.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 28 November 2013

பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு...

இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலிகள் என்று பெரிய பட்டியலே இருக்கும்... அதில் பூச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டாயம் இடமுண்டு. ஆம்... கரப்பான்பூச்சி, பல்லி, எலி, எறும்பு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் 'ஜீவன்'களின் தொல்லை... தாங்க முடியாத தொல்லையே.

'அடச்சே... என்ன செய்தாலும் இதையெல்லாம் ஒழிக்க முடியலையே' என்று புலம்பிக்கொண்டே இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அவற்றை விரட்டி அடிக்கும் வழிகள்

கெட் அவுட் கரப்பான்பூச்சி!

''பொதுவாக ஈரம், இருட்டுள்ள இடங்களிலும், சமையலறையிலும் கரப்பான்பூச்சியின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லி ஸ்பிரே உள்ளிட்ட ரசாயன பொருட்களை உபயோகித்து விரட்ட முயற்சிக்கும்போது, அந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து... அரிசி, மாவு, மசாலா பொருட்கள் போன்றவை திறந்திருந்தால், அதில் கலந்துவிட அதிக வாய்ப்பு உண்டு. காற்றை கிரகிக்கும் தன்மையுள்ள மாவுப்பொருட்கள், இந்த ரசாயனங்களின் தன்மையை இழுத்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. எனவே, கரப்பான்பூச்சிகளை அழிக்க... ரசாயன ஸ்பிரேக்கள் வேண்டாம்.

தற்போது புதிய வகை ஜெல், சந்தைக்கு வந்துள்ளது. கரப்பான்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இதை பொட்டு போல ஆங்காங்கே வைக்க வேண்டும். நேரம் ஆக ஆக இது இறுகும். உணவு வேட்கையில் வரும் கரப்பான்பூச்சிகளை இந்த ஜெல்லின் நறுமணம் ஈர்க்க, இறுகி இருக்கும் இந்த ஜெல்லை தன் எச்சிலால் அவை இளக்கி சாப்பிட, அந்த நிமிடமே இறந்துபோகும். உடைந்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பொருட்களை அரைத்து, ஊசிப்போக வைத்து, அதனுடன் ரசாயனங்களைக் கலந்து உருவாக்கப்படும் இந்த ஜெல், நம் கிச்சன் பொருட்களைப் பாதிக்காது. மேலும், இதை சாப்பிட்ட உடனேயே கரப்பான்பூச்சி இறந்துபோவதால், மற்ற பொருட்களிலும் ரசாயனங்கள் கலந்துவிடுமோ என்கிற கவலையும் இல்லை.

பை பை பல்லி!
கடைகளில் விற்கும் கெமிக்கல் ஸ்பிரேக்களை பல்லியின் மீது அடித்து, அதை அழித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதை உபயோகிக்கும் நுணுக்கம் அறிந்துகொள்வது அவசியம். பல்லியின் மேல் தோலானது, மெழுகு போன்ற தன்மை கொண்டது என்பதால், நாம் அடிக்கும் ஸ்பிரே அதனை பாதிக்காது. மாறாக, பல்லியின் முகத்துக்கு நேராக கெமிக்கல் ஸ்பிரேவை அடிக்கும்போது, பல்லியின் நாக்கில்பட்டு உட்செல்லும்போது, அது இறந்துபோகும்.

ஒழிக எலி!

சுண்டெலி, மளிகைக் கடைகளில் இருக்கும் எலிகள், பெருச்சாளி என்று எலிகளில் மூன்று வகைகள் உள்ளன. இதில் மளிகைக் கடைகளில் இருக்கும் வகையறா எலிகள், குட்டி போடும் சமயத்தில் மட்டும்தான் ஒரே இடத்திலோ... அல்லது வீட்டிலோ இருக்கும். மற்றபடி எந்த ஓர் இடத்திலும் நிரந்தரமாக இருக்காது. சுண்டெலி, எந்த வீட்டில் இருக்கிறதோ அங்கு மட்டும்தான் நிரந்தரமாகக் குடியிருக்கும். அந்த வீட்டின் ஓர் அறையில் இருந்து மற்றோர் அறைக்கு தாவிக்கொண்டே இருக்கும். பெருச்சாளி வீட்டுக்குள் வராது. வீட்டைச் சுற்றி ஓடும் அல்லது சாக்கடைப் பொந்துகளில் குடியிருக்கும்.

