.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 25 November 2013

கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்! மாணவர் சாதனை!


நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய தேவையை மனதில் வைத்து எழுதியதுபோல, இளமை ததும்பும் திருக்குறளை, சாதனை முயற்சியாகப் பலரும், பலவிதங்களில் சோதித்துப் பார்த்து விட்டனர். 3 வயது சிறுவன் அனைத்து திருக்குறளையும் மனப்பாடமாகக் கூறுகிறான். அரிசியில் ஒரு திருக்குறளை எழுதுகிறார் என அடிக்கடி திருக்குறளை வைத்து சாதனை செய்யும் திறமைசாலிகள் ஆங்காங்கே உருவெடுத்த வண்ணமே உள்ளனர்.

இதே திருக்குறளை, கோவை கற்பகம் மேலாண்மைக் கல்லூரி மாணவர் எம்.மணி, சற்று வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார். மனதின் எண்ணங்களை கண்ணாடியாய் காட்டுவது திருக்குறள் என்றால், இவர் எழுதிய திருக்குறள்களோ, கண்ணாடி இருந்தால் மட்டுமே படிக்க முடியும்.

இதென்ன புது முயற்சி என்று கேட்டால், 1330 குறள்களையும் தலைகீழாய், அதாவது கண்ணாடியின் பிம்பங்களாக வடித்துள்ளார் இந்த இளைஞர். இது சாதாரணமாகச் செய்துவிட முடியாத காரியம். ஒரு சிறிய உதாரணம், நமது பெயரை அல்லது ஒரு எழுத்தைத் தலைகீழாய் எழுத முடியுமா என்ற சோதனை செய்தால், பல காகிதங்கள் கிழிக்க வேண்டியிருக்கும்.

ஒரு எழுத்து தலைகீழாய் அதாவது பிம்பமாக எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தாலே குழப்பம் வந்துவிடும். தட்டுத்தடுமாறி ஒரு எழுத்தை எழுதி முடித்தாலும் அது அலங்கோலமாக, குறிப்பிட்ட அளவில் அமைந்துவிடாது. ஆனால் இவரது இன்னொரு முயற்சி என்னவென்றால் ஒரு திருக்குறளுக்கான இடத்தை 5 சென்டிமீட்டர் (நீளம்) X அரை சென்டிமீட்டருக்குள் (அகலம்) அடக்கி விட்டார். ஒரு முழு சார்ட் காகிதத்தில் கால்பாகம் மீதமிருக்கையிலேயே, அத்தனை திருக்குறளையும் எழுதி முடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். 1330 குறள்களுக்கும் இவர் எடுத்துக்கொண்டது 10 மணி நேரம் மட்டுமே. இளமைத் திருக்குறளுக்கு தலைகீழாய் புது வடிவம் கொடுத்துள்ள மணியிடம் இதுகுறித்து பேசினோம்.

‘எனது சொந்த ஊர் சேலம் அடுத்த ஆத்தூர். தந்தை முத்துச்சாமி, தாயார் மலர்க்கொடி, கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுவயது முதலே வித்தியாசன முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்ளும் பழக்கம் வந்தது. திருக்குறள் வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் 10-ம் வகுப்பு படிக்கும்போது, அத்தனை குறள்களையும் நேராக எழுதினேன். பின்பு, தலைகீழாய் எழுத பயிற்சி எடுத்தேன். இப்போது, இப்படியும் வேகமாக எழுதக் கற்றுக்கொண்டேன்’ என்கிறார்.

தனது தமிழ் ஆர்வத்தால் ஏற்பட்ட முயற்சி, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, இன்று இவருக்குக் கைகூடியிருக்கிறது. இதை சாதனைக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப் போவதாகக் கூறுகிறார்.

தற்போது ஆத்திச்சூடியை இந்த முறையில் எழுதி வருகிறார். கிரிக்கெட் நாயகன் சச்சினின் வரலாறும், இவரது கையால் தலைகீழாக்கப்பட இருக்கிறதாம்.

