.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 17 November 2013

கூடாத ஆமைகள்!

ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்று வளர்க்கிறார்கள்.

எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை.

அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது!

அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள் இருக்க வேண்டியது!

வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்!

இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டு எதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர் வீட்டுப்பிள்ளை தேர்ச்சி பெற்றால் பொறாமை!

அண்ணனுக்கு ஆண் குழந்தைகளாகப் பிறந்து தம்பிக்கு பெண் குழந்தைகளாகப் பிறந்தால் பொறாமை!

நாம் வயதான காலத்தில்கூடச் சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்தால், இளமையிலேயே தளர்ச்சியாயிருப்பவர்களுக்குப் பொறாமை! இப்படி பொறாமையின் வரிசை நீளும்!

காரணமில்லாத சில பொறாமைகளும் உள்ளன! அவற்றைச் சகிக்க முடியாது.
ஏன் இந்த பொறாமை இதனால் யாருக்கு லாபம்? நெஞ்சம் இருண்டு போவதால் முகமும் இருளும்! எரிச்சலைத் தவிர நாம் காணும் பலன் என்ன கபீர்தாசர் சொல்வார்,
 
'தான் தான் மே லிகாஹை
கான் கான் கா நாம்!'


ஒவ்வொரு தானியத்திலும் அதைச் சாப்பிடப் பிறந்தவன் பெயர் எழுதப்பட்டுள்ளதாம். இறைவன் வகுத்தது எதுவோ அதுவே நாம் அனுபவிக்கப் போகிற பொருள்.

'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'

என்ற குறளை ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எழுதச் சொல்வோம்! உடலெல்லாம் விளக்கெண்ணை பூசிக் கொண்டு ஆற்று மணலில் விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும்! 'வருத்தி அழைத்தாலும் வாராத வாரா; பொருந்துவன போமின் என்றால் போகா!'

ஆகவே பொறாமை என்ற 'ஆமை' புகாமல் பார்த்துக் கொள்வது அறிவுடைமை!
அதுவே நித்தம் நிம்மதி தரும்!

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!

Now , not only for men, women and normal kidney stone is a visayamaki . Drinking water is now high time to forget due to the women .

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது.

அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது. கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறு நீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை  உண்டாக்குகிறது. இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும் போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது.

சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?

குடும்ப பாரம்பரியம் இதற்கு முக்கிய காரணம். ஆக்சலேட் நிறைந்த காய்கறி உணவுகள், தண்ணீரில் உள்ள தாதுப்பொருட்கள், மாமிசம், அதிக புரதச் சத்துள்ள உணவுகள் ஆகியவை சிறுநீர் கற்கள் உருவாக முக்கிய காரணம் ஆகும்.  இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச் சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
4. பிரத்யேக உறுப்புகளின் சுத்தமும் பராமரிப்பும் முக்கியம்!

சிறுநீரகக் கற்கள் யாருக்கு உண்டாகிறது?


30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஆண்கள், வேலை காரணமாக வெயிலில் செல்கின்றனர். கடும் வேலை பளு காரணமாக தண்ணீர் குடிக்காமல் சிறுநீர் கற்கள் ஏற்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் ஆக்சலேட்டை உடலில் அதிகமாக உற்பத்திச் செய்கின்றன.

சிறுநீரகக் கல் உருவானது அறிகுறி:

அடி வயிற்றில் வலி இருக்கும். குமட்டல், வாந்தி, படபடப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.   ஙீக்ஷீணீஹ். மிக்ஷிறி   மற்றும் 24 மணி நேர யூரின் டெஸ்ட் செய்ய வேண்டும்.

சிறுநீரகக் கல் உருவானது எப்படித் தெரியும்?

மலைப் பகுதியான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் போன்ற ஏரியாக்களில் தண்ணீரில் சால்ட்கள் அதிகமுள்ளன. அந்த ஏரியாவின் பள்ளியில் உள்ள சிறுவர்கள் அடி வயிறு வலிக்கிறது என்று சொன்னதால் அவர்களுக்கு டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மாம்பழம், சீதாப்பழம் போன்றவை அதிக ஆக்ச லேட் கொண்டவை. பால், தயிர் மற்றும் பால், பொருட்கள் போன்றவை மூலம் கால்சியம் உள்ளே செல்வதால் உடலில் உள்ள உறுப்புகளில் கால்சியம் ஊறித் ததும்பிய நிலையில் இருக்கும்.

தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான லைஃப் ஸ்டைல், அதிகமான வேலைகள், டென்ஷன் போன்றவை பி.பி. போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக்கல்லுக்கும் ஒரு காரணம். முறையான வாழ்க்கை ஆரோக்கியமான உணவு நல்ல உறக்கம். மன அழுத்தமில்லா நிலை போன்றவை கிட்னி ஸ்டோனுக்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். சிறுநீர் கற்கள் உற்பத்தியாவதை தடுப்பது மருந்துகளில் இல்லை. அது நம் கையில்தான் உள்ளது. கிட்னி ஸ்டோன் பிரச்னைகளால் வலி மட்டுமல்லாமல் இறப்புகளும் கூட அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதனால் உணவில் கவனமாக இருங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

தேநீர், பருப்புக் கீரை
வாழைப்பூ, வாழைக்காய், கொள்ளு
கேசரி பருப்பு
மாம்பழம், சீதாப்பழம்
அரைக்கீரை, முருங்கைகாய்
தாமரைத்தண்டு, எள்
பச்சைமிளகாய், நெல்லிகனி

உட்கொள்ள வேண்டியவை:

நிறைய தண்ணீர்,
பழச்சாறு (எலுமிச்சை, மாதுளம், தர்பூசணி)
கேழ்வரகு
புழுங்கல் அரிசி
பருப்பு, காய்ந்த பட்டாணி
கோஸ், கேரட், வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய், அவரை, வெண்டைக்காய்.

கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுப்பது எப்படி?

Pregnant women during pregnancy in the doctor's recommendation, without consulting any pills should not eat. Project candy sugar diet to prevent the disease from coming.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது.  திட்ட மிட்ட உணவு முறையால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம்.  இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். நொறுக்கு தீனி சாப்பிடுவதைப் போல உணவை பிரித்து சாப்பிட்டு பழக வேண்டும்.
முதல் குழந்தை தரித்தபோது, சர்க்கரை நோய் இல்லாமல் இருந்து, 2வது குழந்தையை தரிக்கும்போதும் சர்க்கரை நோய் வராது என்று சொல்ல முடியாது. சர்க்கரை நோய் வரலாம்.  முதல் பிரசவத்திற்கு பிறகு உடல் பருமன் பிரச்னையும் ஏற்படலாம். இதனால் சர்க்கரை நோய் வந்துவிடலாம்.
எனவே, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை மேற்கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சர்க்கரை நோய் வந்தவர்கள் அதிக தூரம் நடப்பது இல்லை. இதன் காரணமாக நோயின் பாதிப்பு அதிகரிப்பதோடு, உடலில் இன்சுலின் சுரப்பதும் தடைபடுகிறது.  இதைத் தவிர்க்கவே உடற்பயிற்சியோடு, நடப்பதற்கும் நோயாளிகள் முன்வர வேண்டும். தினமும் காலையில் நடை பயிற்சி செய்வது மிகவும் அவசியம். மெதுவாகவோ அல்லது சிறிது வேகமாகவோ ஓடுவதும் நல்லது. நீச்சல், விரைவு நடை பயிற்சி செய்தால் நன்மை பயக்கும்.

வராது... வந்துவிட்டால் டென்ஷன் ஆகாதீங்க


சர்க்கரை நோய் என்பது இப்போது சர்வசாதாரணமாக எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரு நோயாக மாறி வருகிறது. பரம்பரையாக வருவதோடு, உணவு பழக்கத்தாலும் பலரை பாதிக்கிறது. இந்த நோய் வரக்கூடாது. வந்துவிட்டால், கவலை வேண்டாம், சமாளிக்கலாம் நன்றாக வாழலாம். இதோ சில எளிய வழிகள்:

மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யுங்கள். சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிடவும்.

காலை, மதியம், மாலை, இரவு என்ற அடிப்படையில் உணவு பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அளவோடு சாப்பிடுங்கள். வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

கீரை, காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும். கிழங்கு வகை உணவை தவிர்க்கவும்

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு!


கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்த, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனத் தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக மக்கள் தொகை யில் முதல் இடத்தில் உள்ளது சீனா. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 18.5 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.


2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 22.1 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.1 கோடி முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 1970 முதல் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் தம்பதிக்கு பிறகும் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு கிராமப்புற, நகர்புறம் இரண்டிலும் ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்று கொள்ள கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.


தற்போது முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் பார்டியின் 18 வது மத்திய குழு கூட்டம் கடந்த 9ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. இதில் 376 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


அவர்கள் ஒரு குழந்தை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதை தொடர்ந்து சீனா வில் நடைமுறையில் உள்ள ஒரு குழந்தை திட்டம் தளத்தப்படுவதாகவும், தம்பதி 2 குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சீன மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இன்டர்நெட்டை கலக்கும் கூகுள் விளம்பரம்(google adsense)!


இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த நண்பர்கள் இருவர் மீண்டும் சந்திப்பது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் இன்டர்நெட்டை கலக்கி வருகிறது. இரண்டே நாளில் இதுவரை 27 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.கூகுள் நிறுவனம் தனது சர்ச் இன்ஜினை பிரபலப்படுத்துவதற்காக எடுத்த விளம்பரம் அது. டெல்லியில் வயதான தாத்தா, தனது பேத்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.


