.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 27 November 2013

கூகுள் பற்றி நீங்கள் அறியாதவை..

இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக்கொள்ளுவது கூகுள் பற்றி தான்.கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் கூகுள்.

இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.


1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).

2. கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.

3. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது.

4. ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது.

5. ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட் (Paul Buchheit). இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற "Don't be evil" என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர்.

6. கிராண்ட் சென்ட்ரல் (GrandCentral) என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தி, கூகுள், கூகுள் வாய்ஸ் (Google Voice) என்ற சேவையைக் கொண்டு வந்தது.

7. கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது.

8. இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.

தொண்டைச் சளிக்கு ஓமம்!


ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?

சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு உங்களுக்குக் கூடுவதால், மூக்கிலிருந்து நீராகவும், தொண்டைக் கபம், தும்மல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஐந்தும், வெற்றிலையுடன் சேர, இந்தக் குணங்களுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, கபத்தைக் குறைக்கின்றன.

மேலும் இவை அனைத்தும் பசியைத் தூண்டிவிடுவதால் உங்களுடைய செரிமானத்தின் தாமதம் விரைவில் குணமாகிவிடும். இவை மூலம் உட்கொண்ட உணவு செரித்துவிடுவதால் அகம் மலர்கிறது. செரிப்பைத் துண்டுவதாலேயே சீரகத்திற்கு, சீர்அகம் என்று பெயர். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகம் சாப்பிட்டால் வெகுட்டல், உமட்டல், வயிற்று உப்புசம், உளைச்சல், வயிற்று கனம் முதலிய ஜீரண உபாதைகள் நீங்கும்.

உண்ட களைப்பு நீங்க, வாயில் நீரூற்று நிற்க 5, 6 சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது வழக்கம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நுரைத்த கபத்துடன் காணும் இருமல் முதலியவற்றில் இது நன்கு உதவும். வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள விதை.

ஓமம் கபத்தைப் பிரித்து நாட்பட்ட இருமல், மூச்சிரைப்பு, கபம் வெளிவருவதற்காகக் கடுமையாக இருமுவது, இருமி இருமிக் கடைசியில் மிகக் கஷ்டப்பட்டுச் சிறிது கபம் வெளியாவது போன்ற கஷ்டங்களை நீக்கிவிடும். ருசியின்மை, பசி மந்தம், ஜீரண சக்திக் குறைவு, வயிற்று உப்புசம், வயிறு இறுகி கட்டிக் கொள்ளுதல், வயிற்று வலி, கிருமியால் வேதனை போன்றவற்றிற்கு ஓமமும் உப்பும் சேர்த்த சூரணத்தைச் சாப்பிடும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் கிராமங்களில் பழக்கத்திலுள்ளது.

பாவபிராகர் எனும் முனிவர் கிராம்பைப் பற்றி வெகுவாகப் புகழ்கிறார். காரமும் சிறிது கசப்பும் நிறைந்த அது, எளிதில் செரிப்பது. கண்களுக்கு நல்லது, குளிர்ச்சியானதாக இருந்தாலும் ருசி, பசியைத் தூண்டிவிட்டு கப பித்த ரத்த உபாதைகளை அகற்றக் கூடியது; மூச்சிரைப்பு, இருமல், விக்கல், க்ஷயரோகங்களை நீக்கக் கூடியது என்று தெரிவிக்கிறார். தன்வந்தரி நிகண்டுவில் இதயத்திற்கு நல்லதும், பித்தத்தைக் குறைப்பதும், விஷத்தை முறிக்கக்கூடியதும், விந்துவை வளர்ப்பதும், மங்களகரமானதும், தலையைச் சார்ந்த உபாதைகளை நீக்கக் கூடியது என்றும் கிராம்புவைப் பற்றி மேலும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏலக்காய் ருசி, பசி, ஜீரணச் சக்தி தரும். உடற்சூட்டைப் பாதுகாக்கும். வாயில் நீர் ஊறுதல், நாவறட்சி, வியர்வையுடன் கூடிய தலைவலி, வயிற்றில் கொதிப்பு, மலத்தடை, காற்றுத்தடை, வாந்தி, உமட்டல், சிறுநீர்ச் சுருக்கு, உஷ்ணபேதி, நெஞ்சில் கபக்கட்டு உள்ள போது ஏலத்தின் விதையைச் சுவைக்கலாம்.

வெற்றிலை, உணவிற்குப் பின் வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும், உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிப் பின் உபயோகிப்பர்.

அதனால் இவற்றை உபயோகித்து நீங்கள் விரைவில் கபத்தின் உபாதையிலிருந்தும், மந்தமான பசியிலிருந்தும் விடுபடலாம்.

விறு விறு வேகத்தில் விக்ரம் பிரபு!

 

அறிமுகமான 'கும்கி' படத்தில் நடித்து ஆஹா என பெயர் வாங்கினார் விக்ரம் பிரபு.

