.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 16 November 2013

பூவின் 7 பருவங்கள்!

பூவின் 7 பருவங்கள்

• அரும்பும் நிலையில் அரும்பு

 
 • மொக்கு விடும் நிலை மொட்டு


 • முகிழ்க்கும் நிலை முகை

 
 • மலரும் நிலை மலர்


 • மலர்ந்த நிலை அலர்

 
 • வாடும் நிலை வீ


 • வதங்கும் நிலை செம்மல்

பணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்!

அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்... எரிபொருள் அதிகம் செலவாகும்.

மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்!


பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்... 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.

பெட்ரோல் சிக்கனம்!

சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்... பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.

 'ஸ்விட்ச் ஆஃப்' செய்ய மறக்காதீர்கள்!

ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது 'ஆன்' ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.

தவறான பழக்கத்துக்கு 'தடா' போடுங்கள்!

உங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு... இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

தண்ணீர்... தண்ணீர்!

 வேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்... தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

குண்டு பல்பு வேண்டாமே!

குண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.

 கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு?

அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது.  வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

நேரத்தை பணமாக்குங்கள்!


வெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

செலவு குறைக்கும்  செல்போன் 'பேக்கேஜ்'!


குடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு? மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல்!

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

 மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.

 உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள் பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள் இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள். ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்.

பிடிஎப் கோப்புகளை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய எளிய வழி!

முதலில் உருவாக்கப்பட்ட போது அதனை யாரும் எளிதில் எடிட் செய்ய முடியாது. மேலும் இதனை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான் செயல் இல்லை என்று இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை அது தலைகீழாக மாறிவிட்டது, பிடிஎப் கோப்புகளை எடிட் செய்வதற்கு
ம், உருவாக்குவதற்கும் , கன்வெர்ட் செய்வதற்கும் மென்பொருள் சந்தையில் என்னற்ற மென்பொருளும் இணையத்தில் இலவச வலைமனைகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் Cometdocs. இதில் இரண்டுவிதமான சேவைகளும் உள்ளன. டெஸ்க்டாப் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் கன்வெர்சன் ஆகியவை.

மென்பொருளை தரவிறக்க http://www.cometdocs.com/desktopApp

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் பிடிஎப் கோப்பின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் பாப்-அப் விண்டோவில் Convert To என்பதை தெரிவு செய்து எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்யவும்.


 சிலமணி நேரங்களில் குறிப்பிட்ட கோப்பானது கன்வெர்ட் செய்யப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி வரும். பின் அந்த கோப்பினை வழக்கம் போல்  பயன்படுத்திக்கொள்ள முடியும்.


பிடிஎப் கோப்பினை உருவாக்க குறிப்பிட்ட கோப்பின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் பாப்-அப் விண்டோவில் Create PDF என்பதை கிளிக் செய்யவும். சிறிது நேரத்தில் குறிப்பிட்ட கோப்பானது பிடிஎப் கோப்பாக கன்வெர்ட் செய்யப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி வரும்.


பின் அந்த பிடிஎப் கோப்பினை வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இதே நிறுவனம் ஆன்லைனிலும் இந்த வசதியை வழங்குகிறது.

தளத்திற்கான http://www.cometdocs.com/

குறிப்பிட்ட சுட்டியினை கிளிக் செய்யவும். ஒப்பன் ஆகும் தளத்தில் ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் வேண்டிய பைலை தெரிவு செய்து பின் கன்வெர்ட் செய்து கொள்ளவும். 2ஜிபி அளவு வரை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

அசத்தலான ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள்!

உலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? 196!. இவற்றில் ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளிலேயே இளைய நாடு, அதாவது மிகவும் சமீத்தில் உதயமான நாடு எது தெரியுமா? தெற்கு சூடான்!.2001 ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க தேசமான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.1990 ம் ஆன்டுக்கு பிறகு உலகில் 29 புதிய நாடுகள் உதயமாகியிருக்கின்றன.

 இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஃபேக்ட்மான்ஸ்டர் ( http://www.factmonster.com/) இணையதளம் உங்களுக்கு வழிகாட்டும்.இந்த தளத்தை தகவல் சுரங்கம் என்று சொல்லலாம்.ஆன்லைன் கலைக்களஞ்சியம் என்றும் சொல்லலாம்.

 ஆன்லைன் களஞ்சியம் என்றதுமே விக்கிபீடியா உங்கள் நினைவுக்கு வரலாம்.விக்கிபீடியா பொதுவான களஞ்சியம் என்றால் ஃபேக்ட்மான்ஸ்டர் சிறுவர்களுக்கானது.ஆர்வம் உள்ள சுட்டீஸ் இந்த தளத்தை தங்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள பயன்படுத்தி கொள்ளலாம்.அதே போல மாணவர்கள் வரலாறு,பூகோளம் மற்றும் அறிவியல் பாடங்களில் வீட்டுப்பாடம் அல்லது அசைன்மென்டை செய்வதற்கான தகவல்களை திரட்ட இந்த தளத்தை பயன்படுத்தலாம்.