இவரது முயற்சியை ஊக்குவித்துவரும் துறை இயக்குநர் சந்திரசேகர் கூறியதாவது: சமீபத்தில் தேசிய கீதத்தை ஒருவர் தலைகீழாய் எழுதியது குறித்து நாளிதழில் செய்தி வந்தபோதுதான், மணியின் திறமை குறித்து நாங்கள் அறிந்தோம். கல்லூரி சார்பில், மேலும் ஊக்குவித்து, அடுத்த கட்டத்துக்கும் இதனைக் கொண்டு செல்வோம் என்றார்.

தமிழ் எழுத்தை நேராக எழுதவே பலரும் படாதபாடுபடும் இந்தக் காலத்தில், தமிழை நேசித்து, அதனைப் புதுவிதமாய் சுவாசிக்கும் இவரது முயற்சி வரவேற்கப்பட வேண்டியது.

மயிர் முளைச்சான்' தெரியுமா?


இதைப் படித்தவுடனே சிலருக்கு ''என்ன தீயச்சொல் எல்லாம் பேசுகிறீர்கள்?'' எனக் கேட்க தோன்றும். இல்லை, இது தீயச்சொல் அல்ல. 'மயிர் முளைச்சான்' என்பது ஒருவகை பழமாகும்.

 இப்பழம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவைத் தாயிடமாகக் கொண்டுள்ள பழமாகும்.

தென்கிழக்கு ஆசியாவில், இப்பழம் மிகவும் பெயர்ப்போனது. காய் பருவத்தில் பச்சை நிறத் தோலைக் கொண்டிருக்கும். பழுத்தப் பழத்தின் வெளிப்புறம் சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களிலான தோலைக் கொண்டு அமைந்திருக்கும். இப்பழத்தின் தோல் முழுக்க முழுக்க மயிரால் சூழப்பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். உட்புறத்தில் வெண்ணிற சுளை இருக்கும்.

இனிப்பான சுவையைக் கொண்ட இப்பழத்தை 'Rambutan' என்பார்கள். அச்சொல் மலாய் மொழியில் இருந்து தருவிக்கப்பட்ட ஒரு சொல்லாகும். மலாய் மொழியில் 'Rambutan' என்றால் 'மயிருடையவன்' எனப் பொருள்படும்.
 
 மலேசியாவில் வாழும் தோட்டப்புற தமிழர்கள் இன்னமும் இப்பழத்தை 'மயிர் முளைச்சான்' என்றழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னமும் சிலர், இச்சொல்லைத் தீயச்சொல் என்று கூறி புறந்தள்ளுவது உள்ளத்தை நோகடிக்க செய்கிறது.

உங்களுக்கு எப்படி? 'மயிர் முளைச்சான்' என்றழைப்பதற்கு ஏதும் வருத்தங்கள் உள்ளதா? கருத்துகளை இடவும்.

இப்பழத்தை குந்தளப் பழம் என்றும் அழைப்பார்கள். அதாவது 'குந்தளம்' என்றால் மகளிர் தலை மயிர் எனப் பொருள்படும்.

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது உண்மையான காரணம் இதுதான்!

 

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?

இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

 இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான்

 குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

வள்ளுவர் வாக்கு!

யானென தன்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்


உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன் வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.


விளக்கம்: வாழ்வியல் சுகங்கள் மீதும் இந்த உடல் மற்றும் உயிர் மீதும் அதீத ஆசைகளைக் கொண்டிருந்தால் அவற்றை விட்டு மீள முடியாது. இறப்பிற்கு பின்னும் ஆத்மா இந்த பூலோக ஆசைகள் மீதே சஞ்சரித்துக் கிடக்கும். பிறகு நிம்மதியான பிரபஞ்சத்தோடு கலக்க முடியாமல் மீண்டும் விட்டுப் போன இடத்தைத் தேடி ஆத்மா வந்தடையும். இது ஆத்மா சாந்தியடையும் நிலையினைக் கெடுத்துவிடும்.


அவ்வாறு உடல், பொருள்கள் மீது எனது என்று பற்று வைக்காமல் நான் என்பது ஆத்மா தான். உடலும் பொருளும் நாம் வாழ உதவும் ஒரு கருவியே என்று மனதார நினைத்துக் கொண்டால், இறப்பிற்குப் பின்னும் ஆத்மா வாழ்ந்து வந்த பொருள்கள் மீது ஆர்வம் கொள்ளாது கற்ப்பனைக் கெட்டாத இந்த பரந்த பிரபஞ்சத்தில் சஞ்சாரித்து அதனுடன் கலந்துவிடும்.


