.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 22 November 2013

நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல, ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள் .

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

இந்த உலகில் இருக்கும் அனைவருமே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், சமயத்தில் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் குழம்புகிறோம். இத்தகைய குழப்பங்களால் உடல் மற்றும் மனதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாழ்க்கையே சிலருக்கு வெறுமையாகிவிடும்.இத்தகைய வெறுமை ஏற்பட்டால், எப்படி உலகில் வாழ வேண்டுமென்ற ஆசை ஏற்படும். எனவே மனதை லேசாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சிலர் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் தவறான வழியில் சென்றுவிடுகின்றனர். அவ்வாறு சென்ற பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

ஆகவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர், நாம் செய்வது நல்லது தானா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, பின்னர் செயல்பட்டால் வாழ்க்கையே சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது அந்த வாழ்க்கையை சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள எப்படி இருக்க வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வாழ்வை சந்தோஷமாக வாழுங்கள்.

போதுமான உறக்கம்.

இது உங்களை ஆரோக்கியமாக மட்டுமல்ல மகிச்சியாகவும் வைத்திருக்கும். ஒவ்வொரு இரவும் 8-10 மணிநேரம் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். படுக்கைக்கு போவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மனதை லேசாக்கிக் கொள்வது நல்லது. அதிலும் பாட்டு கேட்பது மனதை லேசாக்கும். இதனால் படுத்தவுடன் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

சத்தான உணவு

எல்லா நொறுக்குத் தீனிகளையும் குறைத்து விட்டு, தினமும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவைக் அதிகரிக்கவும். இதனால் உடலில் புத்துணர்ச்சியும், மனதில் உற்சாகமும் அதிகமாகும்.

அதிகமான நீர்

தண்ணீரை அதிகம் குடிக்கும் போது, சருமம் பளபளப்பாக இருப்பதால் தோற்றம் பற்றி நம்பிக்கை பெருகுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீரைக் குடிப்பது அவசியமாகிறது.

உடற்பயிற்சி

வேகமான நடை, மிதமான ஓட்டம், அறையில் நடனம் இப்படி ஏதாவது ஒன்றை உடற்பயிற்சிக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உடலை உறுதியாகவும், மனதை லேசாவும் உணர வைக்கும் ஒரு மாயமே உடற்பயிற்சியாகும்.

நண்பர்கள்

உண்மையான நண்பர்களை அருகில் கொண்டிருப்பதுடன், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் வழக்கத்தை கடைபிடியுங்கள். மேலும்நாம் எந்த மாதிரியான அன்பையும், மரியாதையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் அவர்களுக்கு வாரி வழங்குங்கள்.

உதவி


அம்மாவுக்கோ அல்லது மனைவிக்கோ வீட்டு வேலைகளில் உதவுங்கள். வீட்டை ஒழுங்குபடுத்துங்கள். இவையெல்லாம் அவர்கள் உங்களை மேலும் நேசிக்கத் தூண்டும். இதனால் ஒருவித மனநிறைவு கிட்டும்.

பொழுதுபோக்கு

ஏதாவது ஒன்றில் ஆர்வத்தை செலுத்துங்கள். அது இசையோ, ஓவியமோ அல்லது விளையாட்டாகவோ இருக்கலாம். இதில் கவனத்தை செலுத்தினால், சாதனை புரிய முடியும். மேலும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வளரும்.

புன்னகையும் சிரிப்பும்

எதற்கும் சோகபாவம் கொள்ளாமல், நகைச்சுவைக்கு முகம் கோணாமல் இருக்க முயலுங்கள். புன்னகையும் சிரிப்பும் எப்போதுமே மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். சில நேரங்களில் உங்கள் புன்னகை, யாரோ ஒருவரின் சோக தினத்தையே வேறுவிதமாக மாற்றக்கூடும்.

மன அழுத்தத்தை குறைப்பது

ஒருவரின் ஆரோக்கியத்தை கெடுப்பது மனஅழுத்தம். ஆகவே யோகா போன்ற மனப்பயிற்சிகளில் ஈடுபட்டு, மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மேலும் எழுதுவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது போன்ற செயல்களாலும் மனதை லேசாக்கலாம்.

