.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 28 November 2013

வாழ்வின் சிறப்பு!

1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு.

2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு.

3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு.

4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு.

5. எது நடந்தாலும் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது சிறப்பு.

6. உன்னைப்போல் பிறரையும் நேசித்து வாழ்வது சிறப்பு.

7. ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாக
சேமித்து வைப்பது சிறப்பு.

8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் உன்னிடம் உள்ளதை வைத்து மனதிருப்தியுடன் வாழ்வது சிறப்பு.

9. அதிகமாக ஆசைப்படாமலும், கோபப்படாமலும், கவலைப்படாமலும் வாழ்வது சிறப்பு.

10. பிறர் நம்மீது வைத்திருக்கும் பாசம், நம்பிக்கையை சீர்கெடாமல் வாழ்வது சிறப்பு.

11. மனபலத்தையும், உடல் பலத்தையும் பாதிக்கும்
தீய செயல்களைச் செய்யாமல் வாழ்வது சிறப்பு.

12. தீயவர்களுடன் சேராமலும், நல்லவர்களுடன் நட்புறவு கொள்வது சிறப்பு.

13. அனைவரிடமும் அன்புடனும், பணிவுடனும், புன்னகையுடனும் பழகுவது சிறப்பு.

14. பிறரை ஏமாற்றாமலும், பிறரிடம் ஏமாறாமலும் வாழ்வது சிறப்பு.

15. தீயது என தெரிந்ததை செய்யாமலும், நல்லது
என அறிந்ததை துணிவுடன் செய்து
நல்ல மனசாட்சியுடன் வாழ்வது சிறப்பு.

127 ஆண்டுகால தயாரிப்பு இரகசியத்தை பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கும் 'கோக்கோ கோலா

 

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.

இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ஒர் பெருந்தொகையை கோக்கோ கோலா நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்றும் ஒருவர் மிரட்டல் விடுத்தது நினைவிருக்கலாம்.

1886ம் ஆண்டு தொழில் முறையாக தொடங்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள கோக்கோ கோலா நிறுவனம் 1910ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது.

மெல்ல, மெல்ல அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு குளிர்பானங்களின் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக கோக்கோ கோலா இன்றளவும் திகழ்கிறது. உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக அடையாளப் பெயராக 2011ம் ஆண்டு கோக்கோ கோலா தேர்வு செய்யப்பட்டது.

கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறிந்த சங்கதிதான். ஆனால், அட்லாண்டாவில் உள்ள தொழிற்சாலையில் உச்சகட்ட லேசர் விளக்குகளின் பாதுகாப்பில் அந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த பாதுகாப்பு பெட்டகத்தை தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோக்கோ கோலா பிரியர்கள் கண்டு களைப்பு நீங்கி, களிப்படைந்து வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு...

 * வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.

 * முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.

 * ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.

 * மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள்.

 * வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது.

 * எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம், அவர்களின் உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது.

 * வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு செல்வதே பாதுகாப்பானது". இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால், அவர்களைப் பார்த்து கூச்சல் போடக் கூடாது.

ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்கலாம். அதனால் மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்து விட்டு, பின் அவர்கள் கவனம் மாறும்போது வெளியே தப்பி வந்து சத்தம் போடலாம். அவர்களின் பலம் தெரியாமல் அவர்களைத் தாக்க முயற்சிப்பது மிகப் பெரிய தவறு.

நோய்களை குணப்படுத்தும் 'தொழுகை' - இஸ்ரேல் - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


 குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல் அவீவ், யாபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல் அவீவ், யாபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.

குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார்.

65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு...

இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலிகள் என்று பெரிய பட்டியலே இருக்கும்... அதில் பூச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டாயம் இடமுண்டு. ஆம்... கரப்பான்பூச்சி, பல்லி, எலி, எறும்பு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் 'ஜீவன்'களின் தொல்லை... தாங்க முடியாத தொல்லையே.

'அடச்சே... என்ன செய்தாலும் இதையெல்லாம் ஒழிக்க முடியலையே' என்று புலம்பிக்கொண்டே இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அவற்றை விரட்டி அடிக்கும் வழிகள்

கெட் அவுட் கரப்பான்பூச்சி!