ஒரு புத்தகத்தில் இருக்கும் பழைய பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவைக் காட்டி, அதில் இருக்கும் தனது பால்யகால நண்பனான யூசுப்பை பற்றி பேசுகிறார். லாகூரில் வசித்ததையும் நண்பனுடன் சேர்ந்து பட்டம் விட்டது பற்றியும், தான் வசித்த வீடு முன்பு மிகப் பெரிய இரும்பு கேட்டுடன் கூடிய பார்க் இருந்ததையும் சொல்கிறார். நண்பனுடன் சேர்ந்து அவனுடைய தந்தை கடையில் ஜஜாரியா என்ற ஸ்வீட்டை திருடி தின்றதையும் கூறிவிட்டு பெருமூச்சு விடுகிறார்.


கூகுள் சர்¢ச் மூலம் லாகூரில் வசிக்கும் தாத்தாவின் நண்பனை தேடுகிறார் பேத்தி. முதலில் பார்க்கை கண்டுபிடிக்கும் பேத்தி, லாகூரில் பழைய ஸ்வீட் ஸ்டால் எது என தேடி அதையும் கண்டுபிடிக்கிறார். பாஸல் ஸ்வீட் ஸ்டாலுக்கு போன் செய்கிறார். யூசுப்பின் பேரன் போனை எடுக்கிறார். அவரிடம் தனது தாத்தா பற்றியும் யூசுப் பற்றியும் சொல்லி அவரிடம் பேச முடியுமா எனக் கேட்கிறார். கடையின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் தாத்தாவிடம், ‘தாத்தா டெல்லியில் இருந்து உங்களுக்கு போன்’ எனக் கூறிவிட்டு போனை கொடுக்கிறான்.


Ôஉங்கள் பால்யகால நண்பன் பால்தேவின் பேத்தி சுமன் டெல்லியில் இருந்து பேசுகிறேன் என அறிமுகம் செய்து கொள்ளும் பேத்தி, இருவரும் சேர்ந்து ஜஜாரியா ஸ்வீட்டை திருடி தின்பீர்களாமே... தாத்தா சொன்னார்... உங்களுக்கு ஞாபகம் இருக்காÕ எனக் கேட்கிறார். பசுமையான பழைய நினைவுகளுக்குள் செல்லும் யூசுப், புன்னகைக்கிறார். முகத்தில் சந்தோஷம். இதைப் பார்க்கும் அவரின் பேரன், தாத்தாவை டெல்லி அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான். இந்திய விசா குறித்த விவரங்களை கூகுளில் தேடும் பேரன், பெட்டியில் துணியை அடுக்கி வைத்துக் கொண்டு, டெல்லிக்கு கிளம்புகிறான். மறுநாள் தாத்தாவும் பேத்தியும் ஒரு பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 1947ல் இந்தியாபாகிஸ்தான் பிரிவினையின் போது, ராத்திரியோடு ராத்திரியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா கிளம்பிவந்து விட்டதாகவும் தனது நண்பன் யூசுப்பை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறுகிறார் தாத்தா.


அடுத்த காட்சியில், விமானம் மூலம் டெல்லி வரும் யூசுப்பையும் அவரது பேரனையும் விமான நிலையத்தில் இருந்து டாக்சியில் அழைத்துவரச் சொல்கிறார் பேத்தி.பல்தேவ் வீடு. காலிங் பெல்லை அடிக்கிறார் யூசுப். கதவைத் திறந்த பல்தேவுக்கு அடையாளம் தெரியவில்லை. யார் எனக் கேட்கிறார். ஹாப்பி பெர்த் டே மை பிரண்ட் என யூசுப் கூறியதும், நடுங்கும் குரலில் யூசுப்... நீயா... நீயா... என பலமுறை கேட்டபடி, கண் கலங்கும் பல்தேவ், யூசுப்பை கட்டியணைத்துக் கொள்கிறார். அதோடு முடிகிறது விளம்பரம்.


வெள்ளிக்கிழமை தான் இந்த விளம்பரத்தை வெளியிட்டது கூகுள். யூ டியூப்பில் இடம் பிடித்த இந்த விளம்பரத்தை இரண்டே நாளில் 27 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து லைக் போட்டுள்ளனர். நண்பர்கள் இருவரும் கட்டியணைத்துக் கொள்ளும்போது பார்ப்பவர்கள் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது விளம்பரம்.இந்தியா  பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வசிக்க வேண்டிய நிலைமை வந்தது.


மோசமான விளைவுகளை ஏற்படுத்திய இந்த பிரிவினை அப்போது காயத்தை ஏற்படுத்தினாலும், இன்னும் பலர் சொந்த பந்தங்களை, நட்புகளை இழந்து தவிக்கின்றனர். அந்த நினைவுகளை தூண்டும் வகையில் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த லட்சக் கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆனாலும் விளம்பரத்தில் வருவதுபோல் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வளவு எளிதாக விசா கிடைத்துவிடாது.


 விசா வழங்குவதில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாக இரு தரப்பினருக்குமே அதிருப்தி இருக்கிறது. வர்த்தகர்கள், மூத்த குடிமக்கள், பிரிந்த குடும்பத்தினர், புனித பயணம் செய்வோர் ஆகியோருக்கு எளிதில் விசா வழங்கும் வகையில் கடந்த ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இருந்தாலும் விசா தாமதம் தொடர்கிறது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top