.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 24 November 2013

பால்கி டைரக்ஷனில் அக்ஷரா நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது -கமல்ஹாசன்!

 

பால்கி டைரக்ஷனில் அக்ஷரா நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

பேட்டி

கோவாவில் நடந்த சர்வதேச படவிழாவுக்கு வந்த நடிகர் கமல்ஹாசன், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திரையுலகில் என் மூத்த மகள் சுருதிஹாசன் அந்தஸ்து எப்படி அமையும்? என்று நான் கவலைப்பட்ட காலம் முடிந்து விட்டது. இனி, அவரைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தென்னிந்திய திரையுலகிலும், இந்தி பட உலகிலும் சுருதி பல்வேறு டைரக்டர்களிடம் பணிபுரிந்து இருக்கிறார். 10 படங்களில் நடித்து இருக்கிறார்.

அவர் வேலையை அவர் சிறப்பாக செய்கிறார். சுருதி பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்.

அக்ஷரா

பா படத்தின் டைரக்டர் ஆர்.பால்கியின் அடுத்த படத்தில்,  அக்ஷரா நடிப்பது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். (இந்த படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.) அக்ஷராவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுருதி, அக்ஷரா இரண்டு பேரிடமும் என் கருத்துக்களை திணிப்பதில்லை. நடிப்பு, அவர்கள் ரத்தத்தில் இருக்கிறது. அவர்கள் இருவருக்குமே நான் எந்த பயிற்சியும் அளிப்பதில்லை. அவர்களின் வளர்ச்சியில் என் பங்களிப்பு எதுவும் இல்லை.

விஸ்வரூபம்-2

விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன. அனைத்து கட்சியினரும் இந்த படத்தை வரவேற்பார்கள். முன்பு நடந்தது போன்ற சம்பவங்கள் எதுவும் இந்த படத்தில் இருக்காது.

விஸ்வரூபம் படத்தின் ஒரு பகுதி அமெரிக்காவில் நடப்பது போல் இருந்தது. அதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள்!

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே'' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை தயவுசெய்து உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடு வேன்’ என்று மிரட்டும்.

6.குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்கடீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறி னால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7.குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8.குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதாஎ ன்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க..


1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்டாடும் தமிழன் இருக்கும்வரை ஒருகோடி ஆண்டுகளானாலும் இச்சமூகம் உருப்படப்போவதில்லை.

2.உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா ரிஜக்ட் ஆகிடும்..

3.ஓட்ஸ் சாப்பிட்டா உடம்பு குறையுதாம், எனக்கென்னமோ ஓட்ஸ் தான் குறையர மாதிரி இருக்கு

4.மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவி கழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க

5.டாஸ்மாக்கை நடத்தும் அரசு விவசாயத்தையும் ஏற்று நடத்தலாம்..

6.ரெண்டு வீலுக்கும் MRF டயர் போட்டாலும்... பிரேக் புடிச்சாதான் வண்டி நிற்கும்!!

7.படிச்ச ஃபார்முலா, தியரம் எல்லாம் பார்க்கிற உத்தியோகத்துல யூஸ் பண்ணனும்'னா வாத்தியார் வேலைக்கு தான் போகணும்

8.படைப்பை விமர்சிக்க படைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சிறந்த ரசனையாளனாய் இருந்தால் போதும்.

16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்!


 குறிப்பு: இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இதோ 16 வகையான செல்வங்கள்

1. புகழ் 2. வெற்றி 3. பணம் (பொன்), 4. இரக்கம் 5. அறிவு

6. அழகு 7. கல்வி 8. நோயின்மை 9. வலிமை 10. நல்விதி

11. உணவு 12. நன் மக்கள் 13. பெருமை 14. இனிமை 15. துணிவு 16. நீண்ட ஆயுள்


16 செல்வங்களைப் பெரும் வழிகள்

1. புகழ் :

யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.

2. வெற்றி

 வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. பணம் (பொன்)

செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.

4. இரக்கம்
 இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. இது தான் இன்றைய நிலை. அன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர் இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்போல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.

5. அறிவு

 கல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.

6. அழகு

 பார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் 'தாங்கள் அழகில்லையே' என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.சில வகை அழகுகள் இதோ ! குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல.

7. கல்வி

 கல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம். அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.

8. நோயின்மை

 நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். 'நோயின்மை' ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.

9. வலிமை
 உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.

10. நல்விதி

 நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.'விதி' என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.

11. உணவு

 உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளா வேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும்.

12. நன் மக்கள்

 பொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும். தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.

13. பெருமை

 பிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால் 'தற்பெருமை' என்பது அறவே விரும்பத் தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.

14. இனிமை

 பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

15. துணிவு
 துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.

16. நீண்ட ஆயுள்

 மேற்கூறிய எல்லா (15) செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும்.

உலகில் விளையாடப்படும் சில விசித்திரமான விளையாட்டுக்கள்!!!

உலகில் எத்தனையோ விளையாட்டுக்கள் உள்ளன. அனைத்து விளையாட்டுக்களுமே ஒரே மாதிரியானதாக இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதே சமயம் உலகில் சில விசித்திரமான விளையாட்டுக்களும் உள்ளன. அத்தகைய விளையாட்டுக்களை அனைவரும் விளையாட முடியாது. துணிச்சல் உள்ளவர்கள் தான் விசித்திரமான விளையாட்டுக்களை விளையாட முடியும்.