''பொதுவாக ஈரம், இருட்டுள்ள இடங்களிலும், சமையலறையிலும் கரப்பான்பூச்சியின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லி ஸ்பிரே உள்ளிட்ட ரசாயன பொருட்களை உபயோகித்து விரட்ட முயற்சிக்கும்போது, அந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து... அரிசி, மாவு, மசாலா பொருட்கள் போன்றவை திறந்திருந்தால், அதில் கலந்துவிட அதிக வாய்ப்பு உண்டு. காற்றை கிரகிக்கும் தன்மையுள்ள மாவுப்பொருட்கள், இந்த ரசாயனங்களின் தன்மையை இழுத்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. எனவே, கரப்பான்பூச்சிகளை அழிக்க... ரசாயன ஸ்பிரேக்கள் வேண்டாம்.

தற்போது புதிய வகை ஜெல், சந்தைக்கு வந்துள்ளது. கரப்பான்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இதை பொட்டு போல ஆங்காங்கே வைக்க வேண்டும். நேரம் ஆக ஆக இது இறுகும். உணவு வேட்கையில் வரும் கரப்பான்பூச்சிகளை இந்த ஜெல்லின் நறுமணம் ஈர்க்க, இறுகி இருக்கும் இந்த ஜெல்லை தன் எச்சிலால் அவை இளக்கி சாப்பிட, அந்த நிமிடமே இறந்துபோகும். உடைந்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பொருட்களை அரைத்து, ஊசிப்போக வைத்து, அதனுடன் ரசாயனங்களைக் கலந்து உருவாக்கப்படும் இந்த ஜெல், நம் கிச்சன் பொருட்களைப் பாதிக்காது. மேலும், இதை சாப்பிட்ட உடனேயே கரப்பான்பூச்சி இறந்துபோவதால், மற்ற பொருட்களிலும் ரசாயனங்கள் கலந்துவிடுமோ என்கிற கவலையும் இல்லை.

பை பை பல்லி!
கடைகளில் விற்கும் கெமிக்கல் ஸ்பிரேக்களை பல்லியின் மீது அடித்து, அதை அழித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதை உபயோகிக்கும் நுணுக்கம் அறிந்துகொள்வது அவசியம். பல்லியின் மேல் தோலானது, மெழுகு போன்ற தன்மை கொண்டது என்பதால், நாம் அடிக்கும் ஸ்பிரே அதனை பாதிக்காது. மாறாக, பல்லியின் முகத்துக்கு நேராக கெமிக்கல் ஸ்பிரேவை அடிக்கும்போது, பல்லியின் நாக்கில்பட்டு உட்செல்லும்போது, அது இறந்துபோகும்.

ஒழிக எலி!

சுண்டெலி, மளிகைக் கடைகளில் இருக்கும் எலிகள், பெருச்சாளி என்று எலிகளில் மூன்று வகைகள் உள்ளன. இதில் மளிகைக் கடைகளில் இருக்கும் வகையறா எலிகள், குட்டி போடும் சமயத்தில் மட்டும்தான் ஒரே இடத்திலோ... அல்லது வீட்டிலோ இருக்கும். மற்றபடி எந்த ஓர் இடத்திலும் நிரந்தரமாக இருக்காது. சுண்டெலி, எந்த வீட்டில் இருக்கிறதோ அங்கு மட்டும்தான் நிரந்தரமாகக் குடியிருக்கும். அந்த வீட்டின் ஓர் அறையில் இருந்து மற்றோர் அறைக்கு தாவிக்கொண்டே இருக்கும். பெருச்சாளி வீட்டுக்குள் வராது. வீட்டைச் சுற்றி ஓடும் அல்லது சாக்கடைப் பொந்துகளில் குடியிருக்கும்.

