.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 26 November 2013

தமிழர் கல்யாணத்தில் தாலிக்கொடி!

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ”பண்பாட்டு அசைவுகள்” என்ற புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்:

    *
      1. தாலி – என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.
    *
      2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
    *
      3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!
    *
      4. ‘கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது’ – வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.
    *
      5. ‘பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை’ – பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.
    *
      6. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.
    *
      7. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
    *
      8. கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.
    *
      9. இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.
    *
      10. பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது
    *
      11-ஆம் நூற்றாண்டில் கச்சியப்பரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தில் தான் திருமணத்தின்போது தாலி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தாலி கட்டிய பின் நாய் போல் நடத்துவதற்கும், நாய்க்கு தாலி கட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?... பாருங்கள் மணமகனின் மகிழ்ச்சியை!!??

தாலி கட்டிய பின் நாய் போல் நடத்துவதற்கும், நாய்க்கு தாலி கட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?... பாருங்கள் மணமகனின் மகிழ்ச்சியை!!??

பழந்தமிழர் யார்? அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப் பற்றி நமக்கென்ன கவலை. அது இன்று அறிவுக்குப் பொருந்துமா? என்று கேட்டு, தாலி அடிமையின் சின்னம் என்றார் தந்தை பெரியார்.

பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் ஆதிக்க (male chauvanism) செயற்பாடாக தற்போது சில முற்போக்கு எண்ணமுடையவர்களினால் பார்க்கப்படுகிறது.

இப்படி பல விடயங்கள் வரலாற்றில் உள்ளபோதும் அவற்றை எல்லாம் ஒரு அறிவுக்காக அறிந்து கொண்டு  நாம் இப்போ  நிகழ்கால நிகழ்வுக்கு வருவோம்.

தற்போது கல்யாணத்திற்கு தாலிக்கொடி செய்வதை ஒரு போராட்டம் என்றே கருதவேண்டும். காரணம்

    அவர் 10 பவுனில் போட்டுவிட்டார் நான் 15 பவுனில் போடவேண்டும்…

என்னும் வறட்டுக் கெளரவம்  படியேறிப்  படியேறி  தற்போது 50 பவுனில் வந்து நிற்கின்றது. இதைவிட இன்னுமொரு ஆச்சரியப்பட வைக்கும் விடயம், சிலர் பேரப்பிள்ளையையும் கண்டபின், தமது பழைய தாலியை புதுப்பித்து 50 பவுணில் பெருப்பித்து கட்டுவதுதான்!

இன்னும் ஒரு விடயம், சிலர் தமது மகளின் கல்யாணத்திற்கு என்று வெளிநாட்டில் இருந்து இந்தியா சென்று, மகளுக்கு தாலி கட்டுவதுடன், தாய் தானும் ஒரு புதுத்தாலி கட்டி வருபவர்களும் இருக்கின்றனர்!

இங்கு மற்றொரு விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது தமிழ் நாட்டில் என்னதான் பணக்காரர்கள் என்றாலும் அவர்கள் மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அப்போதுதான் மூன்று முடிச்சு போடமுடியும்! எப்படி இலங்கையில் பவுனில் தாலிக்கொடி கட்டும் வழக்கம் வந்ததோ தெரியவில்லை.

ஒருவிதத்தில் பார்த்தால் தாலியோ, நகைகளே ஒருவகையில் சொத்துச்  சேர்ப்பது  போன்றதுதான். ஒரு அவசரத்திற்கு உடனே காசாக்கல்லாம். இலங்கையில் கையில் காசில்லாத போர் சூழலில் உள்ள மக்கள் தமது நகைகளையும், ஏன் தாலிக்கொடியையும் விற்று தமது அன்றாட செலவை செய்தனர்.

இதைவிட சமுகத்தில் ஒரு அந்தஸ்த்து என சம்பத்தப்பட்டவர்கள் கருதுவதும், அழகு என எண்ணுவதும் காரணமாக இருக்கல்லாம். பார்ப்பதற்கு கண்ணுக்கு நிறைந்த காட்சியும் தானே!