ஃபேகட்மான்ஸ்டர் தளத்தின் முகப்பு பக்கமே அசத்தலாக இருக்கிறது.வழக்கமான களஞ்சியங்கள் போல இதன் வடிவமைப்பு இல்லாமல், சிறுவர்களை கவரும் வகையில் அழகான சித்திரங்களோடு இதில் உள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களுக்கான இணைப்புகள் கொடுக்கப்படுள்ளன.


முதலில் உலகம் பற்றிய விவரங்களும் தொடர்ந்து அமெரிக்கா பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன.உலகம் பகுதியை கிளிக் செய்து உள்ளே சென்றால் உலகில் உள்ள நாடுகள்,அவற்றின் தேசிய கொடிகள்,உலக வரலாறு,இடு வரை நடைபெற்ற போர்கள் உள்ளிட்ட தகவல்களை அவற்றுக்குறிய தலைப்புகளை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.அதே போல அமெரிக்கா மாற்றிய விவரங்களை அமெரிக்கா பகுதியில் உள்ள தலைப்புகளில் தெரிந்து கொள்ளலாம்.


மூன்றாவதாக உள்ளது மனிதர்கள் பகுதி.இதில் புகழ் பெற்ற மனிதர்களை அறிந்து கொள்வதோடு சுயசரிதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக்கொள்ளலாம். புகழ் பெற்ற தலைவர்களின் சுய‌சரிதையை தேடும் வசதியும் இருக்கிறது.


தொடர்ந்து விளையாட்டு ,விஞ்ஞானம் ஆகிய பகுதிகள் இருக்கின்றன.இவ்வளவி ஏன் வீட்டுப்பாடத்திற்கு உதவுவதற்கு என்றே தனிப்பகுதியும் இருக்கிற‌து.சுட்டிசை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய புதிர்கள் மற்றும் வினாடி வினா பகுதியும் இருக்கிறது.


பாடம் படிக்கும் போது அட்லெஸ் தேவைப்பட்டாலோ அல்லது புரியாத வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்பினாலோ அட்லெஸ் மற்றும் இணைய அகராதியும் இதில் உள்ளது.இந்த தளத்தை நீங்களே ஒரு முறை சுற்றிப்பாருங்கள் இதன் அருமை எளிதாக புரியும்.


இதே போலவே கிட்ஸ்.நெட் (http://encyclopedia.kids.net.au/ ) தளமும் சிறுவர்களுக்கான களஞ்சியமாக விளங்கிறது.இதன் முகப்பு பக்கம் வண்ணமயமாக கவர்ந்திழுக்கிறது.இதில் இருந்து சிறுவர்களுக்கான இணையதளங்கள்,இணைய அகராதி ஆகியவற்றுக்கு செல்லாம்.கலைக்களஞ்சியத்திற்கான தனிபப்பகுதியும் இருக்கிறது.களஞ்சியத்தில் ஒவ்வொரு பிரிவாக தனித்தனி தலைப்புகளில் தகவலகள் தொகுக்கப்பட்டுள்ளன.தேவையானதை கிளிக் செய்து பார்க்கலாம்.தேடியந்திர வசதியும் தனியே இருக்கிற‌து.


அட்லாபீடியா தளமும் (http://www.atlapedia.com/ ) உங்களுக்கு தேவையான பொது அறிவு தகவல்களை தருகிறது.எளிமையாக காணப்படும் இந்த தளத்தில் உலக நாடுகள் மற்றும் அவற்றின் வரைப்படங்களை காணலாம்.


இவை தவிர உயிரியலுக்கு என்றே தனியே ஒரு களஞ்சியம் இருக்கிறது
( http://www.botany.com/index.16.htm).இதில் தாவிரங்கள் பற்றிய அகராதியும் இடம் பெற்றுள்ளது.


பிடிக்ஷனரி ( http://www.pdictionary.com/) தளத்தில் எல்லாவற்றையும் புகைப்படங்களாக காணலாம்.


மேலும் புகழ்பெற்ற பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின்
( http://kids.britannica.com/) இணையதளமும் இருக்கிறது.ஆனால் இது கட்டண சேவை.


இதே போலவே யாஹுபார்கிட்ஸ் தளமும் தகவல் சுரங்கமாக விளங்கிய‌து.இணைய உலகில் பிரபலமாக உள்ள போர்டலான யாஹூவின் சிறுவர் பகுதியாக செயல்பட்டு வந்த இந்த பிரிவு இப்போது இல்லை.ஆனால் இணைய தேடலில் இதில் இடம்பெற்றிருந்த தகவல்களை அணுகலாம்.
( http://web.archive.org/web/20130426200557/http://kids.yahoo.com/)

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top