.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 24 November 2013

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……


பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

 * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.

 * மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.

 * அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம்.

 * உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.

 * சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.

 * எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும்.

சீன பொம்மைகள், தயாராவதோ இந்தியாவில்…

 

விலை குறைந்த பொம்மைகள் என்றாலே அது சீன தயாரிப்புகள் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் அடுத்த முறை நீங்கள் சீன தயாரிப்பில் உருவான பொம்மையை வாங்கினாலும் அது நிச்சயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நம்புங்கள்.

சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான பொம்மைகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தயாரானவை என்றால் நம்புவது சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை.

பால்ஸ் பிளஷ் இந்தியா எனும் பொம்மை தயாரிப்பு நிறுவனம் சீனாவின் துணை நிறுவனமாகும்.

இந்நிறுவனம் குழந்தைகள் பெரிதும் விரும்பும் கரடி பொம்மை (டெடி பேர்), புலி மற்றும் டிஸ்னி கதாபாத்திரங்களான மிக்கி மௌஸ் மற்றும் டொனால்டு டக் உள்ளிட்ட பொம்மைகளைத் தயாரிக்கிறது.

இங்குள்ள சிறிய உற்பத்தி மையத்தில் இந்த பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் 80 சதவீதம் பேர் இப்பகுதிவாழ் கிராமத்து பெண்கள். இந்த தொழிற்சாலைக்கு வந்து பார்த்தால் தெரியும், குழந்தைகளைப் பெரிதும் கவரும் பொம்மைகள் உருவாகும் விதத்தை.

ஆயிரக்கணக்கில் தயாராகும் பொம்மைகள் இங்கிருந்து மெட்டல் டிடெக்டரால் சோதிக்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்படுகிறது. பிறகு அங்கிருந்து சீன தயாரிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூர் மக்களை வைத்து சர்வதேச பொம்மை தயாரிப்பு நிறுவனத்துக்கு பொம்மைகள் தயாரித்துத் தருவது புதிய அனுபவமாக உள்ளது என்று பால்ஸ் பிளஷ் நிறுவனத்தின் இயக்குநர் சீமா நெஹ்ரா கூறினார். இந்த பொம்மைகள் சர்வதேச சங்கிலித் தொடர் நிறுவனங்களான டெஸ்கோ மூலம் பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் பொம்மை வணிகம் இன்னமும் பெரிய நிறுவனங்களால் ஒருங்கிணைந்து நடத்தப்படுவதில்லை. அதற்கான காலம் இன்னமும் கணியவில்லை. இருப்பினும் மதர்கேர், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லைப்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களாக உள்ளதாக நெஹ்ரா கூறினார்.

இங்கு தயாராகும் பொம்மைகள் ஒரு டாலர் முதல் 150 டாலர் விலையிலானவை. பல்வேறு அளவுகளில் இவை தயாராகின்றன. ஒரு பொம்மை தயாரிக்க சிலருக்கு ஒரு மணி நேரமாகும். ஆனால் சிலரோ சில நிமிஷங்களில் தயாரித்து விடுவர் என்று அவர் கூறினார்.

அசோசேம் அறிக்கையின்படி இந்தியாவில் பொம்மைகளுக்கான சந்தை ரூ. 8 ஆயிரம் கோடி. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 சதவீத வளர்ச்சியை எட்டும் என மதிப்பிட்டுள்ளது. ஸ்ரீ சிட்டியில் அமைந்துள்ள பால்ஸ் பிளஷ் நிறுவனம் ரூ. 10 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் இந்நிறுவன வருமானம் ரூ 48 கோடி. ஒரு நாளைக்கு இங்கு 5 ஆயிரம் பொம்மைகள் தயாராகின்றன. விரைவிலேயே 20 கோடி ரூபாய் முதலீட்டில் மேலும் ஒரு பிரிவைத் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இன்னும் எளிதாகுமா பத்திரப் பதிவு?

 

முத்திரைத் தீர்வை விற்பனையில் ஆந்திரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆந்திராவில் வில்லங்கச் சான்றிதழ்கள் வழங்கும் முறையை 1980 ஆம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டார்கள். அத்துடன் 1983ஆம் ஆண்டில் பதிவுத்துறை கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுச் சொத்து தொடர்பான எல்லா விவரங்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுவிட்டது. அதைப் போலவே பொதுவான பவர் ஆஃ அட்டர்னி நிலைமையைத் தெரிந்துகொள்ளவும் பதிவுத்துறை இணையதளம் உதவுகிறது. இப்படிப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், இந்திய அளவில் ஆந்திரப் பத்திரப் பதிவுத்துறை முன்னணியில் உள்ளது.