பலனுள்ள பன்னிரண்டு!

நாம் மற்றவர்களிடம் பழகும் போது எப்படி நடந்து கொள்கிறோம், நமது உடல் பாஷைகள், பேசும் விதம் ஆகியவற்றைக்கொண்டே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்கிறார்கள். குறிப்பாக நாம் ஒரு வேலைக்குச் செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நமது நடை உடை பாவனைகள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியும் தோல்வியும் அமையும். இது நாம் நடைபயில முயற்சிப்பது போலத்தான். உங்களைப் பின்பக்கமாக நடந்து போகச் சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும்? அது போலத்தான் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி அவர்களுடன் உறவாட வேண்டும் என்பதான பயிற்சியும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவதற்கு முன்னால் என்னவெல்லாம் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது? இதோ 12 மோசமான பழக்கங்கள்:

1. மற்றவர்களிடம் பேசும்போது அவர்களை நேராகப் பார்க்காமல் நிலத்தைப் பார்த்துப் பேசுவது. யாருடன் பேசுகிறோமோ அவர்களது கண்ணை நேராகப் பார்த்துப் பேசும்போதுதான் நமது வார்த்தைகளிலுள்ள உண்மையையும் நேர்மையையும் அடுத்தவருக்குப் புரியவைக்க முடியும். அதற்காக அவர்களை முறைத்துப் பார்க்கக் கூடாது.

2. நிற்கும்போதோ உட்காரும்போதோ நேராக இல்லாமல் வளைந்து கூனியிருப்பது. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் மற்றவர்களை உங்கள் பால் ஈர்க்க அவசியம். அது உங்களுக்கு உங்கள்மேல் உள்ள தன்னம்பிக்கையைக் காட்டும்.

3. முகத்தைச் சிடுசிடுவென வைத்துக்கொண்டு முறைப்புடன் பேசுவது. இது யாருக்குமே பிடிக்காது, உங்களுக்கு பேசப் பிடிக்கவில்லையானால் அவர்களுடன் பேசுவதைத் தவிருங்கள், பேசும்போது முகத்தில் ஒரு புன்னகையைத் தவழவிடுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுவதோடு உங்களோடு உறவாடுபவருக்கும் ஒரு உற்சாகத்தை அளிக்கும்.

4. யாராவது புதியவர்களைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொள்வது. உங்கள் பெற்றோர்கள் உங்களது சிறு வயதில் புதியவாராக யாராவது இருந்தால் அவருடன் பழகாதே என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் நீங்கள் இப்பொது வளர்ந்து விட்டிர்கள். யாருடன் பேசும்போதும் நீங்கள் என்ன பேசுவது என்று பேசத் திணறாமல் அவர்களுடன் சரளமாக உரையாடுவது உங்களது உறவுகளை மேம்படுத்தும். சந்திப்பவர்கள் பரிச்சயமில்லாதவராக இருந்தாலும் கூச்சமில்லாமல் பேசப் பழகுங்கள்.

5. நீங்கள் மற்றவர்களது மனதில் ஏற்படுத்தும் முதல் முத்திரைதான் உங்களோடு உறவாடுபவர்களது நினைவில் எப்போதும் நிலைத்து நிற்கும். அதை வைத்துத்தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். அதனால் முதல் சந்திப்பிலேயே மற்றவர்களைக் கவருமாறு நடந்துகொள்வது மிகவும் அவசியம்.

