதி அளித்தி ரேடாரில் தென்படும்போது ஒன்றும் செய்யாது. அறிவிக்கபடாத விமாங்கள் அது கமர்ஷியல் அல்லது ராணுவ அல்லது ஆளில்லா விமானங்கள் வந்தால் உடனே ரேடார் உஷார் படுத்தும்.உடனே அந்த நாட்டு போர் விமானங்கள் ங்கள் விமானத்தை ரவுன்ட் செய்து உங்களை வலுகட்டாயமாக அவர்களின் வான் எல்லையில் இருந்து தள்ளும் அல்லது பாம் செய்து விடுவார்கள், இப்படி ஸ்கிராம்பிளிங் செய்திருந்தால் 9/11 அமெரிக்க இரட்டை கோபுரம் தப்பியிருக்கும் – உலகில் அதிகம் ஸ்கிராம்பிளிங் செய்யபடும் ஜோன் அலாஸ்காவில் அடிக்கடி ரஷிய விமானங்கள் நுழைய அதை அமெரிக்கா விரட்டியடிக்கும் ரெகுலர் ஒன்று

அரசு மருத்துவமனைகளில் இயற்கை வழி சிகிச்சை மையம்!

 


தற்போதைய அவசர உலகில் மன அழுத்தத்தின் காரணமாகவே பல்வேறு விதமான நோய்கள் வருகின்றன. இந்த மன அழுத்தத்தை போக்கவும், மன அழுத்தம் வராமல் தடுக்கவும் யோகா கலை உள்ளிட்ட இயற்கை சார்ந்த வாழ்க்கைத் தர சிகிச்சை மையம் தேவைப்படுகிறது.இதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தமிழ்நாடு சட்டசபை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 18 மருத்துவ கல்லூரிகளிலும் ஒரு உதவி மருத்துவர் உள்ளிட்ட 4 பதவிகள் உருவாக்கப்பட்டு்ள்ளன. இந்த மையத்தில் நோயாளிகள் அறை, யோகா அறை அமைக்கப்படும். இங்கு நீர்வழிசிகிச்சை, மண் வழிசிகிச்சை, காந்த சிகிச்சை, கலர் சிகிச்சை அக்குபஞ்சர் உள்ளிட்ட பல சிகிச்சைகள் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர்,”’’காந்தியடிகள் ஆங்கில மருத்துவத்தைவிட இயற்கையின் அடிப்படையிலே நமக்கு நாமே வைத்தியராக நம்முடைய நோய்களை குணமாக்க முடியும் என்பதைக் கடைப்பிடித்தார்.அந்த அடிப்படையில் தமிழகத்தில் அமைக்கபட்ம் இந்த மையங்களில் ஒவ்வொரு நோய்களுக்கும் பலவீனத்திற்கும் ஏற்ப உணவுமுறை ஆலோசனை,நீராவி குளியல்,முதுகு தண்டுவட குளியல்,மூலிகை மண்சிகிச்சை, எண்ணெய் மசாஜ், யோகா, அக்குபிரஷர் போன்ற சிகிச்சைகள் அளிக்கபடும்.

அத்துடன் உடல் பருமன், மூட்டுவலி, முதுகுவலி நீரழிவு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு, மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மன அழுத்தம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான மசாஜ், நீராவி குளியல், முதுகு தண்டுவடக்குளியல், மற்றும் தோல் ஆரோக்கியமாக – பளபளப்பாக இருக்க நீராவி குளியல், முகத்தில் மசாஜ் மற்றும் மண்சி கிச்சை அளிக்கப்படுகிறது. பாதங்களுக்கும் பாதுகாப்பான சிகிச்சை முறைப்படி அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கெட்ட ரத்தத்தைக் குடிக்க அட்டைப் பூச்சி!


என் வயது 35. கடந்த பத்து வருடங்களாக முழங்கால் வலியால் அவதிப்படுகிறேன். எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் பயன் இல்லை. உள்ளங்காலில் எரிச்சலும், குடைச்சலும் வேறு இருக்கிறது. இதனால் நான் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். தூக்கமின்மையாலும் தவிக்கிறேன். இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா?

உள்ளங்கால் எரிச்சல் என்பது சூடு எனும் குணத்தைக் கொண்ட பித்த தோஷத்தின் சீற்றம், ரத்தத்தில் கலப்பதால் ஏற்படக் கூடும். இந்தக் கலப்பினால் ரத்தம் கெட்டுவிடக் கூடும். அவரைக்காய், நீர் வாழ் பிராணிகளின் மாமிசம், கொள்ளு, புளிப்பான மதுபானம், மோர், தயிர், உணவில் அதிக காரம், புளி, உப்பு ஆகியவற்றின் சேர்க்கை, சாப்பாட்டிற்குப் பிறகு பகலில் படுத்து உறங்குவது, குடையும் காலில் செருப்பில்லாமலும் கடும் வெயிலில் அலைந்து திரிவது போன்ற செய்கைகளாலும், அவ்வாறு அலைந்துவிட்டு உடனே குளிர்பானங்களைக் குடிப்பது ஆகியவற்றால் ரத்தத்தில் பித்த சீற்றம் கூடி எரிச்சலை உண்டாக்குகிறது.

பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்வது, இரு சக்கர வாகனத்தில் குண்டும் குழியுமாக உள்ள பாதைகளில் பயணம் செய்வது, குளிர்ச்சியான நீரில் நீந்துவது, குளிப்பது, கால்களால் அதிகம் மிதித்து தையல் மிஷினில் வேலை செய்வது போன்றவற்றால் இடுப்பிற்குக் கீழே வாயுவின் சஞ்சார விசேஷம் கூடுகிறது.

ஆனால், தமனிகளில் சஞ்சரிக்கும் கேடுற்ற ரத்தத்தினால் வாயுவின் ஓட்டத்திற்குத் தடை ஏற்படுகிறது. அதன் கதி முடக்கம், மூட்டுகளில் வலியும், உள்ளங்கால் எரிச்சலுக்கும் காரணமாகின்றன.

இதற்கு வாத ரத்தம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. முதலில் சருமம், மாம்ஸம் ஆகிய தாதுக்களில் தங்கி உண்டாகும் வாத ரத்தம், உத்தானம் அதாவது வெளிப்படையானது எனப்படும். பிறகு எல்லாத் தாதுக்களிலும் பரவும். இந்த நிலைக்குக் கம்பீரம் அதாவது ஆழ்ந்தது எனப் பெயர்.

இந்நோயில் கெட்டுள்ள ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். காலில் பெருவிரல் பகுதிக்கும் அதற்கு அடுத்துள்ள விரலுக்கும் நடுவே உள்ள பகுதிக்கு க்ஷிப்ர மர்மம் என்று பெயர். அதிலிருந்து 2 அங்குலம் மேலே அட்டைப் பூச்சியை வைத்து கடிக்கச் செய்தால், கெட்ட ரத்தத்தைக் குடித்துவிடும். உடலில் நெய்ப்புத் தரும் நெய் மஜ்ஜை முதலியவற்றைக் கொடுத்து எண்ணெய்ப் பசையை உருவாக்கிய பிறகு, மேற்குறிப்பிட்ட அட்டைப் பூச்சி வைத்தியம் சிறந்தது. கெட்ட ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, ஆயுர்வேத கஷாய மருந்துகளாகிய பலாகுடூதசச்யாதி, கோகிலாக்ஷம், ப்ருகத்யாதி, தசமூலம் போன்றவற்றில் உங்களுக்கு எது உகந்ததோ அதை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

பிண்ட தைலம், மஞ்ஜிஷ்டாதி தைலம் போன்றவை மேல் பூச்சாக உபயோகிப்பது, ஆஸன வாய் வழியாக மலப்பையில் சேர்க்கப்படும் எண்ணெய் வஸ்தி, குடல் கழிவுகளை அகற்றும் கஷாய வஸ்தி, முட்டி வலியைப் போக்கும் ஜடாமயாதி, கொட்டம் சுக்காதி போன்ற மேல்பூச்சு பற்று மருந்துகள், மூலிகைத் தைலத்தைத் தாரையாக முட்டி மற்றும் பாதங்களில் ஊற்றுவது போன்ற சிறப்பான மருத்துவ முறைகளால் நீங்கள் விரைவில் குணம் பெறலாம்.

Saturday, 30 November 2013

அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண்ணுங்க...


உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகம...ாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, ஏப்பம் வந்தால் ஒருவித கெட்ட துர்நாற்றமும் வீசும். இப்படி அடிக்கடி ஏப்பம் விட்டால், யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். ஆகவே பலர் ஏப்பத்தால், சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும் அடிக்கடி ஏப்பம் வந்தால், நமக்கே எரிச்சல் ஏற்படுவதோடு, உடலும் சோர்ந்து விடும். இருப்பினும் இத்தகைய தொடர் ஏப்பத்திற்கு பல்வேறு இயற்கை நிவாரணிகள் உள்ளன. எனவே ஏப்பம் வரும் போது கீழ் கூறியவற்றை முயற்சித்தால், நிச்சயம் ஏப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சரி, அந்த இயற்கை நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

அடிக்கடி ஏப்பம் விட்டு மானம் போகுதா? இத ட்ரை பண்ணுங்க...

குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.

சோடா

அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம்.

புதினா

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீ கூட ஏப்பத்திற்கு நல்ல நிவாரணியாக விளக்கும். அதற்கு ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடியுங்கள்.

சோம்பு

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

சீமைச்சாமந்தி டீ

 
டீயிலேயே ஏப்பத்தை கட்டுப்படுத்துவதில் சீமைச்சாமந்தி டீ தான் பெஸ்ட். எனவே அடிக்கடி ஏப்பம் வந்தால், சீமைச்சாமந்தி டீயை குடியுங்கள்.

செலரி

செலரியை சிறிது வாயில் போட்டு மென்றால், ஏப்பம் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஏலக்காய் டீ

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

குளிர்ந்த பால்

ஒரு கப் குளிர்ந்த பாலை மெதுவாக குடித்து வந்தாலும், ஏப்பம் வருவதை தடுக்கலாம்.

கிராம்பு

ஒரு துண்டு கிராம்பை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

கோதுமை பிரட்

ஒரு துண்டு கோதுமை பிரட் சாப்பிட்டால், அது ஏப்ப பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

எலுமிச்சை ஜூஸ்


எதுவும் முடியவில்லையா, ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

தயிர்

இல்லாவிட்டால், சாப்பிடும் போது ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள், நல்ல மாற்றம் தெரியும்.

வாழ்க்கைப் பாடம்....

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top