வீட்டில் குடியிருக்கும் சுண்டெலியை விரட்ட, 'கம் பேட்' (Gum pad) என்கிற புதுவித பொறி கடைகளில் கிடைக்கிறது. நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்ததுபோல இருக்கும் இந்த பேட். அதன் மேல் வெள்ளை நிறத்தில் கம் இருக்கும். எலி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் இந்த பேடை வைத்துவிடுங்கள். ஓடி வருகிற எலி இதில் கால் வைக்கும்போது, நகர முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்டுவிடும். காலையில் அப்படியே தூக்கி வெளியே போட்டுவிடலாம். ஒருவேளை இந்த பேடில் உள்ள கம் கீழே கொட்டிவிட்டால்... கெரசின் கொண்டுதான் துடைத்தெடுக்க முடியும். தப்பித் தவறி இதில் கை, கால் என்று நம்முடைய உடல் பாகங்கள் பட்டாலும் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒட்டிக்கொண்டு விட்டால்... நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்தி நீக்கிவிடலாம். பிறகு, சோப்பு கொண்டு உடல்பாகத்தை சுத்தமாக கழுவிவிடுவது முக்கியம். இந்த கம் பேட், இரவு நேர உபயோகத்துக்குத்தான் நல்லது. ஆட்கள் அதிகம் நடமாட்டமிருக்காது என்கிற நிலையில், பகலிலும் பயன்படுத்தலாம். என்றாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதைப்பற்றி அறிவித்துவிடுவது நலம்.

அடுத்ததாக, மளிகைக் கடையில் இருக்கும் எலிகள் வீட்டில் இருந்தால், ஸ்பிரிங் எலிப்பொறி (மர எலிப்பொறியைவிட இது சிறந்தது) வைத்துப் பிடிக்கலாம். ஆனால், எலிகளுக்கு ஞாபகசக்தி அதிகம். முதல் நாள் எலிப்பொறியை பார்த்து அதில் மாட்டாமல் தப்பிவிட்டால், மறுநாள் அந்தப் பக்கம் செல்லாது. எனவே, எலிகள் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றுக்கும் அதிகமான எலிப்பொறிகளை வைத்து, அது எந்தப் பக்கம் நகர்ந்தாலும் மாட்டுவது போல ஏற்பாடுகள் பலமாக இருக்க வேண்டும்.

பெருச்சாளிகள் வீட்டுக்குள் வருவது அபூர்வமே. அதேசமயம், கடைகளையட்டி சர்வசாதாரணமாக நடமாடும். பெருச்சாளிகளைப் பொறுத்தவரை எலி பாஷாணம் ஒன்றுதான் தீர்வு. விஷம் தோய்ந்த சின்ன கேக் வடிவத்தில் இது விற்கப்படுகிறது. பெருச்சாளி நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இதை வைத்துவிட்டால்... உணவுப் பொருள் என்று நினைத்து சாப்பிடும் பெருச்சாளிகள், இறந்துவிடும்.
   
எறும்புத் தொல்லை நீங்க..!

எறும்புத் தொல்லையைத் தவிர்க்க, சாப்பாடு அயிட்டங்கள் கீழே சிதறாமல், இனிப்பு அயிட்டங்களை இறுக மூடி வைத்து, குப்பைக் கூடையை உடனுக்குடன் சுத்தம் செய்து, மில்க் மெயிட், நெய் என பாட்டிலைச் சுற்றி வழிந்திருப்பவற்றை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து... இப்படி கிச்சனை பராமரித்தாலே போதும். ஒருவேளை அதிகமான எறும்புத் தொல்லை இருந்தால், எறும்பு சாக்பீஸ் பயன்படுத்தலாம். கெட்டுப் போன உணவு வகைகளைத் தேடி ஈக்கள், கொசுக்கள் குழுமும் என்பதையும் மனதில் வையுங்கள்.

மூட்டைப்பூச்சியை நசுக்கலாமா?