வெளியே செல்வது

நண்பர்களோடு வெளியில் செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, உறவினர்களை சந்திப்பது அல்லது சந்தோஷத்திற்காக பைக்கில் வெளியே செல்வது அல்லது செல்லப்பிராணியுடன் வெளியில் செல்வது போன்ற ஏதாவது ஒரு செயலை சாதாரண நேரங்களில் செய்தால், மனதில் கஷ்டம் இல்லாமல், மனமும் லேசாகும். ஏனெனில் இதுப் போன்ற சுற்றுச்சூழல் தான் எப்போதுமே மனதை லேசாக்கும் சக்தி கொண்டது.

நாம் நாமாக இருப்பது

இந்த உலகில் பலர் தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பிப்பது, சுமையே. நம்மிடம் இல்லாததற்காக நாம் மற்றவர்களால் நேசிக்கப்படுவதைவிட, இருப்பதற்காக வெறுக்கப்படுவது எவ்வளவோ மேல். இதனால் எப்போதும் நாம் நாமாகவே பிரகாசிக்க முடியும்.

ஆண்கள் ஏன் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்று தெரியுமா...?

ஒரு குடும்பம் என்று வந்துவிட்டாலே அதில் பொறுப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனை வழிநடத்துவது யார்? குடும்பத்தலைவரா அல்லது குடும்பத்தலைவியா? பெரும்பாலான இல்லங்களில் குடும்பத்தலைவனான ஆண் வேலைக்குச் சென்று பணத்தை ஈட்டுவது மட்டுமே செய்து வருகின்றான். குடும்பத்தலைவி தான் வீட்டின் மற்ற பொறுப்புகளை ஏற்று குடும்பத்தை வழிநடத்தி செல்லுகின்றாள்.

முதலாவதாக, எல்லா ஆண்களும் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்லுவது கிடையாது. ஒரு சிலர் தங்களது மனைவியைவிட சிறப்பாக செயல்படுவார்கள். எனினும், பெரும்பாலான ஆண்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச்செல்லுகின்றனர். இவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் பல காரணங்கள் உள்ளன. ஒரு சிலர் தங்களது பெற்றோரை வழுவி வந்தவர்களாகவும் அல்லது வளர்ந்து வந்த சூழ்நிலையை பொருத்தும் இவ்வாறு இருக்கின்றனர். பல நேரங்களில் கவனக்குறைவு மற்றும் சோம்பேறித்தனம் போன்றவைகள் காரணமாக இருக்கின்றன.


ஒரு சிலர் அவர்களது வாழ்வில் சில சமயத்தில் இந்த பொறுப்புகளால் ஏற்பட்ட மனநிலை பாதிப்பின் காரணமாக அதனை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். இந்த பொறுப்புக்களை அவர்களது வாழ்வில் ஏற்கனவே ஏற்று வந்ததால் அதனை மீண்டும் ஏற்க மறுப்பார்கள். வலுவான இதயம் உள்ள ஆண்களே பொறுப்பேற்க தகுதி பெற்றவர்கள். எல்லா ஆண்களும் இவ்வாறு அல்ல, ஒரு சிலர் முழுதாக பொறுப்பேற்காமல் சாதுரியமாக சில பொறுப்புகளை மட்டுமே கையாளுவார்கள்.

சிலர் பொறுப்புகளில் ஏற்படும் இழப்புகளுக்கு பயப்படுவார்கள். இதனால் பொறுப்பேற்று அதனை முடிப்பதற்கு பயந்து அதனை விட்டு விலகுவார்கள். தங்களது தலைமையில் பொறுப்பேற்க மறுப்பார்கள். ஒரு ஆண் தன்னை வலிமைஉடையவனாக இவ்வுலகிற்கு காட்டிவந்தாலும் ஒரு சில வேளைகளில் பொறுப்புகளை ஏற்க பயப்படுகின்றார்கள். அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த பொறுப்பேற்பது ஆகும். இந்த பொறுப்பேற்றல் பயத்தை போக்குவதற்கு ஆதரவும் கடின உழைப்பும் அதிகம் தேவைப்படும். எனினும், எல்லா ஆண்களும் இந்த பொறுப்பேற்பதில் இருந்து விலகுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
1. சோம்பேறித்தனம்


சோம்பேறித்தனத்தினால் தான் பெரும்பாலான ஆண்கள் பொறுப்பேற்க மறுக்கின்றனர். வலிமையையும் உறுதியும் ஆண்களிடம் இருந்தாலும் அவர்களிடம் சோம்பேறித்தனமும் மிகையாக இருக்கின்றது. பொறுப்பேற்றல் என்பது கடினமான காரியம். அதனை கையாள மிகுந்த உறுதியும் முயற்சியும் அதிகமாக தேவைப்படும். இது எல்லா ஆண்களாலும் முடியாது.