இந்த பக்குவம் ஒரே நாளில் வந்து விடாது. தினம் தினம் நாம் ஆத்மா என்பதை யார் ஒரு முறையேனும் தியானிக்கிறார்களோ அவர்களுக்கு மெல்ல மெல்ல கைகூடும். இன்பமும் துன்பமும் ஒன்றாகும். ஆத்மா சமநிலை அடையும். காலம் கடந்த பின் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நிம்மதியான மேலுலகம் அடைவார்கள்.


இதையே வள்ளுவர் இரண்டடிகளில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.



ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற்று வந்த சீடன் ஒருவனுக்கு தேகாபிமானம் மட்டும் குறையவே இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆசையும் கூடவே பயணித்தது.


உயிர் மீது கொள்ளும் ஆசை உடலைக் காக்கச் சொல்லும். உடல் மீது கொள்ளும் ஆசை அதனைக்காக்கும் பொருட்டு பொருளீட்ட வைக்கும். பொருளீட்டத் துவங்கினால் அதற்கு எல்லையே இல்லாமல் போகும். விரும்பியதை அடைய முற்படுவதிலேயே பவகாரியங்களும் தோன்றிவிடுகிறது. இத்தகைய ஆசைகள் முடிவற்றவை. எனவே பற்றுதல் அற்று இரு என்று சீடனுக்கு எவ்வளவோ போதித்தும் அவன் கேட்கவில்லை. சரியான தருணம் வரும் போது அவனுக்கு உணர்த்தலாம் என்று குரு காத்திருந்தார்.


ஒரு முறை குருவும் சீடர்களும் கடுமையான குளிர் பிரதேசத்திற்குச் சென்றார்கள். அங்கே வெட்ட வெளியில் சீடர்களை அமரவைத்தார் குரு. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகமாகிக் கொண்டே இருந்தது.


எல்லோரும் அமைதியாக இருந்த நிலையில், தேகத்தின் மீது பற்றுதல் கொண்ட சீடன் கேட்டான் "குருவே, குளிர் இன்னும் அதிகமானால் என்ன செய்ய?"


குரு கூறினார் "கைகளை தேய்த்து முகத்தில் ஒற்றிக்கொள்"


"குருவே! குளிர் அதை விட அதிகம் என்றால்?"


"ஒரு கம்பளி எடுத்து போர்த்திக் கொள்?"


"கம்பளி போர்த்தியும் தாங்க முடியாத குளிர் என்றால்"


"நெருப்பை மூட்டி கதகதப்பாய் இரு"


"குருவே! நெருப்புக்கும் அடங்காத குளிர் என்றால்?"


"உறைந்து போ!" என்றார் குரு.


உணர்ந்து கொண்டான் சீடன். உடலைப் போர்த்தியிருந்த மொத்த ஆடைகளைகளையும் களைந்து பனியில் அமரலானான்.7D78Q8UZUG6X

டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாய்ப்பு!

nov 25 - vazhikatti madras-high-court

தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செய்ல்பட்டு வரும் சென்னை ஹைகோர்ட்டில்ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

பணிவாரியான காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள் 268

01. Personal Assistant to the Hon’ble Judge – 57

02. Personal Assistant – 07

03. Assistant – 37

04. Computer Operator – 28

05. Typist – 139

வயதுவரம்பு: 22.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:


01. Personal Asst பணிக்கு Written Examination, Skill test and Oral Test.

02. Asst & Computer operator பணிக்கு Written Examination and Oral test.

03. Typist பணிக்கு Written Examination & Skill test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:

பணி 1 க்கு ரூ. 15,600 – 39,100 + Grade Pay ரூ. 5400

பணி 2 க்கு ரூ. 9,300 – 34,800 + Grade Pay ரூ. 4,600

பணி 3 க்கு ரூ. 5,200 – 20,200 + Grade Pay ரூ. 2600

பணி 4 க்கு ரூ. 5,200 – 20,200 + Grade Pay ரூ. 2800

பணி 5 க்கு ரூ. 5200 – 20,200 + Grade Pay ரூ. 2400

தேர்வுக் கட்டணம்: ரூ.150

விண்ணப்பிக்கும் முறை
: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013

வங்கிகள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.12.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top