மூட்டைப்பூச்சியை நசுக்கும்போது, அதன் வயிற்றில் இருக்கும் முட்டைகள் வெடித்து, குட்டிகள் வெளிவந்துவிடும். இதெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாது. எனவே, மூட்டைப்பூச்சியைக் கண்டால் அதை எடுத்து தண்ணீரில் அல்லது எண்ணெயில் போட்டுவிடுங்கள். மூச்சுத் திணறி இறந்துவிடும். பொதுவாக சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் மூட்டைப்பூச்சி அதிகம் இருக்கும். அதுபோன்ற இடங்களுக்கு சென்று வந்த உடன், அந்த உடைகளை வெந்நீரில் மூழ்க வைத்து, துவையுங்கள். மூட்டைப்பூச்சிக்கு ஒரே தீர்வு, அதற்குண்டான ஸ்பிரே மட்டுமே.''

சர்க்கரை நோயாளிகளின் எதிரி மைதா மாவு’ சர்க்கரை நோய் சந்தேகம்!




சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா?

ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் 50 சதவீத வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்ட வயதில் இருந்து 5 முதல் 10 ஆண்டுகள் முன்பாகவே குழந்தைகளுக்கு வந்து விடுகிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?

அதிக சிறுநீர்ப் போக்கு. அதிக தாகம் மற்றும் பசி. மூன்று மாதங்களில் முன்பு இருந்த எடையில் இருந்து 10 சதவீதம் வரை, உடல் எடை இழப்பு. ஆறாத புண், அதிக தூக்கம், பாத எரிச்சல். அத்துடன் கை, கால் குடைச்சல், இடுப்பு வலி, நெஞ்சுவலி, பல்வலி, பல்வேர் வீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, தலைவலி, வலிப்பு நோய், தோள்பட்டை வலி, ஆண் உறுப்பில் தோல் வெடிப்பு, வெள்ளைப்படுதல், படர்தாமரை, அதிக வியர்வை, குதிங்காலில் வலி, முழங்கை வலி, காது நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படும்.


சர்க்கரை நோயை கண்டறிவது எப்படி?

எட்டு மணி நேரம், சாப்பிடாமல் வெறும் வயிற்றில் எடுக்கப்படும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 126 மி.கி., க்கு குறைவாக இருக்க வேண்டும். 82.5 கிராம் "குளுக்கோன் டி’ யை, 300 மி.லி., அளவு தண்ணீரில் கலந்து குடித்து, 2 மணி நேரத்திற்குப்பின் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு, 200 மி.கி.,க்கு குறைவாக இருக்க வேண்டும்.

சாதாரணமான நேரத்தில் பரிசோதிக்கும்போது, சர்க்கரையின் அளவு 180 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். "ஏ 1 சி’ எனப்படும் பரிசோதனையின் அளவு, 6.5 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். இவற்றில், ஏதாவது 2 மட்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுடன், அதிக சிறுநீர் போக்கு, தாகம், பசி, 10 சதவீதத்திற்கும் மேலான எடை இழப்பு ஏற்படுவதன் மூலம் அறியலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மைதா மாவு கூடாது என்கிறார்களே, ஏன்?

மைதா மாவு, கோதுமையில் இருந்து பெறப்படுகிறது. கோதுமையில் உள்ள நார்ச்சத்து முழுவதும், இயந்திரத்தால் நீக்கப்பட்டு, மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதனால், மைதா உணவு வகைகளை சாப்பிட்ட உடன், மிகவேகமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்கிறது. இந்த வேகத்திற்கு, "இன்சுலின்’ ஊசியோ அல்லது மாத்திரையோ ஈடுகொடுக்க முடிவதில்லை. மைதா வகைகளை தவிர்ப்பது நல்லது. மைதாவில் உள்ள "மைக்ரோகிராம்’ அளவு, கெமிக்கல் சர்க்கரை வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் எந்த வகை பழங்களை சாப்பிடலாம்?

ஆப்பிள், மாதுளை, பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு, தர்ப்பூசணி, பேரிக்காய், நாவல்பழம், அத்திப்பழம் போன்றவைகளை சாப்பிடலாம். அதேசமயம் பழச்சாறு குடித்தால், அது உடனே உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதால், தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் நிலக்கடலை, முந்திரி வகைகளை (நட்ஸ்) பயன்படுத்தலாமா?

