.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 24 November 2013

இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுக !

இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலும், மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஆட்சிப் பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதிக்கான குறியீடு இரண்டு ஆங்கில எழுத்துக்களாக முதலில் இடம் பெறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலம் / ஆட்சிப்பகுதிக்கான குறியீடு தரப்பட்டுள்ளன.

■அருணாசலப் பிரதேசம் - AR

■அஸ்ஸாம் - AS

■ஆந்திரப் பிரதேசம் - AP

■பீகார் - BR

■கோவா - GA

■குஜராத் - GJ

■ஹரியானா - HR

■இமாசலப் பிரதேசம் - HP

■கர்நாடகம் - KA

■கேரளம் - KL

■மத்தியப் பிரதேசம் - MP

■மகாராஷ்டிரம் - MH

■மணிப்பூர் - MN

■மேகாலயா - ML

■மிசோரம் - MZ

■நாகலாந்து - NL

■ஒரிசா - OR

■பஞ்சாப் - PB

■ராஜஸ்தான் - RJ

■சிக்கிம் - SK

■தமிழ்நாடு - TN

■திரிபுரா - TR

■உத்திர பிரதேசம் - UP

■மேற்கு வங்காளம் - WB

■அந்தமான்-நிகோபார் - AN

■சண்டிகர் - CH

■தாத்ரா நாகர்ஹவேலி - DN

■டாமன் - டையூ - DD

■தில்லி - DL

■இலட்சத் தீவுகள் - LD

■பாண்டிச்சேரி - PY.

முழங்கால் கருப்பை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...

 
உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற

பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே அத்தகைய அழகைக் கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.

இயற்கையான முறையில் முழங்கால் கருப்பை நீக்க சில டிப்ஸ்....

* எலுமிச்சை சாற்றை முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, முழங்காலில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் இரவில் படுக்கும் முன்பு எலுமிச்சையின் தோலை வைத்து முழங்காலில் 4-5 நிமிடம் தேய்த்து, பின் காலையில் கழுவ வேண்டும். அதுவும் கழுவியதும் உடனே மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது. அதேப் போல் எலுமிச்சையை தடவுவதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது.

* முழங்கால் அல்லது முழங்கைக்கு தேங்காய் எண்ணெயை தடவி 5-8 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்தும் செய்யலாம்.

* தயிருடன் சிறிது வினிகரை சேர்த்து கலந்து தடவி வந்தால், முழங்காலில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.

* பேக்கிங் சோடாவுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 3-4 நிமிடம் தேய்த்து, பின் 10-15 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவிட வேண்டும். கழுவியதும், மறக்காமல் பாடி லோசனை தடவ வேண்டும்.

* கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தொடர்ந்து தடவி வந்தால், முழங்கால் நன்கு வெள்ளையாகிவிடும்.

* பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை மற்றும் தேனை கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* கருப்பாக இருக்கும் பகுதியில் தயிருடன் எலுமிச்சையை சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பாலால் ஒரு முறை கழுவி, பின் நீரால் கழுவினால் கருப்பான பகுதி வெள்ளையாகிவிடும்.

* எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், பாடி லோசனை தடவி படுத்தால், சருமம் நன்கு மென்மையாகி, ஈரப்பதத்துடன் இருக்கும்.

* கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, கருப்பாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்காலில் தடவி, 5-8 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் கருப்பான இடம் வெள்ளையாகிவிடும்.

ஆகவே மேற்கூறிய சிலவற்றையெல்லாம் உங்கள் வீட்டில் ட்ரை செய்து, உங்கள் முழங்கை மற்றும் முழங்காலை அழகாக வெள்ளையாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது டிப்ஸ் உங்களுக்குத் தெரிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சர்வதேச ஓபன் சதுரங்கம்: தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!

 

தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை கிராண்ட்மாஸ்டர் சர்வதேச ஓபன் சதுரங்க (செஸ்) போட்டித் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. 26 கிராண்ட்மாஸ்டர்கள், 33 சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 118 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று கடைசி சுற்றான 11-வது சுற்று நடந்தது.

இதன் முடிவில் இந்திய வீரர் வி.ஆர். அரவிந்த் சிதம்பரம் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி சுற்றில் சக நாட்டவர் விஷ்ணு பிரசன்னாவுடன் டிரா செய்த 14 வயதான அரவிந்த் சிதம்பரம் மதுரையை சேர்ந்தவர்.

தற்போது சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இந்த போட்டியில் 6 கிராண்ட் மாஸ்டர்களுடன் மோதிய இவர் கஜகஸ்தான், ஆர்மேனியா உள்பட 4 கிராண்ட் மாஸ்டர்களை வீழ்த்தியது சிறப்பு அம்சமாகும்.

