சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்..
சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள்.
பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக மனதில் நின்றாள்.
எந்தன் நெஞ்சை வென்று சென்றாள் - பின்
எதற்கும் இல்லை ஈடு என்றாள்..
என்னை விட்டு நீங்கி செல்லா, பிள்ளை தந்து
எனக்கும் ஒரு தந்தை என்ற பெயரை தந்தாள்..
எந்தன் உயிர் போகும் வரை
உந்தன் உயிர் நான் தான் என்றாள்.
எந்தன் தாயை நானும் கண்டேன் உந்தன் வடிவில்..
ஏனோ நானும், உந்தன் தந்தை போல, மாறிவந்தேன்.
மங்கை உன்னை கண்டபின்பு மாந்தனாக மாறிவந்தேன்
மண்ணாக மாறிவிட்டேன்..
உன் கண்ணாக ஆகி விட்டேன்...
மாறாத காதல் கொண்டு,
தீராத ஆசைக்கொண்டு மணவாளன் ஆகி விட்டேன்,
பின் உன் உயிராக மாறிவிட்டேன்...