6. மிகவும் சங்கோஜத்துடன் அதிகமாகப் பேசாமலிருப்பது. வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் மற்றவர்களிடம் உறவாடும்போது நன்கு சகஜமாகப் பேசத் தெரிய வேண்டும். எண்ணங்களைத் தங்குதடையில்லாமல் வெளிப்படுத்த வேண்டும். அதற்காக வளவளவென்று பேசி 'இவன் எப்போது வாயை மூடுவான்' என்று மற்றவர்கள் நினைக்கும்படி செய்யக் கூடாது. வார்த்தைகளை அளந்து சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அழகாகப் பேச வேண்டும். அசந்தர்ப்பமாக ஏதாவது பேசி, தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடாது. முக்கியமாக நீங்களே உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். மனதில் தோன்றுவதை யெல்லாம் கண்டபடி உளறக் கூடாது.

7. மற்றவர்கள் பேசும்போது அவர்கள் பேச்சில் கவனமில்லாமல் இருப்பது. அடுத்தவர்கள் பேசும்போது காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் பேசும்போது எங்கோ கவனத்தைச் செலுத்திவிட்டு, அவர்கள், 'நான் சொல்வது சரிதானே' என்று கேட்கும்போது என்ன சொன்னார்கள் என்றுகூடத் தெரியாமல் விழிக்கக் கூடாது. அவர்களைப்பற்றி உங்களுக்கு ஏதும் அக்கறையில்லை, 'மனுஷன் மகா போர்' என்று நினைத்தால் ஏதோ பரவாயில்லை. ஆனால் முக்கியமான அலுவலக அதிகாரியிடமோ அல்லது மிகவும் வேண்டியவருடனோ பேசும்போது மனதை அங்கும் இங்கும் அலைய விடதீர்கள். கேட்கும் விஷயத்தில் கவனமாக இருங்கள்!

8. சொந்தக்காரர்களுடன் அல்லது நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்லோரிடமும் நல்ல உறவு வைத்திருக்க அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது அவசியம். அவ்வப்போது அவர்களது பிறந்த நாள், மணநாள் இவைகளைக் குறித்து வைத்துக்கொண்டு, வாழ்த்துத் தெரிவித்து, அவர்களுடன் ஏதாவது வகையில் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அதற்காக தினமும் பேச வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் ஒருவர் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு அவ்வப்போது நினைவு படுத்திக்கொண்டிருந்தால் சரி!

9. உற்சாகமில்லாமல் சோர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் இருக்கும் சூழ்நிலை இறுக்கமாக இருக்கும்போது அந்த இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு நல்ல உற்சாகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லையென்றால் அதற்குப் பிறர் மீது பழிபோடுவதில் பயனில்லை. நிலைமையை சரிப்படுத்த நீங்கள் ஏதாவது செய்யுங்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் அதைப்பற்றி யாருக்கும் அக்கறையிருக்காது. ஒரு வேளை உங்கள் அம்மாவைத் தவிர!

10. மற்றவர்களோடு கலகலப்பாய் இல்லாமல் உம்மனாமூஞ்சியாய் இருப்பது அடுத்தபடி தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் நீங்கள் ஒரு ஜாலியான மனிதர் என்று எண்ணும்படியாக இருக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களோடு சேர்ந்து பேசி வாழ்க்கையை உற்சாகமாகச் செலவிடுங்கள்!

11. உங்களுக்குள்ள பயத்தையும் தயக்கத்தையும் வெளிக்காட்டாதீர்கள். முக்கியமாக, புதிய நண்பர்களைச் சந்திக்கும்போது, உயர் பதவியில் இருப்பவர்களுடன் பேசும்போது, நேர்முகத் தேர்விற்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

12. விடாப்பிடியாகத் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நினைப்பது. எப்போதும் திறந்த மனதோடு இருங்கள் உங்களைச் சுற்றிப் பல மதத்தினர், வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், கொள்கையில் மாறுபட்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் மனக்கசப்போ அல்லது வேறுபாடோ இருந்தால் சுமுகமாகப் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்.

Monday, 25 November 2013

நெய் மைசூர் பாக் - சமையல்!




