சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.
• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம்
நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.