செரிமானத்தை தாமதப்படுத்துவதன் மூலம், சாப்பிட்ட உடனேயே அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை (30-50 சதவீதம்), அவை குறைக்கின்றன. மேலும், இதில் உள்ள ஆர்ஜினின், இருதயத்திற்கு ஊறு விளைவிக்கும் சி.ஆர்.பி., அளவை குறைக்கிறது. எனவே, அவற்றை பயன்படுத்தலாம். வாரத்தில் 3 நாட்கள், ஒரு கைப்பிடி அளவு வேகவைத்த வேர்க்கடலை, முந்திரி, பாதாம் பருப்பு பயன்படுத்தலாம்.

காபி, டீ- இவற்றில் எது சிறந்தது?

காபி சிறந்தது. டீ விரும்புவோர் எலுமிச்சை டீ அல்லது கிரீன் டி குடிக்கலாம். காலையில் ஒரு கப் காபி, மாலையில் ஒரு கப் டீ, பால் அளவை குறைத்து, எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம். இவை மாரடைப்பு வருவதை தவிர்க்கிறது.

 "ஓட்ஸ்’ சாப்பிடுவது எந்தளவு பலனை தரும்?

 "ஓட்ஸ்’ என்பது அரிசியைப் போல ஒரு தானியமே. ஆனால், அரிசியைப் போல இல்லாமல் கஞ்சி, களி மட்டும் தயாரிக்க முடியும். இவை விரைவில் செரிமானம் ஆகிவிடுவதால் சீக்கிரமே பசியெடுக்கும். எனவே மறுபடியும் சாப்பிட வேண்டியிருப்பதால் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்கும். ஆனால், "ஓட்ஸை’ சிறிது கெட்டியாக செய்து காலை உணவாக சாப்பிடலாம்.

ஆயுளை அதிகரிக்கும் ஆலிவ்..!


சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

 * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

 * உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

 * வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

 * ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

 * சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.

 * துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

 * தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

 * அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.

• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம்
 நீங்கும்.

• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !


nov 28 - ravi url

இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த ‘அம்மாடி; கிளம்புகிறது.

 இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வரை பாதிப்பதின் காரணம் உலக வலை எனப்படும் (www ) இது ஒரு வகையில் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்து ஆக்ஸஸ் செய்யும்படி வடிவமைக்கபட்டிருப்பதால் இதனை அழிக்கவும் உலகம் முழுவதும் எங்கிருந்து வேன்டுமாணாலும் செயல்பட முடியும். இதனால் சர்வர் ஹேக் அல்லது சர்வரை கிராஷும் செய்ய முடியும்.

இதை கவனத்தில் கொண்டு இப்போது WWW இல்லாமல் / சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் – URL இல்லாமல் ஒரு புதுவகை இணைய வழியை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் உருவாக்கியுள்ளது. இது என்ன?

இதன் பேர் பர்ஸூட் இன்டர்னெட். இதுக்கு இணையம் முகவரியான வெப் தள முகவரி அல்லது சர்வர் தேவையில்லை.. சாதாரணமாக இப்போது யாஹூ என்னும் இணையதளத்துக்கு செல்ல நீங்கள்www.yahoo.com என டைப் செய்தால் அதன் யூஆர் எல் என்னும் யூனிவர்ஸல் ரிஸோர்ஸ் லொக்கேட்டர் அந்த முகவரிக்கு தேடி எடுத்து செல்லும். அங்கே சர்வர் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களின் தேடுதல் அது இன்டர்னெட் பாக்கெட்களாய் மாறி அங்கே போகும். இது தலையை சுத்தி மூக்கை தொடுவது போல் ஆகும்.

நிறைய பேர் நினைக்கிறார்கள்www.XXXX.in போட்டால் இந்தியாவிலே இந்த சர்வர் இருக்கிறது என்று ஆனால் இந்த முகவரிக்கு கூட அமெரிக்காவில் தான் அனேக சர்வர் இருக்கும் என்று பலருக்கு தெரிவதில்லை. இது இந்தியாவின் வியாபாரம் செய்கிறேன் என்ற‌ இணைய அடையாளதுக்கு மட்டும் தான் இந்த முகவரி. இந்த பர்ஸூட் இன்ட்டர்னெட் கிட்ட தட்ட டோரன்ட் வகையில் தான் வேலை செய்யும் இதில் உள்ள பாக்கெட் wwwஎன்று இல்லாமல் தேவையான ஆட்களுக்கு மட்டும் செல்லும்.

