.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 29 November 2013

மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!

தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.

டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.

செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.

வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.

கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.

வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.

ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.

திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.

மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...

எமர்ஜென்ஸி ஃபேன்:

டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.

மொபைல் பவர் பேக்-அப்:

மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!

மினி இன்வெர்ட்டர்:


வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.

சோலார் லேம்ப்:

வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை!

குட்டிக்கதைகள்!

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக்
 கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய
 பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய
 இனிப்புகளும் இருந்தது.

அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள்
 எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற
 இனிப்புகள் எல்லாத்தையும்
 எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும்
 அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல
 பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த
 குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண்
 எல்லா இனிப்புகளையும்
 கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.

அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக
 உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள்
 எல்லா இனிப்புகளையும் நம்மிடம்
 தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல்
 அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக்
 கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டா ன்.

நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல்
 நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம்
 காட்டும் அன்பின் மீது சந்தேகம்
 இருந்து கொண்டே இருக்கும்.

இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும்
 இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும்
 பொருந்தும்.

எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத
 அன்பை காட்டுங்கள்.... !!!

வாழ்க்கையைப் வாழ்ந்து பாருங்கள்!

சிறுவன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.

அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான்.

அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.

ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள். ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகை முகங்கள்.

வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.

அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள்.

இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள்.

வாழ்ந்து பாருங்கள்.

உறவு முறை பழமொழிகள்!



அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது

 தந்தை எவ்வழி; தனயன் அவ்வழி

 அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல் நாட்டார்

 தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

அக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு

 அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா எனலாம்.

மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள்

 கணவன்; புல்லானாலும் புருஷன்

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

 பிள்ளை பெறுவதற்கு முன்பே தின்றுபார்

 மருமகள் வருவதற்கு முன்பே கட்டிப் பார்

 பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்

 மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா?

உள்ளூர் மாப்பிள்ளையும் உழுத மாடும் ஒன்று.

நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா!

சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல;

சீரகம் இட்டு ஆட்டாத கறியும் கறியல்ல.

நகைச்சுவை!


 1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?

மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?

கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...

மனைவி: ????

2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.

கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”

மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”

கணவன் :????

3) டீச்சர்: உன்பேருஎன்ன..? -

மாணவி : " சௌமியா"

டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

டீச்சர் : ????

4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

டாக்டர்: ????

5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

மாப்பிள்ளை வீட்டார்:???

6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.

மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.

ஆசிரியர் : ?

7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

ஆசிரியர் : ???

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

வா‌த்‌‌தியா‌ர் : ????

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top