அப்படி துணிச்சல் இருப்பவர்கள் தான் சாதனைப் படைக்க வேண்டுமென்று பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள். சிலருக்கு துணிச்சல் இருந்தும் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருப்பார்கள். மேலும் சிலர் தம்மிடம் இருக்கும் துணிச்சலால், விசித்திரமான பல விஷயங்களில் ஈடுபடுவார்கள். அப்படி உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்து, விளையாட்டிலேயே விசித்திரமானதை முயற்சி செய்ய நினைத்தால், தமிழ் போல்ட் ஸ்கை உலகில் உள்ள சில விசித்திரமான விளையாட்டுக்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளது.

எண்ணெய் மல்யுத்தம் (Oil Wrestling)

எண்ணெய் மல்யுத்தம் என்பது, எண்ணெய் தடவிக் கொண்டு வட்டத்தில் நின்று ஒருவரை ஒருவர் பலத்தால் வட்டத்தை விட்டு வெளியே தள்ளுவதாகும். சாதாரணமாக ஒருவரை பிடித்து தள்ளுவதே கஷ்டமாக இருக்கும். இதில் எண்ணெய் தடவிக் கொண்டு எப்படி தள்ள முடியும் என்று யோசித்து பாருங்கள்.

போ ஸ்டிக்ஸ் (Pooh sticks)


இதுவும் விசித்திரமான மற்றும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுப் போல் இருக்கும். இருப்பினும் இதையும் உலகில் உள்ள மக்கள் விளையாடுகின்றனரே! அது என்னவென்றால், இந்த விளையாட்டில் பாலத்தில் நின்று கொண்டு ஒரு குச்சியை கீழே விட வேண்டும். அப்படி நின்று கொண்டு விடும் போது, யாருடையது முதலில் விழுகிறதோ, அவர்கள் தான் வெற்றி பெற்றவராக அர்த்தம்.

பெட் ரேசிங் (Bed Racing)

பெட் ரேசிங் என்பதும் உலகில் விளையாடப்படும் ஒரு வித்தியாசமான விளையாட்டு. இந்த விளையாட்டில் படுக்கையில் ஒரு படுத்திருக்க, அவரை தள்ளிக் கொண்டு ஓட வேண்டும்.

ஜார்ப்பிங் (Zorbing)

இந்த விளையாட்டு எப்படி விளையாட வேண்டுமென்றால், ட்ராண்ஸ்பரண்ட் பிளாஸ்டிக் பந்தின் உள்ளே ஒருவர் உள்ள இருக்க, அவர்களை மேடுகளில் இருந்து கீழே தள்ள வேண்டும். இதில் யார் முதலில் கீழே வருகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார். இது உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.

ஜார்ப்பிங் (Zorbing)

இந்த விளையாட்டு எப்படி விளையாட வேண்டுமென்றால், ட்ராண்ஸ்பரண்ட் பிளாஸ்டிக் பந்தின் உள்ளே ஒருவர் உள்ள இருக்க, அவர்களை மேடுகளில் இருந்து கீழே தள்ள வேண்டும். இதில் யார் முதலில் கீழே வருகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார். இது உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.

மனைவியை தூக்கிக் கொண்டு ஓடுவது (Wife Carrying)


இந்த விளையாட்டில் மனைவியை தூக்கிக் கொண்டு, பல்வேறு இடங்களில் ஓர வேண்டும். அது வறண்ட இடமாகவோ அல்லது மண் அதிகம் உள்ள இடத்திலோ அல்லது நீர் நிறைந்த இடங்களாகவோ இருக்கலாம். இதுவும் மிகவும் நன்றாக இருக்கும்.

கர்னிங் விளையாட்டு (Gurning Game)

இந்த விளையாட்டு அவ்வளவு பெரிய விசித்திரமானதாக இல்லாவிட்டாலும், அந்த விளையாட்டில் ஒருவர் எந்த அளவில் தனது முகத்தை மிகவும் கேவளமாக வெளிப்படுகிறாரோ, அவரே வெற்றியாளராவார். இந்த விளையாட்டில் வீட்டில் உள்ளோருடன் கூட விளையாடலாம்.

போஸாபால் (Bossaball)


உண்மையிலேயே இது மிகவும் விசித்திரமான மற்றும் கொஞ்சம் கஷ்டமான விளையாட்டும் கூட. ஏனெனில் இந்த ஒரு விளையாட்டில் பல விளையாட்டுக்கள் கலந்திருக்கும். அதில் கைப்பந்து, கால் பந்து, ஜிம்னாஸ்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆடையில்லாமல் விளையாடுவது (Nude Sports)

இந்த விளையாட்டு ரொம்பவே வித்தியாசம்பா. எப்படியெனில், விளையாடும் போது ஆடையே இல்லாமல் விளையாடுவது. இருப்பினும் இந்த விளையாட்டை உலகில் சில இடங்களில் விளையாடுகின்றனர். ஏனெனில் இப்படி விளையாடுவதால், ஆடையுடன் விளையாடும் போது கிடைக்கும் எனர்ஜியை விட, ஆடையில்லாமல் விளையாடும் போது அதிக அளவில் கிடைக்கிறதாம். 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top