அது போக தேடு வரிசையில் உலகில் எங்கு எங்கு இதை தேடுகிறார்களோ அவர்களுக்கு காட்டும் முறை இந்த எளிய முறை வீடியோவை பார்த்தால் இது எவ்வளவு பாதுகாப்பு மற்றும் வேகம் என உணர்வீர்கள். இது இருந்தால் இந்தியன் ரயில்வே – இந்திய அரசின் இணையசேவைகள் சாரி ஓவர் லோடு அல்லது 404 எரர் காட்ட சான்ஸ் இல்லை. இதயெல்லாம் விட முக்கியமாக உளவு / களவு நிறைய குறையும் சான்ஸ் மற்றும் இணைய வேகம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.

– Video Link -

http://vimeo.com/37299318

உலகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற நடன வகைகள்!!!

நம்மில் பல பேருக்கு உணர்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது நடனம். மேலும் நம்முடைய சந்தோஷம், காதல், காயம் மற்றும் வலி போன்ற உணர்வுகளையும் அது வெளிப்படுத்த உதவும். ஒரு வகையில் புத்துணர்ச்சி பெறவும் பொழுதை போக்கவும் நடனம் பயன்படுகிறது. இசைக்கு பிறகு நம்மை சாந்தப்படுத்தி அமைதி படுத்த இன்னொன்றால் முடியும் என்றால் அது தான் நடனம்.

இந்த உலகத்தில் பல வகையான நடனங்கள் உள்ளது. ஒவ்வொரு சாதியும் பண்பாடும் தனக்கென ஒரு வகையான நடனத்தை உருவாக்கியுள்ளது. நடனத்தால் பல வகையான நாட்டுப்புற பண்பாடுகள் பிரபலமடைந்துள்ளது. அதன் விளைவாக அதனை உலகத்தில் பலரும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இவ்வகையான பல நடனங்கள் புகழை பெற்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி புகழை பெற்று உலகம் முழுவதும் அதனை பின்பற்றுவதால் இனி எந்த ஒரு நடனமும் ஒரு தனிப்பட்ட இடத்தை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதே போல் ஒவ்வொரு நடனத்தின் ஸ்டைல்களையும் எங்கிருந்து வேண்டுமானாலும் கற்று கொள்ளும் வசதியும் இப்போது வந்து விட்டது.

உலகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற நடன வகைகள்!!!

ஹிப்-ஹாப், கிளாசிகள், சல்சா, பெல்லி, பாலே என எண்ணிலடங்கா பல வகை நடனகள் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி வருகிறது. நம் நாட்டையே எடுத்துக் கொள்வோம்; பரதநாட்டியம், கத்தக், ஒடிஸி, குச்சிப்பிடி, கத்தக்களி என பல வகைகள் உள்ளது. இது போக புகழ் பெற்ற குத்து டான்ஸை யாரும் மறக்க முடியாது. இப்படி ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக விளங்குகிறது.
   
ஹிப்-ஹாப் நடனம்

புகழ் பெற்ற நடன வகையான இதனை ஸ்ட்ரீட் டான்ஸ் (தெரு நடனம்) என்றும் அழைக்கின்றனர். 1970-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் ஹிப் ஹாப் இசை கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்டதே இவ்வகை நடனம். இவ்வகை நடனம் இன்று உலகத்தில் உள்ள அனைவராலும் பழகி ஆடப்படுகிறது. லாகிங் மற்றும் பூப்பிங் நடன ஸ்டைல்கள் இந்த நடனத்திலேயே அடங்கும். ஹிப்-ஹாப் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ஆடும் நடனமாக புகழ் பெற்று விளங்குகிறது.

