
"நம் திரைப் படங்களிலும் தொலைக்காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் பின்பக்கத்தில் உதைப்பது, கஷ்கத்தைச் சொறிவது, ஒருவர்மேல் ஒருவர் துப்பிக் கொள்வது போன்ற அநாகரிகமான காட்சிகள் இப்போது மலிந்து வருகின்றன. எமிலிபோஸ்ட் மாதிரி பொதுவாழ்வில் நாகரிக நடைமுறைக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன
பொது வாழ்வில் நடத்தையை நாகரிகம், அநாகரிகம், ஆநாகரிகம் என மூன்று வகையாகப் பிரித்துக் குறிப்பிட்டிருக்கிறார்
உதாரணம்: 1.பொது இடத்தில் மூக்கை, காதை, பல்லை நோண்டாமல் இருப்பது நாகரிகம். நோண்டுவது அநாகரிகம். நோண்டுவது மட்டுமின்றி, விளைவை உருட்டி ஆராய்வது ஆநாகரிகம்!
2.புருவம், காது, மூக்கு உரோமங்களைச் சீராக வெட்டி வைத்திருப்பது நாகரிகம். வெட்டாமல், காடாக வளர்ப்பது...