2. பிறப்பு வழிப் பண்பு

நாம் அனைவரும் ஒரு சில விசியத்தில் நம்முடைய பெற்றோரை வழுவியே வந்துள்ளோம். ஒரு சிலர் துரதிஷ்டவசமாக பெற்றோர்களுக்கு பிள்ளையாக பிறந்ததால், அவர்களின் பொறுப்பேற்றல் குறித்த பயம் இவர்களிடையேயும் இருக்கக் கூடும். சில சமயங்களில் அவர்கள் வளர்ந்து வந்த சூழல் அவர்களை பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்ல வைக்கும்.

3. பயம்


உறுதியளிப்பின் பயமே ஆண்களை பொறுப்பில் இருந்து விலகிச்செல்ல முக்கிய காரணமாக இருக்கின்றது. கடந்தகாலத்தில் அவர்கள் ஏற்ற பொறுப்பில் வெற்றி கிடைக்காதால் அவர்கள் மீண்டும் அப்பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர். நாம் எல்லாரிடமும் ஒருவித பயம் இருக்கும். எனினும் சிலர் வலிமைமிக்க ஆண்களாக இருந்தாலும் பொறுப்பேற்பதில் பயம் கொள்ளுவார்கள்.

4. கடந்த காலம்

ஒருசில ஆண்கள் பொறுப்புகளை வேண்டுமென்றே மறுப்பதற்கு அவர்களின் கடந்த கால நிகழ்வுகள் எதாவது இருக்கும். கடந்தகாலத்தில் பொறுப்புகளை ஏற்று அதனால் பெரும் தொல்லையோ அல்லது மன உளைச்சலோ ஏற்பட்டிருக்க கூடும். இவ்விதமான நிகழ்வுகள் நாம் நன்மைகென்றே நினைத்தாலும், ஒரு மெல்லிய தற்காப்பு திரையை நம் மனதில் உருவாக்கிவிடும். இதனால் மீண்டும் அந்த பாதையை கடக்க மறுப்பார்கள்.

5. மனப்பான்மை

பொறுப்புகளை ஏற்பதற்கு உறுதியான மனப்பான்மை அவசியமானதாகும். எதிர்மறையான முடிவை எண்ணும் ஆண்களால் இதனை ஏற்க முடியாது. இத்தகைய எதிர்மறையான எண்ணம் உள்ளவர்கள் தங்களது பொறுப்பில் முதல் அடியை கூட எடுக்க பயப்படுவார்கள்.

6. அனுபவம்


பொறுப்புகளை வெற்றிப்பாதையில் செலுத்த ஒருவர்க்கு கண்டிப்பாக சிறிது அனுபவம் தேவை. அனுபவம் இல்லாத ஆண்கள் இந்த பொறுப்புகளை மறுப்பதோடு மட்டுமல்லாது அதில் வெற்றிபெற தேவைப்படும் அறிவு மற்றும் சிந்தனை இல்லாததால், இதனை ஏற்பதற்கு முற்றிலுமாக மறுக்கின்றனர்.

திருமணக் காப்பீடு... கட்டாயம் எடுக்கணும்!

அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. கல்யாண ஹாலில் எல்லோரும் சந்தோஷமாக திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க, திடீரென மணப்பெண்ணின் பத்து பவுன் தங்க செயின் காணவில்லை. தங்க செயினை யார் எடுத்திருப்பார்கள் என மணப்பெண் வீட்டார் விசாரிக்க ஆரம்பிக்க, மணமகன் வீட்டைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் வந்தது. அவரை பெண் வீட்டார் கேள்வி கேட்க, இது மணமகன் வீட்டாருக்குத் தெரிந்தவுடன் அவர்கள் தாம்தூமென்று குதிக்க, கடைசியில் திருமணமே நின்றுபோகும் அளவுக்கு வந்துவிட்டது. நல்லவேளையாக, அந்தத் தங்கச் செயின் எப்படியோ திரும்பவும் கிடைத்துவிட, நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது. 

எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  உருவாக்கப்பட்டதுதான் திருமணக் காப்பீடு. நகை திருட்டுக்கான இழப்பீட்டை பெற மட்டுமல்ல;  திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எதிர்பாராமல் நடக்கும்  அசம்பாவிதங்களினால் ஏற்படும் இழப்பு களுக்கோ இந்த பாலிசி கைகொடுக்கும்.

இதுகுறித்து விளக்குகிறார் பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்.