தற்போது விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேற மாதிரி ' டிசம்பர் 13ல் ரிலீஸ் ஆகிறது. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணனின் அடுத்த படம் என்பதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து விக்ரம் பிரபு இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் 'அரிமா நம்பி' படத்தில் ப்ரியா ஆனந்துடன் நடிக்கிறார்.

'தூங்கா நகரம்' கௌரவ் இயக்கும் 'சிகரம் தொடு' படத்தில் மோனல் கஜ்ஜாருடன் டூயட் பாடிக்கொண்டிருப்பவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

'கழுகு', 'சிவப்பு' படங்களை இயக்கிய சத்யசிவா அடுத்து இயக்கும் 'தலப்பாகட்டி' படத்தில் விக்ரம் பிரபுதான் ஹீரோ. 'ஹரிதாஸ்' இயக்குநர் ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கும் அடுத்த படத்திலும், எழில் இயக்கும் அடுத்த படத்திலும் விக்ரம் பிரபு நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் வாய்ப்புகளால் உற்சாகத்தில் இருக்கிறார் விக்ரம் பிரபு. கமிட் ஆன படங்களை சீக்கிரம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் விறு விறு வேகத்தில் பயணிக்கிறார்.

தெரிந்துகொள்ளுங்கள் - 1

* இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.

*  ஆறு கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்குப் பெயர்தான் தென்றல்.

*  கரடியின் கர்ப்பகாலம் ஆறு மாதங்கள்.

*  வைரத்துக்கு ஆறு பட்டைகள் தீட்டப்படுகின்றன.

*  நீரைவிட ஆறு மடங்கு அடர்த்தி உள்ளது இரத்தம்.

*  கழுகால் ஆறு கி.மீ. தூரம் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்க முடியும்.
 
*   தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

*  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சொந்த ஊர் உத்தமதானபுரம் (தஞ்சை மாவட்டம்).

*  தமிழ்நாட்டில் பத்திரிகை காகித நிறுவனம் உள்ள ஊர் } காகிதபுரம், திருச்சி மாவட்டம்.

*  சென்னை மாவட்டத்தில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் சி.வி.தாமோதரம் பிள்ளை என்பவர்.

*  டில்லியை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவிராஜ் சவுஹான்.

*  ஆங்கிலத்தில் பல நாடகக் காவியங்களைப் படைத்த ஷேக்ஸ்பியருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

*  இங்கிலாந்து அரசியின் காருக்கு நம்பர் பிளேட் கிடையாது.

*  ஒட்டகம் பத்து நிமிடத்தில் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

*  உலகிலேயே சினிமா தியேட்டர்கள் இல்லாத நாடு சௌதி அரேபியா.

* உலகிலேயே அதிகமான மக்களால் பேசப்படும் மொழி சீனம். சீனாவின் மக்கள் தொகையே இதற்குக் காரணம் என்றாலும் ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள பல நாடுகளிலும் சீன மொழி பேசும் மக்கள் பரவியிருக்கிறார்கள்.

* இருமொழி தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் வாதம்ஷோல்ஸ் என்ற அமெரிக்கர் ஆவார். 1867-ம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது.

*   சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.

*  ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

*  வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.

*  மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.

*  பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.

*  உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.

*  சுறா மீனின் கண்கள் இருட்டில்கூட பளிச்சென்றே இருக்குமாம்.

*  திமிங்கிலம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. தன் குட்டிகளுக்கு தாய் திமிங்கிலம் நேரடியாகப் பால் ஊட்டுவதில்லை. கடல் நீரிலேயே பாலைச் சுரந்துவிடும். குட்டிகள் நீரிலிருந்து தாய்ப் பாலை மட்டும் பிரித்து அருந்திப் பசியாறுமாம்.

சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.

* ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

* வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.

* மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.

* பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.

* உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.

வந்தே விட்டது நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ!




வோலோகாப்டர் விசி 200……. கடைசியில் வந்தே விட்டது பேட்டரி ஹெலிக்காப்டர் – குழந்தைங்க விளையாடறது இல்லை உண்மையிலே இரண்டு பேர் போற ஹெலிக்காப்டர். சுத்தமா சத்தமே கேட்காது – புகை மாசு கிடையாது. செங்குத்தாக மேலே எழும்பும் கீழே இறங்கும். இதை வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் மாதிரி வச்சி ஆப்பரேட் பண்ணினா ஓகே

இபபோதைக்கு 1 மணி நேர சிங்கிள் சார்ஜ்ல போறது போல பண்ணியிருக்காங்க. அடுத்து 6 மணி நேரம் வரை பறக்க வைக்க ரெடி பண்றாங்க.

இதில் அதிக செலவு வைக்கும் பொருட்களும் இல்லை – அதே சமயம் லைட் கார்பன் பாடியில செஞ்ச இது அனேகமா 5 லட்சத்துக்குள்ளத்தான் ஆகும்னு நல்ல தெரிஞ்சவங்க சொல்றாங்க என்ன ஹாட்டு மேட்டர் தானே….. இந்த வீடியோக்களை  பாருங்க…..

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top