இது போன்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டிகளில் 14 வயது மாணவர் பட்டம் வெல்வது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அரவிந்த் சிதம்பரம் ஏற்கனவே 11, 13 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தேசிய அளவில் பட்டம் வென்றிருக்கிறார். அவருக்கு ரூ.2 லட்சம் பரிசாக கிடைத்தது.

உக்ரைன் வீரர் நேவ்ரோவ் வாலோரி, இந்தியாவின் எஸ்.பி.சேதுராமன் தலா 8.5 புள்ளிகளுடன் 2&வது இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வருவாய் நிர்வாகத்துறையின் கூடுதல் செயலாளர் ஸ்ரீதர் பரிசுகளை வழங்கினார். விழாவில் சர்வதேச நடுவர்கள் அனந்த ராமன், திருக்காளத்தி, தமிழ்நாடு சதுரங்க சங்க செயலாளர் ஹரிஹரன், போட்டி ஒருங்கிணைப்பாளர் பால் ஆரோக்கியராஜ், போட்டியின் முதன்மை நடுவர் எப்ரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……


பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

 * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.

 * மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.

 * அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம்.

 * உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.

 * சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.

 * எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும்.

சீன பொம்மைகள், தயாராவதோ இந்தியாவில்…

 

விலை குறைந்த பொம்மைகள் என்றாலே அது சீன தயாரிப்புகள் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் அடுத்த முறை நீங்கள் சீன தயாரிப்பில் உருவான பொம்மையை வாங்கினாலும் அது நிச்சயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நம்புங்கள்.

சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான பொம்மைகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தயாரானவை என்றால் நம்புவது சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை.

பால்ஸ் பிளஷ் இந்தியா எனும் பொம்மை தயாரிப்பு நிறுவனம் சீனாவின் துணை நிறுவனமாகும்.

இந்நிறுவனம் குழந்தைகள் பெரிதும் விரும்பும் கரடி பொம்மை (டெடி பேர்), புலி மற்றும் டிஸ்னி கதாபாத்திரங்களான மிக்கி மௌஸ் மற்றும் டொனால்டு டக் உள்ளிட்ட பொம்மைகளைத் தயாரிக்கிறது.

இங்குள்ள சிறிய உற்பத்தி மையத்தில் இந்த பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் 80 சதவீதம் பேர் இப்பகுதிவாழ் கிராமத்து பெண்கள். இந்த தொழிற்சாலைக்கு வந்து பார்த்தால் தெரியும், குழந்தைகளைப் பெரிதும் கவரும் பொம்மைகள் உருவாகும் விதத்தை.

ஆயிரக்கணக்கில் தயாராகும் பொம்மைகள் இங்கிருந்து மெட்டல் டிடெக்டரால் சோதிக்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்படுகிறது. பிறகு அங்கிருந்து சீன தயாரிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூர் மக்களை வைத்து சர்வதேச பொம்மை தயாரிப்பு நிறுவனத்துக்கு பொம்மைகள் தயாரித்துத் தருவது புதிய அனுபவமாக உள்ளது என்று பால்ஸ் பிளஷ் நிறுவனத்தின் இயக்குநர் சீமா நெஹ்ரா கூறினார். இந்த பொம்மைகள் சர்வதேச சங்கிலித் தொடர் நிறுவனங்களான டெஸ்கோ மூலம் பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் பொம்மை வணிகம் இன்னமும் பெரிய நிறுவனங்களால் ஒருங்கிணைந்து நடத்தப்படுவதில்லை. அதற்கான காலம் இன்னமும் கணியவில்லை. இருப்பினும் மதர்கேர், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லைப்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களாக உள்ளதாக நெஹ்ரா கூறினார்.

இங்கு தயாராகும் பொம்மைகள் ஒரு டாலர் முதல் 150 டாலர் விலையிலானவை. பல்வேறு அளவுகளில் இவை தயாராகின்றன. ஒரு பொம்மை தயாரிக்க சிலருக்கு ஒரு மணி நேரமாகும். ஆனால் சிலரோ சில நிமிஷங்களில் தயாரித்து விடுவர் என்று அவர் கூறினார்.

அசோசேம் அறிக்கையின்படி இந்தியாவில் பொம்மைகளுக்கான சந்தை ரூ. 8 ஆயிரம் கோடி. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 சதவீத வளர்ச்சியை எட்டும் என மதிப்பிட்டுள்ளது. ஸ்ரீ சிட்டியில் அமைந்துள்ள பால்ஸ் பிளஷ் நிறுவனம் ரூ. 10 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் இந்நிறுவன வருமானம் ரூ 48 கோடி. ஒரு நாளைக்கு இங்கு 5 ஆயிரம் பொம்மைகள் தயாராகின்றன. விரைவிலேயே 20 கோடி ரூபாய் முதலீட்டில் மேலும் ஒரு பிரிவைத் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top