சல்சா

ஈர்ப்புள்ள ஆற்றல் நிறைந்த இவ்வகை நடனம் முதன் முதலில் க்யூபாவில் தான் தொடங்கிற்று. இன்று ஒவ்வொரு இளம் ஜோடிகளும் இவ்வகை நடனத்தை விரும்பி ஆடுகின்றனர். காதல், மனக்கிளர்ச்சி மற்றும் உணர்ச்சிகளை மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்த உதவும் இந்நடனம். ஜோடிகள் ஆடும் இந்நடனம் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது. லத்தீன் அமெரிக்க இசையோடு மிகவும் பொருத்தமாக அமையும் இந்த நடனம். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அனைத்து இசை வகைகளுக்கும் இந்த நடனம் ஆடப்படுகிறது.

கத்தக்

இந்திய நடனக் கலையான கத்தக், மேலோங்கி ஈடுகொடுக்கும் ஒரு நடன வகையாகும். தென் இந்திய மாநிலங்களில் உருவாக்கப்பட்ட இவ்வகை நடனம் இந்தியாவில் உள்ள 8 கிளாசிகள் நடன வகைகளில் ஒன்றாகும். இந்நடனம் அதன் தோரணைகள் மற்றும் முத்திரைகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. பண்டைய காலங்களில் கதைகள் மற்றும் புராணங்களை விளக்க இவ்வகை நடனம் பயன்படுத்தப்பட்டது. மிகவும் கடினமான இந்த நடனத்தில் தேர்ச்சி பெற தீவிரமான பயிற்சி தேவைப்படும். இந்த நடனத்திற்கு பல பரீட்சைகளும் உள்ளது. இந்த நடனத்தில் தேர்ச்சி பெற பல வகையில் உள்ள இந்த தேர்வுகளில் தேற வேண்டும். பொதுவாக இந்திய கிளாசிக் இசையோடு கத்தக் நடனம் ஆடப்படும்.

பெல்லி நடனம்

கவர்ச்சிகரமான பெண்கள் ஆடும் இந்த நடனம் மேற்காசிய நாடுகளில் உருவாக்கப்பட்டது. ப்கழ் பெற்ற நடன வகைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இவ்வகை நடனத்தில் உடம்பில் உள்ள அத்தனை பாகங்கள் ஈடுபட்டாலும் கூட இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படும். முதலில் இவகை நடனம் எல்லோராலும் அங்கீகாரப் படுத்தப்படவில்லை. இருப்பினும் காலப்போக்கில் இது அனைவராலும் ஏற்கப்பட்டு விட்டது. சரியான நேரத்தில் சரியான அசைவுகளை கொடுக்க வேண்டியுள்ளதால் பெல்லி நடனம் என்பது லேசுபட்டதில்லை.

லைன் நடனம்

இவ்வகை நடனம் கண்டுப்பிடிக்கப்பட்டு நீண்ட காலமாகவில்லை. இவ்வகை நடனத்தில் ஒரு குறிப்பிட்ட நடன அசைவுகளை நடன கலைஞர்கள் ஒரு கோட்டில் நின்று ஆடுவார்கள். இவ்வகை நடனம் அவர்களால் தினமும் கூட ஆடப்படுகிறது. இவ்வகை நடனத்தை ஏரோபிக்ஸ் மற்றும் ஜூம்பா போன்ற நடனங்களை போல உடற்பயிற்சி மற்றும் உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தலாம்.

இவைகள் போக, இன்னமும் கூட புகழ் பெற்ற நடன வகைகள் இருக்கத்தான் செய்கிறது. பீ பாயிங், டாப் நடனம், பாலே மற்றும் புகழ் பெற்ற கங்க்னம் ஸ்டைல் நடனம் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். இவ்வகை நடனங்கள் அனைத்துமே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும். அதனால் உங்களை நற்பதத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திடும். இதில் ஏதாவது சிலவற்றை அல்லது அனைத்தையுமே ஆடினால், உங்கள் மனதும் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

நடனம் என்பது தூய்மையான ஒரு கலையாகும். அதனை இதயத்திலிருந்து ரசித்து அனுபவிக்க வேண்டும். நீங்கள் ஆடினால் அமைதியில் கிடைக்கும் ஆனந்தத்தை விட உங்கள் இதயம் கண்டிப்பாக ஆனந்தமாக இருக்கும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top