முத்திரைத் தீர்வை விற்பனையில் இரண்டாமிடத்தில் தமிழகம் இருந்தாலும், ஆந்திராவுடன் ஒப்பிடும்போது பத்திரப்பதிவு இன்னும் எளிமைப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் வருவாய்த் துறையும், பத்திரப் பதிவுத் துறையும் இணைந்து செயல்படும்பட்சத்தில் சொத்துப்பதிவு மற்றும் நகர்ப்புற வீட்டு மேம்பாட்டு துறையில் தமிழகம் இந்தியாவுக்கு முன்மாதிரியாகத் திகழமுடியும். அதற்குச் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

செய்ய வேண்டிய மேம்பாடுகள் 


#தமிழகத்தில் தற்போது சொத்தை விற்பனை செய்யப் பத்திரப்பதிவுத் துறைக்கு வரும் போது பட்டாவைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் கோவை உள்பட 9 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அதைத் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது அவசியம்.

#  குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் சொத்துப் பத்திரத்துடன் சொத்துகளின் (வீடு, நிலம்) புகைப்படங்களையும் இணைப்பது நடைமுறையில் உள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் சொத்தை இன்னொருவர் அபகரிப்பது போன்ற குற்றங்களைத் தடுக்க முடியும். இந்த முறையைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தலாம்.

#  பத்திரப் பதிவின்போது சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்களின் புகைப்படங்களையும் அனைத்து ஆவணங்களிலும் ஒட்டலாம்.

#  பல மாநிலங்களில் முத்திரைத் தீர்வை விற்பவர் மற்றும் வாங்குபவர் இரு தரப்பினரின் டிஜிட்டல் கையெழுத்துகளும் டிஜிட்டல் புகைப்படங்களும் கேட்கப்படுகின்றன. இந்த முறையைத் தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தலாம்.

#  நவம்பர் 2010ஆம் ஆண்டுக்கு முன்பு பவர் ஆஃப் அட்டர்னி விவரங்களைக் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட வில்லங்கச் சான்றிதழில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

#  வில்லங்கம் இருக்கிறதா என்பதை இணையதளம் மூலமாக பார்ப்பதற்கும் ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னியைப் பார்ப்பதற்கும் ஆந்திராவில் வசதி உள்ளது. இதைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும்.

#  இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் புதுச்சேரியில் ஒரு சொத்தின் முந்தைய தாய்ப் பத்திரங்களைப் படிப்படியாக மூலப் பத்திரம்வரை பதிவு எண்கள் வாயிலாகப் பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த முறையைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும்.

#  மாற்றுத் திறனாளிகளுக்கு முத்திரைத் தீர்வைச் செலவில் குறிப்பிட்ட தள்ளுபடி தர வேண்டும். ராஜஸ்தானில் முத்திரைத் தீர்வையில் உடலில் 40 சதவீதத்திற்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு 1 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது.

பெரிய திரையில் மா.பா.கா. ஆனந்த்!

 


சின்னத்திரையில் இருந்து பல திறமைசாலிகள் பெரியத்திரைக்கு அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

சந்தானம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து இப்போது மேலும் ஒருவர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கிறார். அவர்தான் மா.பா.கா ஆனந்த். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் மா.பா.கா ஆனந்த் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். கிருஷ்ணா வானவராயனாக நடிக்க, மா.பா.கா வல்லவராயனாக அவருக்கு தம்பியாக நடிக்கிறார். அதுதவிர, பஞ்சுமிட்டாய் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஒருவர் அறிமுகம் ஆகிறார்.

சந்தானம், சிவகார்த்திகேயன் பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் இருந்துதான் தற்போது மா.பா.கா ஆனந்தும் வந்திருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...

 

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி

கிடைக்கிறதா?

 ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா ?

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சொயில் பெராக்சிடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்

இதில் சத்துகள் எதுவும் இல்லை
குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

உலகில் பல நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம்
நம் தலைமுறை காப்போம்.


நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top