.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 17 November 2013

கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுப்பது எப்படி?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது.  திட்ட மிட்ட உணவு முறையால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம்.  இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். நொறுக்கு தீனி சாப்பிடுவதைப் போல உணவை பிரித்து சாப்பிட்டு பழக வேண்டும். முதல் குழந்தை தரித்தபோது, சர்க்கரை நோய் இல்லாமல் இருந்து, 2வது குழந்தையை தரிக்கும்போதும் சர்க்கரை நோய் வராது என்று சொல்ல முடியாது. சர்க்கரை நோய் வரலாம்.  முதல் பிரசவத்திற்கு பிறகு உடல் பருமன் பிரச்னையும் ஏற்படலாம். இதனால் சர்க்கரை நோய் வந்துவிடலாம். எனவே, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை மேற்கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்...

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு!

கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்த, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனத் தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக மக்கள் தொகை யில் முதல் இடத்தில் உள்ளது சீனா. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 18.5 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். 2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 22.1 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.1 கோடி முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 1970 முதல் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் தம்பதிக்கு பிறகும் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது...

இன்டர்நெட்டை கலக்கும் கூகுள் விளம்பரம்(google adsense)!

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த நண்பர்கள் இருவர் மீண்டும் சந்திப்பது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் இன்டர்நெட்டை கலக்கி வருகிறது. இரண்டே நாளில் இதுவரை 27 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.கூகுள் நிறுவனம் தனது சர்ச் இன்ஜினை பிரபலப்படுத்துவதற்காக எடுத்த விளம்பரம் அது. டெல்லியில் வயதான தாத்தா, தனது பேத்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு புத்தகத்தில் இருக்கும் பழைய பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவைக் காட்டி, அதில் இருக்கும் தனது பால்யகால நண்பனான யூசுப்பை பற்றி பேசுகிறார். லாகூரில் வசித்ததையும் நண்பனுடன் சேர்ந்து பட்டம் விட்டது பற்றியும், தான் வசித்த வீடு முன்பு மிகப் பெரிய இரும்பு கேட்டுடன் கூடிய பார்க் இருந்ததையும்...

கூகுள் நிறுவனம் மாணவர்களுக்காக கல்வி அப்பிளிக்கேஷன் வெளியீடு!

கூகுள் நிறுவனமானது தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது. தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை இணைக்கவுள்ளது. Google Play for Education எனும் இச்சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அப்பிளிக்கேஷன்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த அப்பிளிக்கேஷன்களை கிளவுட் முறையில் சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத...

மோட்டோரொல்லா நிறுவனம் மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மோட்டோரொல்லா நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 179 அமெரிக்க டாலர் விலை கொண்ட குவாட் கோர் ப்ராசசர் கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோரொல்லா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெயர் மோட்டோ 'ஜி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் 8 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 179 அமெரிக்க டாலர்களாகவும், 16 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 199 அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது. கூகிள் உரிமை கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான மோட்டோரொல்லா அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில், இந்திய சந்தையில் மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 4.5-அங்குல HD...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top