வீட்டில் குடியிருக்கும் சுண்டெலியை விரட்ட, 'கம் பேட்' (Gum pad) என்கிற புதுவித பொறி கடைகளில் கிடைக்கிறது. நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்ததுபோல இருக்கும் இந்த பேட். அதன் மேல் வெள்ளை நிறத்தில் கம் இருக்கும். எலி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் இந்த பேடை வைத்துவிடுங்கள். ஓடி வருகிற எலி இதில் கால் வைக்கும்போது, நகர முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்டுவிடும். காலையில் அப்படியே தூக்கி வெளியே போட்டுவிடலாம். ஒருவேளை இந்த பேடில் உள்ள கம் கீழே கொட்டிவிட்டால்... கெரசின் கொண்டுதான் துடைத்தெடுக்க முடியும். தப்பித் தவறி இதில் கை, கால் என்று நம்முடைய உடல் பாகங்கள் பட்டாலும் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒட்டிக்கொண்டு விட்டால்... நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்தி நீக்கிவிடலாம். பிறகு, சோப்பு கொண்டு உடல்பாகத்தை சுத்தமாக கழுவிவிடுவது முக்கியம். இந்த கம் பேட், இரவு நேர உபயோகத்துக்குத்தான் நல்லது. ஆட்கள் அதிகம் நடமாட்டமிருக்காது என்கிற நிலையில், பகலிலும் பயன்படுத்தலாம். என்றாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதைப்பற்றி அறிவித்துவிடுவது நலம்.

அடுத்ததாக, மளிகைக் கடையில் இருக்கும் எலிகள் வீட்டில் இருந்தால், ஸ்பிரிங் எலிப்பொறி (மர எலிப்பொறியைவிட இது சிறந்தது) வைத்துப் பிடிக்கலாம். ஆனால், எலிகளுக்கு ஞாபகசக்தி அதிகம். முதல் நாள் எலிப்பொறியை பார்த்து அதில் மாட்டாமல் தப்பிவிட்டால், மறுநாள் அந்தப் பக்கம் செல்லாது. எனவே, எலிகள் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றுக்கும் அதிகமான எலிப்பொறிகளை வைத்து, அது எந்தப் பக்கம் நகர்ந்தாலும் மாட்டுவது போல ஏற்பாடுகள் பலமாக இருக்க வேண்டும்.

பெருச்சாளிகள் வீட்டுக்குள் வருவது அபூர்வமே. அதேசமயம், கடைகளையட்டி சர்வசாதாரணமாக நடமாடும். பெருச்சாளிகளைப் பொறுத்தவரை எலி பாஷாணம் ஒன்றுதான் தீர்வு. விஷம் தோய்ந்த சின்ன கேக் வடிவத்தில் இது விற்கப்படுகிறது. பெருச்சாளி நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இதை வைத்துவிட்டால்... உணவுப் பொருள் என்று நினைத்து சாப்பிடும் பெருச்சாளிகள், இறந்துவிடும்.
   
எறும்புத் தொல்லை நீங்க..!

எறும்புத் தொல்லையைத் தவிர்க்க, சாப்பாடு அயிட்டங்கள் கீழே சிதறாமல், இனிப்பு அயிட்டங்களை இறுக மூடி வைத்து, குப்பைக் கூடையை உடனுக்குடன் சுத்தம் செய்து, மில்க் மெயிட், நெய் என பாட்டிலைச் சுற்றி வழிந்திருப்பவற்றை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து... இப்படி கிச்சனை பராமரித்தாலே போதும். ஒருவேளை அதிகமான எறும்புத் தொல்லை இருந்தால், எறும்பு சாக்பீஸ் பயன்படுத்தலாம். கெட்டுப் போன உணவு வகைகளைத் தேடி ஈக்கள், கொசுக்கள் குழுமும் என்பதையும் மனதில் வையுங்கள்.

மூட்டைப்பூச்சியை நசுக்கலாமா?

மூட்டைப்பூச்சியை நசுக்கும்போது, அதன் வயிற்றில் இருக்கும் முட்டைகள் வெடித்து, குட்டிகள் வெளிவந்துவிடும். இதெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாது. எனவே, மூட்டைப்பூச்சியைக் கண்டால் அதை எடுத்து தண்ணீரில் அல்லது எண்ணெயில் போட்டுவிடுங்கள். மூச்சுத் திணறி இறந்துவிடும். பொதுவாக சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் மூட்டைப்பூச்சி அதிகம் இருக்கும். அதுபோன்ற இடங்களுக்கு சென்று வந்த உடன், அந்த உடைகளை வெந்நீரில் மூழ்க வைத்து, துவையுங்கள். மூட்டைப்பூச்சிக்கு ஒரே தீர்வு, அதற்குண்டான ஸ்பிரே மட்டுமே.''

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top