''தமிழகத்தில் திருமணம் என்பதை சென்டிமென்ட்-ஆக பார்க்கிறார்கள். எனவே, இந்த இன்ஷூரன்ஸ் எடுப்பதை பலர் விரும்புவதில்லை. இன்ஷூரன்ஸ் எடுப்பதினாலேயே எந்த அசம்பாவிதமும் நடந்துவிடப் போவதில்லை. அது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். 

திருமண இன்ஷூரன்ஸ் அதிகபட்சம் ஏழு நாட்களுக்குக் கிடைக்கும். திருமண அழைப்பிதழை அடிப்படையாக வைத்து இன்ஷூரன்ஸ் பெறலாம். திருமணத்திற்கு எவ்வளவு நகை, பணம் எவ்வளவு புழங்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவேண்டும். மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டார், திருமணத்திற்கு விருந்தினராக வருகிறவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம்.  திருமணத்திற்கு முதல்நாள்கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.


எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?

பணம், நகை திருடுபோனால், விபத்து ஏற்பட்டால், நெருங்கிய உறவுகள் இறந்து அதனால் திருமணம் தடைபட்டால், திருமண மண்டபத்தில் ஏற்படும் சொத்து சேதம் ஆகியவற்றிற்கு கவரேஜ் கிடைக்கும்.  திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டுமே இழப்பீடு பெறமுடியும். வெள்ளம், கனமழை, புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தினால் திருமணம் நின்றாலும் க்ளைம் கிடைக்கும். அதேபோல ஊரடங்கு உத்தரவு, அவசர காலநிலை, தீவிரவாதத் தாக்குதல் போன்றவை 25 கி.மீட்டருக்குள் நடந்து, அதனால் திருமணம் தடைபட்டால்  க்ளைம் கிடைக்கும்.

எதற்கெல்லாம் கிடைக்காது?

வரதட்சணை பிரச்னை, காதல் விவகாரங்கள் போன்றவற்றால் திருமணம் தடைபட்டால் க்ளைம் பெறமுடியாது. இந்து கோயில்களில் நடக்கும் திருமணத்திற்கு இந்த இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. கிறிஸ்தவ ஆலயத்தில் நடக்கும் திருமணத்திற்கு க்ளைம் கிடைக்க வாய்ப்புள்ளது.

க்ளைம்-ல் கழிவு!


தீ, இயற்கை சீற்றத்தினால் திருமணம் தடைபட்டால் க்ளைம் தொகையில் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், திருமண மண்டபத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டிருந்தால் 5 சதவிகிதம் அல்லது 10,000 ரூபாய், பணம் தொலைந்துவிட்டால் 10 சதவிகிதம் அல்லது 5,000 ரூபாய், நகை தொலைந்துவிட்டால் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், பொதுமக்கள் சேதத்திற்கு 5 சதவிகிதம் அல்லது 25,000 ரூபாய். இதில் எது அதிகமோ அதை க்ளைம் தொகையில் கழித்துவிட்டு மீதித் தொகை மட்டும்தான் கிடைக்கும்.

பிரீமியம்!


திருமணம் நிறுத்தப்பட்டால், திருமண மண்டபத்திற்கு சேதம் ஏற்பட்டால், விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், நகை, பணம் திருடு போனால் ஆகியவற்றிற்கு தனித்தனியாக தலா 2 லட்ச ரூபாயும், பொதுமக்களுக்குச் சேதம் ஏற்பட்டால் ஒரு லட்ச ரூபாயும் மொத்தம் 11 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பிரீமியம் சுமார் 3,000 ரூபாய்க்குள்தான்'' என்றார்.

இனி என்ன, திருமண பட்ஜெட்டில் இன்ஷூரன்ஸுக்கும் ஒதுக்கிடலாமே! 

Thursday, 21 November 2013

சீதாப்பழ பர்பி - சமையல்!

                             
என்னென்ன தேவை?

சீதாப்பழம் - 4,

தேங்காய் துருவல் - 1 கப்,

முந்திரி - 50 கிராம்,

சர்க்கரை - 1 கப்,

நெய் - சிறிதளவு.


எப்படிச் செய்வது? 

சீதாப்பழத்தின் சதைப் பகுதியை எடுத்து அதனுடன் முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். சர்க்கரையை கம்பிப்  பதத்துக்குக் காய்ச்சி, அதில் கலவையை கொட்டி நெய் விட்டு கிண்டவும். சுருள வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

It is part of the flesh citappalat with cashew, coconut and grind put on Mickey.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top