தேவையான பொருட்கள்:
========================

கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - இரண்டு கப்
நெய் - ஒண்ணேகால் கப்
முந்திரி பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
அரை கப் - நீர்

செய்முறை:
===========

* கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து  வறுத்து வைக்கவும்.

*  சர்க்கரையை நீர் சேர்த்து கலந்து பாகு தயாரிக்கவும்.

* பாகின் பதம் பார்க்க சிறிது  பாகை எடுத்து அதை குட்டி பந்து போல் உருட்ட முடிந்தால் அதுவே சரியான பதம்.

* மெது மெதுவாக மாவை சேர்த்து கட்டி உருவாகாமல் கலக்கவும்.

* ஒன்று சேர்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் எடுத்து வைத்து மீதம் உள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும்.

* slow flame மில் வைத்து கிளறவும்.

* தனியாக எடுத்து வைத்த நெய்யை ஒரு பாத்திரத்தில் முழுவதும் படுமாறு தடவவும்.

* கிளறிய பாகை நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி சமமாக பரப்பி விடவும்.

* நன்றாக ஆறியதும் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.

* சுவையான நெய் மைசூர் பாக் தயார்.


குறிப்பு:
=======

சர்க்கரை பாகின் பதம் சரியாக வரவில்லை என்றாலோ,மாவு சரியாக இல்லைஎன்றாலோ சுவையும் பதமும் சரியாக வராது.முதன் முறையாக செய்கிறீர்கள் என்றால் மிகவும் சிறிய அளவில் செய்து பார்க்கவும்.

சிறுபட்ஜெட்டில் படம் எடுக்கப்பபோவதாக இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு!

 




 பெரிய படங்களை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்த இயக்குநர்கள் பிரம்மாண்ட இயக்குனர்கள் என முத்திரையுடன் தொடர்ந்து பெரும் பொருட்செலவிலேயே படங்களை எடுப்பார்கள் ஆனால் செல்வராகவனோ இதில் மாறுபட்டு குறைந்த செலவில் படம் எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்

 இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்களில் மிக அதிக  பொருட் செலவில் உருவான படம்  தற்போது வெளியாகியுள்ள ‘இரண்டாம் உலகம்’.  அகும். இதற்கு முன்னதாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் படமாக்கியிருந்தார்,

இந்நிலையில், ‘இரண்டாம் உலகம்’ படத்தைத் தொடர்ந்து சிறு பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக செல்வராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அடுத்ததாக ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கப் போகிறேன். ஆக்ஷன் என்றதும் பெரிய பட்ஜெட் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். சிறு பட்ஜெட்டிலேயே இந்த படத்தை எடுக்கப் போகிறேன் என்றார்.

பாலிவுட் செல்கிறாரா அஜித்?

 

'பில்லா'வைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தீபாவளிக்கு ரிலீஸான இப்படம் 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

அஜித் நடிக்கும் 'வீரம்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்போதே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'ஆரம்பம்' படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து நடிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். 'துப்பாக்கி'. 'ரமணா' படங்களின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய்குமாருக்கு 'ஆரம்பம்' ரீமேக்கில் நடிக்க ஆசையாம்.

இந்நிலையில், 'ஆரம்பம்' படம் பார்த்த ஷாருக்கான், இயக்குநர் விஷ்ணுவர்தனை மனம் திறந்து பாராட்டினாராம். ''படம் பிரமாதம். நீங்கள் விரும்பினால் இந்தியில் ரீமேக் செய்யுங்கள். நானே ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று ஷாரூக், விஷ்ணுவர்தனிடம் கூறி இருக்கிறார்.

அதோடு, தமிழில் அஜித் நடித்த வேடத்தில் ஷாருக்கானும், ராணா நடித்த வேடத்தில் அஜித்தும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியில் ஷாரூக் நடித்த 'சாம்ராட் அசோகா' படத்தில் அஜித்தும் நடித்திருந்தார். இப்போது ஷாரூக்கும், அஜித்தும் இணைந்து நடித்தால் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top